Saturday, November 28, 2009

பட்ட காலிலேயே படும்....

துபாய் முதலீடுகள் - மேக மூட்டம் :(

போன ஒரு வாரமா துபாய் பத்தி வர செய்திகள் அவ்வளவு ஆரோக்கியமா இல்லை. லீமன் பிரதர்ஸ்ல ஆரம்பிச்சு, சிடி பாங்க் அது இதுன்னு ஒரு பெரிய கண்டத்துல இருந்து மெல்ல மீண்டு வந்து ஒரு நம்பிக்கை வளர்ந்து வரும்போது இப்ப மறுபடி ஒரு சறுக்கல். என்ன நடக்குது, எப்பிடி சமாளிக்கப் போறோம்னு இன்னும் தெளிவா இல்லாட்டாலும், ஒரு பெரிய சரிவிலிருந்து சமீபத்துல மீண்டு வந்திருக்கறதால, சமாளிச்சுடலாம்னு ஒரு சின்ன நம்பிக்கை இருக்கு.

துபாய்ல முதன்மையான முதலீடு ரியல் எஸ்டேட். பரந்து கிடக்கற பாலைவனம், நிலங்களை மீட்டெடுக்க தோதான, அவ்வளவு ஆழமில்லாத கடல் பரப்பு, கிழக்கையும் மேற்கையும் இணைக்கிற மையமா துபாய் விமான நிலையம், மதம் சார்ந்த சில கட்டுப்பாடுகளில் இருந்து கொஞ்சம் விலகி இருப்பதுன்னு பல ஆதாயங்கள். நவீன கட்டடக்கலை ஆர்வலர்களுக்கு சரியான விளையாட்டுக்களம். எமிரேட்ஸ் கோபுரங்கள், புர்ஜ் அரப் 7 நட்சத்திர ஹோட்டல்னு பல வியாபார மையங்கள், ஜபேல் அலி ஏற்றுமதிப் பகுதின்னு வெற்றிகரமாப் போயிட்டுருக்கும்போது வந்தது "ஜுமெரா பாம்" திட்டம். விரிஞ்ச பனைமர வடிவத்துல, கடல்ல மணலைக் கொட்டி நிலத்தை மீட்டெடுத்து அதுல குடியிருப்புகள். உலகத்தோட பல மூலைகள்ல இருந்து பெரிய அளவுல முதலீடுகள் குவிஞ்சுது. உலகின் பல பிரபலங்கள் "ஜுமேரா பாம்"ல வீடு வெச்சுக்கறது ஒரு கௌரவம்னு நினக்கிற அளவுக்கு வெற்றி. திட்டமும் நல்லபடியா முடிஞ்சது.அதைத் தொடர்ந்து வந்தது "துபாய் வேல்ட்". இதுவும் பாம் மாதிரியே கடல்ல நிலம் மீட்டெடுத்து குடியிருப்புகள் கட்டற திட்டம். கொஞ்சம் வித்தியாசமா உலகப் படம் மாதிரி. பாம் வெற்றியைப் பாத்துட்டு இதுல கொஞ்சம் அதிகமாவே முதலீடு. பல பங்குதாரர்கள்.... முக்கியமா நகீல். இந்த பெருமையான திட்டத்துக்காக 2004ல வெளியிட்ட "சுகுக்" பாண்டுகள் இப்ப 2009 டிசம்பர்ல முதிர்வடையும்போது முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பணும்.

ஆனா போன வருஷ நெருக்கடி சமயத்துல இருந்தே பிரச்னைகள் ஆரம்பிச்சாச்சு. இப்ப சரியான நெருக்கடி. 2010 மே வரைக்கும் பொறுத்துக்க வேண்டியிருக்கும்னு போன வாரம் நகீல் ஒரு அறிக்கை விட்டு ஒரு அதிர்ச்சி அலையைக் கிளப்பினதுமே உலக சந்தைகள்ல பீதி. உடனே டாலர்ல முதலீடுகள் குவிய அதுக்கு டிமாண்ட். துபாய்ல இருக்கற மற்ற முதலீடுகளை அவசரமாத் திரும்ப எடுக்க ஆரம்பிக்கவே, முதலீடுகளை மறுமதிப்பீடு செய்யும்போது சரிவு. அதுலயும் சமீபத்து நெருக்கடிகளின் பின்னணில பார்க்கும்போது முதலீட்டாளர்கள் பயம் புரியக்கூடியதே.

