முன்னுரை
கர்னல் ஒருவர் மோட்டார் பைக்கில் ஏறி வேகமா போறாரு. போய்க்கிட்டே இருக்காரு. திடீர்னு ரெண்டு சைக்கிள்காரங்க ரோட்டுல எதிர்ல வர, இவுரு தடுமாற சறுக்கி பைக் ஒரு பக்கம் போய் விழுது. கர்னல் போட்டிருந்த கண்ணாடி ஒரு மரத்து கிளைல மாட்டிக்கிட்டு ஊசலாடுது. இப்பிடி படம் ஆரம்பிக்குது.
சர்ச்சுல அவருக்கு இறுதி மரியாதைகள். யார் அந்த கர்னல்? "ஆங்.. கேள்விப் பட்டுருக்கேன்.. பெரிய கவிஞர்... படிப்பாளி..." "அவரைப் பத்தி எனக்கு ரொம்ப அதிகம் தெரியாது" "பெரிய வீரர்... ஒரு சின்னப் படைய வெச்சுக்கிட்டு என்னெல்லாம் பண்ணினாரு..அடேயப்பா..."
லெஃப்டினண்ட் டி.இ.லாரென்ஸ் பிரிட்டிஷ் ராணுவத்துல ஒரு சாதாரண மேப் வரைபவர் (cartographer). ரொம்ப அமைதியான, ஜாலியான, தைரியமான ஆளு. அரசியல் தெரிஞ்சவர். முக்கியமா மத்திய-கிழக்கு நாடுகளைப் பத்தி ரொம்ப தெரியும். முதல் உலகப் போர்ல துருக்கி ஜெர்மனியோட சேந்துக்கிட்டு அரேபியாவை தாக்க முயற்சிக்கும்போது, பிரிட்டனும் ஃப்ரான்சும் அரேபியாவுக்கு ஆதரவு. அரபிகளுக்கு துப்பாக்கி, பீரங்கி, வான்வழி தாக்குதல் இதெல்லாம் புதுசு. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் ஒட்டகம், குதிரை, வாள்.
அரேபியாவுல இருக்கற இராக் மன்னர் ஃபைசலுடைய நோக்கம் என்ன, நிலைமை எப்படின்னு தெரிஞ்சுக்க, அரேபிய இனமான 'பெதுவன்'களைப் பத்தி நல்லா அறிஞ்ச லாரென்ஸை தந்திரமா அரேபியாவுக்கு வேவு பாக்க அனுப்பறாங்க. அவரும் குஷியா கெளம்பிப் போறாரு. ஆனா அவருக்கே தெரியாது இது அவர் வாழ்க்கைலயும், உலக வரலாற்றுலயும் ஒரு திருப்புமுனையா இருக்கப் போகுதுன்னு. ஒரு வழிகாட்டியோட பாலைவனத்துல ஒட்டகத்துல சவாரி. அரேபியாவுல பல பழங்குடி இனத்தவர்கள் அங்கங்க. ஒற்றுமை கிடையாது. எப்பவும் ஒருத்தரோட ஒருத்தர் சண்டை, வன்மம். எல்லாம் தண்ணிக்காக. வழியில வேற ஒரு இனத்தோட கிணத்துல தண்ணி எடுத்ததுக்காக வழிகாட்டி கொலை செய்யப்படறான். தைரியமா தனி ஆளா எப்பிடியோ ஃபைசல் கிட்ட போய் சேர்றாரு.
ஃபைசலோட பேசும்போதுதான் தெரியுது அவங்களுக்கு பிரிட்டிஷால அவ்வளவா உதவ முடியலன்னு. யோசிச்சுப் பாத்தா துருக்கி துறைமுகமான அகபா (Aqaba) வை கைப்பற்றினாத்தான் அடுத்த அடி எடுக்க முடியும்னு தெரியுது. முக்கியமா இதுக்கு அரேபிய பழங்குடி இனமெல்லாம் ஒண்ணு சேரணும். அகபால இருக்கற பீரங்கிப் படையெல்லாம் கடலைப் பாத்து இருக்கு. ஏன்னா சூயஸ் கால்வாய் வழியாத்தான் அவங்களை அடைய முடியும். இதுதான் வாய்ப்பு, நாம பாலைவனம் வழியாப் போய் தரைத்தாக்குதல் நடத்தலாம்னு முடிவு பண்ணி, ஃபைசல் கிட்டப் பேசி (பிரிட்டனுக்குத் தெரியாம) தலைவன் ஷெரிஃப் அலி கூட ஒரு 50 வீரர்களைக் கூட்டிக்கிட்டு கிளம்பறாங்க. மிகக் கொடுமையான நெஃபுத் பாலைவனத்தைக் கடக்கணும். கடும் வெயில். தண்ணி கிடையாது. 90 மைல் பயணம். இரவுகள்லயே பிரயாணம். போற வழில வேற ஒரு பழங்குடி இனம் ஹுவெதைத் தலைவன் ஔதா கூட ஒரு சமரசம் பேசி, அவங்களும் ஹரித் இனத்தோட சேந்து போருக்கு வராங்க. இது முதல் வெற்றி. லாரென்ஸுக்கும் அரபு உடைகள் போட்டு அவரையும் ஒரு அரபியாவே பாக்க ஆரம்பிக்கறாங்க.
