Sunday, November 2, 2008

பூலோக சொர்க்கம் காஷ்மீர் - 3நிஷாத் பாக் (பின்னால தால் ஏரி)


அடுத்த நாள் ஸ்ரீந‌கர்க்கு பக்கத்துல ஒரு மலை மேல இருக்கற "பலுக் போஸ்ட்"ங்கற ஆர்மி போஸ்டுக்கு போக முடிவு பண்ணி (வழக்கம் போல போறதுக்கு முன்னால மதிய உணவுக்கு சொல்லி வெச்சுட்டோம்..‍ஹி ‍ஹி)காலைல கெளம்பினோம். போற வழியில, தால் ஏரிக்கு பக்கத்துல இருக்கற "நிஷாத் பாக்"ங்கற பூங்காவுக்கு போனோம். இது அரசே பராமரிக்கற பூங்கா. மாடி மாடியா 3 மாடி இருக்கு. கீழ் தளத்துல கலர் கலரா டேலியா பூக்கள். ரெண்டாவது தளத்துல ரோஜா, டேலியா, வாடாமல்லி, சாமந்தின்னு பல விதமா பல கலர்கள்ல கொத்து கொத்தா பூக்கள்.அந்தப் பூங்காவுலயே பூக்களோட விதைகளும் விக்கறாங்க. கொஞ்சம் வாங்கிட்டு வந்தோம். நம்ம ஊர் வெயிலுக்கும் காத்துக்கும் வருமான்னு தெரியல.

அப்பிடியே மேல ஏறிப் பின்னால போனா வரிசையா சினார் (chinar) மரங்கள். காஷ்மிர் பள்ளத்தாக்குல ஊசியிலை மரங்களுக்கு அடுத்ததா நிறைய இருக்கறது சினார், போப்லார் (poplar) மற்றும் வில்லோ (willow) மரங்கள்.
சினார் மரங்கள் காஷ்மீரோட கலாச்சாரச் சின்னம். இந்த மரத்தை வெட்டுறது கிடையாது. அரசு தோட்டக்கலைத்துறை ஒவ்வொரு மரத்தையும் நம்பர் போட்டு பராமரிக்கறாங்க. அவங்களோட கைவினைப் பொருட்கள், துணிகள்ல கைவேலைப்பாடு எல்லாத்துலயும் சினார் இலை ஒரு முக்கிய அம்சம். (கனடா நாட்டோட சின்னமே சினார் இலைதான். ஆங்கிலத்துல மேபில் [maple] மரம்) போப்லார் மரம் ரொம்பவே தக்கயான மரம். தீக்குச்சி மாதிரி லேசான பொருட்களுக்கு உபயோகிக்கறாங்க. வில்லோ... ‍ அதேதான்... கிரிக்கேட் பேட் செய்ய உபயோகம் ஆகுது. (வில்லோவுலயே 'அழும் வில்லோ'ன்னு [weeping willow] ஒரு வகை இருக்கு. இதோட கிளைகள் எல்லாம் பூமியப் பாத்து வளைஞ்சு இருக்கும். மழை பெஞ்சா ஒவ்வொரு கிளையிலிருந்தும் தண்ணி ஒழுகுறது மரம் அழற மாதிரி இருக்குமாம்) இன்னொரு சுவாரசியமான விஷயம், இந்த சினார் மரத்தோட இலை ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு கலர்ல இருக்கும். பச்சை, மஞ்சள், ப்ரௌன், பழுப்புன்னு.பல பருவங்களில் சினார் இலைகள்
செல்ல மகள் சஹானா சினார் இலையுடன்

அப்பறம் அங்கிருந்து கெளம்பி பலுக் போனோம். அந்த ஆர்மி போஸ்ட் ஒரு மலையோட உச்சியில இருக்கு. சுமாரான ரோடு, சாய்மானம் அதிகம்கறதால 4வீல் ட்ரைவ் வசதி உள்ள ஜீப், ஜிப்ஸிகள்தான் மேல ஏற முடியும். அடிவாரத்துல (பாதாமி பாக் கண்டோன்மென்ட் BB Cantt) ஆபீஸ்ல இருந்து 2 ஜிப்ஸிக எங்களுக்காக இருந்துது. அப்பிடி வளைஞ்சு வளைஞ்சு குறுகலான பாதையில வேகமா ஓட்டிகிட்டு போனாங்க. அந்த குறுகலான பாதையில லாரிகளும், ட்ரக்குகளும் எப்பிடித்தான் ஓட்ராங்களோ... கரணம் தப்புனா மரணம்...

