Thursday, September 3, 2009

தலையில் தட்டியது யார்?

சனிக்கிழமை காலை. அவசரமாக ஒரு நண்பரை காணக் கிளம்பிக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் கிச்சனுக்கும் ஹாலுக்கும் இடையே ஒரு குட்டி அறை உள்ளது (டைனிங் ஹாலெல்லாம் இல்லை. சும்மா ஒரு அறை, அவ்வளவுதான்). அதில்தான் ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் வகையறாக்கள் வைத்திருக்கிறோம். அந்த அறையில் வலப்புறம்தான் பாத்ரூம் உள்ளது.

இங்கே ஹாலில் லதா மற்றும் உஷாவின் உணவு நேர போராட்டம் நடந்துகொண்டிருந்தது. சாப்பாடு மற்றும் உணவுப்பாத்திரங்களுக்கு நடுவே லதாவை வைத்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்து பூரிக்கட்டையை (கொஞ்சம் பெரிது, ஏனெனில்.... ஹிஹி... இதெல்லாம் சொல்லணுமா பாஸ்..) எடுத்துத் தருவது எப்போதும் என்னுடைய பணியாகையால் என்னையே எடுத்துத வருமாறு பணித்தார். என் அவசரத்தில் 'என்ன மறுபடியுமா? வேணாம்.... அழுதுருவேன்..'' என்று பணிவாகச் சொல்லிவிட்டு என் வேலையைப் பார்க்கத் துவங்கினேன். வலிய வந்த சண்டையை விட அவருக்கும் மனமில்லாததால் அவரே எழுந்து கிச்சனுக்குள் நுழைந்து பூரிக்கட்டையை எடுக்க விரைந்தார். அதற்குள் எங்கோ லதாவை விட்டு விட்டு கிளம்பிவிட்டார் என நினைத்தாளோ என்னவோ லதா அவரைத் தடுக்கும் வண்ணம் 'யீயீயீயீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்' என அழத்துவங்கியிருந்தாள். பூரிக்கட்டையை எடுத்துக்கொண்டு 'ஏம்ல உயில வாங்குத, இங்கனதான நிக்கேன்' என்று கூறிக்கொண்டே விருட்டென திரும்பினார். நான் அந்த நேரத்தில் சரியாக பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்ள எண்ணி அந்த அறைக்குள் நுழைய எத்தனித்தேன். ப்ச்... கொஞ்சம் டைமிங் மிஸ் ஆயிடுச்சு... அவ்வளவுதான், மிக பலமாக பிடித்திருந்தாரோ என்னவோ பூரிக்கட்டை என் தலையில் கொஞ்சம் அழுத்தமாகவே முத்தமிட்டது. ஹைய்ய்ய்யோ. அறை முழுதும் அலறல்....

அடுத்த விநாடியே உச்சஸ்தாயியில் கத்தினேன், "ஏன் இப்பிடி ஓங்கி அடிச்சிங்க?"

"அய்யய்யோ, பச்சைப்பொய்யி... லேசாத்தானே தட்டினேன்..." என்று அவள் பதிலுக்கு அலறினாள். அதற்குள் ஹாலில் லதா அவளால் முடிந்த சேவையாய் ஊளையிட்டுக்கொண்டே வாட்டர் ஜக்கை கொட்டிவிட்டிருந்தான். அந்த எரிச்சல், நானே எடுத்துத்தராத கோபம், அதிலும் ஓடி ஒளிய எத்தனித்தது, லீவு நாளில் நான் மட்டும் தப்பித்து வெளியே கிளம்பும் கோபம் என அனைத்தும் சேர்ந்து பூரிக்கட்டை என் தலையின் மீது விழுவது புரிந்தாலும் இதெல்லாம் அரசியலில் சகஜம். அடுத்தடுத்த வசனங்களிலேயே இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

"ஏங்க, நான் பூரிக்கட்டையால லேசாத் தட்டினதுக்கே இப்படி பழி போடுறியளே, நான் மட்டும் அந்த ஒலக்கையால தட்டியிருந்தேன்னா என்ன சொல்லியிருப்பியளோ?" என்றாள். அதற்கு அப்புறமும் அவர் சொன்னதைக் கேட்டுவிட்டுதான் பதில் பேச இயலாமல் நான் தலை வீக்கம் வெளியில் தெரியாமல் மறைக்கும் வழியைப் பார்க்க ஆரம்பித்தேன்.

