Saturday, November 28, 2009

பட்ட காலிலேயே படும்....

துபாய் முதலீடுகள் - மேக மூட்டம் :(

போன ஒரு வாரமா துபாய் பத்தி வர செய்திகள் அவ்வளவு ஆரோக்கியமா இல்லை. லீமன் பிரதர்ஸ்ல ஆரம்பிச்சு, சிடி பாங்க் அது இதுன்னு ஒரு பெரிய கண்டத்துல இருந்து மெல்ல மீண்டு வந்து ஒரு நம்பிக்கை வளர்ந்து வரும்போது இப்ப மறுபடி ஒரு சறுக்கல். என்ன நடக்குது, எப்பிடி சமாளிக்கப் போறோம்னு இன்னும் தெளிவா இல்லாட்டாலும், ஒரு பெரிய சரிவிலிருந்து சமீபத்துல மீண்டு வந்திருக்கறதால, சமாளிச்சுடலாம்னு ஒரு சின்ன நம்பிக்கை இருக்கு.

துபாய்ல முதன்மையான முதலீடு ரியல் எஸ்டேட். பரந்து கிடக்கற பாலைவனம், நிலங்களை மீட்டெடுக்க தோதான, அவ்வளவு ஆழமில்லாத கடல் பரப்பு, கிழக்கையும் மேற்கையும் இணைக்கிற மையமா துபாய் விமான நிலையம், மதம் சார்ந்த சில கட்டுப்பாடுகளில் இருந்து கொஞ்சம் விலகி இருப்பதுன்னு பல ஆதாயங்கள். நவீன கட்டடக்கலை ஆர்வலர்களுக்கு சரியான விளையாட்டுக்களம். எமிரேட்ஸ் கோபுரங்கள், புர்ஜ் அரப் 7 நட்சத்திர ஹோட்டல்னு பல வியாபார மையங்கள், ஜபேல் அலி ஏற்றுமதிப் பகுதின்னு வெற்றிகரமாப் போயிட்டுருக்கும்போது வந்தது "ஜுமெரா பாம்" திட்டம். விரிஞ்ச பனைமர வடிவத்துல, கடல்ல மணலைக் கொட்டி நிலத்தை மீட்டெடுத்து அதுல குடியிருப்புகள். உலகத்தோட பல மூலைகள்ல இருந்து பெரிய அளவுல முதலீடுகள் குவிஞ்சுது. உலகின் பல பிரபலங்கள் "ஜுமேரா பாம்"ல வீடு வெச்சுக்கறது ஒரு கௌரவம்னு நினக்கிற அளவுக்கு வெற்றி. திட்டமும் நல்லபடியா முடிஞ்சது.



அதைத் தொடர்ந்து வந்தது "துபாய் வேல்ட்". இதுவும் பாம் மாதிரியே கடல்ல நிலம் மீட்டெடுத்து குடியிருப்புகள் கட்டற திட்டம். கொஞ்சம் வித்தியாசமா உலகப் படம் மாதிரி. பாம் வெற்றியைப் பாத்துட்டு இதுல கொஞ்சம் அதிகமாவே முதலீடு. பல பங்குதாரர்கள்.... முக்கியமா நகீல். இந்த பெருமையான திட்டத்துக்காக 2004ல வெளியிட்ட "சுகுக்" பாண்டுகள் இப்ப 2009 டிசம்பர்ல முதிர்வடையும்போது முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பணும்.

ஆனா போன வருஷ நெருக்கடி சமயத்துல இருந்தே பிரச்னைகள் ஆரம்பிச்சாச்சு. இப்ப சரியான நெருக்கடி. 2010 மே வரைக்கும் பொறுத்துக்க வேண்டியிருக்கும்னு போன வாரம் நகீல் ஒரு அறிக்கை விட்டு ஒரு அதிர்ச்சி அலையைக் கிளப்பினதுமே உலக சந்தைகள்ல பீதி. உடனே டாலர்ல முதலீடுகள் குவிய அதுக்கு டிமாண்ட். துபாய்ல இருக்கற மற்ற முதலீடுகளை அவசரமாத் திரும்ப எடுக்க ஆரம்பிக்கவே, முதலீடுகளை மறுமதிப்பீடு செய்யும்போது சரிவு. அதுலயும் சமீபத்து நெருக்கடிகளின் பின்னணில பார்க்கும்போது முதலீட்டாளர்கள் பயம் புரியக்கூடியதே.

இந்த நெருக்கடியோட மையத்துல இருக்கற முதலீட்டின் மதிப்பு 60 பில்லியன் டாலர்கள். இன்னும் அதிகமா கிட்டத்தட்ட 90பில்லியன் வரைக்கும் இருக்கலாம். ஆனா இதுனால வங்கிகளுக்கு பெரிய சரிவு எதுவும் இருக்காதுன்னு ம், 2010 மே மாதத்துக்குள்ள இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துடலாம்னும் எதிர்பார்க்கலாம். எப்பிடியும் RBS, HSBC, Standard Chartered வங்கிகளுக்கு இழப்பு கணிசமா இருக்கலாம். கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா சார்ந்த கட்டுமான நிறுவனங்கள் கொஞ்சம் பாதிக்கப்படும். பொதுவா வளர்ந்து வரும் சந்தைகள்ல முதலீடுகள் ரொம்ப நிதானமா இருக்கலாம். இது மாதிரி ஒரு "மந்த" நிலை ஏற்கெனவே சரிவிலிருந்து மீண்டு வர சந்தைக்கு ஒரு வேகத்தடைங்கறதை மறுக்க முடியாது.

நிலைமயை சரி செய்ய மற்ற எமிரேட்டுகள் கிட்ட பாண்டுகள் மூலமா நிதி திரட்டலாம். முக்கியமா எண்ணை வளம் மிக்க அபுதாபி. சவுதி அரேபியா உதவிக்கு வரலாம். இந்த நெருக்கடிக்கு எதிர்வினையா உலக சந்தைகள் கொஞ்சம் சரிஞ்சு 3 நாட்கள்ல மறுபடியும் பழைய நிலைக்கு வந்தாச்சு. போன சரிவுல நமக்குக் கிடைத்த பாடங்கள் நிறைய. மறுபடி இன்னொரு சரிவை நாம அனுமதிக்கக்கூடாது ; அனுமதிக்க மாட்டோம். Yes. We are resilient enough.

Thursday, November 26, 2009

நோ ஷாப்பிங் விரதம்


நவம்பர் 28. பல நாடுகள்ல (குறிப்பா யூ.கே) இன்னிக்கு "பை நத்திங் டே". அதாவது கடைக்குப் போய் எதையும் வாங்குவதை தவிர்க்க சொல்கிற நாள். இந்த அல்ட்ரா மாடர்ன் உலகத்துல தேவைக்கு வாங்கறதை விட பகட்டுக்கு வாங்கறது அதிகம்கறது ஒரு சிலரோட சித்தாந்தம். கூடவே பூமி சூடாகுதல், வானிலை மாற்றங்கள் (எல் நினோ மாதிரி), மறு சுழற்சியை ஊக்குவித்தல் மாதிரியான காரணங்களுக்காகவும் இந்த "எதையும் வாங்காதே" நாள்.

இதுலயே சில தீவிர சித்தாந்திகள், இந்த ஒருநாளை ரமலான் நோன்பு மாதிரி இருக்கணும்னு சொல்றாங்க. அதுவும் எப்பிடி? வீட்டுல லைட் எதுவும் போடாம, கேஸ் உபயோகிக்காம, கார் ஓட்டாம, கம்ப்யூட்டர், டி.வி., ரேடியோ, போன், மொபைல் எதையும் உபயோகிக்காம - சுருக்கமா இயற்கையை தொந்தரவு செய்யக்கூடிய எதையும் செய்யாம - இருக்கணும்னு பிரச்சாரம் பண்றாங்க. கூடவே பணத்தை பெட்டில போட்டு பூட்டி வைக்கறது, கடன் அட்டையை வெட்டிப் போடறதுன்னு சில நூதன முயற்சிகள் வேற. இது கொஞ்சம் அதிகமாத் தெரிஞ்சாலும் ஒருவிதத்துல பாக்கப்போனா இது கூட நல்லதுதான்னு தோணுது. நுகர்வோர் சந்தைங்கற பேர்ல பல பகட்டு / சொகுசுப் பொருட்கள்/சேவைகள் எல்லாம் இன்றியமையாததுங்கற அந்தஸ்துக்கு உயர்ந்துடுச்சு. ஒரு 10 வருஷம் முன்னாடி இதெல்லாம் இல்லாம எப்பிடி இருந்தோம்னு பிரமிப்பா இருக்கு. "கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ?"னு ஒரு சின்ன குற்ற உணர்வு இல்லாம இல்லை.

ஒருநாள் இப்பிடி விரதம் இருந்தா எல்லாம் சரியாயிடுமா?ஆகாதுதான். ஆனா, இப்பிடி ஒரு சிந்தனை நம்மள்ல ஒரு பகுதி மக்களுக்கு இருக்கு ; அடுத்த சந்ததியினரையும், இந்த பூமியைப் பத்தியும் கவலைப்படணும் ; அதுல நம்ம பங்கு என்ன? அப்பிடிங்கற ஒரு சின்ன விழிப்புணர்வு வந்தாலே இது வெற்றிதான் அப்பிடிங்கறாங்க. இது முழுக்க முழுக்க சுயபங்கேற்புதான். யாரும் யாரையும் கைய முறுக்கி வாங்கதடான்னு சொல்லப்போறதில்லை. "அய்யய்யோ... யாவரத்தை கெடுக்கறாங்களே"ன்னு சில சில்லறை சந்தை நிறுவனங்கள் (வால்மார்ட் மாதிரி) கூப்பாடு போட்டாலும், "அடப் போப்பா, வாங்கறவன் வாங்கத்தான் செய்வான்.... குதிரை கும்பி காஞ்சா தன்னால புல்லைத் திங்கும்"னு சில நிறுவனங்கள் இதை கொஞ்சம் கூட சட்டை செய்யலை. இது எவ்வளவு தூரம் வெற்றியாகும், எந்த அளவுக்கு மக்கள் பங்கேற்பு இருக்கும்கறதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

எது எப்பிடியோ, பாஷா பட டயலாக் மாதிரி "மேட்டர் நல்லாருக்கே !!"

Monday, November 23, 2009

பிடித்த ஏழரையும் பிடிக்காத நாலரையும் !!


"இது ஆவறதில்லை"ன்னு நினைச்சு சும்மா இருந்தேன். இருந்தாலும் பெரியவர் பரிசல் கூப்பிட்டார்ங்கறதாலயும், அறிவிலி ரிமைண்டர் போடுவேன்னு மிரட்டினதாலயும், எழுத வேற ஒண்ணும் சிக்காததாலயும், நம்ம வீட்டு போண்டா பிட்டு சாப்பிடற மாதிரி இருந்ததால ஒரு ஆணவப்படம் (ஸ்பெல்லிங் மிஷ்டிக்கா... தெரியலயே..) எடுக்கமுடியாமப் போனதாலயும், கவித கிவிதன்னு எதாவது கிறுக்கினா விரலை ஒடிப்பேன்னு ஆதி கண்ணை உருட்டி உருட்டி மிரட்டினதாலயும்..... சரி சரி விஷயத்துக்கு வரேன்.

அரசியல்

டிச்சவர் : எஸ்.வி.சேகர். மத்த அரசியல்வாதிக எப்பவும் எது செஞ்சாலும் எரிச்சலையே மூட்டும்போது இவராவது டிராமா கீமா போட்டு கொஞ்சம் காமெடியாவது பண்றாரு.

டிக்கவே டிக்காதவர்கள் : இரு கழகத் தலைவர்கள். ஒருத்தர் எப்ப எதைப் பண்ணணுமோ அப்ப அதைப் பண்ணமாட்டார். மத்தவர் எப்ப எதைப் பண்ணக் கூடாதோ அப்ப அதை கரெக்டாப் பண்ணுவார். ரெண்டும் தமிழ்நாட்டுக்கு கெடுதலையே பண்ணும். முன்னவர் ஒய்வு ஒழிச்சலில்லாம தன் குடும்ப முன்னேற்றம் மட்டுமே குறியா இருப்பார். மத்தவர் ஓய்வெடுத்து ஓய்வெடுத்தே களைப்பாகி மறுபடி ஓய்வெடுப்பவர்.


எழுத்து


ச்சவர்கள் : கி.ராஜநாராயணன், சுஜாதா, மேலாண்மை பொன்னுசாமி, தமிழ்வாணன்

க்காதவர்கள் : பி.டி. சாமி, புஷ்பா தங்கதுரை மற்றும் பலர்


தொழில்

ச்சவர்கள் : நா.மகாலிங்கம், லட்சுமி குழுமம், கெங்குசாமி நாயுடு, சிம்ப்சன்ஸ் , டிவிஎஸ், வி.ஜி.பி, ஆர்.எம்.கே.வி......

க்காதவர்கள் : பொதுமக்கள் பணத்தை ஆட்டையைப் போட்ட/போடுகிற எல்லா பைனான்ஸ் கம்பெனிக்காரர்களும்


பொதுநலவிரும்பிகள்

ச்சவர்கள் : நம்மாழ்வார், டாக்டர்.சுவாமிநாதன்

க்காதவர்கள் : பொதுநலம்ங்கற பேர்ல சுய விளம்பரம் தேடற எல்லாரும்


தமிழ் பதிவுலகம்

ச்சவர்கள் : வலைப்பூ தொடங்கி எழுதும் எவரும்

க்காதவர்கள் : அக்கப்போர் செய்யும் "பெயரில்லாப்" பெரியண்ணன்கள் எவரும்


சினிமா

ச்சவர்கள் : ராதா மோகன், ராம.நாராயணன் (??!!)

க்காதவர்கள் : ஷங்கர், பாலசந்தர், சேரன்.....


