சீன் 1 : 1947 அக்டோபர்ல மஹாராஜா ஹரி சிங் ஆட்சியில சுத்துப்பட்டு நாடுகளால ஒரு ஆபத்து வந்தபோது, ஒரு நெருக்கடி காரணமா இந்தியா கிட்ட உதவிக்கு வராரு. நேரு அத எழுத்து மூலமா கேக்கறாரு. ராஜாவும் மௌண்ட்பேட்டனுக்கு தன் நாட்டோட பாதுகாப்புக்காகவும், வந்திருக்கற ஆபத்தை எதிர்த்து போராடவும், தன் நாட்டோட பாதுகாப்பு, தகவல், வெளியுறவு இந்த மூணு துறையையும் இந்தியா நிர்வகிக்க வேண்டியதுன்னு எழுதித் தராரு. கூடவே ஷேக் அப்துல்லாவை பிரதமராகக் கொண்ட இடைக்கால அரசு அமைக்கவும் கேட்டுக்கறாரு.
சீன் 2 : இந்திய அரசும் 1948ல ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிகாரப் பூர்வமா ஒரு கடிதத்தை அனுப்பி, பாகிஸ்தானோட ஆக்கிரமிப்புக்கு தன்னுடைய எதிர்ப்பையும், பாகிஸ்தான் தன் படைகளை காஷ்மீரிலிருந்து விலக்கிக்கணும்னு பதிவு செய்யுது.
சீன் 3 : இதப் பத்தி ஐக்கிய நாடுகள் சபையில விவாதம் நடக்கும்போது ஷேக் அப்துல்லா பேசும்போது "காஷ்மீரோட இறையாண்மையப் பத்தி ஏன் பாகிஸ்தான் கேள்வி எழுப்புதுன்னு புரியலயே. என் நாட்டுக்கு ஒரு அபாயம். அதை சமாளிக்கறதுக்கு இந்தியா கூட ஒரு உடன் படிக்கை செய்துக்கறோம். இதுல என்ன குழப்பம்னு தெரியல. காஷ்மீருக்கு சுதந்திரம் வேணுமா, ஏன் இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப் போச்சுன்னெல்லாம் கேட்க எந்த உரிமையும் யாருக்கும் இல்லை. ஐநா சபை நேரில் வந்து நிலைமையை ஆராயட்டும்" அப்பிடின்னு பேசறாரு.
சீன் 4 : 1948 ஆகஸ்டுல ஐநா சபை "இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் மொதல்ல சண்டை சச்சரவ நிறுத்திட்டு, படைகளை வாபஸ் வாங்கிட்டு, போர் நிறுத்தம் செய்யணும்; இரு நாடுகளும் சுமுகத் தீர்வுக்கு ஒரு மனதாக முயற்சி செய்யணும்; காஷ்மீர் மக்களோட உணர்வுகளுக்கும் மதிப்பு அளிச்சு, அவங்க சம்மதத்தோட ஒரு பொதுவான் முடிவுக்கு வரணும்" அப்பிடின்னு ஒரு தீர்மானம் நிறவேத்துது. இந்தியாவும் இதை ஒத்துக்கிட்டு தன்னுடைய சம்மதத்தை அளிக்குது. சில நிபந்தனைகளோட. (காஷ்மீரோட இறையாண்மைல பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் கிடையாது; "சுதந்திர காஷ்மீர்" அப்பிடின்னு ஒரு அங்கீகாரம் இல்லை; காஷ்மீரோட உள்விவகாரங்கள்ல பாகிஸ்தானுக்கு எந்த வேலையும் இல்லை; மக்கள் கருத்து (plebiscite) அறியும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்; அப்பிடி மக்கள் சுதந்திரமா கருத்து சொல்ல முடியாத ஒரு சூழ்நிலை இருந்தா அதை சரி செய்ய இந்தியா தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்.) கூடவே, காஷ்மீருக்கு சில விசேஷ அந்தஸ்தைக் கொடுக்கும் புகழ் பெற்ற "ஆர்டிகில் 370" யும் நம்ம கான்ஸ்டிட்யூஷன்ல சேருது.
