Thursday, January 7, 2010

டிஜம்பர் - மீஜிக் ஜீஜன் இன் சென்னை


டிசம்பர் வந்துட்டா போதும். சென்னைல கர்நாடக சங்கீதம் திகட்டத் திகட்ட புகட்டப்படும். வருஷம் பூரா ஸ்ப்ரெட் பண்ணி வெச்சா நல்லா இருக்கும்னு என்ன கரடியாக் கத்தினாலும் அது என்னவோ ஒரே மாசத்துல ஒரு நாளைக்கு 4 வீதம் 25 சபாக்கள்ல 2000க்கு மேல கச்சேரி, டான்ஸ், ஹரி கதை லொட்டு லொசுக்குன்னு... போட்டு ஒரேடியா தாக்கிடறாங்க. சில சமயம் இங்க போறதா அங்க போறதான்னு ஒரே கன்ஃப்யூஷன் ஆயிடும்.

இது போக ஜெயா, ராஜ், விஜய்னு அவங்க வேற ஒரு தனி டிராக்ல தினம் ஒரு மணி நேரம் சங்கீத சேவை. புடிச்ச சாப்பாடு என்ன, திட்றதுக்கு உபயோகிக்கற வார்த்தை என்னன்னு... கெக்கெ பிக்கேன்னு கேள்விகள் வேற. சம்பிரதாயமா கேக்கற கேள்விகள் "இன்றைய ரசிகர்களுக்கு உங்க அட்வைஸ்?" "அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும்.............?". ஆற்காட்டார் அப்பப்ப கரண்ட் சப்ளையையை விடற மாதிரி ஒரு சில நயமான கேள்விகளும் அப்பப்ப யாராவது கேட்கறதுண்டு.

* * * * * * * * * * * *

"ஏன் மாமி.... நடபைரவிதானே இது?"

"அதேதான்... எங்காத்து ஸ்ரீநிதி கூட கனமா சங்கதி போடறா... இவ என்னவோ நீர்க்க இழுக்கறா... அது என்ன ரூபியா?"

"ரூபி மாதிரியா தெரியறது? சாதா கல்தான்.... எங்க ஆசாரி அப்பயே சொன்னான்... எல்லாரும் வாயைப் பொளப்பான்னு..... சுதா ரகுநாதன் கூட போன வருஷம் போட்டிருந்தாளே... அதே மாடல்ல இன்னும் ஃபேஷனா.... ஆமா.. சாரி என்ன என்ன போத்தீஸா ஆரெம்கேவியா?"

"ரெண்டும் இல்ல... நல்லி.... "

"அதானே பாத்தேன்... "

* * * * * * * * * * * *

"இந்த வார துக்ளக் படிச்சேளா சார்? ஆனாலும் சோ ரொம்பத்தான் கிண்டல்.... "

"நேத்து டி.எம்.கிருஷ்ணா கேட்டு அசந்துட்டேன்... என்னமா பாடறான்? அதுலயும் அந்த ஷண்முகப்ரியா... ஏ க்ளாஸ்...."

"நேத்து என் ஷட்டகன் பொண்ணு டான்ஸ்.... ஹிண்டு ரிவ்யூ பாருங்கோ..."

"முந்தாநா பார்த்தசாரதில உன்னி கச்சேரில காபி...."

"குழைஞ்சுருப்பானே...."

"அது இல்ல... அறுசுவை நடராஜன் கேண்டீன்ல காபி சாப்டுட்டு சித்தே பேசிப்டு போறதுக்குள்ள 'தனி' வந்துடுத்து.... அப்பறம் கெளம்பிட்டேன்..."

"பாருங்கோ.. பேசிண்டே இருந்ததுல இங்கயும் 'தனி'.... வாங்கோ... போய் மொத ஈடு போண்டா சாப்டுடுவோம்... கூட்டம் அப்பிடும்...."

"ஆமா... இது பாடறது யாரு... மச்சினன் பாஸ் குடுத்தானேன்னு வந்தேன்..."

"யாருக்குத் தெரியும்? சபா செக்ரடரி பக்கத்து ஃப்ளாட்... 4 பாஸ் குடுத்துருக்கார்... நமக்கும் பொழுது போகணுமே..."

* * * * * * * * * * * *

"ராட்டன் ஃபெலோஸ்... எப்பிடி கார் பார்க் பண்ணிருக்கான் பாரு... எங்க போய்த் தொலஞ்சானோ? இப்ப நம்ம காரை எப்பிடி எடுக்கறது?"

"இன்னா சார்... நீ ரிவர்ஸ் வா சார்.... நா பாக்கறேன்... அப்பிடீக்கா லெப்ட் ஒட்ச்சு வா சார்..."

"எப்பிடிப்பா வரது?"