இந்த நெருக்கடியோட மையத்துல இருக்கற முதலீட்டின் மதிப்பு 60 பில்லியன் டாலர்கள். இன்னும் அதிகமா கிட்டத்தட்ட 90பில்லியன் வரைக்கும் இருக்கலாம். ஆனா இதுனால வங்கிகளுக்கு பெரிய சரிவு எதுவும் இருக்காதுன்னு ம், 2010 மே மாதத்துக்குள்ள இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துடலாம்னும் எதிர்பார்க்கலாம். எப்பிடியும் RBS, HSBC, Standard Chartered வங்கிகளுக்கு இழப்பு கணிசமா இருக்கலாம். கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா சார்ந்த கட்டுமான நிறுவனங்கள் கொஞ்சம் பாதிக்கப்படும். பொதுவா வளர்ந்து வரும் சந்தைகள்ல முதலீடுகள் ரொம்ப நிதானமா இருக்கலாம். இது மாதிரி ஒரு "மந்த" நிலை ஏற்கெனவே சரிவிலிருந்து மீண்டு வர சந்தைக்கு ஒரு வேகத்தடைங்கறதை மறுக்க முடியாது.

நிலைமயை சரி செய்ய மற்ற எமிரேட்டுகள் கிட்ட பாண்டுகள் மூலமா நிதி திரட்டலாம். முக்கியமா எண்ணை வளம் மிக்க அபுதாபி. சவுதி அரேபியா உதவிக்கு வரலாம். இந்த நெருக்கடிக்கு எதிர்வினையா உலக சந்தைகள் கொஞ்சம் சரிஞ்சு 3 நாட்கள்ல மறுபடியும் பழைய நிலைக்கு வந்தாச்சு. போன சரிவுல நமக்குக் கிடைத்த பாடங்கள் நிறைய. மறுபடி இன்னொரு சரிவை நாம அனுமதிக்கக்கூடாது ; அனுமதிக்க மாட்டோம். Yes. We are resilient enough.

24 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

//மறுபடி இன்னொரு சரிவை நாம அனுமதிக்கக்கூடாது ; அனுமதிக்க மாட்டோம். Yes. We are resilient enough.//

Is it so? Lets see.... if there is no downfall, then there is no upraise too........

ஸ்வர்ணரேக்கா said...

//இந்த நெருக்கடியோட மையத்துல இருக்கற முதலீட்டின் மதிப்பு 60 பில்லியன் டாலர்கள்.//

அடேயப்பா... 60 பில்லியன் டாலர்களா...?

//ஒரு பெரிய சரிவிலிருந்து சமீபத்துல மீண்டு வந்திருக்கறதால, சமாளிச்சுடலாம்னு ஒரு சின்ன நம்பிக்கை இருக்கு//

நம்புவோம்... நல்லதே நடக்கும்..

மங்களூர் சிவா said...

இப்பதான் பனிக்கட்டி உருகவே ஆரம்பிச்சிருக்காமே இதோட தொடர்ச்சி இன்னும் பயங்கரமாக இருக்கும்னு நினைக்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

அகலக் கால் வைப்பதால் வரும் பிரச்சனைகள் இதுங்க..

don't bite more than what you can chew - இது நினைப்புல இருந்தாலே போதுமானதுங்க.

Mahesh said...

நன்றி மணியாரே.... உங்க வாக்கு பலிக்கட்டும்...

நன்றி ஸ்வர்ணரேக்கா..

நன்றி சிவா... அப்பிடி இருக்காதுன்னு நம்புவோம்..

நன்றி ராகவன் சார்... 100% சரி

அறிவிலி said...

ஹ்ம்ம்ம்ம்...