இதெல்லாம் பாகிஸ்தானுக்கு ஒத்துக்கவே முடியாமப் போகுது. கர் புர்னு ரெண்டு பக்கமும் கருவிக்கிட்டே இருக்காங்க. அதுக்கு பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில 1965ல போர், 1966ல தாஷ்கண்ட் ஒப்பந்தம் (போனஸா லால் பகதூர் சாஸ்திரி மர்மமான முறையில தாஷ்கண்ட்லயே மரணம்), 1971ல போர், 1972ல சிம்லா ஒப்பந்தம்...... 1974, லஹோர், ஆக்ரா, இஸ்லாமாபாத்.... இப்பிடி பல ஒப்பந்தங்கள்னு தொடர்ந்து போர், சமாதானம், பேச்சு வார்த்தைன்னு வளந்துக்கிட்டே போக, ரெண்டு நாடுகளுக்கும் இது ஒரு ப்ரெஸ்டீஜ் இஷ்யூ ஆகுது. இதுக்கு நடுவுல பாகிஸ்தான் பின்வாசல் வழியா ஆளுகளை அனுப்பி, காஷ்மீர்ல உள்ள சில அடிப்படைவாதிகளை மூளைச்சலவை செய்து, தகிடுதத்தம் பண்ணி அங்க எப்பவும் ஒரு பதட்டமும் அமைதியின்மையும் இருக்கற மாதிரி பாத்துக்குது. நடுவுல நம்ம அரசியல் கட்சிகளும் பிரச்னைகளை கெளப்பி விட்டு நெருப்பு அணையாம பாத்துக்கறாங்க.
பிரச்னை தீர்ந்தா ரெண்டு நாடுகளுக்கும் அரசியல் பண்ண விஷயம் இல்ல. பாகிஸ்தான்ல பருத்தி வெடிக்குதோ இல்லயோ காஷ்மிர்ல தெனம் ரெண்டு குண்டாவது வெடிச்சாத்தான் சாப்பாடு எறங்கும். அந்த அளவுக்கு காஷ்மிர் அவுங்க தினப்படி அரசியல் வாழ்க்கையோட கலந்திருக்கு. ஜின்னாவுல இருந்து ஜர்தாரி வரைக்கும். நடுவுல எத்தனை தலைவர்கள காவு வாங்கியிருக்கு.இந்த சிக்கல்களால 3 பிரிவுக உருவாகுது. இந்தியாவோட இருக்கலாம், பாகிஸ்தானோட போகலாம், ரெண்டு பேரும் வேண்டாம்; சுதந்திரமா நம்மள நாமெ பாத்துக்கலாம்னு.
இந்த சூழ்நிலைல, நாள் மாசம்னு 50 வருஷம் கடந்து போக, பாதிக்கப்பட்டது 2 தலைமுறை. இந்த சச்சரவைப் பாத்து பாத்து எரிச்சலாகி மனசுக்குள்ள வன்மம்தான் வளருது. இதாண்டா சான்ஸ்னு சில இயக்கங்கள் நைஸா இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும், இந்து அடிப்படைவாதத்தையும் உரம் போட்டு வளர்க்க ஆரம்பிக்க, இப்ப பிரச்சனைக்கு இன்னொரு பரிமாணம். ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். இதுமாதிரி இயக்கங்களுக்கெல்லாம் நல்ல முறையில ஊக்கமும், உதவிகளும் அந்தப் பக்கத்திலிருந்து அட்டகாசமா வருது. வேறென்ன வேணும்? இவங்களுக்கு ஒரே வேலை... பள்ளத்தாக்குல எங்க எந்த சின்னப் பிரச்சனை வந்தாலும் அதை ஒட்டுமொத்தமா காஷ்மீர் பிரச்னையா ஆக்கறது. அதனால பிரச்னைக்கு ஒட்டுமொத்த காரணம் பாகிஸ்தான்னு சொல்லிட முடியாது. இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர மக்கள்னு மூணு புள்ளிகள் இணைக்கிற முக்கோணம் அது. ஜியோமிதி விதிகளின்படி "மோஸ்ட் ஸ்டேபில் ஸ்ட்ரக்சர்" முக்கோணம்தான். அதுனாலதானோ என்னவோ, இந்தப் பிரச்னையும் ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கு.
