Sunday, November 9, 2008

ஜெனீவா !!


வேலை நிமித்தமா நேத்து ஜெனீவா வந்தேன். சிங்கப்பூரிலிருந்து 13 மணி நேரம் பறந்து ஸ்யூரிக் (Zurich) வந்து 2 மணி நேரம் காத்திருந்து 1/2 மணி நேரத்தில் ஜெனீவா. (இதுக்கு ஸ்யூரிக்லயே வெளிய வந்து ரயில் புடிச்சு வந்திருந்தாக் கூட சீக்கிரமா வந்திருக்கலாம்.) பிஸினஸ் க்ளாஸ்ல நல்லா தூங்கிட்டு வந்தாலும் 7 மணி நேர வித்தியாசம் இருக்கறதால ஒரு மாதிரி கெறக்கமா இருந்துது. ராத்திரி 12 மணிக்கு மேல வந்து சேந்து ஹோட்டல்ல போய் மறுபடி தூக்கத்தை கண்டின்யூ பண்ணினேன்.

சனிக்கிழமை காலை. நல்ல குளிர். மழைத் தூரல். விசு விசுன்னு காத்து வேற. காலைல இருந்து ராத்திரி 9 மணி வரைக்கும் பேங்குல வேலை. நண்பர்களோட ராத்திரி இந்தியன் ரெஸ்டாரெண்டுல டின்னர். இது ஒரு சோம்பேறி ஊரு. இதுக்கு முன்னால 2-3 தடவை வந்திருக்கேன். இப்ப கொஞ்சம் பரவால்ல. சாயங்காலம் 6 மணி ஆச்சுன்னா ஆபீஸ் மாதிரி கடைகள மூடிட்டு அவனவன் வீட்டுக்கு போயிடுவான். ரெஸ்டாரெண்டுக மட்டும் ஒரு 10:30 மணிக்கு கடைசி ஆர்டர் எடுப்பாங்க. இன்னிக்கு ஞாயிறு லீவு. காலைல எழுந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு போனேன். ஹோட்டல்ல் இருந்து நடக்கற தூரந்தான். மழை, காத்துனால 13 நம்பர் ட்ராம் புடிச்சு போனேன். கரெக்டா இன்னிக்கு பாத்து சுத்திப் பாக்க அனுமதி இல்லைன்னுட்டாங்க. ஐ.நா. சபைக்கு வெளிய சர்வதேச ஊனமுற்றோர் சங்கம் (Handicap International) , கண்ணி வெடிகளால் ஊனமுற்றவர்கள் நினைவாக பெரிய மர நாற்காலி நினவுச் சின்னம் வெச்சுருக்காங்க. ஒரு கால் உடஞ்ச மாதிரி இருக்கும். அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கையும் இந்த் சின்னம் ஒரு இடி இடிக்குது.

இப்ப இது இலையுதிர் காலம்கறதால ஊர் பூரா மேபில் மரத்தோட (காஷ்மீர்ல சினார் மரம்னு சொன்னேனே... அதே மர வகைதான் இதுவும்) இலைகள். சின்னதும் பெருசுமா, மஞ்சள், பழுப்பு, ப்ரவுன்னு பாக்கற எடமெல்லாம் இலைக்குப்பை. குப்பைன்னாலும் பாக்க அழகா இருக்கு.


மழை தூரலப் பாத்தா வேலைக்காகாதுன்னு அப்பிடியே நடந்து ஜெனீவா ஏரிப் (Lake Leman) பக்கம் வந்தேன். கரையோரமா நாரைகளும், வாத்துகளும், அன்னங்களும் நீந்திபோறது பாக்க அவ்வளவு அழகு.


