Wednesday, November 12, 2008

ஜெனீவா டயரி

முந்தாநாள் போட்ட பதிவப் பாத்தீங்களா?

Jet-de-aqua : World's highest fountain

திங்கள் கிழமை காலைல பேங்குக்கு போயிட்டு எல்லாருக்கும் ஒரு 'ஹாய்' சொல்லிட்டு கெளம்பிட்டேன். ராத்திரிதான் வேலை ஆரம்பிக்கும். வெளிய வந்தா சுள்ளுன்னு சூரியன், கூடவே ஊதக் காத்து. லேசா சாரல். பேங்குல இருந்து ஜன்னல்ல எட்டிப் பாக்கும்போதே தெரிஞ்சுது, இன்னிக்கு ஃபௌண்டன் இருக்குன்னு. அப்பிடியே ஆத்தோரமாவே நடந்து ஏரிக்கு வந்தா ஈயாடுது. குளுருக்கு டூரிஸ்டுக கூட ரூம்லயே மொடங்கி கெடக்காங்க போல. ஃபோட்டோ எடுக்க நல்ல சூழல். கூட்டம் கூட்டமா அன்னங்களும், வாத்துகளும், நாரைகளும். யாரோ ஒரு பாட்டி ஒரு ஒரமா உக்காந்து ரொட்டித் துண்டெல்லாம் பிச்சு பிச்சு அதுகளுக்கு வினியோகம். படம் புடிக்கலாம்னு போனா பாட்டிக்கு ஒரே கோவம். அதுகளையெல்லாம் நான் வெரட்டி விட்டுடுவேன்னு. படம் எடுக்கவே விடல. நமக்கு ஃப்ரென்ச் ஓரளவுதான் புரியும். திட்ட ஆரம்பிக்கறதுக்குள்ள இடத்த காலி பண்ணிட்டேன்.

பக்கத்துலயே தாவரவியல் பூங்கா (Botanical Garden) இருக்கு. வெளிய ஒரு பெரிய திடல்ல போதைமருந்துகளுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வுக் கூட்டம் நடந்துக்கிட்டுருந்துது. கொஞ்ச நேரம் நின்னு கவனிச்சா ஸ்விஸ் டீனேஜர்க எந்த அளவுக்கு இந்த பழக்கத்துக்கு அடிமையாகிக் கிடக்காங்கன்னு தெரிஞ்சுது. (போன முறை வந்தபோதே சாயங்காலத்துல இருந்தே ஏரிக்கரையோரமா பசங்களும் பொண்ணுகளும் கஞ்சா மாதிரியான பொருட்களை சர்வ சாதாரணமா உபயோகிக்கறதப் பாத்து அரண்டு போயிருக்கேன்.) ஸ்விஸ் நார்கோடிக்ஸ் ப்யூரோவோட சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்படணும்னு பேசினாங்க.

Caption: What is the future for our children? Say double no to drugs !!

வெளிய பாலத்துக்கு ரெண்டு பக்கமும் இருந்த குதிரைவீரன் சிலைக என்னை ரொம்ப கவர்ந்தது. போருக்கு போற (கழுகுடன் வீரன்) குதிரை தலை குனிஞ்சும், சமாதானத்துக்குப் போற (புறாவுடன் வீரன்) தலை நிமிர்ந்தும் இருக்கற மாதிரி தோணுச்சு. பூங்காவுக்குள்ள போனா, ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு கலர்ல இருக்கு. இலையுதிர் காலத்தோட கடைசி நாட்கள். இன்னும் ரெண்டு வாரத்துல எல்லா மரமும் மொட்ட மொட்டயா நிக்கும். சில படங்கள் எடுத்துட்டு ரூமுக்கு திரும்பிட்டேன். கொஞ்சமாவது தூங்கினாத்தான் ராத்திரி பூரா உக்கார முடியும். புதுசா ஒரு இந்திய ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சுருக்காங்கன்னு அங்க சாப்பிடப் போனா, அது பேருதான் 'இந்தியா ப்ளாசா' நடத்தறது ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க வந்த பங்ளாதேஷ் பசங்க. கடுகு எண்ணை சமையல். சுமாரா இருந்துது. இனிமே அந்தக் கடைக்கு போகக்கூடாதுன்னு முடிவு பண்ணிக்கிட்டேன்.

இந்த வாரக்கடைசிக்குள்ள வேலை முடியணும். அப்பிடி முடிஞ்சா, ஒரு நாள் ஆல்ப்ஸ் மலைத்தொடர்ல எதாவது ஒரு மலையுச்சிக்காவது போயிட்டு வரணும். உச்சிகள்ல நல்ல பனி விழுந்திருக்கு. மழை இல்லாம இருக்கணும். இன்னிக்கு காலையிலிருந்து மழை விடாம பெஞ்சுக்கிட்டுருக்கு. வாரம் பூரா இப்பிடித்தான் இருக்கும்கறாங்க. பாக்கலாம்...

கலர் கலரா மரங்களப் பாருங்க....

17 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

குடுகுடுப்பை said...

ஆல்ப்ஸ் போயிட்டு வந்து எழுதுங்க, பங்களாதேஸ், பாக்கிஸ்தான் எல்லாருக்கும் இந்தியாதான் அடையாளம்.

கபீஷ் said...
This comment has been removed by the author.
கபீஷ் said...

நல்லா எழுதியிருக்கீங்க, Jungfrau போக ட்ரை பண்ணாதீங்க. நாங்க போனப்பவே(அப்ப ஓரளவு நல்ல சீசன்) அங்க ரொம்ப பனியா இருந்துச்சு. நல்லா பாக்க முடியாது. இப்ப இன்னும் ஜாஸ்தியா இருக்கும்

பழமைபேசி said...