இசை


ச்சவர்கள் : எம்.எஸ்.வி, ராஜா, ஜேம்ஸ் வசந்தன்

க்காதவர்கள் : விஜய் ஆண்டனி, சந்திரபோஸ்


சினிமா பாடல்கள்


ச்சவர்கள் : வைரமுத்து, வாலி, நா.முத்துக்குமார்

க்காதவர்கள்
: பா.விஜய், கபிலன்


யாரையும் குறிப்பிட்டு அழைக்கப்போவதில்லை. பொதுவான தலைப்பு என்பதால் இதை தொடர விரும்பும் எவரும் தொடரலாம். தட்டுல வெத்திலை, பாக்கு ரெடியா இருக்கு.

Monday, November 16, 2009

கிச்சடி 16.11.2009


3 வருஷமா இழுத்தடிச்சுக்கிட்டுருந்த ப்ராஜெக்ட் போன திங்கள்கிழமை ஒருவழியா கரை சேந்துது. டீம்ல இருந்த எல்லாரும் விட்ட பெருமூச்சுல ஜெனீவால இருந்த மரங்கள்ல இருந்த இலைக அம்புட்டும் உதுந்து போச்சு. ஆனா உழைச்ச உழைப்பு வீண் போகாம ரொம்ப தொல்லை பண்ணாம, எதிர் பார்த்ததை விட ஸ்மூத்தாவே "கட்-ஓவர்" ஆனதுல ஒரு நிறைவு, சந்தோஷம். அப்பாடான்னு....சிங்கப்பூர் திரும்பியாச்சு. ஒரு மாசமா பதிவுகள் பக்கம் ரெகுலரா (!!) வரமுடியாம போச்சு. (அப்பிடியே வந்துட்டாலும்.... வந்து ஒரு கவிதை எழுதிட்டாலும்னு ஆதி முனகறது கேக்குது... இருக்கட்டும்... இருக்கட்டும்...) இனிமே ரெகுலரா வந்து போக முயற்சி பண்ணலாம்னா இன்னும் ரெண்டு வாரத்துல இந்தியாவுக்கு வெகேஷன்ல.....

ஆகவே மகாஜனங்களே.... ஜனவரி வரைக்கும் இப்ப மாதிரியே இருக்கலாம், ஜனவரிக்கு அப்பறம் இதே நிலைமை நீடிக்கலாம் அல்லது முன்னேறலாம் அல்லது இன்னும் மோசமடையலாம்... சே !! இந்த மனுஷன் ரமணன் ரொம்பவே இன்ஃப்ளூயன்ஸ் பண்றாரே !!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


"சிறு கூடுன்னாலும் தன் வீடு"ன்னு இருக்கணும்னு, வாடகை குடுத்து கட்டுபடியாகாம, தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு ஒரு வீடு வாங்கி குடிபோயாச்சு. அதுவும் நான் ஜெனிவாக்கு (வழக்கம்போல) வேலை நிமித்தமா போய் திரும்பி வரதுக்குள்ள, மனைவியும் மகளும் "இவனை நம்புனா அவ்வளவுதாண்டே..."ன்னு சாமான் செட்டைத் தூக்கிக்கிட்டு வண்டி புடிச்சு வீடு மாறிப் போயிட்டாங்க. பழைய வீட்டுல இருந்து ஊருக்குப் போயிட்டு திரும்ப வரும்போது புது வீட்டுக்கு போறது த்ரில்லிங்காத்தான் இருந்தது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பிரபல பதிவர் மற்றும் கவிஞர் "அனுஜன்யா" அவர்கள் சென்ற வாரம் பணி நிமித்தமாக சிங்கப்பூர் வந்து 3 நாட்கள் தங்கி, பணி முடிந்து பின் தாயகம் திரும்பிச் சென்றிருக்கிறார். வயதில் அவர் மிகவும் இளையராக இருப்பதாலும், சிங்கப்பூரில் உள்ள மற்ற பதிவர்கள் மிகவும் மூத்தவர்களாக இருப்பதாலும் அன்னார் இங்கு எவரையும் சந்திக்கவில்லை. இதை "சிங்கை பதிவர் குழுமம்" மிகுந்த ஆதுரத்துடன் கண்டனம் செய்கிறது என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறேன். அத்துடன் இனி அவரது ஒவ்வொரு கவிதைக்கும் விளக்கம் கேட்டே தீருவது என்ற தீர்மானமும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னை வழக்கம்போல... கடும் வெயிலுக்குப் பிறகு, வறட்சி நிவாரண நிதி வாங்கி ஏப்பம் விடலாமான்னு மஞ்சத்துண்டு போட்டுக்கிட்டு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போதே, வெள்ளமும் வந்தாச்சு. கோபாலபுரத்தில் வசிக்கும் குடிசைவாழ் மக்கள் கருணையுடனும், அன்புடனும் நிதிகள் பல பெற்று எல்லா நலமும் வளமும் பெற "அன்னை"யின் அருள் பெருகுவதாக.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னை பதிவர் சந்திப்பு மழை காரணமா ரெண்டு முறை தள்ளி வெச்சுட்டாங்க. கலந்துக்க நினைச்சு எதிர்பார்ர்புகளோட இருந்த நிறைய புதிய பதிவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமா இருந்திருக்கலாம். இருந்தாலும், பதிவர்களை சந்திக்க விடாம பெய்யற மழையும் ரொம்ப தேவையா இருக்கறதால... தண்ணியெல்லாம் வடிஞ்சு கொஞ்சம் பளிச்னு ஆனபிறகு சந்திக்கலாமே. அட்டெண்டன்சும் சுமாரா இருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"கேபிள் சங்கர்" அவர்களோட தந்தையாரின் மறைவுக்கு அஞ்சலிகள். அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும், கேபிள் சங்கர் குடும்பத்தார் சோகத்திலிருந்து மீண்டு வரவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். யுவகிருஷ்ணா பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல ஒரு தகப்பனின் மரணம் மிகப் பெரிய துயரம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Monday, November 2, 2009

ரஃபியும் கிஷோரும்....

என் இதயம் கவர்ந்த ஹிந்திப் பாடகர்கள். நான் ஒண்ணாவது படிக்கும்போதுன்னு நினைக்கிறேன். அப்பா மிலிட்டரில இருந்து ரிடையர்மெண்ட் வாங்கிட்டு வந்து ஐ.ஓ.பி. பேங்க்ல வேலைக்கு சேந்த பிறகு வீட்டுக்கு ஒரு சின்ன பிலிப்ஸ் டிரான்சிஸ்டர் வந்தது. நாங்கள்லாம் அதைத் தொடக் கூடாது. எதோ ஒரு ஸ்டேஷனை ட்யூன் பண்ணினார்னா பாதி நேரம் ஹிந்திப் பாட்டுகதான். "அமீன் சயானி - பினாகா கீத் மாலா" இது மட்டும்தான் நமக்கு தெளிவா கேக்கும். அதுக்கப்பறம் ஒண்ணும் புரியாது.

பிறகு வந்தது ஒரு "வெஸ்டன்" பெட் டைப் கேஸட் ப்ளேயர். எஜக்ட் பட்டனை அமுக்கினா படக்குனு ஒரு மூடி மேல் பக்கமா திறக்கும். மத்தபடி வழக்கம்போல அது என்ன பாட்டு பாடினாலும் நமக்கு ஒரே மாதிரிதான் இருக்கும். அப்பறமா பானாசோனிக் 543, க்ரண்டிக், ஸோனி. இப்பிடி சின்ன வயசுல இருந்து ஹிந்தி பாட்டுக கேட்டு கேட்டு, வார்த்தை, அர்த்தம் எதுவும் புரியாட்டாலும் கொஞ்சம் கொஞ்சமா அதுல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சு. சும்மாவாச்சும் எதாவது ஒரு பாட்டை முனகிக்கிட்டு இருப்போம். அப்பிடி நம்ம மனசுக்குள்ள நுழைஞ்சவங்கதான் ரஃபியும் கிஷோரும்.

ஆனா அந்த பாட்டுகளோட தாக்கத்தை உணர ரொம்ப வருஷமாச்சு. மனசை மயக்கி, உருக்கி, நெகிழ வைக்கிற குரல்கள். அவ்வளவு பாவம், எக்ஸ்ப்ரெஷன்ஸ்.... ம்யூசிக்குக்கு நம்ம எம்.எஸ்.வி மாதிரி அங்க அவங்களுக்கு ஆர்.டி.பி. பாட்டு எழுத மஜ்ரூ சுல்தான்புரி, குல்சார், ஸஹீர் லுதியான்வி, ஜாவேத் அக்தர்...... நம்ம அமிதாப்போட அப்பா ஹர்வன்ஷ்ராய் பச்சன் கூட. காதல், சோகம்னு சொல்லிட்டா போதும்... அப்பிடியே புழிஞ்சு குடுத்துடுவாங்க...... தேன் தமிழ், சுந்தரத் தெலுங்கு, மயக்கும் மலையாளம் மாதிரியே ஹிந்தியும், அதோட சொல்வளமும் (நிறைய உருது மொழி பாதிப்பு) பரந்து விரிஞ்சது. அர்த்தமும் புரிஞ்சு கேக்கும்போது, அந்த இனிமை, ஆழம், உயிர்ப்பு எல்லாம் அனுபவிக்கும்போது... அந்த பரவசமே தனி. அதுலயும் ஸ்பெஷலா இவங்க ரெண்டு பேர் குரல்கள். அதே மாதிரி பாடகிகள்ல லதா, உஷா, ஆஷா சகோதரிகள். லதா ராஜ்ஜியம் பண்ணினாலும் என்னோட ஃபேவரிட் ஆஷாதான்.

90களுக்குப் பிறகு எத்தனையோ பாடகர்களும்,பாடகிகளும் வந்தாலும், ஆயிரக் கணக்கான பாட்டுகள் கேட்டிருந்தாலும், ரஃபி கிஷோர் காலத்துப் பாட்டுகளோட இனிமையும் அழகும்.... சான்ஸே இல்லை. நீங்களும் கேளுங்க....

கிஷோர்

ப்ளாக் மெயில் : பல் பல் தில் கே பாஸ்....


சாகர் : சாகர் கினாரே...

ரஃபி

ஹம் கிஸி ஸே கம் நஹி : க்யா ஹுஆ மேரா வாதா...

ரஃபி & ஆஷா

யாதோங் கி பாராத் : ச்சுரா லியா ஹை தும் மேரே தில் கோ...

Friday, October 23, 2009

80:20

பரேட்டோ (பரோட்டா இல்லீங்க) சொன்னாலும் சொன்னார்.... இந்த 80:20 விதி படற பாடு சொல்லி மாளாது. எது நடந்தாலும் இந்த ஒண்ணைச் சொல்லித் தப்பிச்சுடறாங்க. அவர் சொன்னது "புள்ளியியல் / நிகழ்தகவுப் படி 80 சதவிகித விளைவுகளுக்கு 20 சதவிகித நிகழ்வுகளே காரணம்". இதை நாம பொதுவா, வேலை செய்யற இடங்கள்ல சொல்றோம்... 20பேர்தான் நல்லா உழைக்கறாங்க;பாக்கி 80 பேர் சும்மா சம்பளம் வாங்கறாங்கன்னு. கேக்க நல்லா இருக்கறதாலயும், நாம் அந்த 20க்குள்ள வரோம்னு நாமளே நினைச்சுக்கறதாலயும் (அதுல ஒரு சின்ன திருப்தி!!) இந்த கருத்தை பொதுவா யாரும் எதிர்க்கறதில்லை. சரி... அது எப்பிடியோ போகட்டும்... இந்த 80:20யை நடைமுறை வாழ்க்கைல எப்பிடி பொருத்திப் பாக்கலாம்னு எங்கியோ படிச்சதை சொல்லி வெக்கலாமேன்னு......


அதாவது, நமக்கு பெரும்பாலும் மகிழ்ச்சியையும் நிறைவையும் குடுக்கறது நம்ம வாழ்க்கைல நடக்கற சின்னச் சின்ன நிகழ்வுகள் அல்லது நாம செய்யற சின்னச் சின்ன செயல்கள்தான்னு சொல்றாங்க. உதாரணத்துக்கு நாம 12 மணி நேரம் வேலை செய்யறதுல கிடைக்கிற மகிழ்ச்சியை விட 1 அல்லது 2 மணி நேரம் ப்ளாக் படிக்கறதுல கிடைக்கிற மகிழ்ச்சி அதிகமா இருக்கலாம். குழந்தைக கூட விளையாடற 15 நிமிஷமோ, நண்பர்கள் கூட அரட்டை அடிக்கிற அரைமணி நேரமோ கூடுதல் மகிழ்ச்சி தரலாம். சுய முன்னேறத்துக்காக எடுக்கிற முயற்சிகள், நம்மளோட குறுகிய/நீண்ட கால லட்சியங்களை நோக்கி எடுக்கற சின்னச் சின்ன நடவடிக்கைகள் இதெல்லாம் கூட நமக்கு ஒரு நிறைவைத் தருது. அந்த மாதிரி நிறைவைத் தர நிகழ்வுகளை அடையாளம் கண்டு அதுல நோக்கத்தை செலுத்தி முன்னேற்றம், மகிழ்ச்சி, நிறைவு பெறலாம்ங்கறாங்க.

ஆனா சாதாரணமா இந்த விதி கொஞ்சம் எதிர்மறையாவே கையாளப்படுதோன்னு தோணுது. மேல சொன்ன உதாரணத்துல 80 பேர் உழைச்சா 20 பேர் ஓபியடிக்கற மாதிரி நினைக்கத் தோணும். ஆனா நிஜத்துல 20 பேர் "முடிவுகள் எடுக்கற" (decision making) இடத்துலயும், மீதி 80 பேர் அந்த முடிவுகளை செயல்படுத்தறதுலயும் ஈடுபட வேண்டியிருக்கு. அரசாங்க இயந்திரத்தை எடுத்துக்கிட்டா, திட்டம் போட்டு அதை அறிவிக்கறது மிகச்சில பேர்னாலும், அதை அமல் படுத்தி கடைக்கோடி வரைக்கும் கொண்டு சேர்க்க உழைக்கறவங்க ஏராளம் பேர். ஊர் கூடி தேர் இழுக்கற கதைதான். தேர் இழுக்கணும்னு முடிவு பண்றது 10 பேர் கொண்ட விழாக் கமிட்டி. ஆனா இழுக்கறது?



