Wednesday, January 6, 2010

பாபாஸி சென்னை புக் ஃபேர் 2010

அதிர்ஷ்டவசமாக சென்னையில் இருந்ததால் புத்தக கண்காட்சிக்கு கட்டாயம் போக வேண்டும் என்று இருந்தேன். முதல் நாள் (30ந்தேதி) மாலை நண்பர் போனபோது முதல்வர் தலைமையில் புத்தக வெளியீடுகள் முடிந்து முறைப்படி திறப்பு விழாவுக்கு பிறகுதான் விற்பனை என்று சொல்லிவிட்டார்களாம். பல கடைகளில் அப்போதுதான் புத்தகத்தை அடுக்கவே ஆரம்பித்திருந்தார்களாம். முன்வாசலில் இருந்து கண்காட்சி நுழைவாயில் வரையிலும் போலீஸ்கள் இருந்தும் கூட போவோர் வருவோரை யாரும் எதுவும் விசாரிக்கவோ பரிசோதனைகளோ செய்யவில்லை போல. இத்தனைக்கும் அடுத்த சில மணி நேரத்தில் முதல்வர் வர இருந்திருக்கிறார். யாராவது போய் எதாவது திரிசமன் செய்திருந்தால் என்ன ஆவது? கவலை அளிக்கும் விஷயம்.

மறுநாள் மதியம் புது ஆவடி ரோடு பக்கம் ஒரு வேலையாக போக வேண்டியிருந்ததால் போகும் வழியில் 1:45க்கு காரை நிறுத்தி விட்டு (பார்க்கிங் ஏறக்குறைய காலி) உள்ளே போனால் நுழைவு வாயிலில் சுமாரான கூட்டம். முன்னால் இருந்த நான்கு நுழைவுச்சீட்டு வழங்குமிடங்களிலும் ஒரு 50-60 பேராவது நின்றிருப்பார்கள். 2:05 ஆனபிறகும் நுழைவுச்சீட்டு வழங்கவில்லை. திடீரென ஒரே ஒரு கவுண்டரில் கொடுக்க ஆரம்பிக்க எல்லா கூட்டமும் இங்கே அங்கே என அலைபாய்ந்தனர். உள்ளே கண்காட்சி அலுவலகத்தில் விசாரிக்கப் போனால் "அதான் பேசிட்டிருக்கோம் சார். வாலண்டியர்ஸ் யாரும் இல்லை. என்ன பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்றோம்" என்றார் ஒருவர். உச்சி மண்டையில் சுர் என்று ஏற "ஏன் சார்.... மதியம் 2 மணிக்கு திறக்கறீங்க. இப்ப போய் வாலண்டியர் இல்லை... என்ன பண்றதுன்னு யோசிக்கிறீங்களே? இவ்வளவு பெரிய கண்காட்சி. ஒவ்வொரு வருஷமும் நல்ல கூட்டமும் வருது. இதைக் கூடவா உங்களுக்கு ஆர்கனைஸ் பண்ண முடியல? கூட்டம் 1:30ல இருந்து வரிசைல நிக்கறாங்க. பாத்துட்டுக் கூடவா எதாவது பண்ணணும்னு தோணலை?" என்று கேட்டதற்கு பதில் இல்லை. பிறகு யாரோ இருவர் கொஞ்சம் சீட்டுகளைத் தூக்கிக் கொண்டு ஒரு கவுண்டருக்கு ஓட பின்னாலேயே போய் மக்கள் சீட்டுகளை வாங்கினர். கவுண்டருக்குள் ஒரு மேசை, நாற்காலி ஒன்றும் இல்லை. எவ்வளவு சீட்டு விற்றது, என்ன கணக்கு.... எப்படி சரி செய்தார்களோ?

இவ்வளவு பெரிய நிகழ்ச்சி. என்னவோ முதல் நாள் மாலைதான் முடிவெடுத்து வேலை செய்ய ஆரம்பித்தது போன்ற தோற்றத்தை கொடுத்தது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. இந்நாட்களில் "ஈவண்ட் மேனேஜ்மெண்ட்" என்பது ஒரு கலை. நல்ல திட்டமிடல் தேவை. அதுவும் ஒரு வியாபார நோக்கில் நடத்தப்படும் நிகழ்ச்சி கூட இப்படி மந்தமாகக் கையாளப்பட்டால்? அடுத்த கண்காட்சியிலாவது கவனிப்பார்களா?

வேறு வேலைக்காக சீக்கிரம் போக வேண்டியிருந்ததால் விகடன், பயனீர், உயிர்மை, விசாவில் சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு அரைமணிக்குள் திரும்ப வேண்டியதாயிற்று.

8 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்ன இது அநியாயம்? அவ்வளவு தெகிரியமாப் போச்சா உமக்கு? எப்ப வந்தீங்க.. போனீங்க.. ஒரு தகவலும் கிடையாது. ஹூம்..!!

இராகவன் நைஜிரியா said...

ம்... யாருமே பார்த்திராத கோணத்தில் பார்த்திருக்கின்றீர்கள்...

சூப்பர்..

கபீஷ் said...

ரொம்ப எதிர்பாக்கறீங்க :-):-)

எம்.எம்.அப்துல்லா said...

// இராகவன் நைஜிரியா said...
ம்... யாருமே பார்த்திராத கோணத்தில் பார்த்திருக்கின்றீர்கள்...


//

முட்டுச் சந்துலருந்து பாத்திருப்பாரோ??!??!?!

அறிவிலி said...

ம்... டக்குன்னு உள்ளா போயிருந்தா இன்னும் ரெண்டு புக் சேத்தாவது வாங்கியிருக்கலாம்.

henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

Mahesh said...

நன்றி ஆதி.... ஐயா... அட்டெண்டன்ஸ்தான் குடுத்தனே... ஆனா வேற வேலைகள் வந்ததால பார்க்க முடியல...

நன்றீ ராகவன் சார்...

நன்றி கபீஷ்... நன் எதிர்பார்த்தது ரொம்ப பேசிக்தான்....

நன்றி அப்துல்லா...

நன்றி அறிவிலி....

நன்றி henry j....

கபீஷ் said...

//நன்றி கபீஷ்... நன் எதிர்பார்த்தது ரொம்ப பேசிக்தான்....//

புரிஞ்சது :-) நான் சும்மா லுலுலாயிக்கு சொன்னேன், இனிமே ரொம்ப எதிர்பாக்காதீங்க ஐ மீன் பேசிக் :-):-)