எதிர்பார்த்தது மாதிரியே தரைப்பகுதி பாதுக்காப்பு வீக். அகாபா சுலபமா கைக்கு வருது. கெய்ரோல இருக்கற பிரிட்டிஷ் அதிகாரிகள் கிட்டப் போய் வெற்றியை சொன்னா அவங்களால நம்பவே முடியல. லாரென்ஸ்க்கு பதவி உயர்வு. இப்பொ மேஜர் லாரென்ஸ். அடுத்து டேராவை கைப்பற்ற ஆணை. கொஞ்சம் தடவாளங்கள் எடுத்துக்கிட்டு திரும்பப் போய் துருக்கி ரயில் போக்குவரத்துக்கு குறிவெச்சு அதை தகர்க்கராங்க. பழங்குடிப் படையைக் கூட்டிக்கிட்டுப் போய் டேராவையும் முற்றுகையிடறாங்க.
ஒரு அசட்டுத் தைரியத்துலயும், தானும் ஒரு அரபிங்கறதை யாரும் மறுக்க முடியதுங்கற கர்வத்துலயும் வீதில அலையும்போது துருக்கி ராணுவம் புடிச்சுக்கிட்டுப் போய் லாரென்ஸ் அரப் இல்லன்னு கண்டுக்கறாங்க. அந்த நீலக் கலர் பூனைக் கண்களும், வெள்ளைத்தோலும் காட்டிக் குடுத்துடுது. துருக்கிய தளபதி பே லாரென்சை உடைகளைக் களைஞ்சு அவமானப்படுத்தி
(raped or sodomised-னு வரலாறு சொல்லுது) தூக்கி எறியறாங்க. இந்த அவமானம் தாங்க முடியாம மறுபடி கெய்ரோவுக்கு போய் எனக்கு இந்த வேலையே வேணாம்னு சொல்றாரு. ஆனா அங்க வேற மாதிரி ப்ளான் வெச்சுருக்காங்க அரசியல்வாதிக. டமாஸ்கஸ் கைப்பற்றப்படணும்னு திரும்பவும் தடவாளங்கள் குடுத்து, நீதான் அரபிகளுக்கு தலைமையேற்க முடியும்னு அனுப்பறாங்க. வேற வழியில்லாம, ஒரு வன்மத்தோட டேராவுக்குத் திரும்பறாரு. வன்மத்துல அவருடைய அடிப்படையான் அமைதிக் குணம் போய் போர்க் குணம். படையைக் கூட்டிக்கிட்டுப் போய் "கைதிகள் கிடையாது"ன்னு கோஷம் போட்டுக்கிட்டே துவம்சம் பண்றாங்க. (இந்த "No Prisoners" கோஷம் உலகப்புகழ்) நூத்துக்கணக்குல தலைக உருளுது. லாரென்ஸோட துப்பாக்கிக்கு ரொம்ப வேலை. ரத்தம் படிஞ்ச கத்தியோட லாரென்ஸைப் பாக்க ஷெரிஃப் அலிக்கே முடியல. 'நீயா இப்பிடி...நீயா இப்பிடி..'ன்னு மாஞ்சு போறான்.