மேல உள்ள படத்துல பாத்தா 20% வினைதான் 80% பயனுக்கு காரணமா இருக்குன்னு சொல்லுது. மறுபடியும் அந்த அரசாங்க திட்டம் உதாரணத்தையே எடுத்துப்போம். 20 பேர் சேந்து உருவாக்கற திட்டத்தோட முக்கியப் பயன் (கவனிக்க... "திட்ட"த்தோட பயன்..) பலரைப் போய் அடையுது. அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தற 80 பேரோட உழைப்புனால அந்த திட்டப் பயன் கிடைச்சாலும், கூடவே உப பயன்களா ஒரு திட்டம், அதை செயல்படுத்தற வழிகள்னு சில கட்டமைப்புகளும் (infrastructure), வழிமுறைகளும் (processes) கிடைக்குது. இதை Organisational Assetsனு சொல்லலாம்.

மேல சொன்ன உதாரணம் ஒரு Ideal world நிகழ்வு மாதிரி தோணலாம். ஏன்னா இந்த மாதிரி அடிப்படை விஷயங்களைக் கூட நம்ம "மாண்புமிகு"க்களெல்லாம் கெடுத்து குட்டிச்சுவர் பண்ணி, 80% திட்ட ஒதுக்கீடு 20 பேர் பாக்கெட்ல ஒதுங்கிடுது. மீதி 20% அந்த பயன் உண்மையா யாருக்கெல்லாம் போய் சேரணுமோ, அவங்களுக்கு, இப்பிடி ஒரு திட்டம் இருக்குன்னு அறிவிச்சு விளம்பரம் பண்றதுலயே செலவாயிடுது. அப்பறம் திட்டமாவது பயனாவது? பாருங்க... இவுங்களைப் பத்தி பேச ஆரம்பிச்சாலே மறுபடி நெகடிவ் ரூட்ல போகுது.... :(

பாவம் பரேட்டோ.... இப்பிடி ஆகும்னு நினைச்சுப் பார்த்திருக்க மாட்டார். எதுவா இருந்தாலும் 80:20யை நாம கொஞ்சம் பாசிட்டிவ்வாவே பார்ப்போம்.

Wednesday, October 21, 2009

Taking of Pelham 123 (2009) - சினிமா விமர்சனம்


Taking of Pelham 123 (2009)
John Travolta, Denzel Washington


ஜான் ட்ரவோல்டா, டென்ஸல் வாஷிங்டன்.... ரெண்டு பேரும் சேந்த படம்ன உடனேயே எதிர்பார்ப்பு அதிகம்தான் ஆயிடுச்சு. ந்யூயார்க் மெட்ரோ ரயில்ல கண்ட்ரோல் சென்டர்ல இருக்கற கார்பர் (டென்ஸல்) "பெல்ஹாம் 123" ('பெல்ஹாம் பே' ஸ்டேஷன்கு 01:23 க்கு போய் சேரற ரயில்) நடுவழில நிக்கறதைப் பாக்கறாரு. என்னன்னு விசாரிச்சா ரைடர் (ட்ரவோல்டா) கடத்தி வெச்சுருக்கான்.

முதல் பெட்டியை மட்டும் வெச்சுட்டு மத்ததையெல்லாம் கழட்டி விட்டுட்டு, இருக்கறவங்க பயணக் கைதிகள். 10 மில்லியன் டாலர் கேட்டு மிரட்டரான். அதுவும் 1 மணி நேரத்துக்குள்ள. மீட்பு நடவடிக்கைகளை செய்துக்கிட்டே பணத்துக்கும் ஏற்பாடு செய்யறாங்க. ரயிலுக்குள்ள இருக்கற ஒரு பையனோட லேப்டாப் ஆன்லயே இருக்கு. அதுல வீடியோ ச்சாட் வழியா உள்ள நடக்கறதெல்லாம் தெரிஞ்சாலும் ஒண்ணும் பிரயோசனம் இல்லை.



அந்த காலை கார்பர் அட்டெண்ட் பண்ண வேண்டி வந்ததால, கார்பர் கூடதான் பேசுவேன்னு ரைடர் அடம். அதுக்காக ரயில் ட்ரைவர் பலி. 'என்னடா நடக்குது இங்க?"ன்னு கேட்ட போலீஸ், "மொதல்ல என்னிய சுடு பாக்கலாம்"ன முன்னாள் மிலிட்டரி... எல்லாத்தையும் பொசுக் பொசுக்குன்னு சுடறாங்க. கார்பர் எதோ லஞ்சக் கேஸ்ல மாட்டியிருக்கான்னு தெரிஞ்சு அதைப் பத்தின உண்மைகளையும் கேக்கறான் ரைடர். இடைல ந்யூயார்க் மேயரையும் இழுத்து, அவரோட சில லீலைகளையும் சந்தி சிரிக்க வெச்சு, தான் யாரோ ஒரு மாடல் அழகி கூட ரிசார்டுக்கு போனதைப் பத்தி சொல்லி... என்னடா... சம்பந்தமில்லாம கண்டதையெல்லாம் நோண்டறானேன்னு யோசிச்சா.... பின்னால லிங்க் எல்லாம் புரியுது.



கடத்தலோட நோக்கம் அந்த 10மில்லியன் டாலர் கிடையாது. இந்த நாடகத்தை வெச்சு ஒரு பீதியைக் கிளப்பி ஸ்டாக் மர்கெட்டை சரிய வெச்சு, தங்கம் / கம்மாடிட்டி மார்கெட்டை ஏத்தி... அவன் போர்ட்ஃபோலியோ பல மடங்கு எங்கியோ போறதுக்கான திட்டம். எப்பிடியோ பணத்தையும் கொண்டு சேத்துடறாங்க. கடைசில என்னதான் ஆச்சு? க்ளைமேக்ஸ் கொஞ்சம் சுமார்தான்... என்னை பொறுத்தவரை. இருந்தாலும் படம் நல்லா விறுவிறுப்பா போறதால "ரைட்டு... "ன்னு விட்டுடலாம்.

டென்ஸல், ஜான்.... ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுக்கிட்டு நடிப்பு. அதுலயும் அந்த லஞ்சம் வாங்கறதை ஒத்துக்கற இடத்துல டென்ஸல்... க்ளாஸ். நெகோஷியெட்டரா வர அந்த அதிகாரியும் அருமை. மேயரை நம்ம ஊர் "மழைக்கு பள்ளிக்கூடத்துல ஒதுங்கின" எம்.எல்.ஏ மாதிரி அறிமுகம் பண்ணினாலும் ஆளு ஷார்ப். இந்த கடத்தல் விளையாட்டு எதுக்காகன்னு டக்குனு புரிஞ்சுகிடறாரு. படத்துல டயலாக்தான் கொஞ்சம் ஓவர்.... அந்த நாலெழுத்து வார்த்தை படற பாடு இருக்கே.... ஒவ்வொரு வாக்கியத்துலயும் ஜஸ்ட் 3 தடவைதான் வருது. மத்தபடி ஓகே. :)

1974ல வந்த படத்டோட ரீமேக். பேஸ்லைன் ஒண்ணா இருந்தாலும் மோடிவ்வை மாத்தி ஒரு சின்ன சுவாரஸ்யம். 1974 மாடல் - கொஞ்சம் வேற மாதிரி இருக்கும். சில சீன்கள் (கேமரா பொசிஷன் கூட) புது வெர்ஷன்ல அப்பிடியே ஷூட் பண்ணியிருக்காங்க. '74 வெர்ஷனைப் பாத்ததில்லைன்னா, முதல்ல இதைப் பாத்துட்டு அப்பறமா பாருங்க. நல்லாவே ரசிக்க முடியும். ரெண்டு படங்களையுமே. எஞ்சாய் மாடி.....

Monday, October 19, 2009

கிச்சடி 19.10.2009


ஒபாமா : உலகத்துல ஒரு இடம் பாக்கி விடாம அமைதியை நிலை நாட்டிட்டார்னு "நோபல்" பரிசு குடுத்தாச்சு. 10 மாசத்துல இவ்வளவு பெரிய சாதனை பண்ண முடியும்னா இன்னும் 5 வருஷத்துல என்னென்ன சாதிப்பாரோ? அதுக்கெல்லாம் பாராட்டி குடுக்கறதுக்கு இன்னும் பெரிய பரிசா எதாவது இப்பவே பண்ணி வெச்சுக்கணும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இங்கிருந்தெல்லாம் மக்கள் இனிமே சர்வ சாதாரணமா அமெரிக்கா போய் வரலாம். அதான்... அமைதிக் கொடி பட படன்னு பறக்குதே....

நண்பர்கள் கிட்ட இதைப் பத்தி சூடான விவாதம் நடக்கும்போது ஒருத்தர் சொன்னார் "அது ஒரு கமிட்டி. சில நியதிகள் வெச்சுருக்காங்க. அதுல ஒபாமா பொருந்தி வரார்னு அவங்க நினைக்கிறாங்க. குடுக்கறாங்க.... எப்பிடி குடுக்கப் போச்சு? ஏன்... எதுக்கு... இதெல்லாம் விவாதிக்க முடியாது"ன்னு சொன்னார். இருக்கலாம். ஆனா "நோபல்" பரிசு என்ன "அண்ணா" விருதா? அதுக்குன்னு ஒரு மரியாதை இல்லையா? இது வரைக்கும் அதை வாங்கினவங்களையும், அவங்களோட சாதனைகளையும் வெச்சுத்தானே அந்த விருதுக்கான தகுதியை நம்மளை மாதிரி சாதாரணமானவங்க ஒப்பீடு செய்ய முடியும்? கோஃபி அன்னான், ஆங் சென் சூ கி மாதிரி தலைவர்களும் ஒபாமாவும் ஒண்ணா? ஒத்துக்க முடியல. இந்த மாதிரி பரிசு குடுத்துட்டா அதுக்கேத்த மாதிரி நடந்துடுவார்னு சில வாதங்கள் இருக்கு. அப்பிடிப் பாத்தா பேசாம "ஒசாமா"வுக்கு குடுத்துருக்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் : இவருக்கும் நோபல் பரிசு. ஆனா விஷயம் விருதைப் பத்தி இல்லை. அதுக்கப்பறம் அவர் குடுத்த பேட்டி பத்தி. "யார் யாரோ குப்பன் சுப்பன்லாம் எனக்கும் மெயில் அனுப்பறான். எரிச்சலா வருது"ன்னு சொல்லியிருக்கார். அய்யா, நீங்க ஒரு பெரிய விஞ்ஞானி. உங்களுக்கு இது போல விஷயமெல்லாம் தொந்தரவா இருக்கலாம். தகவல் தொடர்பு சல்லிசா இருக்கற இந்த நவீன உலகத்துல, இந்த மெயில் தொந்தரவுகளை தவிர்க்க எவ்வளவோ சுலபமான வழிகள் இருக்கு. அதுகளை பயன்படுத்தறதை விட்டுட்டு இந்த மாதிரி நிதானமில்லாம பேட்டி குடுக்கறது உங்களை மாதிரி பெரியவங்களுக்கு அழகா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரொமான் பொலான்ஸ்கி : சில விஷயங்கள் புரியவே மாட்டேங்குது. 1978ல இருந்து இந்த ஆள் மேல பாலியல் குற்றச்சாட்டுக்காக ஒரு சர்வதேச அரெஸ்ட் வாரெண்ட் இருக்கு. ஆனா பிடிக்க முடியலையாம். 3 வாரம் முந்தி ஸ்விஸ்ல ஸுரிக் ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல தலைவருக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கும் விழாவுக்கு வரும்போது கைது பண்ணிட்டாங்களாம். போன 30 வருஷமா ஃப்ரான்சுக்கும் போலந்துக்கும் போய் வந்துகிட்டு இருக்காரு. ஸ்விஸ்ல "ஸ்டாட்"ல 20 வருஷமா இவருக்கு ஒரு சொகுசு பங்களா இருக்காம். இத்தனை வருஷமா ஸ்விஸ் "ஷெங்கன்" அமைப்புல சேராம தனியா இருந்தபோது கூட இவரைப் பிடிக்க முடியலை. இப்ப தீடீர்னு முழிச்சுக்கிட்டு பிடிச்சுட்டாங்களாம். கேக்கறவன் கேனப்பயன்னா எருமை கூட ஏரொப்பிளேன் ஓட்டும்னு கிராமத்துல சொல்லுவாங்க.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு விளம்பரம் : சைடு பார்ல நானும் ஒரு வேண்டுகோள் வெச்சு 3 மாசமாச்சு. ஒரு மெயில் கூட வரலை. விடறதாயில்லை. ரீடர்ல படிக்கறவங்களையும் அட்டாக் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். தேவையிருந்தா சொல்லுங்கப்பா.


"நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். மைசூரில் உள்ள என் வீடு தற்போது வாடகைக்கு விட உத்தேசம். உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்கள் / உறவினர்களுக்கு மைசூரில் வாடகைக்கு வீடு தேவையெனில் மேலதிக விவரங்களுக்கு என்னை மின்னஞ்சலிலோ (rmaheshk@gmail.com) தொலைபேசியிலோ (+65 81275347) தொடர்பு கொள்ளவும். நன்றி."


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


!! அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் !!

Tuesday, September 22, 2009

தமிழ் சினிமாவில் மதவாதம், சாதீயம் !!