தவிர காஷ்மிரோட வடக்கு பகுதிகளை (Northern Areas) பாகிஸ்தானுக்கும், கிழக்குல அக்ஸாய் சின் பகுதியை சைனாவுக்கும் தாரை வார்த்துக் கொடுத்தது, முசாஃபராபாதை தலைநகரா வெச்சு ஒரு அங்கீகரிக்கப்படாத "ஆசாத் காஷ்மீர்" இருக்கறது எல்லாம் பிரச்னையை மேலும் சிக்கலாக்குது. ஒப்படைக்கப்பட்ட காஷ்மீரோட பகுதிகளை இந்தியா பாதுகாக்கத் தவறிடுச்சுன்னு ஒரு சாராருக்கு கோவம். இதுதான் பாதுக்காக்கற லட்சணம்னா எங்களுக்கு இது தேவையில்லைங்கறாங்க. (ஒரு சின்ன நிகழ்ச்சி சொல்றாங்க. உண்மையான்னு தெரியல. அக்ஸாய் சின்ன் பகுதிய சீனாவுக்கு விட்டுக் குடுக்கும்போது, பாரளுமன்றத்துல நேரு அதை "ஒரு புல் கூட முளைக்காத பனிப் பாலைவனம்"னு சொன்னாராம். பதிலுக்கு ஒரு எம்.பி "உங்க தலை கூடத்தான் முடி முளைக்காத பாலைவனம். அதையும் குடுத்துடலாமா"ன்னு கேட்டாராம். இது எப்பிடி இருக்கு?)
இவ்வளவு ப்ரச்னைகள் இருக்குது. சுமூகத் தீர்வு கிடக்குமா கிடக்காதா? அப்பிடி சுமூகத் தீர்வுன்னு ஒண்ணு இருக்கா? அதுக்கான அரசியல் சூழ்நிலை இருக்கா? மக்களோட கருத்தை அறிய ரெண்டு நாடுகளுக்கும் உண்மையிலேயே ஆர்வம் இருக்கா? சுதந்திரம் குடுக்தா அதை பராமரிக்கறதுக்கான அடிப்படை வசதிகளும் நல்ல தலைமையும் இருக்கா? அங்க இருக்கற சாமான்யனுக்கெ அடுத்த சூரிய உதயத்தை பாக்க முடியுமான்னு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையில டூரிஸ்டுகள் பயமில்லாம போய் வர முடியுமா? டூரிஸ்டுகளையே நம்பி இருக்கற பொருளாதாரம் எப்பிடி வளரும்? இப்பிடி ஒரு இடியாப்பப் ப்ரச்னையை கையில வெச்சுக்கிட்டு ரெண்டு நாடுகளும் எவ்வளவு கால்த்துக்கு எத்தனை செலவு செய்ய வேண்டியிருக்கும்? அந்த அதிகப்படி செலவினம் அவங்க அவங்க நாட்டோட முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கறதை உணருவாங்களா?
எவ்வளவு கேள்விக. இதுக்கெல்லாம் பதில் கிடைக்கிற வரைக்கும் நெஜமாவே அது பூலோக சொர்க்கம்தானாங்கறது பெரிய கேள்விக்குறியா இருக்கு. விமானப் படை அண்ணன், ராணுவ மச்சான்னு இருந்தாத்தான் காஷ்மிருக்கு போக முடியும் போல. இல்லேன்னா ஸ்ரீநகர், லே, லதாக் எல்லாம் ஃபோட்டோவுலதான் பாக்க முடியும்னு தோணுது.
ஓட்டுப் போடுங்கன்னு சொன்னாத்தான் போடுவீங்களா?
24 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
நிறைவான முழு நீள வண்ணப் பதிவு!
தலைவா...
உங்க கடை பக்கம் கொஞ்ச நாளா வராம இருந்தது எவ்வளவு தப்புனு உணர்கிறேன்..
மிக நேர்த்தியான பதிவு..
//தலைநகரா வெச்சு ஒரு அங்கீகரிக்கப்படாத "ஆசாத் காஷ்மீர்" இருக்கறது //
அருமையான சொல்லாடல்..
நர்சிம்
அப்படியே தனி நாடு தந்தாலும் அதன் பிறகு நம் நாட்டுக்கு பிரச்சனை தர மாட்டார்கள் என்பது என நிச்சயம் ..
கிரேட் மகேஷ்!
ரொம்பவும் நேர்த்தியா, எவ்வளவுக்கெவ்வளவு எளிமையாக்க முடியுமோ அவ்வளவு எளிமையா குடுத்திருக்கீங்க.