ஆ! இதழ்கள் said...

நல்ல கட்டுரை. நல்ல விளக்கங்கள்.

Mahesh said...

நன்றி அறிவிலி... ஹ்ம்ம்ம்ம்

நன்றி ஆ!இதழ்க்ள்.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குப்பன்.யாஹூ said...

its merely greed and goes beyond limit. playing against nature too much

எம்.எம்.அப்துல்லா said...

அது ஆடுன ஆட்டம் சரியில்லை. அதுனாலதான் காலுல பட்டுருச்சு :)

Mahesh said...

நன்றி குப்பன்_யாஹூ.... yes... greed brings grief...

நன்றி அப்துல்லா அண்ணே... நீங்க அபுதாபி அண்ணன் :) சரியாச் சொன்னீங்க...

அனுஜன்யா said...

சரியான தருணத்தில், துல்லியமாக எழுதப்பட்ட இடுகை மஹேஷ். அமீரக பொருளாதாரம் நிச்சயம் ஆட்டம் காணும். ஆனாலும், தாங்க முடியாத பாதிப்பு இருக்கும் என்று தோன்றவில்லை. உலகப் பொருளாதாரத்திற்கு நேரடி பண நட்டம் என்பதை விட 'நம்பிக்கை'யில் நிச்சயம் பின்னடைவு நேரும். ராகவன் மற்றும் குப்பன்-யாஹூ சொல்வது போல் அகலக்கால் வைப்பதன் விளைவு ஒரு புறம். இயற்கையுடன் மோதுவது இன்னும் பெரிய குற்றம். நீங்கள் 'முன் அமைதி' (http://anujanya.blogspot.com/2008/07/blog-post.html)படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து இது போல கட்டுரைகளும் எழுதுங்கள் மஹேஷ்.

அனுஜன்யா

கிரி said...

மகேஷ் கில்லாடியா எழுதிட்டீங்க.. எனக்கு இது பற்றி புரியாமல் இருந்தது..இப்ப ஓரளவு! ஓகே :-)

இன்னும் இது பற்றி விரிவா எழுதினா நல்லது

Mahesh said...

நன்றி அனுஜன்யா.... உங்கள் ஊக்கத்துக்கு நன்றி... நான் ஏதோ எனக்குப் புரிஞ்சவிதத்துல எழுதறேன். இந்த மாதிரி விஷயமெல்லாம் நீங்க எழுதணும்...என்னமோ கவிதை எழுதிக்கிட்டுருக்கீங்க :)))))

நன்றி கிரி... கொஞ்சம் புரிஞ்சுதா? அப்ப சரி.

நசரேயன் said...

அண்ணே எப்படி இப்படி ??!!

அது சரி said...

//
பழமைபேசி said...
//மறுபடி இன்னொரு சரிவை நாம அனுமதிக்கக்கூடாது ; அனுமதிக்க மாட்டோம். Yes. We are resilient enough.//

Is it so? Lets see.... if there is no downfall, then there is no upraise too........
//

I second this :0)))

We are not really out of woods mate...May be, there may not be another Lehman Brothers or an AIG, but it doesn't look very rosy...

அது சரி said...

Very informative post, but I think few things needs clarification.

//
அதைத் தொடர்ந்து வந்தது "துபாய் வேல்ட்". இதுவும் பாம் மாதிரியே கடல்ல நிலம் மீட்டெடுத்து குடியிருப்புகள் கட்டற திட்டம். கொஞ்சம் வித்தியாசமா உலகப் படம் மாதிரி.
//

I dont know, where people get this idea, but Dubai World is not just a building venture. :0))))

It's the investment arm of Dubai Govt, almost like a holding company. It owns shares in lot of companies including Nakheel, Dubai Ports World, Sainsbury's super market chain (of Britain), some casinos in Vegas etc etc...

அது சரி said...

The problem of Dubai World defaulting (or even postponing) the payments has more implications than just payments of bonds on maturity.

One thing is, these bonds were rated as investment grade not based on their quality, but because it was assumed the Govt. of Dubai is behind it. And behind Govt. of Dubai, there is always Govt. of Abu Dhabi, which got enormous cash.

