Sunday, August 30, 2009

கிச்சடி 31.08.2009சிங்கப்பூர்ல இருந்து ஜெனீவாவுக்கு வந்த நம்ம ஆபீஸ் நண்பருக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லாம போச்சு. வறட்டு இருமல். ரெண்டு நாள் ஆகியும் குறையலயேன்னு ஒரு டாக்டர் கிட்ட போனோம். 1 நிமிஷம் நண்பர் சொன்னதை டாக்டர் கேட்டுட்டு 'உங்களுக்கு ரெண்டு ப்ராப்ளம் இருக்கு. தொண்டைல புண் இருக்கு... லங்ஸ் அஃபெக்ட் ஆயிருக்கு... ரேடியோ எடுக்கணும்'னார். ஏ.எம்மா எஃப்.எம்மான்னு கேக்கறதுக்குள்ள எக்ஸ்ரேக்கு ஆளைக் கூப்பிட்டார். எல்லாம் முடிஞ்சு 'ஒண்ணும் பயப்படறபடி ஒண்ணும் இல்லை'ன்னு சொல்லிட்டு 2 வாரத்துக்கு ஆன்டிபயாடிக் மாத்திரை குடுத்தார். அதுவும் 1000mg. அவ்வளவு ஸ்ட்ராங் டோஸெல்லாம் சரியான்னு தெரியல. கூடவே பில்லும் குடுத்தார். 320 ஃப்ரான்க். அடங்கப்பா.... நம்மூர்ல இதுக்கு மிஞ்சிப்போனா 350 ரூபா (8 ஃப்ராங்க்) ஆகலாம். இதுல ஃபாலோ அப் வேறயாம்... 5 நாள் கழிச்சு. போங்கடா.... நீங்களும் உங்க ஆஸ்பத்திரியும்னு குதிகால் பொடனில அடிக்க ஓடிவந்தோம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஸுரிக்ல இருந்து ஜெனீவாவுக்கு ரயில்ல போகும்போது படிக்கறதுக்கு எடுத்துக்கிட்ட புத்தகம் 'The Shepherd'. Frederic Forsyth எழுதிய நாவல். ஏற்கெனவே ரெண்டு தரம் படிச்சதுதான்னாலும் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும். உலகப் போர் சமயத்துல, கிறிஸ்துமஸ்க்கு முந்தைய சாயுங்காலம் ஒரு விமானம் கட்டுப்பாடுகளை இழந்து தவிக்கும்போது வேற ஒரு விமானம் வந்து அதை பாதுகாப்பா ஏதோ ஒரு விமானதளத்துல இறக்கி விட்டுட்டுப் போயிடும். அப்பறம்தான் தெரியும் காப்பாத்தின விமானமும் 15 வருஷத்துக்கு முன்னயே ஒரு விபத்துல சிக்கி உருத்தெரியாம எரிஞ்சுபோச்சுன்னும், அந்த விமானியும் இறந்து போயிட்டார்னும். நம்ம இந்திரா சௌந்தரராஜன் டைப் அமானுஷ்ய நாவல்னு வெச்சுக்கங்களேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு எதிர்ல உக்காந்திருந்தவர் மெள்ள பேச்சுக் குடுக்க ஆரம்பிச்சார். பேச்சு வாக்குல புத்தகத்தைப் பத்தியும் கேட்டார். இதிலெல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லைன்னும், எனக்கு நம்பிக்கை இருக்கான்னும் கேட்டார். ஒரு சுவாரஸ்யத்துக்காக எனக்கு நம்பிக்கை உண்டுன்னு சொல்லி வெச்சேன். இன்னும் 2 மணி நேரம் ஓட்டியாகணுமே. கொஞ்ச நேரம் இதைப் பத்தியே பேசின பிறகு நான் சொன்னேன் "காப்பாத்தின விமானி நாந்தான்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க?"ன்னு. கூடவே லேப்டாப் பேக்ல தொங்கிக்கிட்டுருந்த சில ஏர் ஃபோர்ஸ் லேபில்களையும் காமிச்சேன். எல்லாம் சிங்கப்பூர் ஏர் ஷோல வாங்கின டுபாக்கூர் லேபில்க. என்ன நினைச்சாரோ சட்டுனு பேசறதை நிறுத்திட்டு வெளிய வேடிக்கை பாக்க ஆரம்பிச்சுட்டார். இறங்கும்போது கூட சொல்லிக்கலை. அதுக்கப்பறம் புத்தகம் படிக்கற மூடே இல்லை. நினைச்சு நினைச்சு சிரிச்சுக்கிட்டிருந்தேன். ஒருவேளை 'இந்தப் பைத்தியம் நம்மளை கடிக்காம விட்டுதே'ன்னு அவரும் பெருமூச்சு விட்டிருக்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நம்மளை மாதிரி 'பிரபல' பதிவர்கள் (நம்பாட்டி போங்க.. எனக்கென்ன..) சினிமாக்களை விமர்சனம்கற பேர்ல கிழி கிழின்னு கிழிக்கிறோமாம். சினிமா உலகே கதிகலங்கி இருக்காம். தமிழ்சினிமா.காம்ல தலையங்கமே எழுதியிருக்காங்க. அடடா... யோசிச்சுப் பாத்தா...

