Wednesday, May 13, 2009
"பாயசம் வித் பரிசல்"
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 6:49 AM 22 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..
நெனப்புகள் : க்ருஷ்ணகுமார், பதிவர் வட்டம், பரிசல், பிறந்தநாள், வலையுலகம்
Wednesday, March 11, 2009
பரிசல் போல பதிவிடுவதில் உள்ள 11 சங்கடங்கள் !!
2) பதிவு போட்ட அரை மணி நேரத்தில் "உனக்கு இது தேவையா?" என்று நம்மையே கேட்டுக் கொள்ள நேர்கிறது.
3) ‘இனிமேல் எதிர்பதிவு போட மாட்டேன்’ – இது பொதுவாக பதிவர்கள் சொல்லும் வாசகம். ஆனால் படக் படக்கென்று அதே நாளில் பத்து எதிர்பதிவுகள் வந்து விடுகின்றன.
4) எதிர் பதிவிடுபவர் பெயர் மிஸ்டர்.எக்ஸ் என்று வைத்துக் கொண்டால், பதிவுலகத்தில் வந்த ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர் மிஸ்டர்.எக்ஸ் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘என்னோட அந்த நல்ல பதிவுக்கு எதிர்பதிவு போட்டவர்’ என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘எதிர் பதிவு போட்டே கும்முபவர்’ என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.
5) நாம் போட்ட பதிவை ‘நம்மளே அந்தப் பதிவுக்கு எதிர் பதிவாத்தானே இதப் போட்டோம் ; அதுக்கு இவர் மறு எதிர் பதிவு போடறாரே" என்று மறு / மறு மறு எதிர் பதிவு போட்ட பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.
6) ஒரிஜினல் பதிவிலிருந்து வாக்கியங்களை அப்படியே உபயோகிப்பது, அதே நடையை பின்பற்றுவது போன்றவற்றை செய்யும் சுதந்திரங்களை வாரி வழங்கி விடுகிறோம். அல்லது அப்படி அவர் அப்படி உபயோகிக்காமல் சொந்த நடையில் எழுதினால் ‘இதப் போய் எதிர்ப்பதிவுன்னு நினைச்சோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.
7) உண்மையாகவே அந்த எதிர்பதிவைப் போட்டவர் தெரியாமலே போட்டு விட்டதாக சொன்னால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேர்கிறது. எதிர்பதிவு என்று தெரிந்தே போட்டும் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)
8) எதிர்பதிவு வந்த கடுப்பில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் அவரும் எதிர்பதிவு போட்டுக்கொள்ள அனுமதி கேட்க, நாம் சூடு கண்ட பூனையாய் அவரைக் கடுப்படிக்க, அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.
9) நண்பனுக்குப் பணம் கொடுத்தால் பணம், நட்பு இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, எதிர்பதிவு போட அனுமதி கொடுத்தால் நமது ஒரிஜினல் பதிவின் வீரியம், தாக்கம், ஒரிஜினாலிட்டி மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது.
10) எதிர்பதிவை முதலில் படிப்பவர்களுக்கு ஒரிஜினல் பதிவை உடனே படிக்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே, எதற்காக இந்த எதிர்பதிவு என்று நிஜமாகவே யோசிப்பவர்கள் ஒரிஜினல் பதிவின் மதிப்புணர்ந்து நிச்சயமாகப் படிப்பார்கள்... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)
11) நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் பதிவிடுகிறோம். அதற்கு எதிர்பதிவு வருவதால் அந்த ஒரிஜினல் பதிவை எழுதிய பதிவருக்கு கிடைக்கும் பாராட்டுக்கு நாம் சிறிது தடையாக இருக்கிறோம்.
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 3:54 PM 28 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..
நெனப்புகள் : எதிர்பதிவு, பரிசல், மொக்கை
Sunday, October 5, 2008
திரு(வலை)ப்பூர்
(துக்ளக் மகேஷ், பரிசல் க்ருஷ்ணா, ஈரவெங்காயம் சாமிநாதன், வெயிலான் ரமேஷ்) ஹோட்டலுக்கு வந்து 20 நிமிஷம் ஆச்சு. வெயிலான் வேற ஃபோன்லயே இருக்காரு. நாம என்ன பண்றதுன்னு தெரியலயே? இங்க இருக்கப் போற 2 மணி நேரமோ, 3 ம்ணி நேரமோ இவுங்க ஃபோன்லயே பேசிக்கிட்டுருந்தாங்கன்னா? சாப்புடும்போதாவது பேச முடியுமா?