காஷ்மீரைப் பத்தி தெரிஞ்சுக்க விரும்பறவங்க உங்க நான்கு பதிவுகளையும் ப்ரிண்ட் எடுத்து வெச்சுக்கலாம்!
அற்புதம் மஹேஷ்.. காஷ்மீர் பிரச்சினையின் எல்லா முனைகளையும் அழகா தொட்டுட்டீங்க. காஷ்மீரோட ஒரு பகுதி சீனாகிட்டயும், ஆசாத் காஷ்மீரும் எனக்கு புது செய்தி.. நன்றி.. ஒரு நல்ல பதிவை கொடுத்ததற்கு..
@ பழமைபேசி :
நன்றி
@ நர்ஸிம் :
நன்றி
@ வினோத் :
கரெக்டுங்க... ப்ரச்னையோட இப்பத்திய வீரியத்துல எதுவுமே நிச்சயம் இல்ல...
@ பரிசல் :
நன்றிங்க...
@ அணிமா :
பல்லுக்குப் பல்லு ; கண்ணுக்குக் கண்ணா?? (நற.. நற...)
@ வெண்பூ :
ரொம்ப நன்றிங்க...
சொர்க்கம்னு ஆரம்பிச்சி சொர்க்கம்(??) அப்படின்னு சொல்லிட்டீங்க...
நோய்டாலே இருக்கற எங்க தல, காஷ்மீரிதான். எப்ப பாத்தாலும் ஊரைப்பத்தி சொல்லிக்கிட்டே இருப்பாரு...
beautiful i will will waiting for your next topic
Taking the Kashmir issue to the UN is the biggest mistake of our spineless Nehru.
If he had listened to Patel and followed the same strategy followed for Hyderabad and few other pricely states, we wont be in this situation.
2. Granting special status to kashmir another blunder.
This is all the result of following Gandhian principles. Those were good when we fought a foreign power, but when it comes to governance they are all appeasing. Gandhi is the greatest appeaser, and Nehru is a brainless follower of him.
We are all reaping the benefits of that stupidity. Just look at the history we all have read, its all reverse, and "Con" gress thinking.
"Con" gress is the biggest blunder that happened in our Country (after independance) and their sucking upto the minorities have not helped anyone. Just look at the Haj Subsidy, Christian Organizations do so much of atrocity across the country and what does the govt do, suck upto them all the time. If someone is going to defend that they are doing social service in the country, I have one question for them, why India? there are so many christian nations that are very poor, and are in need or food and dress more than what India needs, why are they not going there?
Sorry, I have to take it out. I just read this article, and an article by Charu on his website, on the same Kashmir issue. What a set of morons that these Arundhati Roy, shabhna azmi et al. Let them cry for a Hindu family who is suffering in Pak (if they are still there). They all misuse the freedom granted to them by this greatest nation. I wish they all are born either in Pak or Saudi Arabia or even Bangladesh.
அறியாத பல செய்திகள். பகிர்தலுக்கு நன்றி. கோபிநாத் அவர்களின் வெளிப்படையான பின்னூட்டமும், உங்களின் பதிவைப் போலவே நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது. அரசியல்ல எதுவுமே சகஜம் தானோ ?!!!!
@ ச்சின்னப்பையன் :
அதுதாங்க உண்மை... அத்திப்பழம் நல்லாத்தான் இருக்கும்... உள்ள பூரா எறும்பு இல்லாம் இருந்தா...
@ muthu :
நன்றி
@ gopinath :
Your points are valid. yes. "con"gress has been and will continue to be a bane for the country. Kashmir is one such unique issue which is multifaceted and there is no single solution that will quench the thirst of all. I may be too myopic, but even in a most optimistic scenario, this issue might take another century to diffuse.
I didnt touch upon the political tangles as it may not be in good taste to all. It is there for everyone to seeand percieve.
@ சதங்கா :
அரசியல்ல எதுவுமே சகஜம் இல்லீங்க... நாமதான் சகஜம்னு நெனச்சுக்கிட்டு ஒதுங்கிப் போறோம். :)))
கோபிநாத் அண்ணே!