உண்மையா இருந்தா... : ஹய்யோ... நாம எல்லாம் நிஜமாவே பிரபலம் ஆயிட்டோமா? படம் பாக்கப் போறவங்க எல்லாம் பதிவர்களோட விமர்சனத்தைப் பாத்துட்டுத்தான் போறதா வேண்டாமான்னு முடிவு பண்றாங்களா? விகடன், குமுதம் மாதிரி 75 வருஷமா வெளியாகிற பத்திரிக்கைகள்ல வர விமர்சனங்களை விட பதிவர்கள் விமர்சனத்துக்கு வேல்யூ அதிகமா? இனிமே புதுப் படம் ப்ரிவ்யூக்கு பதிவர்களுக்கு அழைப்பு வருமா? பாஸிடிவ்வா விமர்சனம் எழுதினா " ............... அவர்களின் பாராட்டைப் பெற்ற படம்"னு நாளிதழ்கள்லயும் போஸ்டர்கள்லயும் பாக்கலாமா? ஐ... ஜாலியா இருக்கே....

உண்மையா இல்லைன்னா.... : அட போங்க.... நாம இப்பிடியே 'பிரபல'மா இருந்துட்டுப் போறோம்....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தங்கமணி பிரபு அவர்களின் நேற்றைய இடுகைல இருந்த வீடியோவைப் பாத்த பிறகு மூச்சே நின்னுடுச்சு. தாலிபான்க கூட கொஞ்சம் பரவால்லயோன்னு தோணிடுச்சு..... இந்த அரக்கர்களுக்கு கொஞ்சமாவது மனிதாபிமானம், இரக்ககுணம் இதெல்லாம் வராதான்னு வேண்டிக்கிறதைத் தவிர வேறு வழி தெரியல....


31 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

முன் தேதியிட்ட கிச்சடி...இஃகிஃகி!

Mahesh said...

//முன் தேதியிட்ட கிச்சடி...இஃகிஃகி//

அவ்வ்வ்..... நானே கவனிக்கலையே..... :)))))))))))

பரிசல்காரன் said...

//ஏ.எம்மா எஃப்.எம்மான்னு கேக்கறதுக்குள்ள//

கலக்கல்!
***********
ஜெனிவாவில் ஒரு தாமோதரன்?
***************
ஐ! நல்லாருக்கே கேக்கறதுக்கு! (ஆனா அது உண்மைங்க!)
**************

:-(

--------------

கிச்சடி லேட்டானா ஊசிப்போகும்னு ஒரு நாள் முந்தியே தர்றீகளோ?

இராகவன் நைஜிரியா said...

அருமைய்யா அருமை... கிச்சடி நல்லாவே கிண்டியிருக்கீங்க..

ஆயில்யன் said...

//: அட போங்க.... நாம இப்பிடியே 'பிரபல'மா இருந்துட்டுப் போறோம்....//பிரபலம் ஆகவேண்டாம்
பிர”பலத்துடனேயே” இருந்துட்டு போய்டலாம் அப்படின்னு சொல்லுறீங்க ! அதுவும் ரைட்தான் :)))

Anonymous said...

//Frederic Forsyth //

என் அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச ஆங்கில எழுத்தாளர்.

Anonymous said...

