என் இதயம் கவர்ந்த ஹிந்திப் பாடகர்கள். நான் ஒண்ணாவது படிக்கும்போதுன்னு நினைக்கிறேன். அப்பா மிலிட்டரில இருந்து ரிடையர்மெண்ட் வாங்கிட்டு வந்து ஐ.ஓ.பி. பேங்க்ல வேலைக்கு சேந்த பிறகு வீட்டுக்கு ஒரு சின்ன பிலிப்ஸ் டிரான்சிஸ்டர் வந்தது. நாங்கள்லாம் அதைத் தொடக் கூடாது. எதோ ஒரு ஸ்டேஷனை ட்யூன் பண்ணினார்னா பாதி நேரம் ஹிந்திப் பாட்டுகதான். "அமீன் சயானி - பினாகா கீத் மாலா" இது மட்டும்தான் நமக்கு தெளிவா கேக்கும். அதுக்கப்பறம் ஒண்ணும் புரியாது. பிறகு வந்தது ஒரு "வெஸ்டன்" பெட் டைப் கேஸட் ப்ளேயர். எஜக்ட் பட்டனை அமுக்கினா படக்குனு ஒரு மூடி மேல் பக்கமா திறக்கும். மத்தபடி வழக்கம்போல அது என்ன பாட்டு பாடினாலும் நமக்கு ஒரே மாதிரிதான் இருக்கும். அப்பறமா பானாசோனிக் 543, க்ரண்டிக், ஸோனி. இப்பிடி சின்ன வயசுல இருந்து ஹிந்தி பாட்டுக கேட்டு கேட்டு, வார்த்தை, அர்த்தம் எதுவும் புரியாட்டாலும் கொஞ்சம் கொஞ்சமா அதுல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சு. சும்மாவாச்சும் எதாவது ஒரு பாட்டை முனகிக்கிட்டு இருப்போம். அப்பிடி நம்ம மனசுக்குள்ள நுழைஞ்சவங்கதான் ரஃபியும் கிஷோரும். ஆனா அந்த பாட்டுகளோட தாக்கத்தை உணர ரொம்ப வருஷமாச்சு. மனசை மயக்கி, உருக்கி, நெகிழ வைக்கிற குரல்கள். அவ்வளவு பாவம், எக்ஸ்ப்ரெஷன்ஸ்.... ம்யூசிக்குக்கு நம்ம எம்.எஸ்.வி மாதிரி அங்க அவங்களுக்கு ஆர்.டி.பி. பாட்டு எழுத மஜ்ரூ சுல்தான்புரி, குல்சார், ஸஹீர் லுதியான்வி, ஜாவேத் அக்தர்...... நம்ம அமிதாப்போட அப்பா ஹர்வன்ஷ்ராய் பச்சன் கூட. காதல், சோகம்னு சொல்லிட்டா போதும்... அப்பிடியே புழிஞ்சு குடுத்துடுவாங்க...... தேன் தமிழ், சுந்தரத் தெலுங்கு, மயக்கும் மலையாளம் மாதிரியே ஹிந்தியும், அதோட சொல்வளமும் (நிறைய உருது மொழி பாதிப்பு) பரந்து விரிஞ்சது. அர்த்தமும் புரிஞ்சு கேக்கும்போது, அந்த இனிமை, ஆழம், உயிர்ப்பு எல்லாம் அனுபவிக்கும்போது... அந்த பரவசமே தனி. அதுலயும் ஸ்பெஷலா இவங்க ரெண்டு பேர் குரல்கள். அதே மாதிரி பாடகிகள்ல லதா, உஷா, ஆஷா சகோதரிகள். லதா ராஜ்ஜியம் பண்ணினாலும் என்னோட ஃபேவரிட் ஆஷாதான். 90களுக்குப் பிறகு எத்தனையோ பாடகர்களும்,பாடகிகளும் வந்தாலும், ஆயிரக் கணக்கான பாட்டுகள் கேட்டிருந்தாலும், ரஃபி கிஷோர் காலத்துப் பாட்டுகளோட இனிமையும் அழகும்.... சான்ஸே இல்லை. நீங்களும் கேளுங்க.... கிஷோர் ப்ளாக் மெயில் : பல் பல் தில் கே பாஸ்....
சாகர் : சாகர் கினாரே... ரஃபி ஹம் கிஸி ஸே கம் நஹி : க்யா ஹுஆ மேரா வாதா... ரஃபி & ஆஷா யாதோங் கி பாராத் : ச்சுரா லியா ஹை தும் மேரே தில் கோ...