(ஈரவெங்காயம் சாமிநாதன், பரிசல் க்ருஷ்ணா, துக்ளக் மகேஷ்)
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 9:47 PM 18 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..
நெனப்புகள் : ஈரவெங்காயம், திருப்பூர், பதிவர் சந்திப்பு, பரிசல், வெயிலான்
Friday, August 15, 2008
எல்லா பதிவாளுக்கும் சொல்றது என்னன்னா....
அதாகப்பட்டது.... ஆதௌகீர்த்தனாரம்பத்திலே லதானந்தாஸ்ரமத்தில இருந்து பரிசல் அம்பிக்கு ஒரு பகிரங்க கடுதாசி வந்துடுத்து. அத வாசிச்ச பரிசல் அம்பி கோச்சுண்டு, நான் இனிமே கீ போர்டுல வெரல வெச்சா அத இஞ்சி நசுக்கறாப்ல நசுக்கிடுங்கோன்னு சொல்லிப்டு போய்டுத்து. ஒடனே மத்த பதிவாள்ளாம் அம்பிய சமாதானம் பண்ணி, ஏண்டாப்பா, நீ பாட்டுக்கு இப்டி முறுக்கிண்டு போய்ட்டியானா நாங்கள்ளாம் அவியலுக்கும் தொகயலுக்கும் எங்கடா போறதுன்னு வருத்தப் பட்டுண்டா. பாத்தான் அம்பி.... ஆஹா... நாம இப்டி திடீர்னு கரண்டியயும் கல்லோரலையும் தூக்கி அட்டாணில போட்டுட்டா, மத்தவாளுக்கு எவ்ளோ ஸ்ரமம்னு புரிஞ்சுண்டு, திரும்ப வந்தான் பாருங்கோ வேகமா அஞ்சனாபுத்ரன் அனுமனாட்டம்..... வந்து நன்னா வக்கணையா ஒரு அவியலும் பண்ணிப் போட்டான் பாருங்கோ... அவா அவாளுக்கு என்ன சொல்றதுன்னே புரியல.... "பரிசலும் பதிஞ்சான்; பதிவாளும் பதிஞ்சா" அப்டின்னு குசும்ப ராமாயணத்துல சொல்லியிருக்காப்ல பதிஞ்சு தள்ளிட்டா. ஒரு வழியா "பரிசல் கடித காண்டம்" முடிஞ்சுது. பதிவாளும் சந்தோஷமா இருந்தா.
அதனால, இனிமேக் கொண்டு, இந்த பகிரங்க கடுதாசி, அந்தரங்க கடுதாசி, பயங்கர கடுதாசி, மொட்ட கடுதாசி, க்ராப் வெச்ச கடுதாசி எல்லாம் போட்டு தபால் பொட்டிய ரொப்பாம நன்னா நறுக் நறுக்னு ஆளுக்கு நாலு பதிவு போடுங்கோ பாக்கலாம். ம்ம்....ஆகட்டும்...
வரட்டுமாடா பரிசல் அம்பி... ஆத்துல எல்லாத்தையும் கேட்டதா சொல்லு....
"லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து"
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 11:20 PM 16 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..
நெனப்புகள் : காலக்ஷேபம், துக்ளக், பகிரங்க கடிதம், பரிசல்
Monday, August 11, 2008
"லதானந்த்" கடிதமும், பரிசல்காரனும், பின்னே ஞானும்....
"லதானந்த்" கடிதம்
அய்யா,
எனக்கு இந்த தமிழ் வலைப்பூ என்பதே வெகு சமீபமாக அறிமுகமானது. உங்கள் கதைகள் ஒன்றிரண்டு விகடனில் படித்திருக்கிறேன். உங்களை வலையில் பார்த்ததில் (படித்ததில்) மகிழ்ச்சி. உங்கள் டாப் ஸ்லிப் பதிவர் சந்திப்பு பற்றி நேற்றுதான் படித்தேன். மிக ஆச்சரியமாக இருந்தது. உங்கள் ஓய்வு நேரத்தை உகந்த முறையில் செலவிடுவதை அறியும்போது அந்த ஆச்சரியம் இரு மடங்கு அதிகமானது.