ஏரிக்கு நடுவுல உலகின் பெரிய ஃப்வுண்டன் இருக்கு. 500 மீட்டருக்கு மேல பீச்சி அடிக்கும். கெரகம் அதுக்குங்கூட இன்னிக்கு லீவு. போங்கடா.. நீங்களும் உங்க ஊரும்னு மறுபடி ஹோட்டலுக்கே வந்துட்டேன். நண்பர் ஒருத்தரு வீட்டுல மதிய சாப்பாடுக்கு போகணும். அவருக்காக காத்துக்கிட்டுருக்கேன். ராத்திரி வேற ஒரு நண்பரோட டின்னருக்கு போகணும். ரொம்ப டைட் ஷெட்யூல் பாருங்க.. :)

ஐரொப்பிய கட்டுமானக் கலைக்கு உதாரணமா பல பழங்காலக் கட்டிடங்க, சர்ச்சுக, சிற்ப வேலைகன்னு ஊர்ல நிறைய இருக்கு. அடுத்த ஒரு வாரத்துல இன்னுங் கொஞ்சம் ஊரச் சுத்திட்டு எழுதறேன். இப்போதைக்கு இந்தப் படங்களைப் பாருங்க. (படங்களை க்ளிக்கினா பெருசா பாக்கலாம்)

27 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

present sir

Mahesh said...

அட்டெண்டன்ஸ்... போட்டாச்சு போட்டாச்சு...

பழமைபேசி said...

மகேசு அண்ணே, படங்க எல்லா நல்லாப் பிடிச்ருகீங்க, என்ன! நீங்க என்னோட கதைக்க‌குள்ள இதெல்லாம் ச்சொல்லவே இல்லை என்ன. ஏன்?
அங்கட, நம்ப பொடியன்கள் கணக்கயே? பொதுவா சொல்லுவினம், நம்பட ஆட்கள் அங்க கணக்க இருக்காங்கண்டு. ஓம் நம்பட ஆட்கள் இருக்குறபடியால், ச்சாப்பாட்டுக் கடைகளும் ஆகலும் இருக்குமெண்டு நினைக்கிறன்.

நீங்கள் அங்க காணுறதை எழுதிக் கொண்டே இருங்க. நாங்களும் படிப்பமென்ன!

Mahesh said...

ஓம்... நம்மட ஆட்கள் இங்கட கணக்கா இருக்காங்க... சாப்பாட்டுக் கடையில் குசினி அறையில் ரண்டு ஆட்களுடன் கதைத்தனம். வடிவான நாடு... வாழ்க்கை கடினமெண்டு....
என்ன சொல்லவெண்டு தெரியல...

புதுகை.அப்துல்லா said...

aajer ayyaa

:))

Mahesh said...

வாங்க அண்ணே... உங்க பதிவுல பின்னூட்டம் போடலான்னா நீங்க ஸ்டார் பதிவர் ஆகிட்டீங்க... 250 பின்னூட்டங்கள்... அடேயப்பா... நம்மளுது கடல்ல கரைச்ச பெருங்காயம்னு பேசாம நல்லா சிரிச்சுட்டு வந்துட்டேன் :))))

ஆயில்யன் said...

ஊரு சுத்தி காட்டுற மாதிரியே இயல்பான பேச்சு நடையும் அழகான படங்களும் அருமை!

தொடருங்கள்....!


தொடர்கிறோம்! :)

Mahesh said...

அட... ஆயில்யன் நம்ம கடைக்கு வந்துட்டாருடோய்... வாங்கண்ணே... வருகைக்கு நன்றி..

பழமைபேசி said...

அண்ணே, உங்கட தாக்கத்துலயே நம்ப ஊர்க் கதையொண்டு ப்திஞ்சநான். வந்து பாருங்கோ.... அப்புறமா நித்திரை கொள்ளுங்கோ...

SurveySan said...

எப்படிங் ரெண்டு ஸ்லாங்குலையும் அசத்துறீங்க. பதிவுல சென்னை டமிலும், பின்னூட்டத்தில் ஈழத்தமிழும் பத்தி சொல்லறேன்.

//ஓம்... நம்மட ஆட்கள் இங்கட கணக்கா இருக்காங்க... சாப்பாட்டுக் கடையில் குசினி அறையில் ரண்டு ஆட்களுடன் கதைத்தனம். வடிவான நாடு... வாழ்க்கை கடினமெண்டு....
என்ன சொல்லவெண்டு தெரியல...
//

VIKNESHWARAN ADAKKALAM said...

