Saturday, May 22, 2010

க்ரீஸ்..... கிறீச்.... கிறீச்.....


அடுத்த பொருளாதார நெருக்கடி வந்தாச்சு. நாம எல்லாம் ஆஹா ஓஹோ அட்டகாசம்னு நினைச்சுக்கிட்டு இருக்கற ஐரொப்பிய யூனியன்ல இருக்கற க்ரீஸ் (Greece) நாட்டோட பொருளாதார இயந்திரம் இப்ப கிரீஸ் இல்லாம கிறீச்... கிறீச்சுன்னு கதறுது. நாரசமா இருக்கு சத்தம். என்னதான் ஆச்சு? சிம்பிளா சொன்னா வரவு எட்டணா செலவு பத்தணா. அதோட விளைவு. இது எல்லா நாட்டுலயும் நடக்கறதுதானே? நம்ம இந்திய பட்ஜெட்லயெல்லாம் சாதாரண துண்டா விழுகுது? ஈரோடு ஸ்பெஷல் ஜமுக்காளமே இல்ல விழுகுது. அங்க மட்டும் என்ன ஆச்சு? (போச்சுடா... எங்கயாவது பொருளாதார சரிவுன்னா இவன் ஆரம்பிச்சுடுவானேன்னு நீங்க முனகறது கேக்குது. அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை... எழுதி உங்களை குழப்பியே ஆகணும்)

மொத காரணம் போன வருஷம் க்ரீஸ் நாட்டோட கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product - GDP) யில் 13%க்கு மேல. ரொம்ப ஒண்ணும் அதிகமில்ல ஜென்டில்மென்... ஜஸ்ட் 400 பில்லியன் டாலர்கள் மட்டுந்தான். சரி அதனால? அதனால என்ன.... அதிக வட்டி, அதிக தவணை, இன்னும் அதிக கடன், அதிக அவநம்பிக்கை. க்ரெடிட் ரேட்டிங் குறைவு. அனுமானிச்சதை விட பட்ஜெட் பற்றாக்குறை ரெண்டு பங்கு. அவ்வளவுதான். யாரும் முதலீடு செய்ய தயாரில்லை. ஐரோப்பிய யூனியனுடைய தலையீடு, க்ரிஸ் எடுத்த செலவு கட்டுப்பாடு மற்றும் சிக்கன நடவடிக்கைகள் எல்லாம் முதலீட்டளர்கள் கிட்ட நம்பிக்கையை உண்டாக்கலை. கொஞ்சம் ஊதாரித்தனமான செலவுக் கொள்கைகள். உதாரணத்துக்கு, அரசு ஊழியர்கள் 40 வயசுலயே ஓய்வு பெறலாம். அவ்ஙளுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்க மனைவி அல்லது மணமாகாத பிள்ளைகள்/பெண்கள் இவங்க அந்த ஓய்வூதியத்தை தொடர்ந்து வாங்கிக்கலாம். இன்னும் மத்த ஐரோப்பிய நாடுகள்ல இல்லாத அதிகப்படியான சலுகைகள். எப்பிடி சமாளிக்க முடியும்?

இப்ப சர்வதேச நிதியும், யூனியனும் சேர்ந்து பணத்தைக் கொட்டி மீட்கறோம்னு சொல்றாங்க. யூனியன்ல 15க்கு மேல நாடுகள் இருக்கு. "நான் இங்க ராப்பகலா உழைக்கிறேன். எவனோ அளவுக்கு அதிகமா செலவு பண்ணி போண்டியானதுக்கு என் நாடு ஏன் பணம் குடுத்து அந்த அழுகிப் போன கடன்களை வாங்கி வெச்சுக்கணும்? தலையெழுத்தா?"னு கேக்கறாங்க. நியாயந்தானே.

ஐரொப்பிய யூனியன்ல சேரறதுக்கு உண்டான தகுதிகளை காமிச்சு யூனியன் சேர்ந்த எல்லா நாடுகளும், பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில பல கட்டுப்பாடுகளையும் விதிகளையும் அனுசரிக்கணும். ஒவ்வொரு பட்ஜெட்லயும் இவ்வளவு உற்பத்தி, இவ்வளவு செலவு, இவ்வளவு முன்னேற்ற இலக்குன்னு காமிக்கணும். இந்த இலக்கு யூனியனோட மொத்த பட்ஜெட்டோட ஒத்துப் போகணும். இப்பிடியெல்லாம் இருந்தும் ஏன் இந்த மாதிரி சரிவுகள்?