//அதுவும் 1000mg. //

நியூஸில எல்லாம் அவ்வளவு சீக்கிரம் ஆண்டிபயாடிக் தரவே மாட்டாங்க. பனடால்தான். ஒருவேளை இன்பெக்ஷன் ரொம்ப இருந்திருக்குமோ.

Mahesh said...

நன்றி பரிசல்.... நெம்ப நாளைக்கப்பறம் வாரீக...

நன்றி ராகவன் சார்...

நன்னி ஆயில்யன்...

வாங்க அம்மிணி... ஆமுங்... 1000மெல்லாம் நெம்ப சாஸ்திங்....

அனுஜன்யா said...

இன்னும் சுவிஸ் தானா?

யோவ், ஏம்பா இப்படி சகபயணியை 'டரியல்' ஆக்குற? Frederic Forsyth - Sheppard படித்ததில்லை. The Day of the Jackal is a very good book. Devils Alternative என்னும் சம்பிரதாயமான cold war espionage புத்தகமும் செம்ம சுவாரஸ்யம். அவரோட சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் பற்றியும் எழுதலாமே.

அனுஜன்யா

க. தங்கமணி பிரபு said...

வணக்கம் தோழர்! சக தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் விழிப்புணர்வூட்டும் செயலுக்கு சுட்டியிட்டு ஆத்ரித்தமைக்கு நன்றிகள் பல்!

பிரபா said...

என்ன நம்ம பக்கம் வாற இல்லையா?

ஸ்ரீ said...

//ஒருவேளை 'இந்தப் பைத்தியம் நம்மளை கடிக்காம விட்டுதே'ன்னு அவரும் பெருமூச்சு விட்டிருக்கலாம்.//

:-)))))

அறிவிலி said...

கிச்சடி சுவைத்தேன்.

ட்ரெயின் பயணி பாவம். நம்மூர் மாதிரி ட்ரெயின் ஓடும்போது குதிக்க முடியாதா?

சிங்கப்பூர் டாக்டருங்க காலை புடிச்சு கதறினாலும் ஆன்டிபயாடிக் குடுக்க மாட்டேங்கறாங்களே.

Mahesh said...

நன்றி அனுஜன்யா... 'டரியல்'"?? நீங்களுமா?? அப்பறம் அந்த சிறுகதைகளைப் பத்தி.... ம்ம்...எழுதலாமே...

நன்றி பிரபா... வரேங்க...

நன்றி ஸ்ரீ... :)

நன்றி அறிவிலி.... சான்சே இல்லை... அந்த தைரியத்துலதானே கலாய்க்கறது :)

Mahesh said...

நன்றி தங்கமணி பிரபு...

அது சரி said...

//
ஸுரிக்ல இருந்து ஜெனீவாவுக்கு ரயில்ல போகும்போது படிக்கறதுக்கு எடுத்துக்கிட்ட புத்தகம் 'The Shepherd'. Frederic Forsyth எழுதிய நாவல்
//

Forsyth.....என்னோட குரு....நான் இன்னும் ஷெப்பர்ட் படிக்கல....அவரோட தி டே ஆஃப் தி ஜாக்கல் படிச்சிட்டீங்களா...மாஸ்டர் பீஸ் !

அது சரி said...

//
உண்மையா இருந்தா... : ஹய்யோ... நாம எல்லாம் நிஜமாவே பிரபலம் ஆயிட்டோமா? படம் பாக்கப் போறவங்க எல்லாம் பதிவர்களோட விமர்சனத்தைப் பாத்துட்டுத்தான் போறதா வேண்டாமான்னு முடிவு பண்றாங்களா?
//

உள்ளிருந்தே காட்டிக் கொடுக்கும் துக்ளக்கை உடனடியாக நாடு கடத்த உத்தரவிடுகிறேன்..

:0))))

வால்பையன் said...

நீங்க பிரபலபதிவர்ன்னு நான் ஒத்துகிறேன்!

வால்பையன் said...

பரிசல் மாதிரி பிரபலங்கள் பின்னூட்டம் கிடைச்சா அவுங்களும் பிரபலம் தான்!
என்ன நான் சொல்றது!

கிரி said...

