Sunday, November 30, 2008

கிச்சடி 30.11.2008

ஹி ஹி ஹி ஹி எல்லாரும் அவியல், கதம்பம், நொறுக்ஸ், துணுக்ஸ்னு போட்டு பட்டய கெளப்புராய்ங்களே... நாமுளும் ஒண்ணு போட்டாத்தேன் என்ன கொறஞ்சுரும்னு "கழிவறையில் அமர்ந்து யோசிக்கும்போது கண நேரத்தில்" தோணுச்சு. அவிங்களோடதெல்லாம் சுவையா மணமா பதமா பக்குவமா இருக்கலாம். மொதல்ல 'பேல்பூரி'ன்னு சொல்லலாம்னு பாத்தேன். அதவிட 'கிச்சடி' பெட்டர்னு தோணுச்சு. கிச்சடில ஒரு சௌகர்யம் எத வேண்ணாலும் போட்டு பண்ணலாம். பாப்போம்... நாம பண்ற கிச்சடி மொத சட்டிய விட்டு எடுக்க முடியுதான்னு.....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்தியாவை விட்டு வெளிய போயிட்டா, எம்பேரு மகேஷ்ங்கறது நண்பர்க மத்தியில மட்டுந்தான். பாஸ்போர்ட்ல அப்பா பேரு மொதல்ல இருக்கறதால விமானத்துல ஏறுனதுலருந்து 'ராமமூர்த்தி'தான் எங்க போனாலும். எங்கப்பா கிட்ட வெளயாட்டா சொல்றதுண்டு... "பல ஊருகளுக்குப் போறது நானாயிருந்தாலும், உண்மையாப் போறது உங்க பேருதாம்பா"ன்னு. பல சமயம் வேற யாரையோ கூப்புடறாங்களோன்னு ஏமாந்ததும் உண்டு.

ஒருமுறை துபாய் ஏர்போர்ட்ல லவுஞ்சுல போய் நல்லா தூங்கிட்டேன். 9 மணிக்கு ப்ளைட். 8 3/4 மணிக்கு 'மிஸ்டர் ரமாமுர்தி... மிஸ்டர் ரமாமுர்தி..."ன்னு அனவுன்ஸ் பண்ணிக்கிட்டே இருக்காங்க. லேசா காதுல விழுந்தாலும், வேற யாரோன்னு தூக்கத்தை கண்டின்யூ பண்ணேன். நல்லவேளை லவுஞ்ச் மேனேஜர் நான் உள்ள வந்ததை கம்யூட்டர் லிஸ்ட்ல பாத்துட்டு ஒவ்வொருத்தரையா கேட்டுக்கிட்டே வந்து நம்மளை எழுப்பி அனுப்பிச்சு வெச்சாரு. அடிச்சு புடிச்சு ஓடி வந்து விமானத்துல ஏறுனா, எல்லாரும் மேலயும் கீழயும் பாத்துட்டு மூஞ்சியத் திருப்பிக்கறாங்க. பிஸினஸ் க்ளாஸ்ங்கற ஒரே காரணத்துக்காக அந்தப் பணிப்பெண்கள் ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சுட்டு 'டப்'னு கதவை மூடினாங்க.அப்பவும் எங்கப்பா கிட்ட சொன்னேன் 'நீ கிருஷ்ணன் மாதிரிப்பா... போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் உம்பேருக்குத்தான். இவ்வளவு வயசுக்கு அப்பறமும் நான் பண்ற தப்புக்கு உம்பேருதான் ரிப்பேராகுது". அவுருக்கு சிரிப்பு தாங்கல.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரீடர்ஸ் டைஜஸ்டுல ஒருமுறை படிச்சது... தேவையேயில்லாத, ஆனா உலகத்துல பலபேரு பண்ற வேலைக:

1. பேஸ்டை கீழ இருந்துதான் அமுக்கி எடுக்கணும்னு ரூல் போடறது
2. கடிகாரத்தை 5 அல்லது 10 நிமிஷம் முன்னால அட்ஜஸ்ட் பண்ணி வெச்சுக்கறது
3. ஹோட்டல் ரூம்கள்ல வெக்கற சின்னச் சின்ன சோப்புகளை சேத்து வெச்சு எடுத்துட்டு வரது
...
...
...