"செரி... அப்டியே குந்தினே இரு. வரப்ப வருவாங்கோ...."

"ஏய்... ஏய்... இந்தாப்பா ஏய்.... போயிட்டானா..... பேதில போக....."

"ஒங்க மூஞ்சியப் பாத்தாலே எல்லாருக்கும் பளிச்னு தெரிஞ்சுடுமே.... இந்த அசத்துக்கெல்லாம் எவன் லைசன்ஸ் குடுத்தான்னு.... "

"திருவாயைத்தான் கொஞ்சம் மூடேன்... "

* * * * * * * * * * * *

(சன்னக் குரலில்....)

"என்னடா ராகம்? சொல்லு பாப்போம்...."

"...."

"பல்லவியே ஆரம்பிச்சாச்சு... இன்னுமா தெரியல? என் ஸ்டூடண்ட்னு வெளில சொல்லிண்டு திரியாத... "

"...."

"அமுக்கராக்கெழங்கு மாதிரி உக்காந்திருக்கறதைப் பாரு...."

".....ம்....ம்..... மலயமாருதமா?"

"ரிஷபம் எங்கேர்ந்து முட்டித்து உன்னை? நாந்தான் செவுத்துல முட்டிக்கணும். வலஜிடா... வலஜி.... ச க ப த நி ச.... புரியறதா?"

"...."

(கொஞ்சம் சத்தமாக...பக்கத்தில் இருப்பவரிடம்)

"எல்லாம் நம்ம ஸ்டூடண்ட்ஸ் சார்.... எல்லாரும் ஜெம்ஸ்... தூக்கத்துல எழுப்பிக் கேட்டாக் கூட பட்டுனு சொல்லிப்பிடுவா.... இந்தாங்கோ விசிட்டிங் கார்ட்... நம்ம கொழந்தேள் யாரான கத்துக்கணும்னு சொல்லுங்கோ...."

* * * * * * * * * * * *

அசல் சங்கீத ரசிகர்கள் மன்னிப்பார்களாக.

18 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

ஸ்வாமி ஓம்கார் said...

கான சரஸ்வதி உன்னை ரக்‌ஷிப்பாளாக ...:)

ஜோசப் பால்ராஜ் said...

இப்பல்லாம் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புண்ணியத்துல எல்லாரும் சங்கீதத்த என்னமா ரசிக்கிறா தெரியுமா?

பாடுறப்ப அப்டி இப்டி நாலு வார்த்தைய அள்ளித் தெளிச்சா, நமக்கும் சங்கீத ஞானம் இருக்குன்னு புரிஞ்சுப்பாங்க பாருங்க.

உதாரணத்துக்கு: ஸ்வர சுத்தம், சங்கதிகள், ஸ்பஷ்டமா , மேல் கட்டையில, இந்த வார்த்தைகள வைச்சு வாக்கியம் அமைச்சு பேசிக்கனும். நல்லாருக்குன்னோ, நல்லா இல்லன்னோ வர்ற மாதிரி வாக்கியம் அமைச்சுக்கிட்டா நீங்களும் கர்னாடக சங்கீதம் தெரிஞ்சுக்கிட்டவங்க தான் .

இந்த மாதிரி இசை கச்சேரிகள்ல கேட்கிறவங்க தாளம் போட்டுக்கிட்டு இருப்பாங்க பார்த்திருக்கீங்களா? அது சும்மா தட்றது இல்ல, கவனிச்சுப் பார்த்தீங்கன்னா, அதுல ஒரு கணக்கு தெரியும். தஞ்சாவூர் சங்கீதத்துக்கு பேர் வாங்குன ஊர் ஆச்சே, அங்க நிறைய அருமையான இரசிகர்கள் இருப்பாங்க. அருமையா கரெக்ட்டா தாளம் போட்டு ரசிப்பாங்க.
இப்டி ஒரு முறை தஞ்சாவூர்ல ஒரு ஆஞ்சநேயர் கோயில்ல கத்ரி கோபால்நாத் சாக்ஸ் கச்சேரியில ஒரு போலி இரசிகர் எல்லாரும் தொடையில தாளம் தட்றாங்களேன்னு இவரும் உணர்சிவசப்பட்டு என் தொடை, என் கை நான் எப்டி வேணும்னாலும் தட்டுவேன்னு தட்டிட்டு இருந்தாரு. அப்ப கத்ரிக்கு பக்கவாத்தியமா தவில் வாசிச்ச ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் இத கவனிச்சுட்டேயிருந்துக்காரு. ஒரு கட்டத்துக்கு மேல பொறுமையிழந்து புடிச்சு கத்தி தீர்த்துட்டார். உன்னையெல்லாம் யாருடா தாளம் போட சொன்னதுன்னு. காரணம் என்னான்னா அந்த ஆளு கச்சேரியில மேடைக்கு முன்னாடி முன் வரிசையில தப்புத் தாளம் போடுறது, வாசிக்கிறவங்கள குழப்பிடுமாம்.