ஐரொப்பிய யூனியனில் 27 நாடுகள் இப்ப இருந்தாலும் 16 நாடுகள்தான் "யூரோ"வுக்கு மாறியவை. இந்த 16 சேர்ந்தது Euro Zone. பொதுவான நிர்வாகம் ஒரு மையத்துல இருந்தாலும் , "யூரோ"வைப் பொறுத்தவரை, அது ஒரு கரன்ஸி அடிப்படையிலான யூனியன் (monetary union). அரசியல் அடிப்படையிலோ அல்லது முழுமையான பொருளாதார யூனியனோ அல்ல. பொருளாதார அடிப்படையில் சில கட்டுப்பெட்டியான நாடுகளும் உண்டு சில ஊதாரி நாடுகளும் உண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் முதிர்வடையாத கரன்ஸி யூரோ. உள்நாட்டு உற்பத்தி, செலவு வகைகள், சேமிப்பு வழிகள், பல்முனை வளர்ச்சி என்று எல்லா வகையிலும் வேறுபட்ட நாடுகள்.

இப்படியான ஒரு கூட்டமைப்பில், கரன்ஸி மட்டும் ஒன்றே என்ற நிலையில் போட்டித்தன்மையை (competitive edge) தக்கவைத்துக் கொள்வது கொஞ்சம் கடினமே. முன்பு இருந்த நிலையை விட ஏற்றுமதிகள் குறையலாம். உதாரணத்திற்கு, இத்தாலி தானியங்கி வாகன வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு. இருந்தாலும் யூரோ அடிப்படையில், ஜெர்மனி உற்பத்தி ஆகும் வாகனத்துடன் ஒப்பிடும்போது விலையில் போட்டித்தன்மை குறையும்போது, அந்த விலை வேறுபாடு கூட வாகனத்தை விற்பனையிடத்திற்கு கொண்டு சேர்க்கும் போக்குவரத்துக் கட்டணத்தில் அடிபட்டுப் போகும் எனும்போது ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. கரன்ஸி ஒன்றாகும்போதிலிருந்தே, வருமான குறைபாடுகளை எதிர்பார்த்து செலவினங்களையும் மாற்றியமைப்பது கட்டாயம் என்ற நிலையையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அன்னியச் செலாவணி ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கும் வேலை குறைவு, சுலபமான வியாபாரம் போன்றவைகளைக் கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு என்ன மாதிரியான விளைவுகள் இருக்கலாம், எப்படி சமாளிப்பது போன்றவற்றை பின்னுக்குத் தள்ளி வைத்தனர். போகப் போக சரியாகும் என்ற அனுமானங்களும் இருந்தன. இப்போது சர்வதேச நிதியமும், யூனியனும் சேர்ந்து க்ரீஸின் கடன்களை வாங்கி 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பணத்தைக் கொட்டினாலும் மட்டும் உடனே எல்லாம் சரியாகி விடப் போவதில்லை. க்ரீஸ் தனது செலவினங்களை இறுக்கிப் பிடிக்க வேண்டும். மக்கள் அதிக கட்டுப்பாடுகள், வரிவிதிப்புகள், வங்கி கெடுபிடிகள் எல்லாம் இருக்கும். மக்களோட வாழ்க்கை முறையே மாறலாம். ரொம்ப சிரமமாத்தான் இருக்கும்.

க்ரீஸ்க்கு பின்னால் போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின் என்று சரிவுகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஸ்பெயினும் இத்தாலியும் கூட சமாளித்து விடும். ஆனால் போர்ச்சுகல் சவாலாக இருக்கும்.

இது இப்பிடியேதான் இருக்குமா? நிலையான வழி எதுவும் இல்லையா? க்ரீஸ்க்கு தனியான கரன்ஸி இருந்தா அதை மதிப்பு குறைச்சு போட்டித்தன்மையை கொண்டுவர முடியும். ஆனா யூரோவுல இருந்து வெளியில வர அரசியல் உறுதி வேணும். அது இப்போதைக்கு இன்னும் கடினமா இருக்கலாம் ஆனா நீண்டகால தீர்வு அதுவாத்தான் இருக்க முடியும்.