ஐதராபாத் விஷயம் வேறு... காஷ்மீர் விஷயம் வேறு. இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது அடிப்படையில் தவறு.ஹைதராபாத் மக்கள் நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்தாலும் பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக சுதந்திரப் போரில் ஈடுபட்டனர். காரணம் இந்தியா சுதந்திரம் அடைந்தால் நாமும் மன்னராட்சியின் கீழ் இருந்து விடுதலை அடைந்து இந்தியாவுடன் ஒரே நாடாக இருந்து விடலாம் என்பதால். ஆனால் மக்களின் விருப்பத்திற்கு மாறாக பாக்கிஸ்தானோடு இணைய நிஜாம் முடிவெடுத்த போது மக்கள் கிளர்ச்சி துவங்கியது. அதன் தொடர்ச்சியாக இந்தியா படை அனுப்பி ஹைதராபாத் சமஸ்தானத்தை மீட்டு இந்தியாவுடன் இணைத்தது. இந்தியாவோடுதான் இணைக்க வேண்டும் என்று நிஜாமுக்கு எதிராக கிளர்ச்சி நடத்திய அந்த மக்களும் இஸ்லாமியர்கள்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஆனால் காஷ்மீர் விஷயத்தில் காஷ்மீரிகள் இந்திய அல்லது பாக்கிஸ்தான் சுதந்திரத்திற்காக பிரிட்டீஷிற்கு எதிராக போராடவும் இல்லை.மன்னராட்சிக்கு எதிரான மனநிலையிலும் இல்லை. அதாவது இந்தியாவோடு இருக்கவும் விரும்பவில்லை. பாக்கிஸ்தானோடு இருக்கவும் விரும்ம்பவில்லை. காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே என்ற மனநிலையில் இருந்தார்கள்.இன்றைக்கு நாம் இலங்கைக்கோ அல்லது பர்மாவுக்கோ படையெடுத்துச் சென்று அந்த நாட்டை நம்மோடு இணைத்துக் கொண்டால் எந்த அளவிற்கு முட்டாள்தனமோ, எந்த அளவிற்கு பிரச்சனையோ அந்த அளவில் அன்றைக்கு இருந்து இருக்கும். பட்டேல் மேல் உள்ள கண்மூடித்தனான பற்றினாலோ அல்லது பிரியத்தாலோ அவர் செய்ய நினைத்த அனைத்தையும் சரி என்று
சொல்லாதீர்கள்.
நேருவின் அந்த ஐ.நா செல்லும் முடிவால்தான் இண்றைக்கு நமக்கு காஷ்மீர் என்னும் அதிகப்படியான் நிலப்பரப்பு கிடைத்து இருக்கிறது. பட்டேல் பேச்சைக் கேட்டு படைகொண்டு போய் இருந்தால் கண்டிப்பாக காஷ்மீர் சைனா உதவியை நாடி இருக்கும். ஒரளவு வளர்ந்த 1962 ஆண்டிலேயே நாம் சைனாவை ராணுவரீதியாக எதிர்கொள்ள முடியாது திணறினோம். அப்படியென்றால் 1947 ல் ராணுவ பலம் மிகவும் குறைவாகவே இருந்த நமக்கு என்னவாகி இருக்கும்? யோசியுங்கள்.
@ அப்துல்லா :
விளக்கத்துக்கு நன்றி. இந்தக் காரணத்துக்காகத்தான் நான் காஷ்மீர் ப்ரச்னையை எது கூடவும் ஒப்பிடாம அது ஒரு தனித்துவம் வாய்ந்ததுன்னு சொன்னேன். அதான் ரொம்ப விவரமா எழுதல. மேலெழுந்தவாரியாப் பாத்தா சிலபேருக்கு எல்லாம் ஒண்ணுதானேன்னு தோணா வாய்ப்பிருக்கு. :)))
காஷ்மீர் பிரச்சினையை ஒரு கோணத்தில் அணுகினால்...அது சரியான முறை மட்டுமல்ல, அதனால் நாம் எடுக்கக்கூடும் முடிவுகள் தவறாகவும் இருக்கக்கூடிய வாய்ப்புக்கள் ஏராளம். பழசை கிளராமல் (அப்போது முடிவு எடுத்தவர்களைப் பற்றியும், முடிவைப் பற்றியும்) நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தால் நன்றாக இருக்கும். மகேஷ் சொன்னது போல், ஒரு முக்கோணப் பிரச்சினையின் அடித்தளத்தில் உள்ள பாமர மக்களின் தேவை என்ன என்று பார்த்தால்...ஒன்றுமேயில்லை...