ஜோசஃப் அண்ணன் போட்ட கொக்கி இங்க... அதுக்கு பதில் இங்க....
நாம அடிக்கடி போய் வர்ற இணைய தளங்களோட லிஸ்ட் - அகர வரிசைல....
amazon.com - புத்தகம், புத்தகம் மேலும் புத்தகம்....
about.com - எதப் பத்தி வேணாலும் கேக்கலாம்.... நல்ல ஒரு வழிகாட்டி...
bbc.co.uk - சூடான செய்திக்கு முந்துங்க....
bseindia.com - காளையா? கரடியா? (அது என்ன எளவோ... போன பணம் போனதுதான்... 21000 த்துல தல கால் புரியாம ஆடுனது என்ன... இப்பொ 14000த்துல நொண்டிக்கிட்டுருக்கறது என்ன... எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்.... போனது போனதுதான்... வராது வராது... தனியா பொலம்பற அளவுக்கு போயிட்டேனே... சொக்கா....)
bookreview.com - அமேசான்ல வாங்கறதுக்கு முன்னாடி... புத்தகத்துக்கு கெடச்சது பூங்கொத்தா, அழுகுன முட்டயான்னு பாத்துக்கிடலாம்..
cricbuzz.com - இதுக்கெல்லாம் விளக்கங் குடுத்தா... .. எதிர்க் கட்சிக்காரன் என்னப் பத்தி என்ன நெனப்பான்?
cooltoad.com - "இசை கேட்டால் புவி அசைந்தாடும்" - அதுவும் இலவசமாக் கெடச்சா....
carnatic.com, carnatica.net - கர்னாடக இசைக்கு இசைவான தளங்கள் - சோகம், பானம், தலவலின்னு வீணாப் போறத்துக்கு பதிலா ராகம், தானம், பல்லவி தெரிஞ்சுக்கலாம்
dictionary.reference.com - இட்டது பட்டானால் வாட்டென்ன?
dawn.com - பாகிஸ்தானின் "தினமணி" - ரொம்ப தைரியமான நாளிதழ் (ஒரே வருத்தம் : அதுல 20 வருடத்துக்கும் மேல தொடர்ந்து எழுதிக்கிட்டுருந்த அயாஸ் அமீர் விலகிட்டார். ஜியா உல் ஹக் ல இருந்து, முஷாரஃப் வரைக்கும் கிழி கிழின்னு கிழிச்சவர்)
e-grocy.com - சிங்கப்பூர்ல முஸ்தஃபாவுக்கு சனி, ஞாயிறுல போய் மளிகை சாமான் வாங்கறது மாதிரி தண்டனை வேற கெடயாது... நெட்ல ஆர்டர் பண்ணா...வூட் மேலே சாமான்...
flickr.com - கூகிளோட புகைப்பட தளம்
google.com - சூரியனுக்கே டார்ச்சா?
healthatoz.com - தலவலிலெருந்து திருகுவலி வரைக்கும்.... புட்டு புட்டு வெக்கறாங்க...
irctc.co.in - கிழக்க போற ரயிலு, மேக்க போற ரயிலு அல்லாத்துக்கும் டிய்டு விக்கறாங்க...
investopedia.com -முதலீட்டுச் சந்தை பற்றிய அகராதி
kodakgallery.com - நம்ம ஃபேவரைட் ஃபோட்டோ சைட்டு... எதயாச்சும் கெக்கெ பிக்கென்னு புடிச்சு, இங்க ஏத்தி விட்டுட்டு சாதி சனத்துக்கு சொல்லி அனுப்பிட்டோம்னா அவிங்க அவிங்க பாத்துக்கிடுவாங்க..
linkedin.com - நட்புகளை சேமிச்சு வெச்சுக்கற தளம். பழய பங்காளிகளையும் புடிச்சரலாம்... புதுக் கூட்டாளிங்களயும் சேத்துக்கிடலாம்
moneycontrol.com - சந்தையில போட்ட பணம் வளர் பிறையா தேய் பிறையான்னு தெரிஞ்சுக்கலாம்... (இப்போதைக்கு அட்ரஸ்: அரோகரா இல்லம், நெ. 111, நாமகிரிப்பேட்டை, கோவிந்தாபுரம்)
ndtv.com - ஒரு நல்ல இந்திய செய்தி தளம்
nseindia.com - கொஞ்சம் சின்ன "காளையா? கரடியா?"
orkut.com - சூரியன்.... டார்ச்...
origami.com - ஜப்பானியக் கலை. காகிதத்தை மடிச்சு மடிச்சு உருவங்கள் செய்ய சொல்லித் தருகிற தளம். நல்ல பொழுதுபோக்கு... வித்தியாசமான கலை....