மக்கள் ஒப்புதலோடதான் யூரோவுக்கு வந்தோம்னு சொல்லலாம். ஆனா பின்னணி அரசியல் விளையாட்டுகள் ரொம்ப. கரன்ஸியை வெச்சுதான் இன்னிக்கு சர்வதேச அளவுல போட்டித்தன்மையை தக்க வெச்சுக்க முடியும். இல்லைன்னா அமெரிக்கா சைனா கிட்டப் போய் யுவான்-டாலர் மதிப்பை சரி பண்ணச் சொல்லி ப்ரஷர் குடுப்பாங்களா?

1999ல அர்ஜென்டினால இதே மாதிரி நிலைமை வந்து 3 வருஷம் ஆச்சு நிமிர்ந்து உட்கார. அப்ப பெசொவைத் தவிர இன்னொரு கரன்ஸியை உருவாக்கி உள்நாட்டு புழக்கத்துக்காக விட்டு, பெசோவை டாலருக்கு எதிரா குறைச்சு ஏற்றுமதியை அதிகரிச்சு, இறக்குமதிகளை தடை பண்ணி, வங்கிகள்ல இருந்த டாலரை எல்லாம் பெசோவா மாத்தின்னு தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு ஒருவழியா மேல வந்தது. பார்க்கலாம் க்ரீஸ் என்ன ஆகுதுன்னு. இப்போதைக்கு நம்ம நாட்டு பங்கு மார்க்கெட் ரொம்ப விழாம இருக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.14 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

கிரி said...

முக்கியமான விஷயத்தை பற்றி எழுதி இருக்கீங்க! இது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.. அப்புறம் வரேன் பொறுமையா. நன்றி இது பற்றி எழுதியமைக்கு :-)

எம்.எம்.அப்துல்லா said...

அமெரிக்கா தனது டாலர் வல்லாதிக்கத்தைத் துவங்க முதலில் ஒத்துக்கொண்ட தேசம் கிரீஸ். 80 ஆண்டுகள் கடந்த நிலையில் டாலர் தன் வர்த்தக மதிப்பை இழக்கத் துவக்கப்புள்ளி வைத்து இருப்பது கிரீஸ்.

ஹிஸ்ட்ரி ஆல்வேஸ் ரிப்பிட்டட்

:)

எம்.எம்.அப்துல்லா said...

@ கிரி அண்ணே,


உங்க பிளாக்கோட பின்னூட்டப் பெட்டியை முன்னாடி இருந்த மாதிரியே (அல்லது இந்த பின்னூட்டப் பெட்டி மாதிரி) வைங்கண்ணே. அதில் என்னால் பின்னூட்டமிட முடியவில்லை. கொஞ்சம் எளிமையாக்குங்க :(

இராகவன் நைஜிரியா said...

ஆமாங்க ... ஈரோ எங்கோ அதல பாதாளத்தில் பாயுதுங்க...

இது இங்கேயே நிக்குமா... இல்ல இன்னும் கீழ போகுமான்னு புரிய மாட்டேங்குது..

பெயில் அவுட் சொல்லுவாது எல்லாம் சும்மா கண் துடைப்பு வேலைதான். கடினமான பொருளாதாரக் கொள்கைகள் வந்தாலே ஒழிய இது சரியாக சந்தர்ப்பங்கள் மிக குறைவு.

கிரி said...

//நான் இங்க ராப்பகலா உழைக்கிறேன். எவனோ அளவுக்கு அதிகமா செலவு பண்ணி போண்டியானதுக்கு என் நாடு ஏன் பணம் குடுத்து அந்த அழுகிப் போன கடன்களை வாங்கி வெச்சுக்கணும்? தலையெழுத்தா?"னு கேக்கறாங்க. நியாயந்தானே.//

இது தான் இப்ப அங்கே பெரிய பிரச்சனை ஆகி இருக்கு!