ஒரு நிலையான வாழ்க்கைத் தரமும், பயமில்லாத வாழ்க்கையும்தான்! இதை ஜனநாயக 'வல்லரசான' இந்தியாவால் கொடுக்க முடியாதா? முடியும்...ஆனால் அதை எப்போது 'முடிய' வைப்பது என்பதில்தான் குழப்பம். சம்பந்தப்பட்ட 'பார்ட்டிகள்' எல்லாம், இந்த முடிவில் தனக்கு என்ன சாதகம் (அ) பாதகம் என்று பார்ப்பதினால்தான் இந்தக் குழப்பம். இந்தக் குழப்பத்தைத்தான் நம்முடைய 'நெடுநாளைய பக்கத்து வீட்டு நண்பர்' தனக்கு சாதகமாக உபயோகப் படுத்திக் கொள்கிறார். அதன் விளைவுகள்தான்...பயங்கரவாதமும், அதைத் தொட்ர்ந்த மத மூளைச் சலவைகளும். இரவும், பகலும் ஓயாது தொடரும் (ஒலி பெருக்கியில்) இந்த 'சலவையினால்' உண்டானதுதான், இந்தியா மீது வந்த காழ்ப்பும், அவநம்பிக்கையும். அதனால்தான் இங்குள்ள பாமரன், 'ஐயா, என்னை விட்டு விடுங்கள், நான் எப்படியோ இருந்து கொள்ளுகிறேன்' என்று சொல்கிறான். இத்தனைக்கும் நடுவில், நாம் 'இல்லாத' ஒரு அமைதியை 'நிலை நாட்டுவதற்க்காக' ராணுவத்தைக் கொண்டு வந்து ஒரு புதிய கோணத்தையும், பரிமாணத்தையும் கொடுத்தோம். பாமர மக்களிடையே ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை வேட்டையாடினால், ராணுவம் மக்களை கொல்கிறது என்ற முழக்கம், இந்தியா காஷ்மீர மக்களின் விடுதலை வேட்கையை வன்முறை கொண்டு அடக்குகிறது என்ற கோஷம். அதைச் செய்யாவிட்டால், நாம் இத்தனை வருடமாக போராடியவர்களின் உயிர்த் தியாகம் வீண் என்று பொருள் கொள்ள வேண்டி வரும். (இன்றும் சராசரியாக ஒரு நாளைக்கு 2 பேர் (ராணுவம் மற்றும் போலீஸூம்), 4 பாமரனும் உயிரிழக்கிறார்கள். இருதலைக் கொள்ளி எரும்பாகத் தவிக்கிறது இந்தியா. மத்திய,மாநில அரசுகளால் உள்ளூர் போலீசை நம்ப முடியவில்லை...ஏனெனில் அவர்களும் ஒரு விதத்தில் பார்த்தால் பாதிக்கப் பட்டவர்கள்தானே? பிரத்யேகமாக அடித்தளத்தில் உள்ளவர்களிடம் பேசினால் இந்தியாவில் சேருவதுதான் ந்ன்மை என்றும், இந்திய அரசின் சமத்துவமான வாழ்க்கை முறை அவர்களுக்கு சம்மதம் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் எவ்வளவு தூரம் அதை நாம் அவர்களை பகிரங்கமாக சொல்ல வைக்கிறோம் என்பதில்தான் நம்முடைய 'சாணக்கியத்தனம்' இருக்கிறது. அது நடந்தால், உள்ளூர்க் 'குழப்பவாதிகளுக்கும்', அக்கரைச் சீமையில் உள்ள 'பயங்கரவாத தொழிற்சாலை முதலாளிகளுக்கும்' வேலை இல்லாமல் போய்விடும். There are so many 'ifs' and 'buts' and there is no single approach. Its a multi pronged attack for a sustained period and it is not all that impossible, only thing we have to play the game with open cards, which we have not done for the past 60 years. அடித்தள மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும்படி செய்வோம்...பின் இந்தப் பிரச்சினை தானாக முடியும். மேலும் பேசலாம்!!!
அடித்தள மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும்படி செய்வோம்...பின் இந்தப் பிரச்சினை தானாக முடியும். மேலும் பேசலாம்!!!
//
நான் நினைத்ததும் இதுதான். மிகச் சரியாக என் எண்ணத்தை பிரதிபலித்து உள்ளீர்கள். நன்றிண்ணே.
