அடித்துத் துரத்தினேன்
பிடித்துத் தள்ளினேன்
திட்டித் தீர்த்தேன்
மிரட்டிப் பார்த்தேன்
கெஞ்சினேன்
கொஞ்சினேன்
முறைத்தேன்
அலுத்துக் கொண்டேன்
....
....
'என்ன வேண்டும் உங்களுக்கு?'
'ஏன் விலக மறுக்கிறீர்கள்?'
....
....
என் முன்பு நின்றிருந்த
பல நூறு வினாக்களுடன்
இன்னும் இரண்டு சேர்ந்து கொண்டன...
....
....
சலிப்பாய் இருக்கிறது...
'என்னதான் சொல்கிறாய்?' என்று கேட்பவர்களுக்கு:
தயவு செய்து வேண்டாம்...
எண்ணிக்கையில் இன்னொன்றைக் கூட்டாதீர் !!
ஆதி.. நீங்க என்னதான் சொன்னாலும் கவிதையை ஒரு கை பாக்காம விடறதில்லை. அதுக்காச்சு...எனக்காச்சு... (மத்தவங்களுக்கு என்ன ஆனாலும் கவலையில்லை)
கவிதை எமக்குத் தொழில்...
(அய்யோ.. கைய முறுக்காதீங்க... வலிக்குது)
என் கடன் கவிதை எழுதிக் கிடப்பதே..(அம்மா... வெரல ஒடிக்கிறீங்களே)
ஒங்க கடன் படிச்சு பின்னூட்டம் போடுவதே (அய்யய்ய.. லேப்டாப்ப ஜன்னல் வழியே வீசிட்டீங்களே.. இனிமே எப்பிடி பதிவு போடப் போறீங்க?)
ஆனாலும் உங்களுக்கு கோவம் ஜாஸ்திதான்...கண்ட்ரோல்..

16 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
நீங்க தான் கேள்வியின் நாயகனா!?
முதல்ல உங்கள மறுபடியும் ஜெனீவாவுக்கு அனுப்பனும் அண்ணே.
கவுஜ நல்லாருக்கு. என் குருநாதர் ஆசிப் அண்ணாச்சிக்கிட்ட ரெகமெண்டு பண்ணி உங்கள கவிமடத்துல சேர்த்துவிட்றேன். கவலைய உடுங்க.
தமிழிஷ், தமிழ்மணம் இரண்டிலும் ஓட்டுப் போட்டுட்டேன்.
என்னால முடிஞ்சது அவ்வளவுதான்.
நான் ஏன் கேள்வி கேட்கவேண்டும்? (அப்பாடா ஒரு கேள்வி கேட்டாச்சு)
ம்.
நேர்ல மீட் பண்ணி கவுஜ மட்டும் வேண்டாமே பாவம் உட்டுருங்க பிளீஸ்னு (கஷ்டப்பட்டு நேர்ல வந்து மீட் பண்ணினதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிருக்குமே) சொன்னப்புறமும் கூட இப்பிடி பண்ணினா எப்பிடி?
எழுதுங்கையா.. எழுதுங்க. நானும் பூரா படிக்குறதுன்னு முடிவு பண்ணீட்டேன். ஒரே ஒரு கவுஜையாவது உருப்படியா எயிதற வரை உங்களை விடுறதா இல்லை.! கல்லு ரெடியா கையில வச்சிருக்கேன். ஜாக்கிரதை.!

ஏங்க மகேஷ் இப்படியெல்லாம்? நல்லத்தானே போயிட்டிருந்திச்சு?
/
மத்தவங்களுக்கு என்ன ஆனாலும் கவலையில்லை
/
ஏன்னா நீங்க ரொம்ப்ப்ப்ப்பா நல்லவர்!
:))))))))))
நன்றி வால்... ஆமுங்...
நன்றி ஜோசஃப்... உங்க நாக்குல மச்சமா? அடுத்த மாசம் போகலாம்னு இருந்தவனனை நாளைக்கு கிளப்பி உட்டுட்டாங்க... :(((
நன்றி ராகவன்.... நல்லதுங்க.... 234லயும் நாந்தான் !!
நன்றி ஆதி... நீங்க நேர்ல வந்து கேட்டா விட்டுருவமா? அ??
நன்றி வேலன் அண்ணாச்சி... இப்பவும் நல்லாத்தானே போய்க்கிட்டுருக்கு?
நன்றி சிவா... பாருங்க... உங்களூக்குத் தெரியுது...
நன்றி அறிவிலி... ம்... 1/2ம் போட்லாஅம்னு நினைச்சேன்...அது முடியல...
இம்புட்டுப் பெரிய கவுஜ முளையைக் கசக்கி எழுதுனா.... ம்...அப்பிடிங்கறீங்க... உங்களுக்கு கவிதை எழுத வரலைன்னு பொறாமை :)))))))))))))))
//
என் கடன் கவிதை எழுதிக் கிடப்பதே..(அம்மா... வெரல ஒடிக்கிறீங்களே)
//
விரல ஒடிச்சவய்ங்க வாழ்க...எல்லா வெரலையும் ஒடைக்காம விட்டுட்டாய்ங்களே :0)))
கவிதை நல்லாருக்கு....தொடரலாமே!
ஆகட்டும் ஆகட்டும்
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் தங்களின் இந்த செய்தி முன்னணி இடுகையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....
தமிழ்செய்திகளை வாசிக்க
தமிழ்செய்திகளை இணைக்க
ஆங்கில செய்திகளை வாசிக்க
வலைப்பூ தரவரிசை
சினிமா புக்மார்க்குகள்
சினிமா புகைப்படங்கள்
//எண்ணிக்கையில் இன்னொன்றைக் கூட்டாதீர் //
வைரமுத்து ரேஞ்சா இருக்கே தல.கலக்கல்.
நன்றி நர்சிம்... உங்க பரந்த மனசு யாருக்கு வரும்? ஆமா... இந்த விஷயம் வைரமுத்துவுக்குத் தெரியுமா?
Post a Comment