மேல இருந்து பாத்தா ஸ்ரீநகர் பூராம் தெரியுது. கீழ ஜீலம் நதி நகர்க்குள்ள பாம்பு மாதிரி படுத்திருக்கு. லேசான தூரல் வேற. ரொம்பவே ரம்மியமா இருந்துது. மேகமூட்டமா இருந்ததால ஃபோட்டோக்கள் அதிகமா எடுக்க முடியல.
வழக்கம்போல வயிறு முட்டச் சாப்டுட்டு கீழ எறங்கினோம். அதுலயும் நாங்க வந்த ஜிப்ஸி நடுவுல ஒரு இடத்துல மேல ஏற முடியாம பின்பக்கமா கீழ போகுது. ஆஹா... இது வேறயான்னு கொஞ்சம் பதட்டமாயிடுச்சு. ஆர்மி ட்ரைவர் எப்பிடியோ சமாளிச்சு ஓட்டிட்டாரு. கீழ வந்து மறுபடி நம்ம கார்ல ஏறி மார்க்கெட் பக்கம் போய் நினைவுப் பொருட்கள், துணிகள் எல்லாம் வாங்கிகிட்டு வீடு போய் சேந்தோம். அன்னிக்கு மதியம்தான் நகருக்கு நடுவுல இருக்கற லால் சௌக்ல குண்டு வெடிப்பு வேற. கொஞ்சம் பரபரப்பாத்தான் இருந்துது. அதனால மறுநா வேற எங்கயும் வெளியில போகல. அண்ணனோட விமானப்படை அலுவலகங்கள் எல்லாம் சுத்திப் பாத்துட்டு ஓய்வு. அடுத்த நாள் மதியத்துக்கு மேல டெல்லிக்கு விமான ஏறினோம்.

ஓரளவுக்கு அமைதியான ஸ்ரீநர்ல இருந்து கண்ணுமண்ணு தெரியாம ஒடுற டெல்லிக்கு வந்தா, போலீஸ் என்கௌன்டர்ல 3 தீவிரவாதிகள போட்டு தள்ளியிருக்காங்க. 4 நாள் முந்திதான் தொடர் குண்டு வெடிப்பு வேற. போற எடமெல்லாம் பூனப்பீநாத்தம்பாங்க. அது மாதிரி ஆகிப் போச்சு.

இத்தோட நிறுத்திக்கலாம்னு பாத்தேன். ஆனா பூலோக சொர்க்கம்கிறதை தவிர காஷ்மீரோட அடுத்த பக்கத்தையும் எழுதணும். கொஞ்சம் சீரீசா. வெய்ட் பண்ணுங்க...

மறக்காம ஓட்டுப் போட்டுருங்க....

15 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

வடுவூர் குமார் said...

வாவ்!
இங்கு போக முடியுமா? என்று தெரியவில்லை.
படங்கள் அருமை.
நன்றி

புதுகை.அப்துல்லா said...

அண்ணே நம்ப ச்சின்னப்பையன் அண்ணர் பொண்ணு பேரும் சஹானாதான் :)

வெண்பூ said...

நல்லா விவரிச்சு எழுதியிருக்கீங்க மஹேஷ்.. அடுத்த பாகத்துக்காக காத்திருக்கேன்..

பழமைபேசி said...

இப்ப போய்ட்டு அப்புறம்....

ச்சின்னப் பையன் said...

நன்றி அப்துல்லா அண்ணே... நான் சொல்றதுக்குள்ளே நீங்களே.....

அடுத்த பாகங்களுக்காக மீ த வெயிட்டிங்..... :-))

Mahesh said...

@ வடுவூர் குமார் :

மொத வருகை நம்ம கடைக்கு... இந்த இடங்களுக்கு எல்லாரும் போகலாம்... ஆனா இப்பொதைக்கு நிலைமை சரி இல்லை...