// 5 நாள் கழிச்சு. போங்கடா.... நீங்களும் உங்க ஆஸ்பத்திரியும்னு குதிகால் பொடனில அடிக்க ஓடிவந்தோம்.//

நல்ல வேளை ஸ்வைன் ஃப்ளு ன்னு சொல்லாம இருந்தாங்களே! :-)

//இனிமே புதுப் படம் ப்ரிவ்யூக்கு பதிவர்களுக்கு அழைப்பு வருமா? பாஸிடிவ்வா விமர்சனம் எழுதினா " ............... அவர்களின் பாராட்டைப் பெற்ற படம்"னு நாளிதழ்கள்லயும் போஸ்டர்கள்லயும் பாக்கலாமா? ஐ... ஜாலியா இருக்கே....//

வாய்ப்பு இருக்கு (நிஜமாகவே)

Mahesh said...

நன்றி அதுசரி அண்ணாச்சி... நெம்ப நாளைக்கப்பறம் இங்கிட்டு... Day of the Jackal படிச்சும் இருக்கேன்.. படமும் பாத்தேன்... Forsyth & Asimov - ரொம்ப புடிச்ச எழுத்தாளர்கள்

வாங்க வால்... நீங்க சொன்னா அது தப்பா இருக்குமா தல...

நன்றி கிரி... உண்மையா இருந்தா அதை விட சந்தோஷம் வேற இல்லை.:)

குடுகுடுப்பை said...

நல்லாருக்கு, பதிவர் பட விமர்சனம் பாத்து படம் பாக்கிறாங்க அப்படிங்கறதெல்லாம் சும்மா அப்படின்னு நெனக்கிறேன்.

saravana said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஆனாலும் இருமலுக்கு 14000ம்லாம் கொஞ்சம் ஓவர்.. (ஹிஹி.. கால்குலேட்டர்ல போட்டுப்பார்த்தேன்).

விமானம் விஷயத்துல உங்க லந்தும் கொஞ்சம் ஓவர்தான். (பின்ன என்னதான் பண்றது. எந்த நேரமும் பிளைட்டு, ட்ரெயினுன்னு பறந்துகிட்டிருந்தா அப்பப்ப இப்படித்தான் யாரையாவது பிறாண்டத்தோணும்)

Mahesh said...

நன்றி கு.கு... விகடன் படிச்சாச்சா??

நன்றி saravana...

நன்றி ஆதி... 'லந்து'... அட ரொம்ப நாளாச்சு இந்த வார்த்தையைக் கேட்டு....

நர்சிம் said...

//அப்பறம்தான் தெரியும் காப்பாத்தின விமானமும் 15 வருஷத்துக்கு முன்னயே ஒரு விபத்துல சிக்கி உருத்தெரியாம எரிஞ்சுபோச்சுன்னும், அந்த விமானியும் இறந்து போயிட்டார்னும். நம்ம இந்திரா சௌந்தரராஜன் டைப் அமானுஷ்ய நாவல்னு வெச்சுக்கங்களேன்.//

ஃப்ளோ அருமை தலைவரே...

எம்.எம்.அப்துல்லா said...

சுவிஸ்ல இருக்குற இந்தியர்களின் கருப்புப் பணத்தை திரும்ப இந்தியா கொண்டு வரப்போறதாலதான் சுவிஸ்ல இருக்குற உங்க அக்கவுண்ட மாத்துறதுக்காக அங்க போனீங்கன்னு ஒருதகவல் வருதே உண்மையா தல??

ஜோசப் பால்ராஜ் said...

அப்ப அந்த பைலட் நான் இல்லையா? இம்புட்டு நாளு நான் தான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்ப நான் எந்த பைலட்டு ?

( அந்த புத்தகம் குடுங்க. அந்தக் கதையப் பத்தி ஒரு ப்ரெண்டு ரொம்ப சூப்பரா சொல்லிட்டு புக் தர்றேண்டான்னு ஏமாத்திட்டாரு).

Mahesh said...

நன்றி நர்சிம்...

நன்றி அப்துல்லா.. ஆமா தல... நம்ம ஒரு அக்கவுண்டை மாத்தறதுக்குள்ளயே நாக்கு தள்ளிப் போச்சு... இன்னும் உங்களோட 10 அக்கவுண்டுகளை எப்பிடித்தான் நீங்க மாத்தப் போறீங்களோ? :(

நன்றி ஜோசஃப்.. அட... உங்களைத்தான் நான் 'நான்'னு அவர் கிட்ட சொன்னேன்.... நான் வேற நீங்க வேறயா?:)))))))

tataindiaxenon said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com

tataindiaxenon said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com