Monday, April 26, 2010

நான் என்றால் அது கவிதை !!


என் கவிதைகளைப் வாசித்ததும்
உன் கண்களில் வழியும் ரௌத்திரம்தான்
என் மகிழ்ச்சியின் இடுபொருளாகிறது,
காரணம் நானெனில் நொடிப்பொழுதில் மிதக்கிறேன்.

உனது கோபமோ அழகைக்கூட்டிச் செய்யப்பட்டது,
ரசித்துக்கொண்டேயிருக்கலாம்.
எனது மகிழ்ச்சியோ நறநறக்கும் உன் பற்களின் ஓசையில்
பிறந்து தொடரும் உனது சினத்தில் பல்கிப் பெருகுகிறது.
அந்தப்பல் வரிசையை பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.

எந்தக் கவிதையில் எந்த கருப்பொருளில் ஒளிந்திருக்கிறது
என் கவிதையின் ஜீவன் எனும் தேவரகசியங்களையெல்லாம்
நீதான் கற்றுத்தருகிறாய்.
உன் கோபங்கள் பசியாற்றுவதாய் ஒருபோதும் இருப்பதில்லை,
அதை மேலும் கிளறிக்கொண்டேயிருப்பதாயிருக்கின்றன.

நீ என் கவிதைகளின் மீது கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு ,
ஐ பி எல் போட்டி முடிவுகள் மீது ரசிகர்களுக்கிருக்கும்
எதிர்பார்ப்பை விடவும் அதிகமானது
என்பதை பெருமிதத்தோடு ஒப்புக்கொள்கிறேன்.

உன் சினம் அது என்னால், கவிதை எனில் அது நான் என்றிருக்க
நான் எண்ணத்தான் செய்கிறேன்.
ஆனால் நீ அதை சொல்லியே விடுகின்றாய் உன் பின்னூட்டத்தில்...

கவிதையின் முதல் வரிக்கு நீ சொல்வது,

'அய்யோ... அய்யோ... அய்யோ....'

உனக்கான எனது இரண்டாவது கவிதைக்கு நீ சொல்வது,

'முடியல.... முடியவே இல்ல....'


*****************************

கவிஞர் ஆதியின் விருப்பத்திற்கிணங்க நிகழ்ந்த கவிதை இது. இது அவருடைய இந்தக் கவிதைக்கு எதிர் கவிதையாக இருக்குமோ என்று நினைப்பீர்களேயானால் அதற்கு நான் பொறுப்பல்ல.

@ ஆதி : ச்சாட்ல வந்து கவிதையா கேட்கிறீர் கவிதை? இந்த கவிதை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

13 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

இராமசாமி கண்ணண் said...

அய்யா கவிதை ரொம்ப நல்லாருக்குங்க.

இராமசாமி கண்ணண் said...

போட்டு தாக்குங்க.

ஆதிமூலகிருஷ்ணன் said...

யோவ்.. உங்க கவிதையால நாங்க கொள்கிற கோபம், அவஸ்தை உங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியா ஓய்.! என்ன அநியாயம்? உங்கள பதிவுதானே எழுதச்சொன்னேன், கவிதையா கேட்டேன்.? ஹும்.!

Mahesh said...

நன்றி ராமசாமி கண்ணன்.... பின்ன கேப்பு கிடைச்சா கிடா வெட்டிடணுமில்ல.. அதுவும் கிடாவே வந்து கழுத்தை நீட்டும்போது??

Mahesh said...

ஆமாங்க ஆதி... அது என்னமோ தெரியல.... நீங்க பதிவுன்னு சொன்னது எனக்கு கவிதைன்னு காதுல விழுந்தது....

நம்ம கவிதைக்கு உங்க உதறல்... .ஆஹா அது ஒரு தனி சுகம்...:))))

அறிவிலி said...

ம்.

Mahesh said...

ஒருத்தான் இங்க (அடுத்தவன்) மூளையை கசக்கி ஒரு கவிதை வடிக்கிறான்...... ஷோக்கா வந்து ஒரு "ம்" போடறீங்களா?

உங்க அடுத்த 2 இடுகைகளுக்கு நாலே நாலு பின்னூட்டந்தான் வரும்... பிடி சாபம் !!!

அறிவிலி said...

என்னது 4 பின்னூட்டமா? இது சாபம் இல்லை ஸ்வாமி, வரம். உங்கள் வரம் பலிக்கட்டும்.

மணிஜீ...... said...

mmmmmmmmm..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அப்பாவி தங்கமணி said...

ஆஹா... யாரு மேலைங்க உங்களுக்கு எத்தனை கோபம்....?(கண்ண கட்டுதுரா சாமி)

நாகா said...

அற்புதம்.. ஒவ்வொரு வரிகளிலும் தமிழ் விளையாடுகிறது. உங்களின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாய் இது விளங்கும் என்பதில் ஐயமில்லை.
மிகவும் அருமை...

இதுக்கு மேல முடியலீங்க மகேஷ் :) உங்கள நேர்ல வந்து பாராட்டறேன்.

பழமைபேசி said...

நிறைய எழுதுங்கோ...எழுதுங்கோ!!

Mahesh said...

ஆஹா... ராஜேஷ்... சாபத்தையே வரமா ஆக்கிட்டீங்களே....

வாங்க மணிஜீ... ராஜேஷுக்கு ஒரு "ம்"-ஆன்னு கேட்டதுக்கு இப்பிடியா??

அப்பாவி தங்கமணி... இப்பிடி அப்பாவியா இருக்கீங்களே !! அவ்வ்..


நன்றி நாகா... உங்களுக்குதாங்க கவிதையோட தாக்கம் புரிஞ்சுருக்கு :)))))


நன்றி மணியாரே... மத்தவங்க எழுதினா அதைப் பாத்து காப்பியடிச்சே நிறைய எழுதிடுவோம் :)