இப்பிடி பலது இருந்துது. முழுசா ஞாபகம் இல்ல. 1 வது நான் பண்றதில்ல. 2வது எனக்கும் உடன்பாடு கிடையாது. இப்பவும் நான் என் வாட்ச்சை ஆபீஸ் கடிகாரத்தோட sync ல வெச்சுருக்கேன். முன்னால வெக்கறவங்க பலபேரு "8:20 ஆ... இது 20 நிமிஷம் ஃபாஸ்ட்.. 8 தான் ஆகுது"ன்னு சொல்லிக்கிட்டே 8:30 க்கு கிளம்பி ஆபீஸ்ல திட்டு வாங்குவாங்க. 3வது நானும் பண்றதுண்டு. கை கழுவ வெச்சுக்கலாம், மொகங்கழுவ வெச்சுக்கலாம்னு... ஆனா உபயோகப்படுத்துனதே இல்ல. ரொம்ப நாள் கழிச்சு எங்கயாவது தட்டுப்படும். அப்பறம் தூக்கி எறியுவோம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடிகாரம்னு சொன்னதும் ஞாபகம் வருது. எங்கூட ஸ்கூல்ல படிச்ச சிராஜ், எவ்வளவோ தடவை சொல்லிக் குடுத்தும் "கெணியாரம்"னு தான் எழுதுவான். அப்ப ராதான்னு ஒரு டீச்சர். அவன் ஒருதடவை பணியாரம் கொண்டு வந்தபோது அவங் கிட்ட அது "படிகாரம்"னு சொல்லிச் சொல்லி அவனைக் கிண்டல் பண்ணி, புரிய வெச்சு அவனைத் திருத்துனாங்க. கடிகாரம் கெணியாரம்னா, பணியாரம் படிகாரம்தானே !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

5வது வரைக்கும் தமிழ் மீடியத்துல் படிச்சுட்டு, 6வதுக்கு ஆங்கில மீடியம் போனபோது நமக்கு ஏ ஃபார் ஆப்பிள் பி ஃபார் பாய் அளவுக்குத்தான் தெரியும். மொதல் நாள் இங்கிலீஷ் டீச்சர் வந்து (அவர்தான் க்ளாஸ் டீச்சர்) என்னென்ன பாடங்களுக்கு என்னென்ன நோட்டு, எவ்வளவு நோட்டு வாங்கணும்னு லிஸ்ட் சொல்லிக்கிட்டே வந்தாரு. 'ஹோம் ஒர்க்'குக்கு ஒரு நோட் போடச் சொன்னாரு. நான் பின்னால உக்காந்து இருந்ததால சரியா காதுல விழல. 'போமக்' நோட்டுன்னு எழுதிக்கிட்டேன். வீட்டுல போய் காமிச்சா, அப்பாவுக்கு புரியவே இல்ல. 'அது என்னடா போமக் நோட்டு? கேள்விபடாததா இருக்கு?'ன்னாரு. 'அதெல்லாம் தெரியாது... நாளைக்கு ஸ்கூலுக்குப் போகும்போது வேணும்'னு சொன்னேன். அவரும் ரொம்ப நேரம் கொழம்பிப் போயிட்டு அப்பறம் சொன்னாரு 'டேய்.. அது ஹோம் ஒர்க் நோட்டாயிருக்கும்'னு. ஆனாலும் எனக்கு உள்ளூர பயம். நாம எழுதுனது சரியா, அவர் சொன்னது சரியான்னு. ஆனா 6வது முடியற வரைக்கும் க்ளாஸ் டீச்சர் 'போமக்' நோட்டுன்னு எதுவும் மறுபடி கேக்காமலே இருந்து என்னய காப்பாத்துனாரு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

டெல்லில போய் அண்ணனோட நண்பர்களோட தங்கினபோது, அவங்கதான் சமைப்பாங்க. ஒரு நாள் நான் சீக்கிரம் வந்ததால நான் சமைக்கலாம்னு (முதல் முறையா) ஆரம்பிச்சு உப்புமா பண்ணினேன். சாப்டுட்டு முகுந்தன் கேட்டாரு "எப்பிடி கேவலமா பண்ணினாலும் சுமாரா வரது உப்புமா... அதையே உன்னால எப்பிடி கேவலமா பண்ண முடிஞ்சுது?'ன்னு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கிச்சடி இதுக்கு மேல தீஞ்சுரும். டெல்லி உப்புமா மாதிரி இருக்காதுன்னு நினைக்கிறேன்....

37 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

வெண்பூ said...

கிச்சடி நல்லா இருக்கு.. ரொம்ப சூப்பர்னு சொல்ல முடியாட்டாலும் டெல்லி உப்புமா அளவுக்கு மோசமெல்லாம் இல்லை.. (அப்ப அதை விட கொஞ்ச மோசம்னு சொல்றீங்களான்னு கலாய்க்கக் கூடாது)...