"உன்னைப் போல் ஒருவன்" படத்துல கமல் இந்துத்வாவை சப்போர்ட் பண்ணியிருக்காருன்னு விமர்சனங்கள் படிச்ச பிறகு அப்பிடியே உறைஞ்சு போயிட்டேன். மறுபடி பழைய நிலைக்கு உருகி வர 4 நாளாயிடுச்சு. அப்பறம் யோசிச்சுப் பாத்தபோதுதான் தெரிஞ்சுது தமிழ் படங்கள்ல மதவாதம் எப்பிடி தலை விரிச்சு தையா...தக்கா...ன்னு ஆடுதுன்னு. மறுபடி உறைஞ்சு போறதுக்குள்ள யோசிச்சதை பதிவாப் போட்டுடலாமேன்னு...

ராமராஜன் : அவர் படங்கள்ல பெரும்பாலும் ஆரஞ்சுக் கலர் சட்டை போட்டிருப்பார். சரி... கூட்டத்துல தொலைஞ்சுடாம இருக்கத்தான் போலன்னு அப்ப தோணுச்சு. இப்பத்தான் புரியுது அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு அப்பவே கன்னாபின்னான்னு ஆதரவு குடுத்துருக்காருன்னு. என்னா வில்லத்தனம்?

கவுண்டமணி : முறைமாமன் படத்துல பச்சை சட்டை போட்டு பாகிஸ்தானுக்கு விலை போயிட்டாரு. அய்யய்யோ... நம்ம இண்டெலிஜன்ஸ் பீரோ என்னதான் பண்ணிக்கிட்டுருந்தாங்க?

மாளவிகா : "கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு..." வெறும் பாட்டு இல்லய்யா.... பெரியாரோட கொள்கைகளை பரப்பி பார்ப்பன எதிர்ப்பை தூண்டியிருக்காங்க. இது கூட புரியாம நீங்க எல்லாம் 'பே...'ன்னு படம் பாத்துருக்கீங்க. உங்களையெல்லாம்.....

சத்தியராஜ் : 'தங்கம்' படத்துல விவேகானந்தர் மாதிரி கெட்டப்புல வந்தாரு. ஆஹா.. கமலுக்கப்பறம் இவனுக்குத்தாண்டா எந்த வேஷமும் கச்சிதமா பொருந்துதுன்னு சிலாகிச்சீங்க.... போங்கய்யா.... உண்மைல அது இந்துத்வாவுக்கு சப்போர்ட்டு. இது கூட புரியலைன்னா நீங்க எல்லாம் என்னதான் படம் பாத்து பாழாப் போனீங்களோ?

ரஜினிகாந்த் : எல்லாப் படத்துலயும் கழுத்துல ருத்திராட்சத்தோட வந்து 'ஆண்டவன்... ஆண்டவன்..."னு சொன்னதெல்லாம் என்னங்கறீங்க? அப்பட்டமான இந்துத்வா. பாஷா படத்துல கூட ஒரு முஸ்லீம் பேரை வெச்சிக்கிட்டு மும்பை தாதாவா இருப்பாரு. தமிழ்நாட்டுக்கு வந்ததும் 'மாணிக்கம்'னு இந்து பேர் வெச்சு நல்லவனாயிடுவாரு. நோட் பண்ணீங்களா? இன்னொரு வாட்டி டிவிடியோ, .... தொ(ல்)லைக்காட்சில 1000வது முறையாவோ பாருங்க. அப்பவாவது புரியுதான்னு பாக்கலாம்.

கமலஹாசன் : அய்யய்யோ... பேர்லயே எவ்வளவு சிக்கல் பாருங்க? "கமல்ஹாசன்"னு சமஸ்கிருதப் பேரா இல்ல 'கமால் ஹசன்'ன்னு முஸ்லீம் பேரான்னு குழப்பறாரே.... பேர்லயே இவ்வளவு பேஜார்னா... படமெல்லாம்.... நினக்கவே குலை நடுங்குது... இப்பிடி ஒரு மதவாதியா?

இதெல்லாம் போக விக்ரம், ஆர்யா, ஷாம், நயன், அஸின்.... இவுங்களுக்கெல்லாம் அவங்க உண்மையான பேரைச் சொல்ல விடாம இந்து பேரா வெச்சு நம்மளையெல்லாம் முட்டாளா ஆக்கியிருக்காங்க.

அட... இதுதான் இப்பிடின்னா... பழைய படங்கள்ல வில்லனோட அல்லக்கைக பேரெல்லாம் பீட்டர், ஜான், ஸ்டெல்லா... .ஏங்க கிறிஸ்டியன் பேரா வெச்சாங்க? எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா? இப்பதான் சொல்லிட்டனே... இனிமேவாவது யோசிங்க.

அய்யய்யோ... தமிழ் படங்கள்ல எல்லாரும் எல்லாக் காலத்துலயும் மதவாதத்தையும் சாதீயத்தையும் சப்போர்ட் பண்ணி இருக்காங்களே... பதிவர்களாகிய நாம போட்டு கிழி கிழின்னு கிழிக்க வேண்டாம்? இன்னும் எவ்வளவோ சொல்லாங்க... அதுக்குள்ள நான் மறுபடியும் உறைஞ்................

Tuesday, September 15, 2009

முத்தமிழ் - எந்தத் திக்கில்?

உலகம் யாவையும் தாம்உள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் - அவர்
தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே.
- கவி கம்பன்

எதையோ யோசிச்சுக்கிட்டிருக்கும்போது திடீர்னு இந்த பாட்டு ஞாபகம் வந்தது. (இது பாட்டா, செய்யுளா?) இது ஞாபகம் வந்ததும் கூடவே புலவர் கீரனோட ஞாபகமும் வந்தது.

உடுமலை அரசினர் மேல் நிலைப்பள்ளியில படிக்கும்போது, தி.சு.செந்தில் ஆறுமுகம்னு ஒரு ஆசிரியர் இருந்தாரு. இவர் திரு. சுந்தர ஓதுவா மூர்த்தி சுவாமிகளோட மகன். வருஷத்துக்கு ஒருமுறை இலக்கிய மன்றம் சார்புல "முத்தமிழ் விழா"ன்னு 9 நாளைக்கு நடத்துவாரு. இயல், இசை, நாடகம் ஒண்ணொண்ணுக்கும் 3 நாள். கூடவே வாரியார் சுவாமிகள், புலவர் கீரன், திருக்குறளார் முனுசாமி இவுங்களோட சொற்பொழிவுகளும் தினமும் இருக்கும். முனுசாமி அய்யாவோட சொல்லாடலை விட அவருடைய குரல் வளமும், ஏற்ற இறக்கங்களோட பேசுறதும் கேக்க ரொம்ப சுகமா இருக்கும். வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுன்னா மொதல் பத்து வரிசை சின்னப் பசங்களுக்குதான். கதை சொல்லிக்கிட்டே வரும்போது திடீர்னு எதாவது கேள்வி கேட்டு டக்குனு பதில் சொல்ற பையனுக்கோ பொண்ணுக்கோ கந்தரனுபூதி, கந்தரலங்காரம்னு ஒரு சின்ன புத்தகத்தை பரிசாக் குடுப்பாரு. ரொம்ப சுலபமான கேள்விகள்தான். சின்னப் பசங்க கிட்ட ஒரு ஈடுபாடு உண்டாக்கணும்கற நோக்கத்துல 3 மணி நேர சொற்பொழிவுக்குள்ள ஒரு 40 பரிசுகளாவது பட்டுவாடா ஆயிரும். நடு நடுவுல துணுக்குகள் சொல்றதும், அதுக்கு அவுரே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கரதும் தனி அழகு. அவரோட "கைத்தல நிறைகனி....." உலகப் புகழ். தமிழ் மிமிக்ரி கலைஞர்கள் எல்லாம் முதல்ல கத்துகிற குரல் இவரோடதாத்தான் இருக்கும்.

அப்பறம் புலவர் கீரன். தன்னுடைய ஊனத்தைக் கூட பொருட்படுத்தாம 3 மணி நேரம் உக்காந்த இடத்துல கணீர்னு "உலகம் யாவையும்..." சொல்லி ராமாயணமோ, வில்லிபாரதமோ சொன்னார்னா, அந்தந்த பாத்திரங்களே நம்ம முன்னாடி நின்னு பேசர மாதிரி இருக்கும். திரும்ப திரும்ப படித்த, கேட்ட கதைகளை ஒவ்வொரு முறையும் வித்தியாசமான செய்திகளோடயும், சிந்தனைகளோடயும் கேக்கறவங்களை கட்டிப் போடற மாதிரி சொல்றது புலவர் கீரனுக்கு இணை அவர்தான். நடுவுல சொல்ற கிச்சு கிச்சு மூட்டற குட்டிக் கதைகளும் சுவாரசியமா இருக்கும்.



எல்லாத்துக்கும் மகுடம் வெச்சது மாதிரி இருப்பது R.S.மனோகரின் நாடகங்கள். எங்க பள்ளிக்குள்ள இருக்கற கலா மண்டபத்திலும், GVG கலையரங்கத்திலும் மனோகர் நாடகங்களை பார்ப்பதே ஒரு சுகானுபவம். "இலங்கேஸ்வரன்" நாடகத்தை முதல் முதல்ல "ட்ராமாஸ்கோப்" முறையில கலா மண்டபம் மாதிரியான சுமாரான இடத்துலயே அதை அட்டகாசமா நடத்தி, வழக்கத்துக்கு மாறா பள்ளியிலயே தொடர்ந்து 10 நாள் நடத்தி அசத்தியவர் அவர்.

இப்ப இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, 90களுக்குப் பிறகு இந்த மாதிரி நிகழ்ச்சிகள் ரொம்பவே குறைஞ்சுக்கிட்டே வந்து, இப்பல்லாம் நடக்கறதே இல்லன்னு கேள்விப்பட்டபோது ரொம்ப சங்கடமா இருந்தது. அதவிட சங்கடம் இதெல்லாம் நேரத்தை வீணாக்கற விஷயம்ங்கற மாதிரி பேசினது.

செந்தில் ஆறுமுகம் மாதிரியான ஆசிரியர்களும் இப்ப இல்ல. இதையெல்லாம் ரசிக்கறதுக்கு மக்களும் இல்ல. இப்ப மக்கள் பாத்து ரசிக்கற ஒரே மேடை 21 இன்ச் டி.வி பொட்டிதான். காலைல எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்கப் போகற வரைக்கும் மெகாத்தொடர்கள்ங்கற பேர்ல மக்களை மக்கிப் போக வெக்கற அரைவேக்காடு நிகழ்ச்சிகள்தான். எங்க பகல்ல பாக்காம விட்டுப் போச்சுன்ன என்ன பண்றதுன்னு ராத்திரி ஒரு ரௌண்ட் மொதல்லேருந்து திரும்பப் போட்டு வேற படுத்தறாங்க. இதயெல்லாம் பாக்க சகிக்காதுன்னுதான் மேல சொன்னவங்கள்லாம் மேலயே போய் சேந்துட்டாங்க. அங்க இருக்கறவங்க பாக்கியசாலிக.

மங்காத தமிழ்னு எட்டுத் திக்கும் கொட்டச் சொன்னான் ஒரு போக்கத்த கவி. நாம எந்தத் திக்குக்கும் போல. நம்ம வீட்டு சாக்கடையிலயே கொட்டீட்டு, பீட்சா தருவிச்சு சாப்டுட்டு, மினரல் வாட்டர் குடிச்சுட்டு குப்பறப் படுத்து குறட்டை விட்டாச்சு. அட போங்கப்பா.....

நேத்து உடுமலைல இருக்கற நண்பரோட பேசிக்கிடிருக்கும்போது இந்தப் பேச்சு மறுபடி வந்தது. ஞாபகங்கள் தீ மூட்டி மறுபடி ஞாபகங்கள் நீர் ஊத்தறதுக்குள்ள ஒரு மீள் பதிவு....

Sunday, September 6, 2009

Inglourious Basterds (2009) - சினிமா விமர்சனம்



க்வென்டின் டரென்டினோவோட இந்தப் படத்தை ஜெனீவால போன மாசம் ரிலீஸான அன்னிக்கே ராத்திரி ஷோவுக்கு போனோம். நாவல் படிக்கிற மாதிரி 5 அத்தியாயங்கள். கொஞ்சம் உண்மை;கொஞ்சம் கற்பனை கலந்த கதை.

இரண்டாம் உலகப் போர் காலத்துல நாசிக்களால் ஆக்கிரமிக்கப் பட்ட ஃப்ரான்ஸ் பகுதில இருக்கற மிச்ச மீதி யூதர்களை தேடிக் கண்டுபிடிச்சு 'மேல' அனுப்பற 'யூத வேட்டைக்காரன்' மேஜர் ஹனஸ் லாண்டா (க்ரிஸ்டஃப் வால்ட்ஸ்). படம் ஆரம்பமே டெரரா இருக்கு. யூதர்கள் ஒளிஞ்சுருக்கற வீட்டுக்குப் போய் பேசிப் பேசியே பயத்தை உண்டாக்கி ஒரு குடும்பத்தையே நாசமாக்கறான். ஒரே ஒரு பொண்ணு 'ஷோசானா' மட்டும் தப்பிச்சு போக விட்டுடறாங்க.

அமெரிக்கப் படையோட ஒரு சின்ன யூதர்கள் பிரிவு (பாஸ்டர்ட்ஸ்) நாசிக்களை வேட்டையாட நார்மண்டிக்கு ரகசியமா வராங்க. ஒரே நோக்கம்... கண்ல படற நாசிக்களையெல்லாம் கொன்னு தலையை (தலையவே இல்லை... ஸ்கால்ப் மட்டும்) சீவணும். குறைஞ்சது 100 பேரை சீவணும். படைத் தலைவன் ஆல்டோ (ப்ராட் பிட்).

முதல் ரீல்ல தப்பிச்சுப் போன பொண்ணு அவங்க அத்தையோட சினிமா தியேட்டரை நிர்வாகம் பண்றா. யதேச்சையா நாசி கொ.ப.செ ஜோசஃப் கோயபல்ஸ் (நம்ம கருணாநிதி சொல்வாரே... அதே ஆளுதான்) எடுத்த ஒரு படத்தோட பிரிவ்யூக்கு இந்த சினிமா ஹாலை தேர்ந்தெடுக்கறாங்க. எல்லா மேல்நிலை நாசித் தலைவர்களும் - ஹிட்லர் உள்பட - எல்லாரும் வருவாங்கன்னு தெரிஞ்சு மொத்தமா பழிவாங்க திட்டம் போடறா ஷோசானா.

