எல்லாருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ஒரு மாசம் வலையில சிக்காம இருந்தது ஒரு சாதனைதான். இனிமேல்தான் நண்பர்களோட போன மாச இடுகைகளையெல்லாம் படிக்கணும். இந்தியா பயணம். சென்னை போய் இறங்கிய நாள்ல இருந்து பல விதமான வேலைகள். ஆனாலும் முதல் நாளே சைதாப்பேட்டை தண்டோரா ஆஸ்ரமத்தில் மணிஜியையும் கேபிள் சங்கரையும் சந்திக்க முடிந்தது. மணிஜி தயவில், கேபிளார் பரிந்துரையில் தி.நகர் 'மன்சுக்'கில் திவ்யமான குஜராத்தி மீல்ஸ். அதோடு சரி. அதற்குப் பிறகு யாரையும் சந்திக்க முடியவில்லை. அப்துல்லா, ஆதி மற்றும் நர்சிம் ஆகியோருக்கு தொலைபேசியில் அட்டெண்டன்ஸ் மட்டும். எல்லாருமே நல்ல புரிதல் உள்ளவர்கள் என்பதால் வித்தியாசமாக நினைத்துக் கொள்ள மாட்டார்கள். அப்பிடி போடு அருவாளை !!
பிறகு மைசூர், பெண்களூர், எங்களூர் (உடுமலை) மற்றும் கோவை பயணம். கோவையில் இரண்டு வேலைகளுக்கு இடையில் கிடைத்த சைக்கிள் கேப்பில் வேலன் அண்ணாச்சி மற்றும் ஸ்வாமி ஓம்காருடன் ஸ்வாமியின் வீட்டில் ஒரு துரித சந்திப்பு. அண்ணாச்சி ஆபீசில் செல்வேந்திரனையும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. அப்பிடியே அண்ணாச்சி தயவில் வடவள்ளி ஆனந்தா பவனில் ஃபுல் மீல்ஸ். ஓசி சாப்பாடு கணக்கே ஓவரா இருக்கே !!
உடுமலைப்பேட்டையில் உடுமலை.காம் ஆபீஸ் கம் ஷோரூமில் "டீ வித் சிதம்பரம்". நாகா ஊரில் இருந்தாலும் அந்த தினம் வெளியே சென்றிருந்ததால் சந்திக்க முடியவில்லை. பழமைபேசியாருடன் தொலைபேச (மட்டும்) முடிந்தது. வேறு அவசர வேலையாக கிளம்ப வேண்டியதாயிற்று. அவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பார்களாக. ரைட்டு !!
மறுபடி சென்னை திரும்பியதும் குடும்பத்துடன் (வழக்கம்போல) கோயில்கள் டூர். திரும்பிய பிறகு கார் ரிப்பேர், வீடு ரிப்பேர், பேங்க், இன்சூரன்ஸ்னு தினமும் 9 டூ 9 பல வேலைகள். லீவுல இருந்த மாதிரியே இல்லை. என்ன வெகேஷனோ போங்க.
12 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
வெல்கம் பேக். தமிழ்மணத்துல இணைச்சிட்டேன்.
பிரபாகர்.
உங்களை சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!
வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
வெகேஷன் ரொம்ப ஷார்ட்டா முடிஞ்சு போச்சோ?
&&&*******^^^^^^^((((()))))))))
பார்க்கவே இல்லியே தல..ஏன் ஏன் ஏன்.???
happy new year தல.
Welcome Back
தண்டோராவை ஆஸ்ரமத்திலும் ஸ்வாமிஜியை வீட்டிலும் சந்தித்ததில் மர்மம் என்ன?
//நர்சிம் said...
&&&*******^^^^^^^((((()))))))))//
அதுக்குன்னு இவ்ளோ மோசமாவா திட்ற்து??? :)))))
நன்றி பிரபாகர்....
நன்றி ஸ்வாமி ஓம்கார்... மிக்க நன்றி..
நன்றி சிவா..
நன்றி ஸ்ரீ..
நன்றி சங்கர்..
நன்றி ராகவன் சார்...
நன்றி அறிவிலி.... அந்த ரகசியம் ரகசியமாவே இருக்கட்டும் :))))))))
நன்றி நர்சிம்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்.....
hi all,
puthandu nal vazhthukkal. the tamil font has been eluding me for quite sometime. i m just unable to load it and work on it. it is better to be connected in some language rather than being left out. will keep in touch.
பு.வா!
வராம லொள்ளு வேற!
அவ்வ்வ்வ்...
Post a Comment