'டொன்' லீ said...

நான் ஏதோ சமையல் ஐட்டம் என்று நினைச்சன்..:)

Mahesh said...

வெண்பூ.... மனசுல பட்டதை பட்டுனு சொன்னதுக்கு ரொம்ப நன்றி...

அடுத்த முறை இம்ப்ரூவ் பண்ண முயற்சி பண்றேன்...

Mahesh said...

டொன் லீ.... ஹி ஹி ஹி

பழமைபேசி said...

அடுத்த படைப்புக்கு காத்திட்டு இருக்கோம்....நொம்ப ருசியா இருக்குதல்லோ?!

விஜய் ஆனந்த் said...

நல்ல கிச்சடி!!!

அடுத்த ரிலீஸ்ல கொஞ்சம் மொளகா சேத்துப்போட்டு பண்ணுங்க!!!

கபீஷ் said...

kichadi is good, upma is one of the toughest eatables to make :-) :-)
(Sorry for writing in english Mahesh)

Anonymous said...

மகேஷ் நல்லாத்தானே எழுதியிருக்கீங்க. நான் ரசிச்சேன்.

என்னோட கிரிடிட் கார்டுல என் பேருக்குப் பின்னால என் அப்பா பேரும் இணைச்சிருக்கேன். ஒரு முறை வீட்டுக்குப் போன் பண்ணி என் அப்பா பேரச் சொல்லிக் கேட்டுருக்காங்க. அப்பா இல்லை தவறீட்டார்னு சொல்லவும், அவங்க பேஜாராயி என் மொபைல்ல கூப்பிட்டு நான் இறந்துட்டதா நினைச்சு எனக்கே அனுதாபம் சொன்னங்க.

ஜோசப் பால்ராஜ் said...

ண்ணா, கிச்சடி நெம்ப நல்லாருக்குங்ணா.

எனக்கும் இதே நிலமைதான், எங்க பெயரத்தான் பல இடங்கள்ல கூப்பிடுவாங்க. சமீபத்துல நான் புது வேலையில சேர்ந்தப்ப HR என் குழுவுக்கு அனுப்ச மின்னஞ்சல்ல Mr.Adaikalasamy is appointed as your அப்டின்னு போட்டு என்னைய அறிமுகப்படுத்தி வைச்சிருந்தாங்க. நான் போன உடனே எல்லாரும் என்னைய அடைக்கலசாமின்னு கூப்புட்டாய்ங்க. அடக் கெரகமே அவரு ஊர்ல நெம்ப பிசியா வயக்காட்டுல அறுவடையப் பார்த்துக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காரு, அவர எதுக்குட இவிங்க கூப்புடுறாய்ங்கன்னு குழம்பிப் போயிட்டேன், அப்றம் எல்லாருகிட்டயும் அய்யா ராசா நீங்க கூப்புடுறது என் அப்பாவ, அவர விட்ருங்க சாமி, என்னைய ஜோசப்னு கூப்புடுங்கடான்னு சொன்னேன்.

அட, நீங்களும் ஹோட்டல்ல சோப் தூக்கிட்டு வந்துருவீங்களாக்கும்? நானும்தேன், சோப்பு, பேஸ்ட்டு, ப்ரஷ் எல்லாத்தையும் சுருட்டியாந்துருவேனுங்க.

ஜோசப் பால்ராஜ் said...

அப்ப இனிமே வாரம் வாரம் கிச்சடி இருக்கும்ல?

LOSHAN said...

இந்த அப்பா பெயர் நம் பெயராவது தமிழனுக்கே உள்ள பொதுவான விஷயம் போலும்.. எனது வங்கி விஷயங்கள்,பாஸ்போர்ட் விஷயங்களில் மட்டுமன்றி அலுவலகத்திலும் இந்தக் கூத்து வழமை.

என்னுடைய முழுப் பெயரும் ஒரு தடவை சொல்லி முடிப்பதற்குள் சிங்கள மொழி நண்பர்களுக்கு மூச்சு நின்று விடும்.. பிறகொரு நாள் பதிவிடுகிறேன்.. ;)

மகேஷ்,உங்க உப்பு மா சூபர் மா..
ரசித்தோம்..

அந்த ரீடர்ஸ் டைஜஸ்ட் விஷயம் பற்றி முன்பொரு நாள் வானொலி நிகழ்ச்சி நான் செய்த ஞாபகம்..நம்மவர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதுமே இந்தக் கோமாளிக் கூத்து வழமை தான்..