மகேஷ் முழுதும் புரியவில்லை என்றாலும் ஓரளவு புரிந்து கொண்டேன். வங்கியில் வேலை செய்வதை அடிக்கடி நிரூபிக்கறீங்க! :-)

=======================================

அப்துல்லா அந்த வடிவமைப்பை மாற்ற முடியாது. நான் வோர்ட் பிரஸ் க்கு மாறியது உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதில் என்ன சிரமம் உங்களுக்கு.. இப்ப நீங்க தமிழ்ல லையே அடிக்க வசதி செய்து இருக்கிறேன். வேற எங்க இருந்தும் காபி பேஸ்ட் செய்ய தேவையில்லை. என்ன ஒரு பிரச்சனை உங்க பேரை ஒவ்வொருமுறையும் அடிக்கணும் உடன் மின்னஞ்சலுடன் அது மட்டுமே கொஞ்சம் சிரமம்.

அப்புறம் இந்த பின்னூட்டம் எல்லாம் வேண்டும் என்று நினைப்பதை கடந்து விட்டேன்.. பின்னூட்டம் போடா முடியலைனா பரவாயில்லை.. உங்க அன்பு அப்படியே இருந்தா போதும் ..ஓகேவா :-) விரைவில் ஒரு அரசியல் பதிவு ;-) எழுதுவேன்..அப்ப நீங்க எப்படியாவது பின்னூட்டம் போட்டுத்தான் ஆகணும் என்று நினைக்கிறேன் LoL

Mahesh said...

வாங்க கிரி... ஹி ஹி... என்னமோ சொல்றீங்கன்னு தெரியுது ஆனா என்னன்னு புரியலைங்கறீங்க... சரிதான் :)))

நன்றி அப்துல்லா அண்ணே... கிரி நோட் தி பாயிண்ட்... எதாச்சும் பண்ணுங்க !!

Mahesh said...

நன்றி ராகவன் சார்....

அப்துல்லா அண்ணே.. .கிரிக்கு அன்பு மட்டும் போதுமாம்... (அப்பாடா பின்னூட்டம் போடற வேலை மிச்சமாச்சு :)))))))))))

மங்களூர் சிவா said...

எப்பிடியோ சென்செக்ஸ் ஒரு 5000 புள்ளி விழனும்னு வேண்டிக்கிறேன் மகேஷ் :))

8000 புள்ளியிலிருந்து ஒரே நாளில் 10000 புள்ளிக்கு தாவி 16, 17 என போய்க்கொண்டிருக்கிறது எப்பதான் இன்வஸ்ட் பண்றதாம்??

வரவு எட்டணா செலவு பத்தணா கடைசியில் துந்தநா தெரிஞ்ச விசயம்தானே :)

Mahesh said...

வாங்க மங்களூர் சிவா.... ரொம்ப நாளாச்சு கடைப்பக்கம் வந்து.... 5000 பாயிண்டா? !!!! ரொம்பத்தான் ஆசை உங்களுக்கு :(

அறிவிலி said...

40 வயசுல ரிடையர்மெண்டா? இப்ப எனக்கு அங்க வேலை கிடைக்க ஏதாவது வழியிருந்தா சொல்லுங்க. போனவுடன ரிட்டயர் ஆயிரலாம்.. ஜாலி.

Mahesh said...

@அறிவிலி : நீங்க ரிடையர் ஆகிக்கோங்க.... ஐடியா குடுத்த என்னை நாமினியாப் போட்டுடுங்க... பென்ஷன் பணத்தை நான் வாங்கி "அப்பிடியே" உங்க கிட்ட கொண்டுவந்து குடுக்கறேன்.... வந்து குடுக்க கொஞ்சம் தாமதம் (ஒரு 10 15 வருஷம்) ஆனா கோச்சுக்காதீங்க. :)))

நசரேயன் said...

என்னோட அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயம்

பழமைபேசி said...

அண்ணே, நலமா??

ஜோசப் பால்ராஜ் said...

இப்ப இந்த கிரீஸ்க்கு அண்ணண் ஜெர்மனி முட்டுக்குடுத்துட்டு இருக்கே? அடுத்து போர்ச்சுக்கல் கட்டாயம். இப்டியே ஜெர்மனி எல்லாருக்கும் முட்டுகுடுக்க போச்சுன்னா ஜெர்மனி கதை என்னாகிறது??