இந்த சினிமா ப்ரிவ்யூ விஷயம் தெரிஞ்சு 'ஆபரேஷன் கினோ'ன்னு ஒண்ணு ப்ளான் பண்ணி நாசிக்களை தீத்துக்கட்ட சைடுல ஒரு கும்பல் திட்டம் போட்டு அதுல பாஸ்டர்ட்ஸ் படையும் கூட்டு. உதவிக்கு ஒரு நடிகை வேற.

இப்பிடி ரெண்டு ப்ளான்க கொஞ்சம் கொஞ்சமா நடந்தேறி வர, கடைசில என்னதான் ஆச்சு? ஹிட்லரைக் கொன்னாங்களா? ப்ளான் ஒர்க் அவுட் ஆச்சா? நான் சொல்லி ஸ்பாயில் பண்ண விரும்பல. படத்தையே பார்க்கறது பெட்டர்.

க்வெண்டின் டரென்டினோவோட பெஸ்ட் படம்னு சொல்லலாம். வழக்கம் போல அமர்த்தலான ஃப்ளோ. டயலாக் அதிகமா இருந்தாலும் அதுதான் படத்தோட ஹைலைட். அதுலயும் ப்ராட் பிட்டோட அலட்சியமான அமெரிக்கன் ஆக்ஸெண்ட் கலக்கல்னா, க்ரிஸ்டஃப் வால்ட்ஸோட பேச்சு, பாடி லேங்குவேஜும் கலக்கலோ கலக்கல். பெஸ்ட் ஆக்டர் அவார்ட் வேற. இவர் நடிப்பைப் பாக்கறதுக்காகவே இன்னொரு தடவை போலாம்.

காமெடி கலந்த ஆக்சன் படம்னாலும் (ஹிட்லரைக்கூட காமெடி பீஸ் ஆக்கிட்டாங்க) படத்துல கொஞ்சம் வன்முறை அதிகம். அதுவும் பேஸ்பால் பேட்டால அடிச்சே கொல்றது, நெத்தில கத்தியால அழுத்தமா ஸ்வஸ்திக் போடறது, தொடைக்கு நடுவுல பிஸ்டலை வெச்சு டுமீல், டுமீல்.... இதெல்லாம் சிலரை கொஞ்சம் நெளிய வெக்கலாம். டயலாக் ஃப்ரென்ச், ஜெர்மன், இங்கிலீஷ்னு மாறி மாறி இருக்கு. சப்டைட்டிலோட பாக்கறது பெட்டர்.

மொத்தத்துல கலக்கலான காமெடி கலந்த cold post-WW2 adventure film.

Friday, September 4, 2009

வினையாகும்....


அடித்துத் துரத்தினேன்
பிடித்துத் தள்ளினேன்

திட்டித் தீர்த்தேன்
மிரட்டிப் பார்த்தேன்

கெஞ்சினேன்
கொஞ்சினேன்

முறைத்தேன்
அலுத்துக் கொண்டேன்

....
....

'என்ன வேண்டும் உங்களுக்கு?'
'ஏன் விலக மறுக்கிறீர்கள்?'

....
....

என் முன்பு நின்றிருந்த
பல நூறு வினாக்களுடன்
இன்னும் இரண்டு சேர்ந்து கொண்டன...

....
....

சலிப்பாய் இருக்கிறது...

'என்னதான் சொல்கிறாய்?' என்று கேட்பவர்களுக்கு:
தயவு செய்து வேண்டாம்...
எண்ணிக்கையில் இன்னொன்றைக் கூட்டாதீர் !!


ஆதி.. நீங்க என்னதான் சொன்னாலும் கவிதையை ஒரு கை பாக்காம விடறதில்லை. அதுக்காச்சு...எனக்காச்சு... (மத்தவங்களுக்கு என்ன ஆனாலும் கவலையில்லை)

கவிதை எமக்குத் தொழில்...
(அய்யோ.. கைய முறுக்காதீங்க... வலிக்குது)
என் கடன் கவிதை எழுதிக் கிடப்பதே..(அம்மா... வெரல ஒடிக்கிறீங்களே)
ஒங்க கடன் படிச்சு பின்னூட்டம் போடுவதே (அய்யய்ய.. லேப்டாப்ப ஜன்னல் வழியே வீசிட்டீங்களே.. இனிமே எப்பிடி பதிவு போடப் போறீங்க?)
ஆனாலும் உங்களுக்கு கோவம் ஜாஸ்திதான்...கண்ட்ரோல்..

Thursday, September 3, 2009

தலையில் தட்டியது யார்?

சனிக்கிழமை காலை. அவசரமாக ஒரு நண்பரை காணக் கிளம்பிக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் கிச்சனுக்கும் ஹாலுக்கும் இடையே ஒரு குட்டி அறை உள்ளது (டைனிங் ஹாலெல்லாம் இல்லை. சும்மா ஒரு அறை, அவ்வளவுதான்). அதில்தான் ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் வகையறாக்கள் வைத்திருக்கிறோம். அந்த அறையில் வலப்புறம்தான் பாத்ரூம் உள்ளது.

இங்கே ஹாலில் லதா மற்றும் உஷாவின் உணவு நேர போராட்டம் நடந்துகொண்டிருந்தது. சாப்பாடு மற்றும் உணவுப்பாத்திரங்களுக்கு நடுவே லதாவை வைத்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்து பூரிக்கட்டையை (கொஞ்சம் பெரிது, ஏனெனில்.... ஹிஹி... இதெல்லாம் சொல்லணுமா பாஸ்..) எடுத்துத் தருவது எப்போதும் என்னுடைய பணியாகையால் என்னையே எடுத்துத வருமாறு பணித்தார். என் அவசரத்தில் 'என்ன மறுபடியுமா? வேணாம்.... அழுதுருவேன்..'' என்று பணிவாகச் சொல்லிவிட்டு என் வேலையைப் பார்க்கத் துவங்கினேன். வலிய வந்த சண்டையை விட அவருக்கும் மனமில்லாததால் அவரே எழுந்து கிச்சனுக்குள் நுழைந்து பூரிக்கட்டையை எடுக்க விரைந்தார். அதற்குள் எங்கோ லதாவை விட்டு விட்டு கிளம்பிவிட்டார் என நினைத்தாளோ என்னவோ லதா அவரைத் தடுக்கும் வண்ணம் 'யீயீயீயீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்' என அழத்துவங்கியிருந்தாள். பூரிக்கட்டையை எடுத்துக்கொண்டு 'ஏம்ல உயில வாங்குத, இங்கனதான நிக்கேன்' என்று கூறிக்கொண்டே விருட்டென திரும்பினார். நான் அந்த நேரத்தில் சரியாக பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்ள எண்ணி அந்த அறைக்குள் நுழைய எத்தனித்தேன். ப்ச்... கொஞ்சம் டைமிங் மிஸ் ஆயிடுச்சு... அவ்வளவுதான், மிக பலமாக பிடித்திருந்தாரோ என்னவோ பூரிக்கட்டை என் தலையில் கொஞ்சம் அழுத்தமாகவே முத்தமிட்டது. ஹைய்ய்ய்யோ. அறை முழுதும் அலறல்....

அடுத்த விநாடியே உச்சஸ்தாயியில் கத்தினேன், "ஏன் இப்பிடி ஓங்கி அடிச்சிங்க?"

"அய்யய்யோ, பச்சைப்பொய்யி... லேசாத்தானே தட்டினேன்..." என்று அவள் பதிலுக்கு அலறினாள். அதற்குள் ஹாலில் லதா அவளால் முடிந்த சேவையாய் ஊளையிட்டுக்கொண்டே வாட்டர் ஜக்கை கொட்டிவிட்டிருந்தான். அந்த எரிச்சல், நானே எடுத்துத்தராத கோபம், அதிலும் ஓடி ஒளிய எத்தனித்தது, லீவு நாளில் நான் மட்டும் தப்பித்து வெளியே கிளம்பும் கோபம் என அனைத்தும் சேர்ந்து பூரிக்கட்டை என் தலையின் மீது விழுவது புரிந்தாலும் இதெல்லாம் அரசியலில் சகஜம். அடுத்தடுத்த வசனங்களிலேயே இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

"ஏங்க, நான் பூரிக்கட்டையால லேசாத் தட்டினதுக்கே இப்படி பழி போடுறியளே, நான் மட்டும் அந்த ஒலக்கையால தட்டியிருந்தேன்னா என்ன சொல்லியிருப்பியளோ?" என்றாள். அதற்கு அப்புறமும் அவர் சொன்னதைக் கேட்டுவிட்டுதான் பதில் பேச இயலாமல் நான் தலை வீக்கம் வெளியில் தெரியாமல் மறைக்கும் வழியைப் பார்க்க ஆரம்பித்தேன்.

முறைக்காமலே சொன்னார், "நான் பூரிக்கட்டையோட வர்றது தெரிஞ்சாவே எப்பவும் போல நீங்களாவே வந்து தலையைக் குனிஞ்சு வாங்கிக்கிட்டுப் போவ வேண்டியதுதான? இன்னிக்கு ஏன் ஓடி ஒளியப் பாத்திக?"


என்னவோ போங்க..... ஆதியோட இந்தப் பதிவுக்கும் இதுக்கும் எதாவது தொடர்பு இருந்தாலும் இருக்கலாம்.... அது புனைவாகவும் இது 'உள்ளது உள்ளபடி'யாகவும் இருக்கலாம்.... நமக்கு என்ன தெரியும்? அவரெல்லாம் அப்பளத்தை உடைச்சே சாப்பிடறவர். இட்லியை பிட்டு சாப்பிடறவர். தண்ணியை அப்பிடியே குடிக்கறவர்.

Sunday, August 30, 2009

கிச்சடி 31.08.2009



சிங்கப்பூர்ல இருந்து ஜெனீவாவுக்கு வந்த நம்ம ஆபீஸ் நண்பருக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லாம போச்சு. வறட்டு இருமல். ரெண்டு நாள் ஆகியும் குறையலயேன்னு ஒரு டாக்டர் கிட்ட போனோம். 1 நிமிஷம் நண்பர் சொன்னதை டாக்டர் கேட்டுட்டு 'உங்களுக்கு ரெண்டு ப்ராப்ளம் இருக்கு. தொண்டைல புண் இருக்கு... லங்ஸ் அஃபெக்ட் ஆயிருக்கு... ரேடியோ எடுக்கணும்'னார். ஏ.எம்மா எஃப்.எம்மான்னு கேக்கறதுக்குள்ள எக்ஸ்ரேக்கு ஆளைக் கூப்பிட்டார். எல்லாம் முடிஞ்சு 'ஒண்ணும் பயப்படறபடி ஒண்ணும் இல்லை'ன்னு சொல்லிட்டு 2 வாரத்துக்கு ஆன்டிபயாடிக் மாத்திரை குடுத்தார். அதுவும் 1000mg. அவ்வளவு ஸ்ட்ராங் டோஸெல்லாம் சரியான்னு தெரியல. கூடவே பில்லும் குடுத்தார். 320 ஃப்ரான்க். அடங்கப்பா.... நம்மூர்ல இதுக்கு மிஞ்சிப்போனா 350 ரூபா (8 ஃப்ராங்க்) ஆகலாம். இதுல ஃபாலோ அப் வேறயாம்... 5 நாள் கழிச்சு. போங்கடா.... நீங்களும் உங்க ஆஸ்பத்திரியும்னு குதிகால் பொடனில அடிக்க ஓடிவந்தோம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஸுரிக்ல இருந்து ஜெனீவாவுக்கு ரயில்ல போகும்போது படிக்கறதுக்கு எடுத்துக்கிட்ட புத்தகம் 'The Shepherd'. Frederic Forsyth எழுதிய நாவல். ஏற்கெனவே ரெண்டு தரம் படிச்சதுதான்னாலும் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும். உலகப் போர் சமயத்துல, கிறிஸ்துமஸ்க்கு முந்தைய சாயுங்காலம் ஒரு விமானம் கட்டுப்பாடுகளை இழந்து தவிக்கும்போது வேற ஒரு விமானம் வந்து அதை பாதுகாப்பா ஏதோ ஒரு விமானதளத்துல இறக்கி விட்டுட்டுப் போயிடும். அப்பறம்தான் தெரியும் காப்பாத்தின விமானமும் 15 வருஷத்துக்கு முன்னயே ஒரு விபத்துல சிக்கி உருத்தெரியாம எரிஞ்சுபோச்சுன்னும், அந்த விமானியும் இறந்து போயிட்டார்னும். நம்ம இந்திரா சௌந்தரராஜன் டைப் அமானுஷ்ய நாவல்னு வெச்சுக்கங்களேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு எதிர்ல உக்காந்திருந்தவர் மெள்ள பேச்சுக் குடுக்க ஆரம்பிச்சார். பேச்சு வாக்குல புத்தகத்தைப் பத்தியும் கேட்டார். இதிலெல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லைன்னும், எனக்கு நம்பிக்கை இருக்கான்னும் கேட்டார். ஒரு சுவாரஸ்யத்துக்காக எனக்கு நம்பிக்கை உண்டுன்னு சொல்லி வெச்சேன். இன்னும் 2 மணி நேரம் ஓட்டியாகணுமே. கொஞ்ச நேரம் இதைப் பத்தியே பேசின பிறகு நான் சொன்னேன் "காப்பாத்தின விமானி நாந்தான்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க?"ன்னு. கூடவே லேப்டாப் பேக்ல தொங்கிக்கிட்டுருந்த சில ஏர் ஃபோர்ஸ் லேபில்களையும் காமிச்சேன். எல்லாம் சிங்கப்பூர் ஏர் ஷோல வாங்கின டுபாக்கூர் லேபில்க. என்ன நினைச்சாரோ சட்டுனு பேசறதை நிறுத்திட்டு வெளிய வேடிக்கை பாக்க ஆரம்பிச்சுட்டார். இறங்கும்போது கூட சொல்லிக்கலை. அதுக்கப்பறம் புத்தகம் படிக்கற மூடே இல்லை. நினைச்சு நினைச்சு சிரிச்சுக்கிட்டிருந்தேன். ஒருவேளை 'இந்தப் பைத்தியம் நம்மளை கடிக்காம விட்டுதே'ன்னு அவரும் பெருமூச்சு விட்டிருக்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நம்மளை மாதிரி 'பிரபல' பதிவர்கள் (நம்பாட்டி போங்க.. எனக்கென்ன..) சினிமாக்களை விமர்சனம்கற பேர்ல கிழி கிழின்னு கிழிக்கிறோமாம். சினிமா உலகே கதிகலங்கி இருக்காம். தமிழ்சினிமா.காம்ல தலையங்கமே எழுதியிருக்காங்க. அடடா... யோசிச்சுப் பாத்தா...