முறைக்காமலே சொன்னார், "நான் பூரிக்கட்டையோட வர்றது தெரிஞ்சாவே எப்பவும் போல நீங்களாவே வந்து தலையைக் குனிஞ்சு வாங்கிக்கிட்டுப் போவ வேண்டியதுதான? இன்னிக்கு ஏன் ஓடி ஒளியப் பாத்திக?"


என்னவோ போங்க..... ஆதியோட இந்தப் பதிவுக்கும் இதுக்கும் எதாவது தொடர்பு இருந்தாலும் இருக்கலாம்.... அது புனைவாகவும் இது 'உள்ளது உள்ளபடி'யாகவும் இருக்கலாம்.... நமக்கு என்ன தெரியும்? அவரெல்லாம் அப்பளத்தை உடைச்சே சாப்பிடறவர். இட்லியை பிட்டு சாப்பிடறவர். தண்ணியை அப்பிடியே குடிக்கறவர்.

23 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

வால்பையன் said...

ஹாஹாஹா!

அவரு கூட உண்மையிலேயே பூரிகட்டையில தான் வாங்கியிருப்பாருன்னு நினைக்கிறேன்!

Thamira said...

என் பதிவுங்கிறதால அதிகமா ரசிச்சேனான்னு தெரியல.. சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்திருச்சு. அதுவும் கடைசி வரிகள் அட்டகாசம்.

Mahesh said...

நன்றி Truth....

நன்றி வால்பையன்....

நன்றி ஆதி... ஹி ஹி ஹி...

ஜோசப் பால்ராஜ் said...

ஹலோ அண்ணா,
மங்களூருக்கு சிவா அண்ணா வீட்டுக்கு மட்டும் பார்சல் அனுப்பி பிசினஸ் பண்ணிட்டு இருந்தோம், ஆஹா இங்க லோக்கல்ல ஒரு சூப்பர் ஆர்டர் இருக்கது தெரியாம போச்சே.
சரி விடுங்க, எங்களிடம் சைஸ் வாரியாக தரமான பூரிக்கட்டைகள் கிடைக்கும், டெலிவரி இலவசம் அப்டின்னு ஒரு மெயில் அண்ணிக்கு அனுப்பிடுறேன்.

ஜோசப் பால்ராஜ் said...

அருமையா ஒரு நக்கல் பதிவு போட்டிங்க . ஆனா ஒரு சின்ன சறுக்கல் அண்ணா.

//'ஏம்ல உயில வாங்குத, இங்கனதான நிக்கேன்' //

இது நெல்லை பேச்சு வழக்கு.

உங்க கொங்கு பேச்சு வழக்கு பதிவுலகத்துல பிரபலம். அதுனால அத அப்டியே கொங்கு வழக்குல மாத்திருங்க. சூப்பரா ஃபிட் ஆயிரும். நாங்க முத ஆர்டர் ஃப்ரீயா பூரிகட்டை அனுப்பிடுறோம்.

Anonymous said...

//அவரெல்லாம் அப்பளத்தை உடைச்சே சாப்பிடறவர். இட்லியை பிட்டு சாப்பிடறவர். தண்ணியை அப்பிடியே குடிக்கறவர். //

நான் எழுதிய பயடேட்டாவை விட இது சூப்பரா இருக்கே!

அது சரி(18185106603874041862) said...

//
முறைக்காமலே சொன்னார், "நான் பூரிக்கட்டையோட வர்றது தெரிஞ்சாவே எப்பவும் போல நீங்களாவே வந்து தலையைக் குனிஞ்சு வாங்கிக்கிட்டுப் போவ வேண்டியதுதான? இன்னிக்கு ஏன் ஓடி ஒளியப் பாத்திக?"
//

இப்படி எல்லாத் தப்பும் உங்க மேல இருக்கும் போது அப்புறம் அடிக்காம என்ன பண்ணுவாங்க??? :0))

இராகவன் நைஜிரியா said...

அண்ணே மகேஷுண்ணே... என்ன அண்ணே இப்படி எழுதிபுட்டீங்க... அடி வாங்காத ரங்கமணி யாரு சொல்லுங்கப் பார்ப்போம்...