LOSHAN said...

இந்த அப்பா பெயர் நம் பெயராவது தமிழனுக்கே உள்ள பொதுவான விஷயம் போலும்.. எனது வங்கி விஷயங்கள்,பாஸ்போர்ட் விஷயங்களில் மட்டுமன்றி அலுவலகத்திலும் இந்தக் கூத்து வழமை.

என்னுடைய முழுப் பெயரும் ஒரு தடவை சொல்லி முடிப்பதற்குள் சிங்கள மொழி நண்பர்களுக்கு மூச்சு நின்று விடும்.. பிறகொரு நாள் பதிவிடுகிறேன்.. ;)

மகேஷ்,உங்க உப்பு மா சூபர் மா..
ரசித்தோம்..

அந்த ரீடர்ஸ் டைஜஸ்ட் விஷயம் பற்றி முன்பொரு நாள் வானொலி நிகழ்ச்சி நான் செய்த ஞாபகம்..நம்மவர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதுமே இந்தக் கோமாளிக் கூத்து வழமை தான்..

Sathya said...
This comment has been removed by the author.
ச்சின்னப் பையன் said...

அண்ணா, எப்படிண்ணா இது??? அப்போ பேஸ்டை அமுக்கறது top-to-bottom approach லேதானா????

லிப்ஃட்லே ஏறினதுமே, திரும்பி கதவை பாத்துக்கிட்டு நிப்பீங்களா? இல்லேன்னா கதவுக்கு முதுகை காட்டிக்கிட்டு நிப்பீங்களா?????? ஹிஹி...

பாபு said...

கிச்சடி நல்லாத்தான் இருக்கு,பசி நேரத்துக்கு

Mahesh said...

வாங்க பழமைபேசி... படைக்கிறோம்... சொல்லிட்டிங்கள்ல?

Mahesh said...

விஜய் ஆனந்த்... எனக்கே கிச்சடி கொஞ்சம் சப்...னுதான் இருந்துது..

நன்றீ கபீஷ்...

Mahesh said...

வாங்க வேலன்... உங்க அனுபவம் ரொம்ப வித்தியாசமா இருக்கே...

ஜோசப் : தாராளமா வாங்க.... ஆனா அடுத்த ரெண்டு வாரம் நான் ஜெனீவால...

நன்றி LOSHAN... அட... வானொலி நிகழ்ச்சியெல்லாம் பண்ணியிருக்கீங்களா?

Mahesh said...

ச்சின்னப்பையன்... top to bottom அமுக்கறது புதுச இருக்கே... எப்பிடிங்க இப்பிடியெல்லாம் முயற்சி பண்றீங்க? பெரிய ஆளுதான்...

Mahesh said...

நன்றி பாபு....

எப்பிடியோ எல்லாரும் மென்னு முழுங்கிட்டீங்க... :)))))

ஜோசப் பால்ராஜ் said...

//ஜோசப் : தாராளமா வாங்க.... ஆனா அடுத்த ரெண்டு வாரம் நான் ஜெனீவால... //

வாங்க.... ஆனா வராதீங்கன்னு சொல்ற மாதிரி இருக்குன்னு தம்பி விசய் ஆனந்த் போனடிச்சு சொல்றாண்ணே.

குடுகுடுப்பை said...

கிச்சடி கூட நல்லா இருக்கும்னு இப்பதான் தெரியுது

அது சரி said...

ஏதோ ரெசிப்பி சொல்லிருப்பீங்கன்னு ஆர்வமா வந்தேன், இப்பிடி ஏமாத்திட்டீங்களே!

பரவாயில்லை, இதுவும் நன்னா தான் இருக்கு.

வயிற்றுக்கு உணவில்லா போழ்து ஆங்கே சிறிது
கண்ணுக்கும் ஈயப்படும்!

நசரேயன் said...

இதுக்கு நீங்க துக்ளக் கிச்சடி ன்னு வச்சாலும் நல்லத்தான் இருக்கும் .
எல்லாம் அருமை ..

Mahesh said...

ஜோசப் : அய்யோ.. தப்பா எடுத்துக்கிட்டிங்க போல இருக்கு... நெஜமாவே அடுத்த ரெண்டு வாரம் ஜெனீவா பயணம்.... திரும்ப வந்ததும் மீட் பண்ணுவோம்...

அப்பறம்.. விஜய் போன் பண்ராருன்னு சொல்றது... துக்ளக்ல "நண்பன் சொல்கிறானே..."ன்னு கேள்வி கேக்கற மாதிரி இருக்கு. :)

Mahesh said...