அதே போல, பரிசலையும் கடந்த 2,3 வாரங்களாகத்தான் வலைப் பழக்கம். அவருடைய "தினமும் ஒரு பதிவு போடுவது எப்படி?" பதிவைப் படித்தபோதும், சில நாட்களுக்கு முன் நீங்கள் அவரை "பனியன் தொழில் திருப்தி தருகிறதா?" என்று கேட்டபோதும், அவருடைய இன்ன பிற திறமைகளை அறிய நேர்ந்தபோதும், நீங்கள் இப்போது எழுதியுள்ளது போல எனக்கும் தோன்றியது. ஆனால் மிக அண்மைக் கால பழக்கத்தை வைத்து அதை வெளிப்படையாக என்னால் கூற முடியவில்லை.
ஒரு பின்னூட்டத்தில் உங்களை தந்தை போல் பாவிப்பதாக குறிப்பிட்டிருந்தார். அந்த இடத்தில் இருந்து நீங்கள் உண்மையான அக்கறையுடன் எழுதியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கும் தமிழில் பதிவிட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியவர் பரிசல். ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல், வலைப் பதிவு ஒரு obsession ஆக மாறி பின்னர் addiction ஆகக் கூடிய அபாயம் நிறையவே இருக்கிறது. இப்போது பரிசல் எடுத்துள்ள முடிவு தற்காலிகமானதாக இருக்கலாம். Knee-jerk விளைவாக இருக்கலாம். அல்லது தெளிந்த முடிவாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அது நல்லதே.
நன்றிகள் பல.
- மஹேஷ்
@ பரிசல் : இவனெல்லாம் பேச வந்துட்டான் என்று நினைக்க வேண்டாம். உங்களுக்கு தெரியாதது அல்ல. "அறிந்தோர் அழ அழ சொல்லுவார் ; மற்றோர் சிரிக்க சிரிக்க சொல்லுவார்". தொடர்ந்து எழுதுங்கள். நேரம் கிடக்கும்போது அளவாக நிறைவாக எழுதுங்கள். உங்கள் திறமை பெரியது. உங்கள் நண்பர் வட்டம் மிகப் பெரியது. நன்றிகள் பல.
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 10:31 PM 7 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..
Sunday, August 10, 2008
போயும் போயும் "துக்ளக்".....?
என்னங்க செய்ய? பொழப்பு அப்பிடி ஆகிப் போச்சே !! என்னத்த செஞ்சாலும் மொத வாட்டி செரியா வரதில்லை. அப்பறம் இப்பிடி பண்ணலாமா, அப்பிடி பண்ணலாமான்னு ஓசிச்சி ஓசிச்சி மண்டை காஞ்சு போய் பழய படிக்கே திரும்பி வந்து...அட விடுங்க...அந்த கெரகமெல்லாம் இப்பொ எதுக்கு?
ஏதோ வாய்க்கு வந்தது கோதைக்கு பாட்டு...மனசுல தோணுனது மகா மொக்கைன்னு எதையாவது எழுதி வெப்போம். அப்பறம் இங்க வரவங்க பாடு...வந்ததுமில்லாம இதை படிக்கரவங்க பாடுன்னு தோணுச்சு. செரி நேரமும் நல்ல பழுத்த ராகுகாலமா இருக்கு..."இப்பொ இல்லாட்டி எப்போ.." அப்பிடின்னு பாடிக்கிட்டே ஆரம்பிச்சாச்சு. பாவம் பய புள்ளைங்களுக்கும் கும்மி அடிக்க கெரவ்ண்டு வேணுமல்ல...(ஆமாம் பெரிய கெரவ்ண்டு...அவனவன் கும்மி நகர் ஆரம்பிச்சு ப்ளாட் போட்டு வித்துக்கிட்டு இருக்கான்.....)
ஆனா மக்களே.... இதுல எந்தப்பு எதுவுமே இல்ல....எல்லா புகழும்(!) பரிசல்காரனுக்கே...
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 11:14 PM 7 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..
நெனப்புகள் : துக்ளக், பரிசல், முதல் பதிவு