@ அப்துல்லா, ச்சின்னப்பையன் :

ந‌ன்றி அண்ண‌ன்க‌ளே... என‌க்கு ரொம்ப‌ புடிச்ச‌ ராக‌ம் "ச‌ஹானா" !!

@ வெண்பூ :

வ‌ருது... வ‌ருது... சீக்கிர‌மே வ‌ருது....

@ ப‌ழ‌மைபேசி :

"உள்ளேன் ஐயா" சொல்லிட்டீங்க‌... அட்டென்டன்ஸ் போட்டுட்டு கட் அடிச்ச்சுட்டு சினிமா காலைக்காட்சி போயாச்சா?

பழமைபேசி said...

//@ ப‌ழ‌மைபேசி :

"உள்ளேன் ஐயா" சொல்லிட்டீங்க‌... அட்டென்டன்ஸ் போட்டுட்டு கட் அடிச்ச்சுட்டு சினிமா காலைக்காட்சி போயாச்சா?//

இல்ல, அந்த ஊட்டுப் பந்தியில கைய நனச்சிட்டேன்....அதான், இங்க வந்து தலையக் காமிச்சுட்டு.... ஹி! ஹி!!

Mahesh said...
This comment has been removed by the author.
chitravini said...

தற்போது பூக்கள் எல்லாம் உதிர்ந்து, செடிகள் எல்லாம் காய்ந்து விட்டன. குளிர் ஆரம்பித்து விட்டது...டெம்ப்பரேச்சர் வெறும் 0 டிகிரிதான். இன்னும் பார‌க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. குளிர் காலத்தில் இந்த இடங்களின் அழகே தனிதான். பனி விழுந்து, மரம், செடி, கொடி எல்லாம் வெள்ளை பூத்து...அது ஒரு அழகு. நார்மலா ஒரு வாரத்தில் பார்க்க வேண்டியதை, நாள், நட்சத்திரம் பார்த்து, ஊரடங்கு, கல்லெறி, குண்டு வெடிப்பு இல்லாத சமயமாகப் பார்த்து போனால், ஒரு 10, 15 நாட்களில் பார்த்து விடலாம்!...அழகு என்று ஒன்று இருந்தால், ஆபத்து என்று ஒன்று இருக்குமல்லவா?

கிரி said...

த்ரில்லிங்கா ஏதாவது சொல்லுங்க மறக்காம..காஷ்மீர் போயிட்டு எதுவும் இல்லைனா எப்படி ;-)

Anonymous said...

மகேஷ் அண்ணே,
இவ்ளோ அழகான இடத்தோட, இன்னைய நிலைமையும், அப்பாவி மக்கள் படற கஷ்ட்டங்களையும் நெனைச்சா வருத்தமா இருக்கு:-((( மறு பக்கத்தையும் அவசியம் எழுதுங்க. உங்க குட்டிப் பொண்ணு ரொம்ப cute ஆ இருக்காங்க.
சித்ரா மனோ

Mahesh said...

@ கிரி :

த்ரில்லிங்கா? லால் சௌக்ல குண்டு வெடிச்சுதுன்னு சொல்லியிருக்கேனே... அந்த லால் சௌக்க நாங்க காலை சுமார் 11 மணிக்கு கடந்து போனோம்.. 12 மணிக்கு குண்டு வெடிப்பு... அப்பறம்?

@ மனோ சித்ரா :

ஆமாங்க.. ரொம்ப கஷ்டமாத்தான் இருக்குது... என்ன செய்ய?

கிரி said...

//11 மணிக்கு கடந்து போனோம்.. 12 மணிக்கு குண்டு வெடிப்பு... //

ஓ! ஒரு மணி நேரத்திலேவா ..நல்ல வேளை :-)

Logan said...

மிக நல்ல அருமையான பதிவு மற்றும் புகைப்படங்கள். காஷ்மீர் பற்றி இன்று வரை குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு மட்டுமே கேள்விப்பட்டு வந்த எங்களுக்கு இது ஒரு ஆறுதலான செய்தி, கண்களுக்கு மகிழ்ச்சி (புகைப்படங்கள்)...., பகுதி-4 கை சீக்கிரம் பதிவிடுங்கள்

Mahesh said...

வாங்க லோகநாதன்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... சீக்கிரமே போட்டுருவோம்..