Monday, November 16, 2009

கிச்சடி 16.11.2009


3 வருஷமா இழுத்தடிச்சுக்கிட்டுருந்த ப்ராஜெக்ட் போன திங்கள்கிழமை ஒருவழியா கரை சேந்துது. டீம்ல இருந்த எல்லாரும் விட்ட பெருமூச்சுல ஜெனீவால இருந்த மரங்கள்ல இருந்த இலைக அம்புட்டும் உதுந்து போச்சு. ஆனா உழைச்ச உழைப்பு வீண் போகாம ரொம்ப தொல்லை பண்ணாம, எதிர் பார்த்ததை விட ஸ்மூத்தாவே "கட்-ஓவர்" ஆனதுல ஒரு நிறைவு, சந்தோஷம். அப்பாடான்னு....சிங்கப்பூர் திரும்பியாச்சு. ஒரு மாசமா பதிவுகள் பக்கம் ரெகுலரா (!!) வரமுடியாம போச்சு. (அப்பிடியே வந்துட்டாலும்.... வந்து ஒரு கவிதை எழுதிட்டாலும்னு ஆதி முனகறது கேக்குது... இருக்கட்டும்... இருக்கட்டும்...) இனிமே ரெகுலரா வந்து போக முயற்சி பண்ணலாம்னா இன்னும் ரெண்டு வாரத்துல இந்தியாவுக்கு வெகேஷன்ல.....

ஆகவே மகாஜனங்களே.... ஜனவரி வரைக்கும் இப்ப மாதிரியே இருக்கலாம், ஜனவரிக்கு அப்பறம் இதே நிலைமை நீடிக்கலாம் அல்லது முன்னேறலாம் அல்லது இன்னும் மோசமடையலாம்... சே !! இந்த மனுஷன் ரமணன் ரொம்பவே இன்ஃப்ளூயன்ஸ் பண்றாரே !!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


"சிறு கூடுன்னாலும் தன் வீடு"ன்னு இருக்கணும்னு, வாடகை குடுத்து கட்டுபடியாகாம, தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு ஒரு வீடு வாங்கி குடிபோயாச்சு. அதுவும் நான் ஜெனிவாக்கு (வழக்கம்போல) வேலை நிமித்தமா போய் திரும்பி வரதுக்குள்ள, மனைவியும் மகளும் "இவனை நம்புனா அவ்வளவுதாண்டே..."ன்னு சாமான் செட்டைத் தூக்கிக்கிட்டு வண்டி புடிச்சு வீடு மாறிப் போயிட்டாங்க. பழைய வீட்டுல இருந்து ஊருக்குப் போயிட்டு திரும்ப வரும்போது புது வீட்டுக்கு போறது த்ரில்லிங்காத்தான் இருந்தது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பிரபல பதிவர் மற்றும் கவிஞர் "அனுஜன்யா" அவர்கள் சென்ற வாரம் பணி நிமித்தமாக சிங்கப்பூர் வந்து 3 நாட்கள் தங்கி, பணி முடிந்து பின் தாயகம் திரும்பிச் சென்றிருக்கிறார். வயதில் அவர் மிகவும் இளையராக இருப்பதாலும், சிங்கப்பூரில் உள்ள மற்ற பதிவர்கள் மிகவும் மூத்தவர்களாக இருப்பதாலும் அன்னார் இங்கு எவரையும் சந்திக்கவில்லை. இதை "சிங்கை பதிவர் குழுமம்" மிகுந்த ஆதுரத்துடன் கண்டனம் செய்கிறது என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறேன். அத்துடன் இனி அவரது ஒவ்வொரு கவிதைக்கும் விளக்கம் கேட்டே தீருவது என்ற தீர்மானமும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னை வழக்கம்போல... கடும் வெயிலுக்குப் பிறகு, வறட்சி நிவாரண நிதி வாங்கி ஏப்பம் விடலாமான்னு மஞ்சத்துண்டு போட்டுக்கிட்டு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போதே, வெள்ளமும் வந்தாச்சு. கோபாலபுரத்தில் வசிக்கும் குடிசைவாழ் மக்கள் கருணையுடனும், அன்புடனும் நிதிகள் பல பெற்று எல்லா நலமும் வளமும் பெற "அன்னை"யின் அருள் பெருகுவதாக.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னை பதிவர் சந்திப்பு மழை காரணமா ரெண்டு முறை தள்ளி வெச்சுட்டாங்க. கலந்துக்க நினைச்சு எதிர்பார்ர்புகளோட இருந்த நிறைய புதிய பதிவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமா இருந்திருக்கலாம். இருந்தாலும், பதிவர்களை சந்திக்க விடாம பெய்யற மழையும் ரொம்ப தேவையா இருக்கறதால... தண்ணியெல்லாம் வடிஞ்சு கொஞ்சம் பளிச்னு ஆனபிறகு சந்திக்கலாமே. அட்டெண்டன்சும் சுமாரா இருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"கேபிள் சங்கர்" அவர்களோட தந்தையாரின் மறைவுக்கு அஞ்சலிகள். அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும், கேபிள் சங்கர் குடும்பத்தார் சோகத்திலிருந்து மீண்டு வரவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். யுவகிருஷ்ணா பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல ஒரு தகப்பனின் மரணம் மிகப் பெரிய துயரம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