நன்றி நசரேயன்...

நன்றி குடுகுடுப்பை...

நன்றி அது_சரி....

ஊக்குவிப்புக்கு நன்றி....

பரிசல்காரன் said...

/"எப்பிடி கேவலமா பண்ணினாலும் சுமாரா வரது உப்புமா... அதையே உன்னால எப்பிடி கேவலமா பண்ண முடிஞ்சுது?'ன்னு. ///

கிச்சடி என்னென்னிக்கு போடுவீங்கன்னு சொல்லுங்க.. தொட்டுக்க நான் அவியல் பண்றேன்...

வெண்பூ சொன்னதுல நான் முரண்படறேன்.. எனக்கென்னமோ எல்லாமே பிடிச்சது.. அந்த ரீடர்ஸ் டைஜஸ்ட் மேட்டர் கலக்கல்.

கொஞ்ச நாள் எழுதின பின்னாடிதான் மேட்டருக்கு கஷ்டமா இருக்கும்...

Mahesh said...

ரொம்ப நன்றி பரிசல்....

நீங்க சொன்ன மாதிரி... எடிட் பண்ணிட்டேன்... தேங்ஸ்..

பரிசல்காரன் said...

நன்றியோ.. நன்றி!!!!

கிரி said...

//ஹி ஹி ஹி ஹி எல்லாரும் அவியல், கதம்பம், நொறுக்ஸ், துணுக்ஸ்னு போட்டு பட்டய கெளப்புராய்ங்களே... நாமுளும் ஒண்ணு போட்டாத்தேன் என்ன கொறஞ்சுரும்னு//

:-)))

//பிஸினஸ் க்ளாஸ்ங்கற ஒரே காரணத்துக்காக அந்தப் பணிப்பெண்கள் ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சுட்டு 'டப்'னு கதவை மூடினாங்க//

ஹி ஹி ஹி

//வடகரை வேலன் said...
அப்பா இல்லை தவறீட்டார்னு சொல்லவும், அவங்க பேஜாராயி என் மொபைல்ல கூப்பிட்டு நான் இறந்துட்டதா நினைச்சு எனக்கே அனுதாபம் சொன்னங்க.//

சில சமயம் இப்படி ஏடாகூடமாகவும் ஆகிடுது.

மகேஷ் உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

தாமிரா said...

மீ த‌ லேட்டு.!

தாமிரா said...

கிச்சடி உண்மையிலேயே பிரமாதம் தல.. ரசித்தேன். உப்புமா சும்மா கிண்டீட்டிங்க..
//3. ஹோட்டல் ரூம்கள்ல வெக்கற சின்னச் சின்ன சோப்புகளை சேத்து வெச்சு எடுத்துட்டு வரது// நானும் பண்றதுதான், ரமாவுக்காக..

வெண்பூ கருத்துக்கு நான் மாறுபடுகிறேன். இந்த தொடர் தலைப்புகளில் எழுதும் மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் சுவாரசியம் குறைவாக இது எனக்கு படவில்லை. வாழ்த்துகள்..

மங்களூர் சிவா said...

/
இவ்வளவு வயசுக்கு அப்பறமும் நான் பண்ற தப்புக்கு உம்பேருதான் ரிப்பேராகுது"
/

ஏன்னா நாம்பல்லாம் அவ்ளோ நல்லவிங்க!!

:)))))))))))

மங்களூர் சிவா said...

/
ஆங்கில மீடியம் போனபோது நமக்கு ஏ ஃபார் ஆப்பிள் பி ஃபார் பாய் அளவுக்குத்தான் தெரியும்.
/

அண்ணே பெரிய ஆளுண்ணே நீங்க என்னென்னமோ தெரிஞ்சி வெச்சிருக்கீங்க!

:))

மங்களூர் சிவா said...

/
'அது என்னடா போமக் நோட்டு? கேள்விபடாததா இருக்கு?'ன்னாரு. 'அதெல்லாம் தெரியாது... நாளைக்கு ஸ்கூலுக்குப் போகும்போது வேணும்
/

:))))))))))))

ROTFL

மங்களூர் சிவா said...

/
எப்பிடி கேவலமா பண்ணினாலும் சுமாரா வரது உப்புமா... அதையே உன்னால எப்பிடி கேவலமா பண்ண முடிஞ்சுது?
/

haa haa
:))))))))))

Mahesh said...

கிரி... ஊக்குவிப்புக்கு நன்றி

தாமிரா... நன்றி

சிவா... ரசிச்சு பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி....நன்றி...நன்றி