Taking of Pelham 123 (2009)
John Travolta, Denzel Washington
ஜான் ட்ரவோல்டா, டென்ஸல் வாஷிங்டன்.... ரெண்டு பேரும் சேந்த படம்ன உடனேயே எதிர்பார்ப்பு அதிகம்தான் ஆயிடுச்சு. ந்யூயார்க் மெட்ரோ ரயில்ல கண்ட்ரோல் சென்டர்ல இருக்கற கார்பர் (டென்ஸல்) "பெல்ஹாம் 123" ('பெல்ஹாம் பே' ஸ்டேஷன்கு 01:23 க்கு போய் சேரற ரயில்) நடுவழில நிக்கறதைப் பாக்கறாரு. என்னன்னு விசாரிச்சா ரைடர் (ட்ரவோல்டா) கடத்தி வெச்சுருக்கான்.
முதல் பெட்டியை மட்டும் வெச்சுட்டு மத்ததையெல்லாம் கழட்டி விட்டுட்டு, இருக்கறவங்க பயணக் கைதிகள். 10 மில்லியன் டாலர் கேட்டு மிரட்டரான். அதுவும் 1 மணி நேரத்துக்குள்ள. மீட்பு நடவடிக்கைகளை செய்துக்கிட்டே பணத்துக்கும் ஏற்பாடு செய்யறாங்க. ரயிலுக்குள்ள இருக்கற ஒரு பையனோட லேப்டாப் ஆன்லயே இருக்கு. அதுல வீடியோ ச்சாட் வழியா உள்ள நடக்கறதெல்லாம் தெரிஞ்சாலும் ஒண்ணும் பிரயோசனம் இல்லை.
அந்த காலை கார்பர் அட்டெண்ட் பண்ண வேண்டி வந்ததால, கார்பர் கூடதான் பேசுவேன்னு ரைடர் அடம். அதுக்காக ரயில் ட்ரைவர் பலி. 'என்னடா நடக்குது இங்க?"ன்னு கேட்ட போலீஸ், "மொதல்ல என்னிய சுடு பாக்கலாம்"ன முன்னாள் மிலிட்டரி... எல்லாத்தையும் பொசுக் பொசுக்குன்னு சுடறாங்க. கார்பர் எதோ லஞ்சக் கேஸ்ல மாட்டியிருக்கான்னு தெரிஞ்சு அதைப் பத்தின உண்மைகளையும் கேக்கறான் ரைடர். இடைல ந்யூயார்க் மேயரையும் இழுத்து, அவரோட சில லீலைகளையும் சந்தி சிரிக்க வெச்சு, தான் யாரோ ஒரு மாடல் அழகி கூட ரிசார்டுக்கு போனதைப் பத்தி சொல்லி... என்னடா... சம்பந்தமில்லாம கண்டதையெல்லாம் நோண்டறானேன்னு யோசிச்சா.... பின்னால லிங்க் எல்லாம் புரியுது.
கடத்தலோட நோக்கம் அந்த 10மில்லியன் டாலர் கிடையாது. இந்த நாடகத்தை வெச்சு ஒரு பீதியைக் கிளப்பி ஸ்டாக் மர்கெட்டை சரிய வெச்சு, தங்கம் / கம்மாடிட்டி மார்கெட்டை ஏத்தி... அவன் போர்ட்ஃபோலியோ பல மடங்கு எங்கியோ போறதுக்கான திட்டம். எப்பிடியோ பணத்தையும் கொண்டு சேத்துடறாங்க. கடைசில என்னதான் ஆச்சு? க்ளைமேக்ஸ் கொஞ்சம் சுமார்தான்... என்னை பொறுத்தவரை. இருந்தாலும் படம் நல்லா விறுவிறுப்பா போறதால "ரைட்டு... "ன்னு விட்டுடலாம்.
டென்ஸல், ஜான்.... ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுக்கிட்டு நடிப்பு. அதுலயும் அந்த லஞ்சம் வாங்கறதை ஒத்துக்கற இடத்துல டென்ஸல்... க்ளாஸ். நெகோஷியெட்டரா வர அந்த அதிகாரியும் அருமை. மேயரை நம்ம ஊர் "மழைக்கு பள்ளிக்கூடத்துல ஒதுங்கின" எம்.எல்.ஏ மாதிரி அறிமுகம் பண்ணினாலும் ஆளு ஷார்ப். இந்த கடத்தல் விளையாட்டு எதுக்காகன்னு டக்குனு புரிஞ்சுகிடறாரு. படத்துல டயலாக்தான் கொஞ்சம் ஓவர்.... அந்த நாலெழுத்து வார்த்தை படற பாடு இருக்கே.... ஒவ்வொரு வாக்கியத்துலயும் ஜஸ்ட் 3 தடவைதான் வருது. மத்தபடி ஓகே. :)

1974ல வந்த படத்டோட ரீமேக். பேஸ்லைன் ஒண்ணா இருந்தாலும் மோடிவ்வை மாத்தி ஒரு சின்ன சுவாரஸ்யம். 1974 மாடல் - கொஞ்சம் வேற மாதிரி இருக்கும். சில சீன்கள் (கேமரா பொசிஷன் கூட) புது வெர்ஷன்ல அப்பிடியே ஷூட் பண்ணியிருக்காங்க. '74 வெர்ஷனைப் பாத்ததில்லைன்னா, முதல்ல இதைப் பாத்துட்டு அப்பறமா பாருங்க. நல்லாவே ரசிக்க முடியும். ரெண்டு படங்களையுமே. எஞ்சாய் மாடி.....
6 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
அடடா, அபூர்வமா நாம பார்த்த படத்துக்கு விமர்சனம்னு ஆசையா வந்தா, இது ரிமேக்கா? நான் பார்த்து 1974 version. கடைசி காட்சியில் இருமுவதை வைத்து கண்டுபிடிப்பது நினைவில் இருக்கிறது.
அனுஜன்யா
கமாடிடி மார்கெட்டை உயர்த்த இப்படி கூட வழியிருக்கா!
நாமளும் ட்ரெயினை கடத்த வேண்டியது தான்!
பார்க்க வேண்டிய படம்....:-)
படம் விறுவிறுப்பா இருக்கும் போல இருக்கே. டிவிடி இருந்தா இந்த பக்கம் அனுப்புங்க.
பயணிகளை புடிச்சு வெச்சா பயணக் கைதியா? :))))))
நன்றி அனுஜன்யா.... கடைசி காட்சியை நல்ல ஞாபகம் வெச்சுருக்கீங்களே !!
நன்றி வால்.... செய்யலாமே !!
நன்றி டொன் லீ.... ரொம்ப நாளா ஆளக் காணும்?? படிப்புல டீப்பா??
நன்றி அறிவிலி... சாரி ஸ்பெல்லிங் மிஷ்டிக் ... :)
வாய்ப்பு கிடைக்குதான்னு பார்ப்போம். ட்ரவோல்டா என்னோட ஃபேவரிட்.!
Post a Comment