Tuesday, November 11, 2008

மென் பொருட்களில் என் பொருட்கள்

கொக்கி போட்ட அணிமா வுக்கு வாழ்த்துக்கள்... நல்லாயிருப்பா நல்லாயிரு !!

அது என்ன மேட்டர்னா, நாம அடிக்கடி உபயோகிக்கற மென்ப்பொருட்களப் பத்தி நாலு நல்ல வார்த்தை சொல்லணுமாம். சொல்லிட்டாப் போச்சு....PDF கோப்புகள் பண்றதுக்கு. இத ஒரு ப்ரிண்டரா சேத்துட்டோம்னா, இது வழியா ப்ரிண்ட் பண்ணும்போது நாம சொல்ற இடத்துல சொல்ற பேர்ல PDF கோப்பா எழுதிரும். சாதாரண ப்ரிண்டரை கையாளர மாதிரியேதான். இலவச வரிசைல கொஞ்சம் விளம்பரங்கள் 15 வினாடிகளுக்கு வரும். அதை பொறுத்துக்கிடோம்னா போதும்.


இது ஒரு 'அகராதி' புடிச்ச மென்பொருள். இத நிறுவியாச்சுன்னா ஸிஸ்டம் ட்ரேல உக்காந்துக்கும். திடீர்னு யாராச்சும் இங்கிலிபீச்சுல மெய்ல் அனுப்பிச்சாலோ, மேனேஜர் குடுத்த டாக்குமெண்ட்ல எதாவது வார்த்தைக்கு அர்த்தம் புரியலைன்னாலோ, அந்த வார்த்தை மேல கர்சர வெச்சு Ctrl+Alt+W அமுக்குங்க.


அப்துல்லா அண்ணன் அறிமுகப் படுத்தினாரு. தமிழ்ல டைப் பண்ண ரொம்ப சுலமான வழி. வசதி என்னன்னா தமிழ் இங்கிலீஷ் ரெண்டுலயும் மாத்தி மாத்தி டைப் பண்ணிக்கிட்டு போய்ட்டே இருக்கலாம். இன்னொரு எடிட்டர்ல எழுதி, காப்பி பண்ணின்னு வில்லங்கமே இல்லை.


நெஜமா சொல்றேன்... இத போட்டதுக்கு அப்பறம் இந்த ரெண்டு வருஷத்துல வைரஸ் தொந்தரவு இல்லவே இல்ல. வாரம் ஒரு தடவையாவது வைரஸ் டேடாபேசை அப்டேட் பண்ணிக்கிறது நல்லது.


Net Meeting -ஐ விட ஒசத்தி. இண்டர்நெட்டும் கண்ட்ரோல் பண்ண வேண்டிய கம்ப்யூட்டர்ல அனுமதியும் இருந்தா போதும். எங்க இருந்தும் எந்த கம்ப்யூட்டரையும் இயக்கலாம். வீட்டுல இருந்து ஆபீஸ் வேலை செய்யணும்னா நமக்கு இதுதான் வசதி.

அவ்வளவுதான்... மத்தபடி சொல்லிக்கற மாதிரி ஒண்ணும் உபயோகிக்கறதில்ல. எதாச்சும் உங்களுக்கு உருப்படியா தேறுதா?

இன்னும் ரெண்டு பேர மாட்டி உடணுமே? நம்ம நண்பர்கள் எல்லாருமே நல்லவங்கதானே? நீங்களா யாராவது எடுத்து தொடருங்களேன்... ப்ளீஸ்....

10 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

ஓ, இது இவ்வளவு சுலுவான வேலையா? இருங்க அந்த மலைக்கோட்டையோட ஆசைய நானும் நெறவேத்திடுறேன்.

Sridhar Narayanan said...

CutePDF Writer = PrimoPDF உபயோகப் படுத்திப் பாருங்க. விளம்பரத் தொல்லை இல்லவே இல்லை.

eKalappai - நானும் இதுதான் உபயோகப் படுத்துகிறேன். NHM Writer உபயோகப் படுத்துங்க. Chrome-ல உபயோகிக்க வசதியாயிருக்கும்.

Remote Desktop Control - தள்ளி இருந்து இயக்க உதவும் எல்லா மென்பொருளும் VNC-லிருந்து உருவானதே. RealVNC போன்றவைகள் மிகவும் எளிமையாகவும் வசதியாகவும் இருக்கிறது.

Anonymous said...

Use team viewer for netmeeting. It's free for non-commercial use. http://www.teamviewer.com/index.aspx

தமிழ்நெஞ்சம் said...

நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி.

narsim said...

நல்ல தகவல்கள்.. அந்த PDF மேட்டர் அடிக்கடி உபயோகப்படுகிறது

நர்சிம்

உருப்புடாதது_அணிமா said...

நம்ம பேச்ச கேக்க கூட இந்த ஊர்ல ஆளு இருக்காங்களா??

அவ்வ்வ்வ்வ்வ்வ்

உருப்புடாதது_அணிமா said...

நல்ல பயனுள்ள தகவல்கள்...

நன்றி....( மதித்து பதிவு போட்டதற்கு ..)

உருப்புடாதது_அணிமா said...

////பழமைபேசி said...

ஓ, இது இவ்வளவு சுலுவான வேலையா? இருங்க அந்த மலைக்கோட்டையோட ஆசைய நானும் நெறவேத்திடுறேன்.////

இதோ பாருங்கப்பா.. இன்னொரு ஆளும் நம்ம பேச்ச கேக்க போறாரு ....

போடுங்க போடுங்க...

Mahesh said...

எட்டிப் பாத்த அல்லாத்துக்கும் நன்றிங்கோவ் !!!!

ஒண்ணுமில்ல... தனித் தனியா நன்றி சொல்ல சோம்பேறித்தனமா இருக்கு..

Siva said...

One more website for accessing your home or office computer.

http://www.logmein.com, once you are in that page, create acccount and select free acccount and add your office computer, home computer, or friend computer.