உலகத்தில் 2 விதமான ரங்கமணிதாங்க...

முதல் ரகம் அடி வாங்கிட்டு வெளியில் சொல்றவங்க. இரண்டாவது ரகம் அடிவாங்கிட்டு சிரிச்சுகிட்டே அடி வாங்காத மாதிரி நடிக்கின்றவங்க.. அவ்வளவுதாங்க

அது சரி(18185106603874041862) said...

//
இராகவன் நைஜிரியா said...
அண்ணே மகேஷுண்ணே... என்ன அண்ணே இப்படி எழுதிபுட்டீங்க... அடி வாங்காத ரங்கமணி யாரு சொல்லுங்கப் பார்ப்போம்...

உலகத்தில் 2 விதமான ரங்கமணிதாங்க...

முதல் ரகம் அடி வாங்கிட்டு வெளியில் சொல்றவங்க. இரண்டாவது ரகம் அடிவாங்கிட்டு சிரிச்சுகிட்டே அடி வாங்காத மாதிரி நடிக்கின்றவங்க.. அவ்வளவுதாங்க
September 4, 2009 4:07 AM
//

பயத்தை வெளிய காட்டிக்காம இருக்கறது தான் தைரியம் ;0)))

பழமைபேசி said...

இஃகி இஃகி

Anonymous said...

//அடுத்த விநாடியே உச்சஸ்தாயியில் கத்தினேன், "ஏன் இப்பிடி ஓங்கி அடிச்சிங்க?"//

நீங்களாவது நடந்தது என்ன அப்படின்னு உண்மையை சொன்னீங்க. ஆதி கதையை மாத்தி பொய் சேத்து எழுதியிருக்கார் :)

அறிவிலி said...

சனிக்கிழமை காலையில இவ்ளோ மேட்டர் நடந்துருக்கு. அடுத்த நாள் அந்த சுவடே தெரியலியே...

எவ்வளவு கெடைச்சாலும் தாங்குவீங்க போல இருக்கே :))))

//லதா அவளால் முடிந்த சேவையாய் ஊளையிட்டுக்கொண்டே வாட்டர் ஜக்கை கொட்டிவிட்டிருந்தான்//

ன்?

Mahesh said...

நன்றி ஜோசஃப்.... இந்த களேபரத்துலயும் யாவாரம் பாக்கறீங்களே...

நன்றி வேலன் அண்ணாச்சி....

நன்றி அதுசரி....

நன்றி ராகவன் சார்... பெரியவங்க நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் :)

நன்றி மணியாரே..

நன்றி சின்னம்மிணி...

நன்றி அறிவிலி....

நர்சிம் said...

கலக்கல் எதிர்பதிவு தலைவரே..டரியல்.

நாஞ்சில் நாதம் said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

Mahesh said...

நன்றி நர்சிம்....

நன்றி நாஞ்சில் நாதம்....

பரிசல்காரன் said...

முடியல.....

Mahesh said...

பரிசல்.... உங்களாலயே முடியலயா? இந்த விஷயத்துல நீங்கதான் எல்லாத்துக்கும் சீனியர்... :)))))

மங்களூர் சிவா said...

/
"நான் பூரிக்கட்டையோட வர்றது தெரிஞ்சாவே எப்பவும் போல நீங்களாவே வந்து தலையைக் குனிஞ்சு வாங்கிக்கிட்டுப் போவ வேண்டியதுதான? இன்னிக்கு ஏன் ஓடி ஒளியப் பாத்திக?"
/

அதானே!

ஆதி பதிவு இப்பதான் படிச்சேன்
கலக்கல்!
:))

SK said...

superu :-)

கிரி said...

//கொஞ்சம் பெரிது, ஏனெனில்.... ஹிஹி... இதெல்லாம் சொல்லணுமா பாஸ்.//

ஹி ஹி ஹி

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில்
மதிப்பு மிக்க பதிவரான தங்களது பதிவு தானாகவே இணைந்துள்ளது...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....



உங்கள் படைப்பை பார்க்க

தமிழ்செய்திகளை இணைக்க

உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

Thamira said...

மதிப்பு மிக்க பதிவரான தங்களது பதிவு //

மகேஷ்.. பாத்தீங்களா? என்னைய விட்டுட்டு நீங்க மட்டும் எப்பிடி இப்பிடி ஆகலாம்?