சூப்பர்...

Mahesh said...

நன்றி சர்வேசன், விக்னேஷ்வரன்

narsim said...

பயணக்கட்டுரைகளில் லேனாதமிழ்வாணனின் நடை மிக பிடிக்கும்.. உங்களுடையது அதைவிட சூப்பர்..

நர்சிம்

Mahesh said...

@ நர்சிம் :

நன்றிங்க... ஆனா லேனா தமிழ்வாணன் எங்க.. நான் எங்க? :))) நானும் இதயம் மணியன் மற்றும் லேனாவின் பயணக் கட்டுரைகளின் ரசிகன்.

http://urupudaathathu.blogspot.com/ said...

வாவ்...
கொள்ளை அழகு...

http://urupudaathathu.blogspot.com/ said...

நானும் ஆஜர் போட்டிக்குறேன்..
இல்லாட்டி வம்பா பூயிடும்

Mahesh said...

வாங்க அணிமா... உங்க கொக்கிக்குதான் மேட்டர் ரெடி ஆயிட்டிருக்கு...

ஜோசப் பால்ராஜ் said...

ஏனுங்,
நீங் போற இடத்துக்கல்லாம் கூட்டிப்போற மாதிரி ஒரு அசிஸ்டெண்ட் வேலயாச்சும் குட்த்தீங்னா நாங்களும் நல்லா சுத்துவோம்ல.

Mahesh said...

@ ஜோசஃப் :

அட இந்த ஐடியா நல்லா இருக்கே... நாளைக்கே பேங்குல சொல்லி வெச்சுடறேன் :))))

சின்னப் பையன் said...

உள்ளேன் ஐயா...

Mahesh said...

ச்சின்னப்பையன் ஆஜர்... நோட்டெட்.

கபீஷ் said...

நானும் சமீபத்தில் ஜெனீவா போயிருந்தேன். நீங்க அழகா எழுதியிருக்கீங்க. எப்படி எழுத கூடாதுன்னு காமிக்கறதுக்கு நான் ஒரு பதிவு எழுதறேன்.

Mahesh said...

வாங்க கபீஷ்...

உங்க பேர் காமிக்ஸ்ல வர கபீஷ் குரங்கை ஞாபகப் படுத்துது :)

எழுதுங்க... எழுதுங்க... நானெல்லாம் எழுதல??

புதுகை.அப்துல்லா said...

உங்க பதிவுல பின்னூட்டம் போடலான்னா நீங்க ஸ்டார் பதிவர் ஆகிட்டீங்க... 250 பின்னூட்டங்கள்...

//

அண்ணே ஸ்டார் பதிவரும் இல்ல்..ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. நா மொய் வச்சவங்க எல்லாரும் வந்து பதில் மொய் செஞ்சாங்கண்ணே :)))))))

குடுகுடுப்பை said...

கலக்கலா எழுதறீங்க, அப்படியே ஐநா சபையில போயி மனுசங்கள சம்மா நடத்ததாத நாடுகளை பத்தி சொல்லிட்டு வாங்க.

Test said...

ஹாய் மகேஷ்,
நிதி சுரங்கம் உள்ள ஊருக்கு போயிருக்கீங்க அப்படியே Financial Crisis Financial Crisisனு சொல்றாங்களே, அதை கொஞ்சம் Solve பண்ணிடுங்களேன். உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும் ;-) .
நேற்று மறுபடியும் காஷ்மீர் பற்றிய பகுதிகளை, புகைப்படங்களையும் பார்த்தேன். இறுதியாக உங்களை பார்க்கும் போதுதான் ஸ்டிரைக் ஆச்சு....

கிரி said...

//சாயங்காலம் 6 மணி ஆச்சுன்னா ஆபீஸ் மாதிரி கடைகள மூடிட்டு அவனவன் வீட்டுக்கு போயிடுவான்//

ஆமாங்க மகேஷ் சுட்ஸ் கூட சொன்னாரு..அதுவும் சண்டே எல்லாம் எவனுமே இருக்க மாட்டான்னு..