25 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

ஸ்ரீராம். said...

கிச்சடி பல்வேறு சுவையுடன் சுவையாக இருக்கிறது. நான் உங்கள் ப்ளாக்கிற்கு துக்ளக் என்ற பெயரைப் பார்த்து வந்தேன்....சோ ஏதாவது ப்ளாக் ஆரம்பித்து விட்டாரோ சொல்லவே இல்லையே என்று எண்ணி....கிஷோர் பெயர் கவர்ந்ததால் இன்றும் வந்தேன்....!

சின்னப் பையன் said...

கிச்சடியில் அரசியல் வாசமும் கலக்குதே!!!

எடுத்து மேலே வைங்க!!!

அறிவிலி said...

முதல் மேட்டருக்கு வாழ்த்துகள்

ரெண்டாவது மேட்டருக்கு நானே ஃபோன் பண்ணி பேசனும்னு இருந்தேன்.இப்படி தனியா வீடு மாத்துனதுக்கு எல்லா தங்கமணிகளும் அவங்க மேல கோச்சுக்க போறாங்க.

அடடா, இப்படி அனுஜன்யா சொல்லாம கொள்ளாம போயிட்டாரே??

கோவி.கண்ணன் said...

//ஜெனீவால இருந்த மரங்கள்ல இருந்த இலைக அம்புட்டும் உதுந்து போச்சு. //

படம் எடுத்து போட்டு இருக்கலாமே தலைவரே.

கோவி.கண்ணன் said...

/"சிறு கூடுன்னாலும் தன் வீடு"ன்னு இருக்கணும்னு, வாடகை குடுத்து கட்டுபடியாகாம, தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு ஒரு வீடு வாங்கி குடிபோயாச்சு.//

வாழ்த்துகள். விழா எப்போ ?

கோவி.கண்ணன் said...

//பிரபல பதிவர் மற்றும் கவிஞர் "அனுஜன்யா" அவர்கள் சென்ற வாரம் பணி நிமித்தமாக சிங்கப்பூர் வந்து 3 நாட்கள் தங்கி, பணி முடிந்து பின் தாயகம் திரும்பிச் சென்றிருக்கிறார். வயதில் அவர் மிகவும் இளையராக இருப்பதாலும், சிங்கப்பூரில் உள்ள மற்ற பதிவர்கள் மிகவும் மூத்தவர்களாக இருப்பதாலும் அன்னார் இங்கு எவரையும் சந்திக்கவில்லை//

:((

எனது கண்டனங்கள் !

நம்மையெல்லாம் பார்க்கக் கூடாத மூஞ்சிகள் என்று நினைத்தார் போலும் !
:(

நாகா said...

ஐ.. விடுமுறையில் உடுமலைக்கு வரும் எண்ணம் உள்ளதா? டிசம்பர் 15 வரை அங்குதானிருப்பேன், முடிந்தால் சந்திக்கலாமே..

anujanya said...

யோவ்,

நான்தான் என் பதிவிலேயே 'மன்னாப்பு' கேட்டுட்டேன்ல. நீ வேற எதுக்குப் போட்டுக் குடுக்குற? அங்கேய வந்து கோவிஜி திட்டிட்டுப் போயாச்சு. அறிவிலி - சாரி பாஸ்.

நீயோ ஊரிலேயே இல்ல. அப்புறம் எதுக்கு சவுண்டு?

கிச்சடி மற்றபடி நல்லா இருக்கு. இந்தியா என்றால் மும்பையும் தானே? No tit for tat.

அனுஜன்யா

anujanya said...