இலையுதிர் காலம்
துக்ளக் பக்கத்துக்கு
வசந்த காலம்!

ம‌ழைக் கால‌ம்
ப‌திவுல‌ ஒரே
ம‌ல‌ர்க் கால‌ம்!!

வ‌ருங் கால‌ம்
ந‌ம‌க்கு ஆல்ப்ஸ்
ம‌லைக் கால‌ம்!!!

Mahesh said...

@ குடுகுடுப்பை :

ரொம்ப கரெக்டுங்க... நான் கம்போடியா, பாலி போனபோதெல்லாமும் னோட் பண்ணேன். மஹாராஜா, தாஜ், பாம்பே, மஹாராணின்னெல்லாம் பேரு இருக்கும்...ஆனா நடத்தறதெல்லாம் பாகிஸ்தானியர்கள்.

Mahesh said...

@ கபீஷ் :

இல்லைங்க...யுங்ஃப்ரா (Jungfrau) போக நேரமிருக்காதுன்னு நெனக்கறேன். இல்லாட்டி பக்கத்துல மோம்ப்லான் (Mont Blanc) போகணும்.

Mahesh said...

அட அட அட... நம்ம கவிஞரு... நல்லா இருக்குங்க கவிதை... மழைக்காலம் / மலைக்காலம்.... ரசித்தேன்

புதுகை.அப்துல்லா said...

முந்தாநாள் போட்ட பதிவப் பாத்தீங்களா?

//

அதெல்லாம் நாங்க நீங்க சொல்லாமயே ஒழுங்காப் பார்த்துருவோம்.

ஆயில்யன் said...

//நாள் ஆல்ப்ஸ் மலைத்தொடர்ல எதாவது ஒரு மலையுச்சிக்காவது போயிட்டு வரணும். உச்சிகள்ல நல்ல பனி விழுந்திருக்கு//


ஆல்ப்ஸ் மலை காற்று வந்து நெஞ்சில் வீசுதே

பாட்டை பாடி அடுத்த பதிவுக்கு நிறைய போட்டோ எடுத்துடவாங்க பாஸ்!!!!

:)))

பரிசல்காரன் said...

நல்ல ரசனைங்க உங்களுது. அத சொல்றப்ப ரொம்ப உணர்வுபூர்வமா வேற சொல்லி, எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்க. (அப்பறம்.. நாங்க எப்போ இங்கல்லாம் போக!)

Mahesh said...

அப்துல்லா... ஏண்ணே உங்களப் பத்தி நமக்குத் தெரியாதா? :))))

வாங்க ஆயில்யன்...உங்களப் பத்தி விஜயானந்த் சொல்லிக்கிடுருந்தாரு... நீங்களும் PMP எழுதப் போறீங்கன்னு... வாழ்த்துக்கள் !!

Mahesh said...

@ பரிசல் :

எங்க ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோம்?

என்னவோ நாம பாத்ததை நாண்பர்களும் அனுபவிக்கட்டுமேன்னுதான் ...

அது சரி said...

//
ராத்திரிதான் வேலை ஆரம்பிக்கும்
//

இன்னா வேலைபா அது??

//
அப்பிடியே ஆத்தோரமாவே நடந்து ஏரிக்கு வந்தா ஈயாடுது. குளுருக்கு டூரிஸ்டுக கூட ரூம்லயே மொடங்கி கெடக்காங்க போல.
//

பின்ன வருசத்தில 364 நாளு குளிர் அடிச்சா என்ன பண்றது??

//
கொஞ்ச நேரம் நின்னு கவனிச்சா ஸ்விஸ் டீனேஜர்க எந்த அளவுக்கு இந்த பழக்கத்துக்கு அடிமையாகிக் கிடக்காங்கன்னு தெரிஞ்சுது. (போன முறை வந்தபோதே சாயங்காலத்துல இருந்தே ஏரிக்கரையோரமா பசங்களும் பொண்ணுகளும் கஞ்சா மாதிரியான பொருட்களை சர்வ சாதாரணமா உபயோகிக்கறதப் பாத்து அரண்டு போயிருக்கேன்.)
//

வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பு! நீங்க‌ பொட்டலம் வாங்கினதே இல்லியா? :0))

கஞ்சாவெல்லாம் இஸ்கூல் பசங்க மேட்டரு..டர்ட்டி! கப்பு வேற!! டீசன்டான ஜென்டில் மேன்களுக்கு எக்ஸ்டஸி மாதிரி வேற சரக்கு இருக்கு.

Mahesh said...

அது சரி..... :))))

கிரி said...

//வெளிய வந்தா சுள்ளுன்னு சூரியன்//

ஜெனிவால வெய்யில் னா பசங்களுக்கு கொண்டாட்டம் தான் ;-)

//போன முறை வந்தபோதே சாயங்காலத்துல இருந்தே ஏரிக்கரையோரமா பசங்களும் பொண்ணுகளும் கஞ்சா மாதிரியான பொருட்களை சர்வ சாதாரணமா உபயோகிக்கறதப் பாத்து அரண்டு போயிருக்கேன்//

நல்ல வேளை வேற எதுவும் பார்க்கல ;-)

மங்களூர் சிவா said...

பயண அனுபவங்களை நல்லா பதிவு செஞ்சிருக்கீங்க.

Mahesh said...

நன்றி கிரி....

நன்றி சிவா...