Sunday, July 25, 2010

பா.கே.ப.இ.
போனவார சென்னைப் பயணத்தின்போது.........

பார்த்தது : போக்குவரத்து நெசவாளர்கள் (traffic weavers)னு கேள்விப்பட்டிருக்கேன். சென்னை இரண்டு சக்கர வாகன ஓட்டிகளோட சாகசங்களை நேர்ல பாத்தபோதுதான் புரிஞ்சது. ஊடுபாவு மாதிரி இங்க இருந்து அங்க... அங்க இருந்து இங்கன்னு... கிடைக்கிற சின்னச் சின்ன இடைவெளிகள்ல புகுந்து புகுந்து ஓட்டறதைப் பாக்கவே பயமா இருக்கு. அதுவும் முன்னால ஒரு பையன், பின்னால மனைவி (கைல குழந்தை) நடுவுல ஒரு பொண்ணுன்னு போறதைப் பாக்கும்போது.... நினைக்க சங்கடமா இருந்தாலும் 'நம்ம வண்டில வந்து இடிச்சு விழாம இருக்கணுமே; அனாவசிய சிக்கல்ல சிக்காம இருக்கணுமே'ங்கற சுயநல எண்ணம் வராம இல்லை. அலைபேசக் கூடாது, தலைக்கவசம் போடணும்னு எல்லாம் கரடியாக் கத்தறாங்க. (யாரும் கேக்கறதில்லைங்கறது வேற விஷயம்) இந்தமாதிரி ஏகப்பட்ட பேர் உக்காந்து போகக்கூடாதுன்னு ஒரு சட்டம் கிடையாதா?

கேட்டது : படம், எழுதியது, பாடியது.... எதுவும் தெரியல... ஆனா பாடல் வரிகள் நல்லா இருந்தது...

ஒரு கல்... ஒரு கண்ணாடி..
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்...

ஒரு சொல்... சில மௌனங்கள்...
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்....

நல்லா இருக்குல்ல?

படித்தது : மியான்மரின் இன்றைய நிலை. ராணுவ அதிகாரிகள், உள்ளூர் தாதாக்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் - இந்த முக்கோண அமைப்பு செய்யும் அட்டுழியமும், செய்யும் ஊழலும், அள்ளும் பணமும்.... அடேங்கப்பா. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மேலும் மேலும் அளவிட முடியாத செல்வத்தை திரட்டுவதும் நாட்டிலுள்ள மீதி 99% கடும் ஏழ்மையில் உழல்வதும்.... படிப்பவர் கண்ணில் ஒரு சொட்டு கன்ணீர் வரவில்லையென்றால்... ஒருவேளை இடிஅமீனுக்கு சொந்தக்காரராய் இருக்கலாம்.

இடித்தது : குமுதத்தில் ஞானி. இந்திய ரூபாய்க்கு கிடைத்துள்ள சின்னம் பற்றி. இந்தியைத் திணிக்கிறார்களாம். எப்பேர்ப்பட்ட ஆளாய் இருந்தாலும் இந்த தமிழுக்கு குரல் கொடுக்கிறேன்னு எதற்காவது எப்போதாவது ஜல்லியடிக்கிறார்கள். ஆங்கில சின்ன எழுத்து "r" பயன்படுத்தியிருக்கலாமே என்று ஆலோசனை வேறு. புதிய சின்னத்துக்கு இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான யோசனைகள் வரப்பெற்று, பல நிலைகளில் பரிசீலனைக்குப் பிறகு தேர்ந்த்தெடுக்கப்பட்டுள்ளது. இவரும் அனுப்பியிருக்கலாமே.

14 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

Anonymous said...

Makesh,

Please remove the last line.

Logan said...

இந்த பாடல் இடம் பெற்ற படம் ஜீவா நடித்த SMS...

Mahesh said...

நன்றி அண்ணாச்சி... சொன்னபடி செய்தாச்சு...

நன்றி லோகன்....

அரைகிறுக்கன் said...

ஞானியின் எழுத்தைப் படிக்கவில்லை. அதை உருவாக்கியது தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும் அதனை இந்தி மொழித் திணிப்பாகவே நானும் பார்க்கிறேன்.

பழமைபேசி said...

அட... சென்னைக்கு வந்துட்டுப் போயாச்சா?? அவ்வ்வ்......

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே வணக்கமுண்ணே, நலமான்ணே??? எம்மா நாளாச்சு??

அறிவிலி said...

அந்த சின்னத்தை பார்க்கும்போது ஆங்கில Rம் தெரிகிறது. ஹிந்தி "ர" வும் "R"ம் சேர்ந்த அருமையான டிசைன் அது.

அதிருப்தியாளர்கள் எல்லாம் ரூபாய் வாங்காமல் வேலை செய்து பகிஷ்கரிப்பு போராட்டம் நடத்தலாம்.

அறிவிலி said...

பா.கே.ப.இ ஃபார்மட் நல்லா இருக்கே.:-)))

Mahesh said...

நன்றி அரைகிறுக்கன்... என்னது திணிக்கிறாங்களா? யாரது?

நன்றி மணியாரே... ஆமுங்.... நீங்குளுமு நம்மூர்லயார்க்கு???

நன்றி அப்துல்லாண்ணே... ஆமாங்.... கொஞ்சம் நாளாயிப் போச்சுதுங்...

நன்றி அறிவிலி... நல்லாருக்கா? இருக்கட்டும் இருக்கட்டும்....

அது சரி said...

//

படித்தது : மியான்மரின் இன்றைய நிலை. ராணுவ அதிகாரிகள், உள்ளூர் தாதாக்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் - இந்த முக்கோண அமைப்பு செய்யும் அட்டுழியமும், செய்யும் ஊழலும், அள்ளும் பணமும்.... அடேங்கப்பா. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மேலும் மேலும் அளவிட முடியாத செல்வத்தை திரட்டுவதும் நாட்டிலுள்ள மீதி 99% கடும் ஏழ்மையில் உழல்வதும்.... படிப்பவர் கண்ணில் ஒரு சொட்டு கன்ணீர் வரவில்லையென்றால்... ஒருவேளை இடிஅமீனுக்கு சொந்தக்காரராய் இருக்கலாம்.
//

அதுக்கு பேரு தான் மறைமுக கம்யூனிஸம். நேரடி கம்யூனிசம்னா 1% பேரு இல்ல, மொத்தமா 10 பேரு கன்ட்ரோல் பண்ணுவாங்க...அதான் டிஃபரன்ஸ்...

நசரேயன் said...

//ஒரு சொல்... சில மௌனங்கள்...
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்....//

கல்லை கொண்டு எறிய ஆள் இல்லை வேற என்ன சொல்ல

Mahesh said...

நன்றி அதுசரி.... கரெக்டுதான்...

வாங்க நசரேயன் அண்ணே.... :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

சென்னைக்கு வந்துட்டு போற்றதை நைஸாக செய்வதற்காகவே தனியா ஒரு நாள் உம்மைக் கும்மவேண்டுமய்யா..

அப்புறம் என்ன காதல் பாடலெல்லாம்? என்ன குஜால் மூடா? பிச்சு பிச்சு.

chitravini said...

the design of the indian rupee has been appreciated at all levels. It is a very stylish and confident design. I think while it protrays the confidence of today's India...it also displays the attitude of indian youth. Unless the feeling of 'we are indians first' doesnt seep in, these emotional outbursts cannot be wished away. But thats the bane of our country and we have been living with it for years..and we will carry on like this. "When are we going to learn?"

Sorry i am unable to post the comment in tamil...due to my limited ability to do so. Apologies to all.