இப்பத்தான் சிக்கல். பிரிட்டனும் ஃப்ரான்சும் டமாஸ்கஸ் கைக்கு வந்தா துருக்கியையும் கூடவே அரேபியாவையும் பங்கு போட்டுக்கலாம்னு ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டாச்சு. லாரென்ஸைப் பொறுத்த வரை, எல்லாத்தையும் அரேபியாவுக்கே குடுத்துடணும். யாரும் கேக்கற மாதிரி இல்ல. இப்ப துருக்கி கையில இருக்கே தவிர, மின்சாரம், தண்ணீர், மருத்துவம் இதையெல்லாம் பராமரிக்க ஃபைசல் கிட்ட போதுமான அறிவோ ஆட்களோ இல்ல. இதத்தான் பிரிட்டனும் எதிர்பார்த்தது. போதாக்குறைக்கு, ஃபைசல் தலைமைல லாரென்ஸ் ஏற்படுத்திய "அரபு தேசிய கவுன்சில்"குள்ளயே மறுபடியும் பழங்குடியினரோட பழைய தகராறுகள ஆரம்பம். ஷெரிஃப் அலியும், ஔதாவும் விலகிப் போக மத்த அரபிகளும் விலக ஆரம்பிக்கறாங்க. இப்ப பிரிட்டனும், ஃப்ரான்சும் ஃபைசல் கிட்ட வந்து பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பிக்கறாங்க. வேற வழியில்ல. பேருக்கு ஃபைசல் ராஜா. அவரே வேதனையா சொல்றாரு "அரபிக் கொடிக்குக் கீழ பிரிட்டிஷ் பராமரிப்புத்துறைகள்..." பிரிட்டன் தான் நினைச்சதை சாதிச்சுடுது.
லாரென்ஸுக்கு மறுபடி பதவி உயர்வு குடுத்து கர்னல் ஆக்கிடறாங்க. அவரோ இந்த அரசியல் எல்லாம் வெறுத்துப் போய், தன்னுடைய 'ஒன்றுபட்ட அரேபியா" கனவு பாலைவன காத்துல கரைஞ்சு போக சோகமா பிரிட்டனுக்கு திரும்பறாரு.
படத்துல குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கேமரா. நாயகன் பீட்டர் ஓ'துல் (ஒரிஜினலா மார்லன் ப்ராண்டோ நடிக்க வேண்டியது) ஆண்டனி க்வின் (ஔதா) ஒமர் ஷெரிஃப் (ஷெரிஃப் அலி) மற்றும் அலெக் கின்னஸ் (ஃபைசல்). என்னா நடிப்பு என்னா நடிப்பு !! அதுலயும் தன்னால காப்பாத்தப்பட்ட காசிமை தானே சுட்டுக் கொல்ல வேண்டி வந்ததையும், தன்னோட உதவியாளன் வெடிமருந்து கையாளும்போது விபத்துக்குள்ளாக துருக்கியர் கிட்ட மாட்டக்கூடாதுன்னு தானே சுட்டுக் கொன்னதையும் நினைச்சு குற்ற உணர்ச்சில மருகும்போது...க்ளாஸ் !! அதே ஆளு துருக்கி தளபதி பே கிட்ட நடந்த அவமானத்துக்கப்பறம் அப்பிடியே வெறி புடிச்ச ஆளா மாறும்போதும், அரசியல் வெறுத்து அமைதியா நாடு திரும்பும்போதும்.... என்ன சொல்றது போங்க..... ராஜா ஃபைசலோட அரபிகளுக்கே உரிய typical இங்கிலீஷ் accent - சூப்பர். படம் முழுக்க வசனங்கள்ல இழையோடற மெல்லிய நகைச்சுவை. எல்லாத்துக்கும் மேல எடிட்டிங்கும், சம்பவங்களை கோர்வையா சொன்ன விதமும்... 1962ல 7 Academy விருதுகள் வாங்கத் தகுதியான படம்.
ஒரு வெறி புடிச்ச போரை ஒரு சொட்டு ரத்தத்தைக் காமிக்காம suggestive-ஆ சொல்லியிருக்கற விதத்தைப் பார்க்கும்போது பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் படத்துல எல்லாம் அவ்வளவு கொடூரமான க்ளைமாக்ஸ் காட்சிகள் தேவைதானான்னு யோசிக்க வெக்குது.
ரொம்ப நீளமான பதிவாப் போச்சோ? படமும் நீளந்தான். 218 நிமிடங்கள். வாய்ப்பு கிடைச்சா பாருங்க. படிக்கறதை, சொல்லிக் கேகறதை விட பாக்கும்போது கிடைக்கிற அதிர்வு ரொம்ப நாளைக்கு மனசுல இருக்கும்.
21 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
:-)))...
DVD எங்க கெடைக்கும்???
நல்ல படத்தைப் பற்றி நல்ல விமர்சனம் மஹேஷ்.. நன்றி..