உண்மையா இருந்தா... : ஹய்யோ... நாம எல்லாம் நிஜமாவே பிரபலம் ஆயிட்டோமா? படம் பாக்கப் போறவங்க எல்லாம் பதிவர்களோட விமர்சனத்தைப் பாத்துட்டுத்தான் போறதா வேண்டாமான்னு முடிவு பண்றாங்களா? விகடன், குமுதம் மாதிரி 75 வருஷமா வெளியாகிற பத்திரிக்கைகள்ல வர விமர்சனங்களை விட பதிவர்கள் விமர்சனத்துக்கு வேல்யூ அதிகமா? இனிமே புதுப் படம் ப்ரிவ்யூக்கு பதிவர்களுக்கு அழைப்பு வருமா? பாஸிடிவ்வா விமர்சனம் எழுதினா " ............... அவர்களின் பாராட்டைப் பெற்ற படம்"னு நாளிதழ்கள்லயும் போஸ்டர்கள்லயும் பாக்கலாமா? ஐ... ஜாலியா இருக்கே....

உண்மையா இல்லைன்னா.... : அட போங்க.... நாம இப்பிடியே 'பிரபல'மா இருந்துட்டுப் போறோம்....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தங்கமணி பிரபு அவர்களின் நேற்றைய இடுகைல இருந்த வீடியோவைப் பாத்த பிறகு மூச்சே நின்னுடுச்சு. தாலிபான்க கூட கொஞ்சம் பரவால்லயோன்னு தோணிடுச்சு..... இந்த அரக்கர்களுக்கு கொஞ்சமாவது மனிதாபிமானம், இரக்ககுணம் இதெல்லாம் வராதான்னு வேண்டிக்கிறதைத் தவிர வேறு வழி தெரியல....


Thursday, August 27, 2009

வெட்டாப்பு

போன ஒரு மாசமா வேலைப் பளு அதிகமாயிடுச்சு. அது மட்டுமில்லாம ஜெனீவாலயே 1 மாசம் இருக்கும்படியா ஆகிப்போச்சு. அதனால பதிவு எழுதறதுல ஒரு தேக்கம். பழமைபேசியார் சொன்ன மாதிரி ஒரு வெட்டாப்பு விழுந்து போச்சு. எழுத முடியலைன்னாலும் அப்பப்ப ரீடர்ல நாம ஃபாலோ பண்றவங்களைப் படிச்சுக்கிட்டுதான் இருந்தேன்.

சரி... வேலைகளுக்கு நடுவுல போன மாசம் கிடைச்ச சில அனுபவங்களை பகிர்ந்துக்கிட்டு மறுபடியும் எழுத்துப்பணி(!!)யை ஆரம்பிச்சுடுவோம்னுதான் இந்த துரித இடுகை.

1. க்லேஸியர் 3000 (Glacier 3000) : இது ஸ்விஸ் ஆல்ப்ஸ்ல ஒரு முக்கியமான மலையுச்சி. 3000 அடி உசரத்துல இருக்கு. பக்கத்துலயே 'லே தியப்லரே' (Les Diablarets) னு ஒரு இடம். பல சிறந்த விளையாட்டு வீரர்கள், ஹாலிவுட்/பாலிவுட் நடிகர்கள்னு பல பிரபலங்கள் தங்களோட விடுமுறை வீடுகளை இங்க வெச்சுருக்காங்க.

ஜெனீவால இருந்து மோந்த்ரூ போய், அங்கிருந்து ரயில் மாறி ஸ்டாட் (GStaad) போய், அங்கிருந்து பஸ்ல 1/2 மணிநேரப் பயணத்துல தியப்லரே கேபில் பஸ் ஸ்டேஷன் போய்... அங்கிருந்து கேபில் பஸ்ல 1/2 மணி நேரம் போனா... அப்பாடா.... ஒரு வழியா மலை உச்சிக்கு போய் சேரலாம். ரெண்டு மலை உச்சிகளுக்கு நடுவுல எந்த சப்போர்ட்டும் இல்லாம கேபில் பஸ்ல போறது ஒரு த்ரில்லிங் பயணம்.

டூரிஸ்டுகளும், உள்ளூர் மக்களும் கோடைகாலத்துல மலைநடைக்காகவே (hiking) இந்த ஏரியாவுக்கு வராங்க. ஸ்விஸ் ஒப்பன் டென்னிஸ் போட்டி ஒவ்வொரு வருஷமும் 'ஸ்டாட்'லதான் நடக்குது. நான் போன அன்னிக்கு ஃபைனல்ஸ்.

படங்கள்

2. யுங்ஃப்ரோ (Jungfrau) : இது ஐரொப்பாவின் உச்சின்னு சொல்லப்படுது. ஐகெர், மோன்க் மற்றும் யுங்ஃப்ரோயோ (Eiger, Monch & Jungfraujoch) மலை உச்சிகள் மூணும் சேர்ந்தது. டூரிஸ்டுக மொய்க்கிற இடம். ஸ்விஸ் டூர் பட்டியல்ல முதல் இடம்.

ஜெனீவா-பெர்ன்- இன்டர்லாகன்-லாடர்ப்ருன்னன்-க்லெய்ன்-யுங்ப்ஃரோ அப்படின்னு ஒரு நெடும் பயணம். ரயில் மாறி மாறி போய் சேர 5 மணி நேரம் ஆயிடுது. (இதே தூரம் இந்தியாவுலன்னா கண்டிப்பா 12 மணி நேரம் ஆயிடும்.) யுங்ஃப்ரோவுக்கு போற ரயில் பாதை முக்கால்வாசியும் மலையைக் குடைஞ்சு உள்ளயேதான். அதுக்குள்ளயே ரெண்டு மூணு ஸ்டேஷன்க வேற. மேல போனதும் சுத்தி வ்யூ பாக்கும்போது போன அலுப்பெல்லாம் தீந்துடும். கண்கொள்ளாக் காட்சிகள். பரந்த க்லேசியர். அப்பிடியே பனி ஆவியாகி மேகம் கிளம்பறது பாத்துக்கிட்டே இருக்கலாம். ஆல்ப்ஸோட பல முக்கியமான மலை உச்சிகள் எல்லாம் இங்க இருந்தே பாத்துடலாம்.

ஐசை குடைஞ்சு உள்ள ஒரு பெரிய ஐஸ் பேலஸ். அங்கங்க ஐஸ் சிற்பங்கள். குளு குளுன்னு தரை லேசா வழுக்கிக்கிட்ட்டே நின்னு பாக்கறது தனி அனுபவம். அப்பிடியே அங்க 'பாலிவுட் ரெஸ்டாரண்ட்'ல உக்காந்து ஒரு பனோரமிக் வ்யூவோட அட்டகாசமான லஞ்ச். (சும்மா சொல்லக்கூடாது... ஜெனீவால இருக்கற இந்திய ரெஸ்டாரண்டுகளை விட கம்மி விலைல சூப்பர் டேஸ்ட்...)

3. பதிவர் 'டுபுக்கு'வுடன் ஒரு சந்திப்பு : குடும்பத்தோட 1 வாரம் ஸ்விஸ் சுற்றுப்பயணம் வரதா சொல்லியிருந்தார். யதேச்சையா என்னுடைய 2 வார வேலை 4 வாரம் இழுத்துடுச்சு. அவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைச்சுது. 4 நாள் ஊரெல்லாம் சுத்திட்டு ஜெனீவா வந்தார். முதல்நாள் சாயங்காலம் ஜெனீவா நீர்ப்பீய்ச்சி (fountain-க்கு தமிழ்!!) பக்கத்துல சந்திச்சோம். 'ஹலோ டுபுக்கு'ன்னு அவங்க ஃபேமிலி முன்னால கூப்பிட சங்கடமா இருக்குமேன்னு நினைச்சேன். நல்லவேளை... மெயில்ல உண்மையான பேர் இருந்ததால அந்த சங்கடம் தீர்ந்தது. நெடுநாளைய நண்பர்கள் மாதிரி டக்குனு ஒட்டிக்கிட்டோம். நாலு நாளும் ப்ரெட், ஜாம்னு கொஞ்சம் காஞ்சு போயிருந்த நாக்குக்கு ஒரு இந்திய ரெஸ்டாரண்டுக்கு போய் ஒரு கட்டு கட்டுனதும் மனுஷன் தெம்பாயிட்டார். மறுநாள் மாலையும் சந்திச்சு இன்னொரு ரெஸ்டாரண்ட்... இன்னொரு கட்டு... (பில்லும் அவரே கட்டிட்டாரு... ரொம்ப நல்லவரு) இரண்டு பொன்மாலைப் பொழுதுகள்.

பதிவர் 'டுபுக்கு', நான் (என் கையில் இருப்பது அவரின் இரண்டாவது பெண்)

Wednesday, July 22, 2009

(சு)வாசித்ததும்.... யோசித்ததும்...

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4 ...5 ...6 ..7



Tao of Physics
Author : Dr Fritjof Capra

விஞ்ஞானம், ஆன்மிகம் இரண்டிலும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகவும் பிடிக்கலாம். நவீன இயற்பியலையும் கீழை நாடுகளின் நம்பிக்கைகளையும் இணையாய் வைத்து பார்க்கும் புத்தங்களில் முக்கியமான ஒன்று. பல சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தாலும் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

பொதுவா எல்லாரும் சொல்றதுண்டு "நம்ம வேதங்களில் சொல்லாததா? இன்னிக்கு அறிவியல் சொல்ற எல்லாம் எங்காளுக என்னிக்கொ சொல்லி வெச்சுட்டாங்க"ன்னு. இதுவும் அதேமாதிரி வரிசைல ஒரு புத்தகம்னு சிலர் நினைக்கலாம். ஆனால் என் பார்வையில், அவர் சொல்லியிருக்கறது, நவீன இயற்பியல் எப்பிடி கீழை நாடுகளின் தத்துவ கட்டமைப்புக்குள்ள (philosphical framework) தன்னை பொருத்திக் கொள்ள இடம் கொடுக்குதுங்கறதுதான். அதாவது ஒரு அறிவியலாளனுக்கு 'ஆராய்ச்சி'யின் மூலம் ஞானம் கிடைச்சா கீழை நாட்டவருக்கு 'அனுபவ'த்தின் மூலமாவே கிடைச்சுருக்கு. இந்த ஒப்புமை மேலாக பாக்கும்போது கொஞ்சம் வினோதமாத் தெரியலாம். ஏன்னா அறிவியல் சோதனைகள்ங்கறது பல பேர் சேர்ந்து நூதன தொழில்நுட்பங்கள் மூலமாவும் கருவிகள் மூலமாவும் ஆராய்ச்சி செய்து ஒரு முடிவுக்கு வரது. ஆனா மற்றது ஒரு சிலரோட தனிமைல அவங்க தியானத்தின் மூலமா ஒரு அனுபவம் கிடைச்சு அதை ஒரு நம்பிக்கையா வெளியிடறது. அறிவியல் சோதனைகள் மூலமா மறுபடி மறுபடி செய்து பார்த்து ஒரே முடிவுகளை பலமுறை கண்டறியலாம். ஆனா ஆன்மிக அனுபவங்கள்கறது ஒரு சிலருக்கு மட்டுமே ஒரு சில நேரங்களில் நிகழறது. புத்தக ஆசிரியர் சொல்றது என்னன்னா அணுகுமுறைகள் வேற மாதிரி இருந்தாலும் சொல்ல வந்த கருத்துகளோட ஸ்திரத்தன்மையும் நம்பகமும் ஒண்ணேதான்.

"டாவோ"ங்கறதை "பாதை" அல்லது "வழி"ன்னு சொல்லலாம். அறிவியலின் பாதையும் கீழை நாடுகளின் மதம் / நம்பிக்கை சார்ந்த பாதைகளும் கடைசியில் ஒரே இடத்துலதான் சந்திக்கும்... சந்திச்சாகணும். நவீன இயற்பியலாளர்களான நீல்ஸ் போர், ஒப்பன்ஹீமெர், ஹீசென்பெர்க் இவங்கள்லாம் கூட இந்து, புத்த மதங்கள், டாவோயிச தத்துவங்களுக்கும் அறிவியலுக்கும் உள்ள இணைகளைப் பத்தி பேசியிருக்கறதையும் ஆசிரியர் மேற்கோள் காட்டியிருக்காரு.

ஆரம்பத்துலயே ஆசிரியர் காரண ஞானத்துக்கும் (rational knowledge) முழு ஞானத்துக்கும் (absolute knowledge) இருக்கற வித்தியாசங்களை (ஆராய்ச்சி , அனுபவம்) சொல்லி, ஆராய்ச்சியில் நமக்கு இருக்கற எல்லைகள், புலன்களோட திறன் போன்ற நெருக்கடிகளையும், அனுபவத்திற்கு இந்த கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லாததையும் விளக்கி எழுதியிருக்காரு. ஆனா எதுவா இருந்தாலும் செய்தியின் நம்பகத்தன்மை ரெண்டுலயும் ஒத்துக்கற மாதிரிதான் இருக்குங்கறதையும் தெளிவாக்கிடறாரு.