திருவையாறு பக்கம் போயி பாருங்க. கிரமத்து ஆளுங்க கூட அருமையா கர்னாடக சங்கீதம் இரசிப்பாங்க. ஆனா சென்னையில இப்பல்லாம் அது ஒரு வருடாந்திர பேஷனாத்தான் இருக்கு. கச்சேரியோட மகிமை ரொம்ப குறைஞ்சுடுச்சு.

மிக அருமையா , ரொம்ப நகைச்சுவையா எழுதியிருக்கீங்க.

ஸ்வாமி ஓம்கார் ஆசியின்படி கான சரஸ்வதி உங்களை ரக்‌ஷிக்கட்டும்.

சின்னப் பையன் said...

உன்னி கச்சேரி காபி - சூப்பர்...

சரியா ஜீஜனுக்குப் போய் இசை மழையில் நனைஞ்சி வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க... கலக்கல்..

2005 ஜீஜனுக்கு நானும் வாணி மகால்லே ஜீஜன் டிக்கெட் எடுத்து பாத்தேனாக்கும்.. :-))

வால்பையன் said...

இப்ப நான் என்ன பண்ணனும்!

பரிசல்காரன் said...

//அசல் சங்கீத ரசிகர்கள் மன்னிப்பார்களாக.//

அசல்ல ரெண்டு பாட்டுதான் ஹிட்டுனாங்க.. அதுக்கு ஒருவேளை கோச்சுப்பாங்களோ?

அவ்வ்வ்வ்வ்....

நசரேயன் said...

//அசல் சங்கீத ரசிகர்கள் மன்னிப்பார்களாக//

நான் அசல் இல்லைங்கோ

Mahesh said...

நன்றி ஸ்வாமி ஓம்கார்....

நன்றி ஜோசஃப்... உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க....
//சென்னையில இப்பல்லாம் அது ஒரு வருடாந்திர பேஷனாத்தான் இருக்கு. கச்சேரியோட மகிமை ரொம்ப குறைஞ்சுடுச்சு. //
அதேதான்...

நன்றி ச்சின்னப்பையன்... நீங்க வேற பதிவர்களை சந்திக்கவே நேரம் கிடைக்கல... இதுல ஜீஜனாவது கச்சேரியாவது... கடைசியா போனது 2004லதான்... அப்பறம் போகவே இல்லை...

நன்றி வால்... என்ன பண்றது? இந்த மொக்கையையெல்லாம் சகிச்சுக்க பழகிக்குங்க...

நன்றி பரிசல், நசரேயன்.... அசல்னு ஒரு வார்த்தையைக் கூட யூஸ் பண்ண விடமாட்டேங்கறீங்களே... அவ்வ்வ்வ்....

குடுகுடுப்பை said...

அருமையா இருக்கு மகேஷ்.

cheena (சீனா) said...

அன்பின் மகேஷ்

நல்ல நகைச்சுவை - கண்ணில் கண்ட, காதில் கேட்ட அனைத்தையும் வைத்து நல்ல நகைச்சுவையுடன் ஒரு இடுகை - வாழ்க

நல்வாழ்த்துக்ள் மகேஷ்

Unknown said...

நல்லா எழுதியிருக்கீங்க மகேஷ்.

Mahesh said...

நன்றி கு.கு...

நன்றி சீனா அய்யா.... நம்ம கடைப்பக்கமெல்லாம் வரது சந்தோஷமா இருக்கு...

நன்றி முகிலன்...

அறிவிலி said...

நானும் ஒரு வருஷமாவது போயி இந்த சபா கேண்டீன்ல எல்லாம் ஒரு புடி புடிச்சிட்டு வரணும்னு நெனச்சுகிட்ருக்கேன்.

Mahesh said...

நன்றி அறிவிலி... கேண்டீன்லதானே? நான் கூட பாடறவர் மென்னியையோன்னு பயந்துட்டேன்...

Karthik said...

haha.. rofl.. really good one dude.. :) :)

Dubukku said...

:)))) அருமை அருமை...டீட்டெயிலு எல்லாம் பிரமாதம் :))

Mahesh said...

வாங்க டுபுக்கு... .அடாடாடா... ஆளுகளை வசூல்ராஜா மாதிரி மிரட்டி கூட்டிவந்து கமெண்ட் வாங்க வேண்டியிருக்கு.... ஹ்ம்ம்ம்...

*இயற்கை ராஜி* said...

:-))

சாந்தி மாரியப்பன் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_07.html