Monday, November 23, 2009

பிடித்த ஏழரையும் பிடிக்காத நாலரையும் !!


"இது ஆவறதில்லை"ன்னு நினைச்சு சும்மா இருந்தேன். இருந்தாலும் பெரியவர் பரிசல் கூப்பிட்டார்ங்கறதாலயும், அறிவிலி ரிமைண்டர் போடுவேன்னு மிரட்டினதாலயும், எழுத வேற ஒண்ணும் சிக்காததாலயும், நம்ம வீட்டு போண்டா பிட்டு சாப்பிடற மாதிரி இருந்ததால ஒரு ஆணவப்படம் (ஸ்பெல்லிங் மிஷ்டிக்கா... தெரியலயே..) எடுக்கமுடியாமப் போனதாலயும், கவித கிவிதன்னு எதாவது கிறுக்கினா விரலை ஒடிப்பேன்னு ஆதி கண்ணை உருட்டி உருட்டி மிரட்டினதாலயும்..... சரி சரி விஷயத்துக்கு வரேன்.

அரசியல்

டிச்சவர் : எஸ்.வி.சேகர். மத்த அரசியல்வாதிக எப்பவும் எது செஞ்சாலும் எரிச்சலையே மூட்டும்போது இவராவது டிராமா கீமா போட்டு கொஞ்சம் காமெடியாவது பண்றாரு.

டிக்கவே டிக்காதவர்கள் : இரு கழகத் தலைவர்கள். ஒருத்தர் எப்ப எதைப் பண்ணணுமோ அப்ப அதைப் பண்ணமாட்டார். மத்தவர் எப்ப எதைப் பண்ணக் கூடாதோ அப்ப அதை கரெக்டாப் பண்ணுவார். ரெண்டும் தமிழ்நாட்டுக்கு கெடுதலையே பண்ணும். முன்னவர் ஒய்வு ஒழிச்சலில்லாம தன் குடும்ப முன்னேற்றம் மட்டுமே குறியா இருப்பார். மத்தவர் ஓய்வெடுத்து ஓய்வெடுத்தே களைப்பாகி மறுபடி ஓய்வெடுப்பவர்.


எழுத்து


ச்சவர்கள் : கி.ராஜநாராயணன், சுஜாதா, மேலாண்மை பொன்னுசாமி, தமிழ்வாணன்

க்காதவர்கள் : பி.டி. சாமி, புஷ்பா தங்கதுரை மற்றும் பலர்


தொழில்

ச்சவர்கள் : நா.மகாலிங்கம், லட்சுமி குழுமம், கெங்குசாமி நாயுடு, சிம்ப்சன்ஸ் , டிவிஎஸ், வி.ஜி.பி, ஆர்.எம்.கே.வி......

க்காதவர்கள் : பொதுமக்கள் பணத்தை ஆட்டையைப் போட்ட/போடுகிற எல்லா பைனான்ஸ் கம்பெனிக்காரர்களும்


பொதுநலவிரும்பிகள்

ச்சவர்கள் : நம்மாழ்வார், டாக்டர்.சுவாமிநாதன்

க்காதவர்கள் : பொதுநலம்ங்கற பேர்ல சுய விளம்பரம் தேடற எல்லாரும்


தமிழ் பதிவுலகம்

ச்சவர்கள் : வலைப்பூ தொடங்கி எழுதும் எவரும்

க்காதவர்கள் : அக்கப்போர் செய்யும் "பெயரில்லாப்" பெரியண்ணன்கள் எவரும்


சினிமா

ச்சவர்கள் : ராதா மோகன், ராம.நாராயணன் (??!!)

க்காதவர்கள் : ஷங்கர், பாலசந்தர், சேரன்.....