இன்னும் க்வாண்டம் அறிவியல் பத்தியும், கீழை நாட்டு சித்தாந்தங்களையும் ஒப்புமைப் படுத்தி சொல்லும்போது நமக்கும் இந்து, புத்த மத கோட்பாடுகளுக்கு கொஞ்சம் அறிமுகம் இருக்கறதால சுலபமா புரியுது. ஏத்துக்கவும் முடியுது. ஒரு சின்ன உதாரணம். ஒளி அலையா, துகளான்னு கேக்கும்போது விஞ்ஞானி ஷ்ரோடிங்கர் தன் ஆராய்ச்சி முடிவுல, அது பார்வையைப் பொறுத்தது; சாட்சி பார்க்கும்போது அலையாகவும் பார்க்காதபோது துகளாகவும் (photon) இருக்குன்னு சொன்னார். அறிவியலில் அடிப்படையா everything is objective. No influence from a subject is accepted. இருந்தாலும் அந்த ஒளி அலை ஒரு mathematical wave னு சொன்னதால ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே மாதிரி, கீழை நாட்டு சித்தாந்தங்கள்ல இந்த ப்ரபஞ்சத்தின் இயக்கத்துக்கெல்லாம் ஒரு பரமசாட்சி இருக்குன்னு சொல்றதையும் சுட்டியிருக்கார்.

பிரபஞ்சத்தோட இயக்கம் ரொம்ப dynamic ஆ இருந்தாலும் அதுல ஒரு ஒழுங்கும் (rhythm) ஒத்திசைவும் (harmony) இருக்கறதையும், இதையே இந்து மதத்தின் நம்பிக்கைப்படி சிவனோட தாண்டவம் (நடராஜர்) உருவகப் படுத்தறதையும் ஒப்பிட்டுப் பேசும்போது ஆச்சரியமாத்தான் இருக்கு.

இந்தப் புத்தகத்தைப் பத்தி என்னால் ரொம்ப எழுத முடியல. அவரே சொல்லியிருக்கற மாதிரி சில விஷயங்களை சுயமா நம்ம புலன்களோட ஆராய்ஞ்சும், கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லாம கற்பனைலயும் அனுபவிச்சும் பாக்கும்போது ஒவ்வொருவர் பார்வைலயும் கொஞ்சமாவது வித்தியாசம் இருக்கும்கறதால 'புரிதல்'ங்கறதே ஒரு தனி அனுபவமாயிடும்.

படிச்சுப் பாருங்க.... உங்க பார்வை மாறலாம்....

Sunday, July 19, 2009

விழுதாகும் விருதுகள் !!

சிங்கைப் பதிவர் அறிவிலி தடாலடியாக என் பதிவுக்கு இந்த விருதைக் கொடுத்து விட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். சாதாரணமா இது மாதிரி விருதெல்லாம் அங்க இங்க சுத்தி அலுத்துப் போய் கடைசிலதான் நமக்கு வரும். என்னமோ இந்தத் தடவை சீக்கிரமே வந்துடுச்சு. ஆரம்பிச்சு வெச்ச செந்தழல் ரவிக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.




இந்த எம்.எல்.எம்.க்கு ஜெயலட்சுமி அக்கா (ஆண்ட்டி??) கிட்டயெல்லாம் ட்யூஷன் எடுக்க வேண்டியதில்லை. கிடைக்கிற கொஞ்சமே கொஞ்சம் நேரத்துல நாம நமக்குத் தெரிஞ்ச, ரெகுலராப் படிக்கற நாலு பேருக்கு தாராளமாக் குடுக்கலாம்.


கிரி. தீவிர ரஜினி ரசிகர். எந்த விஷயத்தைப் பத்தி எழுதினாலும் ஒரு தேர்ந்த நிருபருக்கு உண்டான மெனக்கெடல் இவர் எழுத்துல பாக்கலாம்.


பூக்கடைக்கு விளம்பரம் தேவையா? பதிவு தலைப்பைப் போலவே இவர் எழுத்தும் தெள்ளிய நீரோடை மாதிரி. இப்ப சமீபமா அப்பப்ப கொஞ்சம் வெள்ளம் பெருக்கெடுக்குது.


வித்தியாசமான பேருக்காகவே படிக்க ஆரம்பிச்சேன். இவரோட விக்கிரமாதித்தன் கதைகள் அட்டகாசம். என்னவோ இப்பல்லாம் இவர் அதிகமா எழுதறதில்லை. இதுக்கப்பறமாவது எழுத ஆரம்பிங்க..


ரவிசங்கர். இவரும் ஒரு வித்தியாசமான பதிவர். தமிழ் / ஆங்கில ஹைக்கூக்கள் எழுதுவது மற்றும் படித்தவைகளை நல்ல அறிமுகம் செய்து வைப்பார். சமீபத்துல ராணி, தினத்தந்தி மாதிரி பத்திரிக்கைகளைப் பத்தி ஒரு நினைவோடை எழுதியது என்னை ரொம்பக் கவர்ந்தது.

சொல்லப் போனா எல்லாப் பதிவர்களும் வித்தியாசமான சிந்தனைகளோட வித விதமா எழுதறாங்க. எல்லாமே இண்டரெஸ்டிங்காத்தான் இருக்கு. இருந்தாலும் விருது விதிப்படி 4 பேருக்கு குடுத்து சந்தோஷப்பட்டுக்கணும். மனசுல டக்குனு தோணுன நாலு பேருக்கு இந்த விருதை பாஸ் செய்யறதுல ரொம்பவே சந்தோஷம்.

அண்ணாச்சிகளா.... இந்தத் தம்பி குடுக்கறதை வாங்கிக்கோங்க. அப்பிடியே நீங்களும் பாஸ் பண்ணி விடுங்க.

Wednesday, July 15, 2009

இப்ப என்னதான் பண்றது?


இந்த இடுகை எழுதின நேரமே சரியில்லை போல...

முதல்ல யாரையெல்லாம் வம்புக்கு இழுக்கலாம்னு ஒரு லிஸ்ட் போட்டா, நமக்குன்னு வந்து மெனக்கெட்டு பின்னூட்டம் போடறவங்க நாலு பேரு... அவங்களுக்கும் கரச்சலைக் குடுத்தா எப்பிடின்னு அந்த லிஸ்டைத் எடுத்துட்டேன்.

யாருக்காவது எதிர்பதிவு எழுதலாம்னா முழுசா படிக்கக் கூட விடாம நாம படிச்சுக்கிட்டிருக்கும்போதே பிடுங்கி இடுகையைக் கிழிச்சுப் போட்டுடறாங்க.... சரின்னு ரீடர்ல ஓடிப் போய்ப் பாத்தா ரீடர்ல படம் தெரியறதில்ல... என்ன சொல்லியிருப்பாங்கன்னு யோசிக்கறதுக்குள்ள டைம் ஆயிடுது..

அட.. பின்னூட்டத்துக்காவது எதாவது எடக்கு மடக்கா பதில் சொல்லலாம்னா எல்லா பின்னூட்டமும் டிலீட் பண்ணி வெச்சுருக்காங்க...

ஒவ்வொரு ப்ளாகாப் போய் அவங்க எழுதினதுல எதாவது நுண்ணரசியல் கண்டுபிடிச்சு சாம்பிராணி போடலாம்னா, இடுகை எழுதி முடிச்சவுடனே அதையும் அவங்களே அனானி பேர்ல போட்டுக்கறாங்க....

நம்மளோட அல்லது நண்பர்களோட பழைய பதிவுகள்லயே எதையாவது புடிச்சு எப்பிடியாவது சிண்டு முடியலாம்னு முயற்சி பண்ணினா.... கற்பனை பயங்கரமா ஓடி மொத்த ப்ளாக்கர் சைட்டையே தூக்கணும் போல ஆயிடுமோன்னு தோணுது.

எங்கிட்ட ஈ-மெய்ல் பேக்கப்பும் எதுவும் இல்லை....

சரி.. நமக்கு நாமளே எதிர்பதிவு போட்டுக்கலாம்னு உக்காந்தா இடுகை ரொம்ப ஆபாசமா வருது... தலைப்பு எழுதறதுக்குள்ளயே எரிச்சலாகி எஸ்கேப்....

இப்ப என்னதான் பண்றது?

அவ்வ்வ்வ்... அழுகாச்சியா வருது....

Saturday, July 11, 2009

கலைநகரம் "லூசெர்ன்"



லூசெர்ன். ஸ்விஸ்சோட முக்கிய நகரங்கள்ல ஒண்ணு. கலைகளுக்குன்னே நேந்து விட்ட ஊர். ஓவியத்துறையில் "க்யூபிஸ"த்தை அறிமுகப்படுத்திய 'பாப்லோ பிகாஸோ' வாழ்ந்த ஊர். போன ஞாயிற்றுக்கிழமை லூசெர்னுக்கும்,அதுக்குப் பக்கத்துல இருக்கற 'பிலாடுஸ்' மலைக்கும் நண்பர்களோட (பின்ன... கேமரா இல்லாமயா?) பயணம்.

ஜெனீவால இருந்து 3 மணி நேரம் லூசெர்ன். போய் சேரும்போதே 11 மணி. உடனேயே பிலாடுஸ்க்கு போக டிக்கட் வாங்கிட்டு இன்னொரு பிளாட்ஃபாரத்துல இன்னொரு குட்டி ரயில். பிலாடுஸ்க்கு போய் வரதே ஒரு தனி அனுபவம். லூசெர்ன்ல இருந்து 'அல்ப்னாச்ஸ்டெட்'க்கு ரயில்ல 20 நிமிஷம். அங்கிருந்து உலகின் மிகவும் சாய்வான பாதையில் (48% சாய்வு) போற பல்சக்கர வின்ச் ரயில் 40 நிமிஷம் பிலாடுஸ் மலை உச்சிக்கு. திரும்ப வரும்போது ஒரு கேபிள் பஸ்ல பாதி மலை இறங்கிட்டு (15 நிமிஷம்)அங்கிருந்து சின்னச் சின்ன கேபிள் கார்ல (25 நிமிஷம்) கீழ 'க்ரியன்ஸ்' வந்து பஸ் புடிச்சு (15 நிமிஷம்) லூசெர்ன். அட்டகாசமான பயணம். அதுவும் அந்த வின்ச் ரயில் கிட்டத்தட்ட செங்குத்தா போற மாதிரி இருக்கு. 3-4 ரயிலுக ஒண்ணு பின்னால ஒண்ணு வரிசையா ஏறறது அற்புத காட்சி. ஒத்தை ரயில் பாதைதான். அதனால நடுவுல ஒரு இடத்துல மேல போற ரயில் எல்லாம் ஒதுங்கி நிக்குது. நம்ம ரயிலுக்கு முன்னால பாத்தா பாதையே இல்லை. தண்டவாளம் முடிஞ்சு மொட்டையா இருக்கு. கொஞ்சம் முன்னால பாத்தா ஒரு சின்ன ப்ளாட்ஃபாரத்து மேல ரெண்டு தணடவாளத் துண்டுக இருக்கு. கீழ இறங்கற ரயிலுக இறங்கினதும், அந்த ப்ளாட்ஃபாரம் அப்பிடியே வலது பக்கம் நகர, நம்ம ரயில் பாதையும் முன்னால இருக்கற பாதையும் இணையுது. அப்பறம் மேல போற ரயிலுக எல்லாம் மெள்ள க்ராஸ் பண்ணி ஏறுது. என்னா டெக்னாலஜி.... நடுவுல மலைல குடைஞ்சு வெச்சுருக்கற குகைகள் வழியா போறது... சான்ஸே இல்ல...





ஒரு வழியா மேல போய் சேந்தா கொஞ்சம் ஏமாற்றந்தான். திடீர்னு க்ளைமேட் மாறி ஒரே மேக மூட்டம். கீழ பாத்தா ஒரே மேகமா இருக்கு. ஒண்ணும் தெரியல.லேசா தூரல் வேற. மழை பிச்சுக்கிட்டு ஊத்தப் போற மாதிரி ஆயிடுச்சு. ஓரமா நின்னு காஃபி குடிச்சுட்டு இருக்கும்போடு ந்ம்மளைச் சுத்தி கூட்டமா அல்பைன் காக்கா (alpine crow). கையில இருந்து புடுங்கியே தின்னுடும் போல. கொஞ்சம் பிச்சு தூக்கிப் போட்டா அந்தரத்துலயே கேட்ச் புடிச்சுக்கிட்டு பறக்குதுக. மூணு பேர் அங்க ஸ்விஸ்ஸோட தேசிய இசைக்கருவியான அல்ப்ஹார்ன் (alphorn)வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க.



கொஞ்சம் தூரல் நின்னதும் மேல ஏறினோம். மலை உச்சியை 360 டிகிரி சுத்திப் பாக்கறதுக்கு குகைகளும் நடைபாதையும் போட்டிருக்காங்க. அட்டா... மேல இருந்து காட்சிகளைப் பாக்கறதுக்கு ரெண்டு கண்ணு போதாது. அதுவும் குற்றாலம் மாதிரி மெல்லிய சாரலோட... அங்கியே எதாவது ஒரு குகைக்குள்ளயே உக்காந்துடலாமான்னு தோணுச்சு. அதுவும் கீழ ஒரு மலை உச்சில ஒரு சர்ச். என்ன ஒரு ரம்மியமான் சூழல் !! ம்ம்ம்.. ஸ்விஸ் மக்கள் குடுத்து வெச்ச்வங்க. ஒரு ரவுண்டு சுத்தி வந்து மேல உச்சிக்குப் போனா அங்க ஏதோ பீடம் மாதிரி இருக்கு. ஏதாவது வானிலை ஆராய்ச்சிக்குன்னு நினைக்கிறேன். அதுல பூரா வந்தவங்க அவங்கவங்க கைவண்னத்தைக் காமிச்சுருந்தாங்க. உலகத்துல எல்லாப் பகுதிகள்ல இருந்தும் மக்கள் வந்து பேரையோ இல்ல வழக்கம் போல "ஐ லவ் ..."னோ எழுதி வெச்சுருக்காங்க. நாங்களும் பூரா தேடிபார்த்தோம்... தமிழ்ல எதுவுமே இல்லை. அடடா... இது சாமி குத்தமாயிடுமேன்னு சின்னதா ஒரு வெண்பா எழுதலாம்னு பாத்தா அப்பன்னு கற்பனைக்குதிரை எங்கியோ மேயப்போயிடுச்சு. சும்மா எதையோ கிறுக்கிட்டு வந்தோம்.