சாகர் : சாகர் கினாரே... ரஃபி ஹம் கிஸி ஸே கம் நஹி : க்யா ஹுஆ மேரா வாதா... ரஃபி & ஆஷா யாதோங் கி பாராத் : ச்சுரா லியா ஹை தும் மேரே தில் கோ...
14 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
rafi is the best singer
if time permits;
please read this
http://nagoreismail786.blogspot.com/2009/07/blog-post_17.html
என்ன கடையில யாரையும் காணோம்? :-)
பேச்சிலர் வாழ்க்கையில் விவித் பாரதியின் சாயா கீத்தில் இவர்கள் துணையுடன்தான் பல தூக்கம் வராத ராத்திரிகள்.
அண்ணா உங்குளுக்கு இந்தியெல்லாம் தெரியுமா? நானும் முக்கி முக்கி மத்யமால பெயிலாயி.. ஹூம். எல்லாப் பாட்டுமே ஆல் இண்டியா ரேடியோல ஒரு காலத்துல கேட்டுருக்கேன். நல்ல செலக்ஷன்
நன்றி nagoreismail... ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.... நான் சிங்கை திரும்பினதும் சந்திப்போம்...
நன்றி கபீஷ்.... ஆஹா... ஊர்லதான் இருக்கீங்களா?
நன்றி அறிவிலி.... தூக்கம் வராத ராத்திரிகளா? :(
நன்றி நாகா... இப்பல்லாம் மஞ்சத் துண்டு போட்டவங்க கூட இந்தி பேசறாங்க... நீங்க என்னடான்னா...
பாட்டுகளை கேக்குறோமுங்க அண்ணே!
கிந்தி நகி தெரியாது
எனக்கு இன்றுவரை ஹிந்தி மாலாது :)
ஆனால் ரஃபியின் கிரங்கடிக்கும் குரலுக்காகவே கேட்பதுண்டு. அதுபோல ஆஷாதான் என் சாய்ஸ்..உங்களைப்போல. சமீபத்தில் சாதனா சர்கமும்,சோனுநிகமும்.
அப்புறம் தமிழில் உங்களுக்கு மிகவும் பிடித்த இரட்டை இன்ஷியலில் ஐந்தெழுத்தில்(தமிழில்) பெயர் கொண்ட அந்த சிங்கரைப்பற்றி நீங்க ஒன்னுமே சொல்லலையே :))
மீஜிக் ரசனையும் உண்டுமா.?
நமக்கு கொஞ்சம் பத்தாது.!
(பரிசல் பதிவுல பின்னூட்டம் பாத்தீங்கள்ல..)
அப்புறம் நர்சிம் திரட்டிகளுக்கு வந்து பலமாசம் ஆகுது.. அவுரு படத்தை எடுத்துட்டு கொஞ்சம் என் படத்தை கொஞ்சநாள் வைக்கலாமே.. ஹிஹி.!
நன்றி அப்துல்லா அண்ணே... அந்த ஐந்தெழுத்து சிங்கர் யாரா இருக்கும்? அதுவும் ரெண்டு எழுத்து இனிஷியலோட... சே... பயங்கர கிசுகிசுவா இருக்கே :))))
நன்றி ஆதி.... ஹி ஹி வெச்சுடுவோம்...
//Mahesh said...
நன்றி அப்துல்லா அண்ணே... அந்த ஐந்தெழுத்து சிங்கர் யாரா இருக்கும்? அதுவும் ரெண்டு எழுத்து இனிஷியலோட... சே... பயங்கர கிசுகிசுவா இருக்கே :))))//
காத குடுங்க.. ரகசியமா சொல்றேன்.
"அந்த சிங்கர் மேல பின்னூட்டம் போட்ருக்காரு!!!"
கிஷோர் Rafi, R.D Burman, ....நமக்கும் ரொம்ப இஷ்டமுங்க.... அந்தக் காலத்துல பினாகா கீத மாலா மட்டுமல்லாமல் மன் சாஹே கீத, மனோ ரஞ்சன், ரங்காவளி ஆப் கே பார்மாஇஷ் எல்லாம் கேட்ட்டிருக்கேன். அருமையான பல பாடல்கள் மனதிலும் சேமிப்பிலும் உண்டு.
ஹி...ஹி..நமக்கு தழிழ்தாங்க சொர்க்கம். அப்புறம் என் பதிவுக்கு வந்து பின்னூட்டியதற்கு நன்றிங்ணா!
Post a Comment