இசை


ச்சவர்கள் : எம்.எஸ்.வி, ராஜா, ஜேம்ஸ் வசந்தன்

க்காதவர்கள் : விஜய் ஆண்டனி, சந்திரபோஸ்


சினிமா பாடல்கள்


ச்சவர்கள் : வைரமுத்து, வாலி, நா.முத்துக்குமார்

க்காதவர்கள்
: பா.விஜய், கபிலன்


யாரையும் குறிப்பிட்டு அழைக்கப்போவதில்லை. பொதுவான தலைப்பு என்பதால் இதை தொடர விரும்பும் எவரும் தொடரலாம். தட்டுல வெத்திலை, பாக்கு ரெடியா இருக்கு.

18 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

அய்...நான் முதல்!

Raju said...

OK.

நாகா said...

அப்பாடி ஒரு வழியா கடமயை முடிச்சுட்டீங்க

எம்.எம்.அப்துல்லா said...

கெங்குசாமி நாயுடு //

இவர் 2001 எலிக்‌ஷன்ல அடிச்ச காமெடி எனக்கு ரொம்பப் பிடிக்கும் :)

*********************

//தட்டுல வெத்திலை, பாக்கு ரெடியா இருக்கு.


//


செல்லாது...செல்லாது..

சொம்பு எங்க???

:))

Mahesh said...

நன்றி மணியாரே.... நீங்க எப்பவுமே முதல்தாண்ணே :)

நன்றி ராஜு...

நன்றி நாகா...ஆமாங்க ஆத்தற கடமைய ஆத்தியாச்சு...

நன்றி அப்துல்லா அண்ணே... சொம்பா?? இங்க என்ன நாட்டாமை தீர்ப்பா சொல்றாரு? அப்பறம் ஆலமரத்தை கொண்டாம்பீங்க..:)

Thamira said...

உண்மையிலயே அந்த பயம் இருக்கட்டும். கவிதைன்னு யாரு எழுதினாலும் பரவாயில்லை விட்டுடுவேன், இந்தப்பக்கத்துல மட்டும் வந்துச்சு தெரியும் சேதி.!

(ஸ்மைலி போடலை என்பதை கவன்னிக்கவும்)

Mahesh said...

ஆஆஆ......ஆதி..... அனுஜன்யா... காப்பாத்துங்க....

நர்சிம் said...

டிச்சிருந்தது பதிவு.

இராகவன் நைஜிரியா said...

ஹையா... நீங்களும் போட்டுட்டீங்களா

வெரி குட்..வெரி குட்..

Mahesh said...

நன்றி சிவா... அப்பாட ஸ்மைலி வர ஆரம்பிச்சுருச்சு...

நன்றி நர்சிம்.... டிச்சுருக்கா?

நன்றி ராகவன் சார்... அடடா,... என்ன சந்தோஷம்? !!

வால்பையன் said...

:)

நசரேயன் said...

ரைட்டு அண்ணாச்சி

பழமைபேசி said...

சில்க் ஸ்மிதா உங்களைப் பின் தொடர்வதில் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்!!

அறிவிலி said...

//அறிவிலி ரிமைண்டர் போடுவேன்னு மிரட்டினதாலயும்//

அந்த பயம்.

//ச்சவர்கள்//
//க்காதவர்கள்//

பிடி குடுக்காம எழுதறதுன்னா இதுதானா?

அறிவிலி said...

//பழமைபேசி said...
சில்க் ஸ்மிதா உங்களைப் பின் தொடர்வதில் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்!!//

அந்த காலத்துல(இப்பவும்தானா?) Hard Core Fan ஆக இருந்ததுக்காக இப்ப அவுங்க நன்றி உணர்ச்சிய காட்றாங்களோ?

ஸ்ரீராம். said...

தமிழ்வாணன், ராமநாராயணன்..

ஆச்சர்யங்கள்...

Mahesh said...

நன்றி வால்...

நன்றி நசரேயன்....

நன்றி மணியாரே... சில்க் ஸ்மிதா??!!

நன்றி அறிவிலி.... அதானே !!!

நன்றி ஸ்ரீராம்.... ஆச்சரியம் :))

CS. Mohan Kumar said...

வித்யாசமா இருக்குங்க உங்க ரசனை

Mohan Kumar
http://veeduthirumbal.blogspot.com