மின்னல் வேகத்துல அடுத்த பதிவு.... இனிதான் படிக்கணும்.
விஜய்... சிங்கப்பூர்ல இருந்துக்கிட்டு DVD எங்க கிடைக்கும்னு கேக்கறீங்களே !!! :))))
நன்றி வெண்பூ...
சீக்கிரம் வாங்க பழமைபேசி....
அருமையான படத்தைப் பற்றி தாராளமா இவ்வளவு நீளத்துக்கு எழுதலாம் தப்பில்லை.. :-)
நல்லா எழுதியிருக்கீங்க..
குறிப்பா, படம் தொடங்கறத்துக்கு முன்னாடி வெறும் கருப்புத்திரை மட்டும் இருக்கும் போது ஒரு பத்து நிமிடங்களுக்கு ஒரு பிண்ணனி இசை வருமே.. அப்படியே சிலிர்க்க வைக்கும் இசை அது..
வாங்க bee'morgan... மொத வருகை. நன்றி.
நீங்க சொல்ற அந்த orchestration சூப்பர்.
இங்கிலிபீஸ் படமெல்லாம் பார்த்து என்னன்னமோ சொல்றீக, நமக்கு வெளங்குனாத்தான... நான் நடையக் கட்டுறேன் :))
சூப்பர் விமர்சனத்தைப் படிச்சிட்டு எங்க நூலகத்தில் இருக்கான்னு பாத்தா... அட.. ரெண்டு காப்பி இருக்குது.... சீக்கிரமே பாத்துட வேண்டியதுதான்....
நன்றி...
நீங்க இதுமாதிரி பல படங்களுக்கு விமர்சனம் எழுதணும். ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருக்கறதால ஈஸீயா சொல்ல வர்றத புரிஞ்சுக்க முடியுது..
உண்மையில் படிச்ச மாதிரி தெரியல.. நீங்க கூடவே உக்கார்ந்து கதை சொன்னமாதிரி இருக்கு....எங்கள மாரி ஆங்கில புலவர்களுக்கெல்லாம் இதை படிச்சிட்டு படம் பார்த்தாதான் முழுசா உள்ள இறங்கும்...
பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறீர்கள்
அப்துல்லா... நீங்க கடைப்பக்கம் ரெகுலரா வரதில்ல.. நல்லாயில்லா ஆமாம்...
நன்றி ச்சின்னப்பையன், பரிசல், முரளிகண்ணன்
ஐ,... நம்ம பக்கமும் கும்க்கி.. நன்றி
மிக நல்ல அறிமுகம் மகேஷ்.. நன்றி.. அந்த கடைசி வரிகள் நச்!!!
முரளிகண்ணன் said...
பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறீர்கள்
//
ஹாலிவுட்ட பார்க்கனும்னு கோடம்பாக்கமே சொல்லிருச்சு :))
அப்துல்லா... நீங்க கடைப்பக்கம் ரெகுலரா வரதில்ல.. நல்லாயில்லா ஆமாம்...
//
ஆனிண்ணே...ஆனி :(
நன்றி நர்சிம்...
அம்புட்டு ஆணியா அப்துல்லா அண்ணே !!!
பட விமர்சனம், புத்தக விமர்சனம் எல்லாம் பார்த்த, படித்த உணர்வ உண்டு பண்ணணும், அதே சமயம் பார்க்கவும், படிக்கவும் தூண்டணும். உங்க எழுத்து நடை அப்படித்தான் இருக்கு. நல்லா எழுதியிருக்கீங்க. சரி இந்தப் படமெல்லாம் எங்க பார்கிறது? டிவிடி இருக்கான்னு சொன்னா நாங்களும் பார்ப்போம்ல.
நல்ல விமர்சனம். DVD இங்கே கிடைக்குமான்னு தெரியலை :(
நன்றி ஜோசப்...
நன்றி சிவா....
சரி, அடுத்தவாரம் நானும் தம்பி விசய் ஆனந்தும் அண்ணண் மகேஷ் அவர்களின் வீட்டிற்கு படையெடுத்தரலாம்னு திட்டம் போட்டாச்சு.
நெம்ப நல்ல புஸ்தகம், டிவிடியெல்லாம் ஆட்டையப் போட்டுக்கிட்டு வந்துரலாம்.
எதுக்கும் நம்ம கும்மியில ஒரு மின்னஞ்சல போட்டு விடுறேன். நிறைய மக்கள் கிளம்புனாலும் கிளம்புவாங்க.
Post a Comment