அதாகப்பட்டது.... ஆதௌகீர்த்தனாரம்பத்திலே லதானந்தாஸ்ரமத்தில இருந்து பரிசல் அம்பிக்கு ஒரு பகிரங்க கடுதாசி வந்துடுத்து. அத வாசிச்ச பரிசல் அம்பி கோச்சுண்டு, நான் இனிமே கீ போர்டுல வெரல வெச்சா அத இஞ்சி நசுக்கறாப்ல நசுக்கிடுங்கோன்னு சொல்லிப்டு போய்டுத்து. ஒடனே மத்த பதிவாள்ளாம் அம்பிய சமாதானம் பண்ணி, ஏண்டாப்பா, நீ பாட்டுக்கு இப்டி முறுக்கிண்டு போய்ட்டியானா நாங்கள்ளாம் அவியலுக்கும் தொகயலுக்கும் எங்கடா போறதுன்னு வருத்தப் பட்டுண்டா. பாத்தான் அம்பி.... ஆஹா... நாம இப்டி திடீர்னு கரண்டியயும் கல்லோரலையும் தூக்கி அட்டாணில போட்டுட்டா, மத்தவாளுக்கு எவ்ளோ ஸ்ரமம்னு புரிஞ்சுண்டு, திரும்ப வந்தான் பாருங்கோ வேகமா அஞ்சனாபுத்ரன் அனுமனாட்டம்..... வந்து நன்னா வக்கணையா ஒரு அவியலும் பண்ணிப் போட்டான் பாருங்கோ... அவா அவாளுக்கு என்ன சொல்றதுன்னே புரியல.... "பரிசலும் பதிஞ்சான்; பதிவாளும் பதிஞ்சா" அப்டின்னு குசும்ப ராமாயணத்துல சொல்லியிருக்காப்ல பதிஞ்சு தள்ளிட்டா. ஒரு வழியா "பரிசல் கடித காண்டம்" முடிஞ்சுது. பதிவாளும் சந்தோஷமா இருந்தா.
அதனால, இனிமேக் கொண்டு, இந்த பகிரங்க கடுதாசி, அந்தரங்க கடுதாசி, பயங்கர கடுதாசி, மொட்ட கடுதாசி, க்ராப் வெச்ச கடுதாசி எல்லாம் போட்டு தபால் பொட்டிய ரொப்பாம நன்னா நறுக் நறுக்னு ஆளுக்கு நாலு பதிவு போடுங்கோ பாக்கலாம். ம்ம்....ஆகட்டும்...
வரட்டுமாடா பரிசல் அம்பி... ஆத்துல எல்லாத்தையும் கேட்டதா சொல்லு....
"லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து"
இதயத்தை திருடாதே
2 days ago
16 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
//ஆளுக்கு நாலு பதி போடுங்கோ பாக்கலாம். ம்ம்....ஆகட்டும்...//
அது பதி அல்லங்கோ மாமா.. பதிவு-னுன்னா வரணும்? பாத்து எழுதறேளா கொஞ்சம்?
அடேங்கப்பா என்ன வேகம்.... ஃப்ளைட் வரத்துக்குள்ள பதில் வந்துடுத்தே...
நன்னா எழுதறேளே எல்லா பாஷைலயும்? ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோங்கோ.. தமிழ்மணத்துல பதிஞ்சிருக்கேளா?
ஏர்ப்போர்ட்லேர்ந்து எழுதினதா சொன்னேள். அந்தக் கூச்சல் குழப்பத்துலயேயும் என்னைப் பத்தி நெனச்சுண்டிருந்திருக்கேளே.. உங்களை பகவான் நன்னா வெச்சுக் காப்பாத்துவாரு போங்கோ!
சார் இப்பொ மும்பைல இருக்கீங்களோ?
//"லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து"//
சாஸ்திரிகளே..
இதப் படிச்சப்போ
நேக்கு நான் எங்கப்பா கூட ச்சின்ன வயசுல ராமய்யர் கல்யாண மண்டபம், பிரசன்ன விநாயகர் கோவில், ஜி.வி.ஜி-ன்னு கீரன், சரஸ்வதி ராமநாதந்ன்னு கதாகாலட்ஷேபம் போன நெனைவெல்லாம் வந்துடுத்து.. கண்ணுல ஜலம் வருது மாமா!
:-((
// Mahesh said...
சார் இப்பொ மும்பைல இருக்கீங்களோ?//
இல்லேளே? ஏன் கேக்கறேள்?
தமிழ் மணத்துல பதிஞ்சுட்டேன். ஆனா அதுக்கப்பறம் என்ன ஆகும், எப்பிடி வெளி வரும்னல்லாம் தெரில...
அதுவா.... FeedJIT-ல மும்பையிலிருந்து வர்ர மாதிரி தெரிஞ்சுது
தபால் பொட்டிய ரொப்பாம நன்னா நறுக் நறுக்னு ஆளுக்கு நாலு பதிவு போடுங்கோ பாக்கலாம். ம்ம்....ஆகட்டும்...//
அண்ணா! ரொப்பச் சரியாச் சொன்னேள் போங்கோ;)
நன்றி அப்துல்லா அண்ணே !! அடிக்கடி வாங்க .... உற்சாகப் படுத்துங்க !!
அடிக்கடி வாங்க .... உற்சாகப் படுத்துங்க !!
//
அண்ணா சொல்லிட்டேள். பேஷா வந்துடரேன்.
அம்பி,
நல்லா இருக்கே உம்பதிவு.
என்னமோ அவாவா சோகத்த கடுதாசி போட்டு சொல்லிண்டிருந்தா.
ஒரு வாரம் ஆயிடுட்த்தோ இல்லியோ, இப்ப வேற வேல வந்துடுத்தே. வேற பதிவு போடுவா.
பேன வாரம் கடித வாரம் மட்டுமில்லை. மெஸ் வாரமும் கூட, லக்கிலுக் மாமி மெஸ்னு எழுதினார். உடனே கோவி அண்ணா மாமா மெஸ்னு எழுதினார் நான் கூட அம்மா மெஸ், கோனார் மெஸ் எல்லாம் எழுதுனேன், படிக்கலிய நீங்க?
நமஸ்காரம்,
இப்போ தான் உங்காத்துக்கு வர்றேன்.
நன்னாத்தான் எழுதுறேள். ப்ரமாதம்.
நீங்களும் உடுமலையா? வர வர உடுமலைப்பேட்டைக்காரா தொல்லை ஜாஸ்தியாயிடுத்து!!!!!! :)
@ வடகரை வேலன் : நன்றி... கரெக்டா சொன்னேள்
@ ஜோசப் : இதோ இப்ப படிச்சுடறேன்... அடிக்கடி வந்து போங்க.
@ வெயிலான் : ரொம்ப நன்றிண்ணா.... பின்ன உடுமலயா கொக்கா?
//
@ வெயிலான் : ரொம்ப நன்றிண்ணா.... பின்ன உடுமலயா கொக்கா? //
உடுமல - கொக்கு இல்லண்ணா.....
உடுமல - பேட்டை................
Post a Comment