கேபிள் பஸ்ல பாதி மலை இறங்கி கேபிள் காருக்கு மாறற இடத்துல ஒரு கயிறு விளையாட்டு பார்க் (Rope Park) இருக்கு. 25 ஃப்ரான்க் கட்டினா இடுப்பு பாதுகாப்பு பெல்ட், ஹெல்மெட், க்ளவுஸ் தறாங்க. எல்லாம் போட்டுக்கிட்ட பிறகு கம்பிகள்ல கொக்கியை எப்பிடி மாட்றது, எப்பிடி சின்ன உருளை உதவியோட தொங்கிக்கிட்டே போறதுன்னு ஒரு சின்ன ட்ரெய்னிங் செஷன். அப்பறம் நமக்கு நாமே திட்டம்தான். முதல் ரெண்டு விளையாட்டுக கொஞ்சம் பயமா இருந்தாலும் கழைக்கூத்தாடி மாதிரி கம்பி மேல நடந்து அந்தப்பக்கம் போனதும் பயம் போயிடுச்சு. அப்பறம் தொங்கிகிட்டே சர்ர்ர்ர்னு போனது ஜாலியா இருந்தது. அதுக்குப் பிறகு கொஞ்சம் தைரியம் ஜாஸ்தி ஆகி, 50 அடி உசர கம்பத்துல செங்குத்தா இருக்கற ஏணில ஏறி ஒரு கொக்கியைப் புடிச்சு தொங்கி கீழ இறங்கினோம். மேல ஏறி போறதுக்குள்ளயே நாக்கு தள்ளிடுச்சு. கீழ இருந்து ட்ரெய்னர் 'கொக்கியைப் புடிச்சுக்கிடு ஜம்ப் பண்ணு'ங்கறான். இதோ பண்றேன் இதோ பண்றேன்னு 2 நிமிஷம் யோசிச்சிட்டுத்தான் குதிச்சேன். முதல் 10 அடி தடக்குனு இறங்கி அப்பறம் கொஞ்சம் மெள்ள இறங்குது. ஆனா அதுக்குள்ள நமக்குதான் டப்பா டான்ஸ் ஆடிடுச்சு.






இப்பிடி 1 மணி நேரத்துக்கு மேல விளையாடி முடிச்சுட்டு போதுண்டா சாமின்னு கேபிள் கார்ல உக்காந்து கீழ வந்தோம். பஸ்ஸைப் புடிச்சு ஸ்டேஷன் கிட்ட இறங்கினோம். பக்கத்துலயே 'ரோன்' நதி மேல ஒரு மரப்பாலம். அதுக்குப் பக்கத்துல 'நீர் கோபுரம்' (water tower). ஸ்விஸ்ல மிக அதிகமா போட்டோ எடுக்கப்படற இடம். அந்த பாலத்துக்கு உள்ள மேல இருக்கற முக்கோண ஃப்ரேம்கள்ல ஸ்விஸ் வரலாறு ஓவியங்கள். கிட்டத்தட்ட 400 ஓவியங்கள். பிறகு அங்கிருந்து அடுத்த புகழ் பெற்ற 'சாகும் சிங்கம்' (The Dying Lion) பூங்காவுக்குப் போனோம். ஃப்ரான்ஸ் - ஸ்விஸ் சண்டைல இறந்து போன ஸ்விஸ் வீரர்கள் நினைவுச் சின்னம். ஒரு பெரிய சிங்கம் (ஸ்விஸ் தேசிய சின்னம்) முதுகுல பாஞ்ச ஈட்டியோட சாகற தருவாய்ல இருக்கற மாதிரியான ஒரு புடைப்பு சிற்பம். அருமையான் சூழல் அற்புதமான சிற்பக் கலை. முன்னால இருக்கற சின்ன குளத்துல காசை எறியறாங்க. இந்த பழக்கம் எப்பிடி உலகம் முழுக்க பொதுவா இருக்குன்னு ஆச்சரியமா இருக்கு.


அதுக்குள்ள நல்ல பசி. போகும்போதே 'காஞ்சி' ன்னு ஒரு ஹோட்டலை பாத்தோம். போய் சாம்பார் ரசத்தோட சாப்பாடு. சுமாரா இருந்துது. அப்பறம் திரும்ப ஸ்டேஷனுக்கு வந்து 8 மணிக்கு ட்ரெய்னைப் புடிச்சு 11 மணிக்கு ஜெனீவா வந்து சேந்தோம். லூசெர்ன்ல மட்டுமே பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் நிறைய. சில வருஷங்களுக்கு முன்னால போனபோது பிகாசோ வீட்டுல மட்டும் 4 மணி நேரம் இருந்தேன். இன்னொரு முறை சாவகாசமா போய் மத்த இடங்களைப் பார்க்கணும். பாக்கலாம்...


மலை மேல இருந்து துண்டு துண்டா 3 படம் எடுத்து ஒரே பனோரமா ஷாட்டா 'ஸ்டிட்ச்' பண்ண படம் இது.... லைட்டிங் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்...

Monday, July 6, 2009

இங்கிட்டு மஹேஷ்.... அங்கிட்டு ?



....நீங்கதான்..... நீங்களேதான். பின்ன என்னங்க? நீங்க இல்லாம இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா? என்னதான் மொக்கை போட்டாலும், கவிதை (!!) வடிச்சு இம்சை பண்ணினாலும், வெண்பா படைச்சு துன்புறுத்தினாலும், சிறுகதை எழுதி சிலிர்க்க வெச்சாலும், நெடுங்கதை எழுதி நடுங்க வெச்சாலும், போட்டிக் கதை அனுப்பி பயமுறுத்தினாலும், அறிவியல் புனைவு படைச்சு அலட்டிக்கிட்டாலும், பயணக் கட்டுரைகள் போட்டு பந்தா பண்ணினாலும், கிச்சடி பண்ணி உங்களை பச்சிடி பண்ணினாலும், கடவுளைப் பத்தி எழுதி கல்லா கட்டுனாலும், கடவுள் இருக்கான்னு கேள்வி கேட்டாலும், எதிர்பதிவுல எசப்பாட்டு பாடினாலும், துணைப்பதிவுல திகைக்க வெச்சாலும், சொந்த ஊரைப்பத்தி கொஞ்சம் பெருமை பேசினாலும், பேட்டி எடுத்தாலும், சினிமா விமர்சனம் பண்ணினாலும், படிச்ச புத்தகங்களை உங்களுக்கு பிரிச்சுக் காட்டினாலும், சுயவிமர்சனம் பண்ணிக்கிட்டாலும், சின்ன வயசு அனுபவங்களை அசை போட்டாலும், கற்பனைல பதிவர் சந்திப்புகள் நடத்தினாலும், பகிரங்கக் கடிதம் எழுதினாலும், இவ்வளவு ஏன்..... வலைப்பூவுக்கு "துக்ளக்"னு பேர் வெச்சாக் கூட.... இப்பிடி என்ன குட்டிக்கரணம் போட்டாலும், பல வேலைகளுக்கு நடுவுலயும் வந்து பொறுமையாப் படிச்சுட்டு 'அருமை தல.... கலக்கல்.... ஜூப்பரு... அசத்தல்...' ன்னெல்லாம் வஞ்சனையில்லாம தாராளமா கமெண்ட் போடற உங்களை மாதிரி பதிவர்கள், வாசகர்கள் (சரி...சரி... மேல... மேல...) மற்றும் நண்பர்களோட ஊக்குவிப்பு இல்லைன்னா இப்ப நானெல்லாம் இதை 100வது பதிவுன்னு போட முடியுமா?


யம்மாடி.... மூச்சு வாங்குது !! அண்ணன்களே... தம்பிகளே.... அக்காக்களே... தங்கைகளே... ஆன்றோர்களே.. சான்றோர்களே.. எல்லாருக்கும் நன்றிகள் பல.



Thursday, July 2, 2009

என் பாக்களா? வெண்பாக்களா?

நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடியும் வெண்பா முயற்சி. வழக்கம்போல நண்பர் திரு.அகரம்.அமுதாவின் உதவியுடன். ஈற்றடிகளை அவர் கொடுக்க, பாக்களை நான் இயற்ற (சரி.. சரி.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்) சிலவற்றிற்கு அவர் தளை தட்டும் இடங்களை சரி செய்து கொடுக்க, அவற்றை நான் இங்கு படைக்க, அவற்றை நீங்கள் படிக்க..... அவரது/உங்களது பொறுமைக்கும், நன்றிகள் பல.


உலகம் சூடாகுதல்



மரங்களை வெட்டியே பிழைப்பினை நடத்தும்

கரங்களை வெட்டிட வேண்டாமோ - மறக்காமல்

கப்பந்தான் கேட்குமே தட்பமது குறைந்திட

வெப்பம் உயரும் உலகு !



கூட்டணி


கூறுவோர் கூறிடவும் மாறுவோர் மாறிடவும்

சேருவோர் யாரெனக் கேட்டேன் - பெருமைமிகு

நாட்டினிலே நாற்பது கட்சிகள் !! உன்றன்

கூட்டணி யாருடனோ கூறு !



ஊருக்கு உழைத்தல்


கரும்பெனவே இனிதாகப் பேசிடினும் சின்னத்

துரும்பையுங் கிள்ளாத் தலைவரே ! - இரும்பில்செய்

(ச்)சேரிலே இருந்தபடி நாட்டாமை செய்வதினும்

ஊருக்(கு) உழைத்தல் உயர்வு.



டாஸ்மாக்கும் படிப்பும்


டாஸ்மாக்கைத் தேடி ப்ரெண்டுகளைக் கூட்டிக்கிட்டு

ரோஸ்மில்க் குடிக்கவா போவாங்க? - பாஸ்மார்க்கு

வாங்கத்தான் முடியாம அரியர்ஸை வெச்சுவெச்சு

தேங்கியே போனதே படிப்பு.

சரியாயிருந்தா வெண்பா... இல்லைன்னா என் பா. என்னப்பா நண்பா? சொல்றது தப்பா?

என்னோட முதல் முயற்சி உங்களுக்கெல்லாம் மறந்து போயிருக்கலாம்... மறுபடி இங்க ஒரு தடவை ஞாபகப்படுத்திடறேன்.

புத்திரசோகம் :(


நான் வேலை தேடி டெல்லியில் என் தமக்கையின் வீட்டுக்குச் சென்றிருந்த சமயம். அவனுக்கு அப்போது 7 வயது இருக்கும். அவனுடைய தந்தையின் அலுவலகத்திலேயே எனக்கும் ஒரு வேலை கிடைத்தது. போய் வர சௌகரியமாக இருக்குமென்று அவர்கள் வீட்டுக்கு அருகிலேயே ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தேன். பெரும்பாலான நாட்கள் இரவு உணவு அவர்கள் வீட்டில்தான். அவனும் அவன் அண்ணனும் (11 வயது) பிகுந்த பாசத்துடன் பழகினார்கள். வார இறுதிகளின் மாலைப்பொழுதுகளில் அவர்களோடுதான் விளையாட்டு. சில நாட்கள் சினிமா, சர்க்கஸ், பார்க் என பொழுது போகும்.


என்னைப் பார்த்ததும் ஓடி வந்து காலைக் கட்டிக் கொள்வான். பிறகு என் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு மரம் ஏறுவது போல் உடம்பின் மீது ஏறி தலையில் அமர்ந்து கொள்வான். அவனுக்கு அது ஒரு பிடித்தமான விளையாட்டு. சிரிக்க சிரிக்க பேசுவான். அவன் அண்ணன் நன்றாக கீ போர்ட் வாசிப்பான். தபேலாவும் கற்றுக் கொண்டிருந்தான். மகிழ்ச்சியான குடும்பம். எந்த விதமான உள்/வெளித் தொந்திரவுகளும் இல்லாத அழகான குடும்பம். பெரியவன் பெங்களூரில் இஞ்சினியரிங் முடித்து, பிறகு அமெரிக்காவில் எம்.எஸ். முடித்து அங்கேயே நல்ல வேலையில். சின்னவனுக்கு சிறுவயது முதலே ட்ரம்ஸ் போன்ற கருவிகளில் ஆர்வம் அதிகம். ப்ளஸ்2விற்கு பிறகு மும்பையில் ஒரு பெரிய கல்லூரியில் சவுண்ட் இஞ்சினியரிங் படிப்பில் சேர்ந்து போன மாதம் 3 வருட படிப்பையும் முடித்து விட்டான்.


போன வெள்ளிக்கிழமை மாலை தொலைபேசியில் வந்த அதிர்ச்சி செய்தி. சின்னவன் மும்பையில் தான் வசித்து வந்த அபார்ட்மெண்ட்டில் 5 வது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டானென்று. ஏன் எதற்கு எப்படி என்பதெல்லாம் இந்த நிமிடம் வரை புரியாத புதிர். வீட்டாரைத் தேற்ற வார்த்தைகளில்லை. 4 நாட்கள் அழுது பின் வற்றிய கண்களுடன் அந்த அழகான குடும்பம் இவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. என் மனவேதனை சொல்லி மாளாது.


அந்த 20 வயது இளைஞனது ஆன்மா சாந்தியடையவும், அந்த குடும்பத்தார் இந்த துயரிலிருந்து மீண்டு வரவும் நம்மை விட உயர்நததொரு சக்தியைப் பிரார்திப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.