But DW failing to pay signifies that,
1. Govt. of Dubai doesn't have enough money, even to the tune of some $5B. Or, they are not willing to stand behind DW, which completely nullifies the assumption. This raises question on all investments ever made in Dubai govt. compnaies.

2. Assuming Dubai Govt. is actually behind DW, this raises even bigger question. If the Dubai Govt. doesn't have money, the first port of call would be Abu Dhabi. But they apparently did not help in this incident otherwise DW would have had to make this announcement. So, what is the state of relationship between Dubai and Abu Dhabi?

3. Given the nature of Bonds, the rate of return is very low comparing with other investments. It is so, because Govt. bonds (or institutions backed by Govt) are assumed to be risk free. But DW shattered that assumption completely. This leaves a bitter taste to international investors, and they would be very reluctant to buy any bond issued by any company in the ME.

4. Usually the debts are re-financed. Even in this case, DW was trying to place $20B bonds in the market, but there were not many takers. The bond issue was bailed out by Abu Dhabi banks. If nobody wants it, what's the problem?

5. This will have serious impact on Dubai, not because DW failed to pay, but it shook the investor confidence in getting their money back. And that's not a good way of doing business, is it?

அது சரி said...

Just one more note...

Many people here say that Dubai was greedy, but I disagree.

Anybody ever got into corporate finance knows it very well. All corporates issue bonds/borrow to conduct their business, and put it simply that's how it always works, and its not being greedy.

Unfortunately for DW, the credit environment is really crap at the moment, and most banks are very reluctant to lend anything related to properties (even a housing loan if you try). So, DW was not able to refinance their debts at this point of time, and its not exactly their fault. Interestingly, this is the business model that brought so much of prosperity to Dubai which does not have much of natural resources or human resources. In short, the ruler of Dubai created this dreamland out of nowhere. All credits to him.

Dubai is really a nice place to visit and do business. I really hope, they can put this issue behind them, and make a strong comeback.

Come on Dubai! You can do it!!!

Mahesh said...

நன்றி அதுசரி... அப்பாடா.. எங்க வரலையேன்னு பாத்தேன்..

//We are not really out of woods mate...May be, there may not be another Lehman Brothers or an AIG, but it doesn't look very rosy...//
அதைத்தான் நானும் சொல்றேன்..

You are 100% correct. But I touched upon the DUbai World project only and not the corporate entity. As a holding company, their investment strategies and patterns are quite different. But the eye of the storm is the construction activities.

Ofcourse, the backing from the ruler was getting distanced from Naqheel and the credibility was going down. The underwriting by the govt was not very authentic but with some fine prints. Thats another reason why banks were reluctant to refinance. As you rightly said, in the case of Dubai, it is not on the credit rating but for the sovereignity of the backing from the rulers.

The current business model might have changed Dubai from nowhere to a dreamland. But as times change and the economic climate changes, the business model needs to be relooked at and other avenues need to explored. One cannot continue basking in the past glories.

பிரபாகர் said...

பேங்க்ல இருக்கிறதால ரொம்ப தெளிவா அழகா எழுதியிருக்கீங்க!

நிறைய பேப்பர்ல படிச்சேன், தெளிவானது உங்கள படிச்சதுக்கு அப்புறம்தான்!

பிரபாகர்.

குசும்பன் said...

அண்ணாச்சி கலக்கலா எழுதி இருக்கீங்க!

எது எப்படி இருந்தாலும், நம்பிக்கையோடு பலதிட்டங்களோடு மண்ணா கிடந்த ஊரை கோபுரமாக மாற்றியவர், இதையும் சமாளிச்சுட மாட்டாரா என்ன? பார்க்கலாம்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

இன்னும் கொஞ்சம் விளக்கம் தேவை என்னை மாதிரி ஆட்களுக்கு, ஹிஹி முதலீடெல்லாம் பண்ணப்போறதில்லைன்னாலும்.!

hayyram said...

informative. thnks

regards
ram

www.hayyram.blogspot.com