Abdulla
Thank you for your comments. This is healthy discussion, and I want to learn from such discussions.
Few things:
Not sure why do you think annexing Kashmir with India was like starting a war with a different country. Kashmir was annexed into British India in 1849 after Sikh War. So it was pretty much part of british India from that time. Srilanka and Burma were not part of British India.
I agree with the fact that people of Hyderabad revolted to unite with India, whereas the Kashmir ruler wanted to unite with India. thats the difference.
As Hyderabad had huge population of Muslims and minority Hindus, Kashmir did too. We know what happened to Kashmiri Pandits.
I am saying taking to UN was wrong not because of my love towards Patel, what he suggested on those were correct. And Nehru did not have the tenacity as a leader to see through this for long term benefits. Certain things in retrospect will appear to be wrong, but on this aspect, still his views were right. Even on China it was Nehru's naive trust of Chinese is the root cause for 1962 war, till the start of the war, he never wanted to take any precautionary steps, think of a noun opp paranoid, your have Nehru. And he did the same with Tibet also, where he was not able to see Tibet as a strategic advantage to India to act as a buffer to China, which can never be trusted. They can be our trading partner etc is fine, but when it comes to expanding their regime, they dont have any respect for others sovereiginity. Certain decision if they are let prolong for a long time, people think the problem will go away, it wont, rather it will gain multiple facets, mutiply and making the resolution even more tough. And Nehru was such a weak person, whose policies delayed India regaining its 15 Centuries of superiority after the independance. Kashmir had been such a drain on our resources, which could have been utilised for good intentions elsewhere. There is a whole writing of how much Kashmir gets per capita compared to other States (though their contribution to the kitty is almost zero).
I welcome your comments, and I strongly feel, absence of such dialogue during our formative years, which is school/college, and our dependance on the history as taught is a huge flaw in our system, which I wish some one corrects it soon, so atleast the next generation will start thinking multidimensional for better for healthy discussions and decision making.
@ gopinath:
With my limited knowledge on the Kashmir issue, I'm unsure if Kashmnir was "united" with India. As far my understanding goes, it was only acceded to India on certain conditions and only on some areas of administration and defence.
But yes, many of our 'leaders', Gandhi inclusive, have flawed in their decisions in many issues. Some were compulsive and some were impulsive and some were coercive. We might have gathered knowledge of the repurcussions of such decisopns much later and now we may think that it could have been otherwise. Unless we are now able to take a 360 degree view on such decisions on that point of time, we are at a loss. All we can do is gather those lessons learnt from the past and try not to repeat.
Given the dynamics of politics, the issues - over time - gather dust and rust and take different dimentions. Which we need to deal as we go ahead. Brooding over the past and trying to analyse and fingerpointing, in my opinion, is a waste of time which can much better be used to resolve the present situation.
We, the X generation and the Y generation in the nursery now, do have a different level of vision in looking at issues. And it is a healthy change. Things will change... for the benefit of all.
@Mahesh
Kashmir was accessed in 1849, if you search for British India, there are many writings with map showing Kashmir and Pakistan on both sides, meaning including the portion of Kashmir that Pak gave to China for some favors and especially to annoy India. Pakistan's only agenda for a long time is to bring down India, by engaging them on these dirty tactics. And China went along with them, because they know, they cannot engage India on a full length war anymore. Our pols are the weakest link in this chain, look at Bangladesh prodding us like a sucker, and our idiots cant speak a word against them, because of the fear that it will be taken as against Muslims, and impact their vote bank. No other country in the world is like India, as passive as we are. If this happens in China, just imagine, there wont be any news of what they did. I am not saying lets follow the chinese model, but saying, every country should have its national interests in mind.
மகேசு, எதனாச்சும் பதியுங்க... ஹி! ஹி!!
அய்யா... இப்போ வேலை நிமித்தமா ஜெனீவாவுல இருக்கேன். வேலை கொஞ்சம் அதிகம். சனி ஞாயிறு கூட வேலை. அதனாலதான்....
சொல்லவே இல்ல....நான் இன்னும் போகலையாக்கும்னு நெனச்சேன். சரி, சரி! நல்லபடியா முடிச்சிட்டு வாங்க!!
dear gopinath,
sorry for my late replay. i was very very busy with my work which made me not come to blog. please come to mail.. v will have healthy discussion :)
pudukkottaiabdulla@gmail.com
Post a Comment