Forgot to wish you on your new house. Hearty congratulations. Kudos to ur wife n Sahana.

Anujanya

Anonymous said...

புது வீட்டிற்கு வாழ்த்துக்கள் மகேஷ்.
வாங இந்த முறை கண்டிப்பாக சந்திக்கலாம். குடும்பத்துடன் வருகிரீர்களா?

Mahesh said...

நன்றி ஸ்ரீராம்... ஏமாந்தீங்களா? :)))

வாங்க ச்சின்னப்பையன்.. வழி தெரிஞ்சுதா?

நன்றி அறிவிலி...

நன்றி கோவியாரே... பாருங்க... போட்டோ புடிக்கக் கூட நேரமில்லாம் பெண்டு நிமுந்து போச்சு..

வாங்க நாகா... கண்டிப்பா உடுமலை உண்டு... ஆனா 15க்குள்ள வர முயற்சிக்கிறேன்..

நன்றி அனுஜன்யா... அப்பாடா.. சிண்டு முடியறதுல இருக்கற சந்தோஷம் இருக்கே... அலாதி !! மும்பை வர முகாந்திரம் நிறைய..

நன்றி வேலன் அண்ணாச்சி... கண்டிப்பா கோவை உண்டு...

ரோஸ்விக் said...

புதிய வீடு வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.
கோபாலபுரச் செய்தியும் கலக்கல்.

☼ வெயிலான் said...

புதுமனை புகுந்ததற்கு வாழ்த்துக்கள்!!!

கோவை வரும் போது தகவல் சொல்லுங்கள்.

மங்களூர் சிவா said...

/"சிறு கூடுன்னாலும் தன் வீடு"ன்னு இருக்கணும்னு, வாடகை குடுத்து கட்டுபடியாகாம, தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு ஒரு வீடு வாங்கி குடிபோயாச்சு.//

வாழ்த்துகள்.

Mahesh said...

நன்றி ரோஸ்விக்....

நன்றி வெயிலான்... கண்டிப்பாக சந்திப்போம்

நன்றி சிவா... ரொம்ப நாளைக்கப்பறம் தலை தெரியுது :)

வால்பையன் said...

இந்தியா வர்றிங்களா தல!

அது சரி(18185106603874041862) said...

//
ஜனவரி வரைக்கும் இப்ப மாதிரியே இருக்கலாம், ஜனவரிக்கு அப்பறம் இதே நிலைமை நீடிக்கலாம் அல்லது முன்னேறலாம் அல்லது இன்னும் மோசமடையலாம்...
//

ரொம்ப பீதிய கெளப்புறீங்களே பாஸூ....:0)))

நசரேயன் said...

//தண்ணியெல்லாம் வடிஞ்சு கொஞ்சம் பளிச்னு ஆனபிறகு சந்திக்கலாமே//
எந்த தண்ணி ?

Mahesh said...

நன்றி வால்... ஆமா தல :)

நன்றி அதுசரி.... பீதிதானே... பேதி இல்லையே? :))))

நன்றி நசரேயன்.... இது கேள்வி !!

Thamira said...

வழக்கமான சுவாரசியம்.

வடகரை வேலன் said...
வாங்க இந்த முறை கண்டிப்பாக சந்திக்கலாம். குடும்பத்துடன் வருகிரீர்களா?//

யாரு மகேஷ்தானே? வந்துட்டுதான் மறுவேல பாப்பாரு.! ஹிஹி..

Thamira said...

சென்னை வழக்கம்போல... கடும் வெயிலுக்குப் பிறகு, வறட்சி நிவாரண நிதி வாங்கி ஏப்பம் விடலாமான்னு மஞ்சத்துண்டு போட்டுக்கிட்டு ..

// இது அவசியம்தானா.?

பழமைபேசி said...

தாமதமான வாழ்த்துகள்!

Mahesh said...

வாங்க ஆதி.... நாரதர் வேலையை வரதுக்கு முந்தியே ஆரம்பிச்சாச்சா...:)

நன்றி மணியாரே... உங்க வாழ்த்துகள் நமக்கு எப்பவும் உண்டு.

சிதம்பரம் said...

தாய் தமிழ்நாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்...:))

கிரி said...

//3 வருஷமா இழுத்தடிச்சுக்கிட்டுருந்த ப்ராஜெக்ட் போன திங்கள்கிழமை ஒருவழியா கரை சேந்துது.//

DB ப்ராஜக்டா ;-)