pmi.org - திட்டப்பணி மேலாண்மை நிறுவனம் (Project Management Institute) நம்ம தொழில் வளர்ச்சிக்கு தேவையான தளம்
questionbank.net - இண்டர்வ்யூவுக்கு போறவங்களுக்குன்னே இருக்கற தளம்.... பெரும்பான்மையான இந்திய சாஃப்ட்வேர் கம்பெனிங்களோட கேள்விகளுடைய தொகுப்பு.
rediff.com - சூரியன்... டார்ச்....
samachar.com - இந்திய செய்தித்தாள் தளங்களோட திரட்டி
sesamestreet.com - குட்டீஸ் கார்னர் - குழந்தைகளுக்கான இணைய விளையாட்டு தளம்...
trekearth.com - பல பயணக்காரர்களோட ஃபோட்டோ பகிர்வு தளம்.
thesauras.reference.com - "இத அப்பிடியும் சொல்லலாம்... அத இப்பிடியும் சொல்லலாம்" ... ஒரு சொல்லுக்கு பல இணைச்சொற்கள் தேட சரியான் தளம்
universe.daylife.com - ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப வித்தியாசமான தளம் - ஒரு தடவ போய்த்தான் பாருங்களேன்..
wikipedia.com - சூரியன்... டார்ச்....
yahoo.com - சூரியன்... டார்ச்....
zuji.com - ஃப்ளைட் டிக்கட்... சீப் டிக்கட்... ஈசி, ஃபாஸ்ட்...
இப்ப நாம கொக்கி போடணுமா? ம்ம்ம்ம்ம்...யார இழுக்கலாம்?
பழமைபேசி - அப்பிடி சுலபமா உட்ருவமா?
அணிலன் - கொஞ்சம் சேட்டய மூட்ட கட்டீட்டு கடமய செய்ங்க பாக்கலாம்
வெயிலான் - கொஞ்சம் நெழல்ல ஒதுங்கி நில்லுங்க...
Rule:
The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites
Tag 3 People.
18 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
நானுமா? தொடரணுமா?? தொடர்ந்திருவோம்.
நன்றி! மகேஷ்.
flicker.com போவீங்களா?
அப்ப என்னோட ஃபோட்டொஸைப் பார்த்ததுண்டா?
kbkk007
மகேசு அய்யா, இப்பிடி ராவுல உக்காந்து வேலை பாக்க வெச்சதே பெரிய வெற்றி! உங்க வர்ணனை ரொம்ப நேர்த்தி.
"உங்க கைல குட்டுப் பட்டதுல, இல்லை இல்லை, கொக்கியில மாட்டுப்பட்டுனதுல நொம்ப நல்லா இருக்கு.
வாய்க்காத் தோப்புல கள்ளு குடிச்சா மாதிரியே இருக்கு.....நொம்ப நன்றிங்க மகேசு!!!
நீங்க சொன்னதுல ஒரு சில வலையகம் எனக்கு அறிமுகம் இல்லாதது. அந்த வகைல தந்த தகவலுக்கு மேலும் நன்றி!!
நன்றி... வெயிலான் மற்றும் பழமைபேசி...
நம்மளை 'டக்' பண்ண ஜோசஃப் அண்ணாச்சிய கடைப்பக்கம் காணோமே.....
நான் சரியான ஆளாத்தான் புடிச்சு இழுத்து விட்ருக்கேன். ரொம்ப நல்லா பல புது தளங்களப்பத்தியும் எழுதியிருக்கீங்க. இதுல பல தளங்கள இப்பத்தான் கேள்விப்படுறேன். வாழ்த்துக்கள் மகேஷ். கலக்கியிருக்கீங்க.
ரெண்டு நாளா கொஞ்சம் ஆணி அதிகம்தானுங்கோ, அதான் உடனே வரமுடியல்ல.
//ஜோசஃப் அண்ணன் //
ஏனுங்க, நீங்க 1988க்கு அப்பால புறந்தவர? எதுக்குங்க 1988ல பொறந்த ஒரு குட்டிப்பையனப் போயி அண்ணண்ணு சொல்றீங்க?
வலிக்குது, அழுதுருவேன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
anna neenga ennoda "A For Apple padichchu irukkeengala? :))
@ அப்துல்லா :
அடச்சே... ரொம்ப நல்ல பையன் போல நீங்க... ஒரு எழுத்துக்கு ஒரு பேர்தான் போட்டிருக்கீங்க... இதத்தான் தன்னடக்கம்கறாங்களா?
@ ஜோசஃப் :
ரொம்ப நன்றி.... அடடா... ஒரு 20 வயசு ஆளை, என்ன மாதிரி 17 முடிஞ்சு 15 ஆகப் போறவரு அண்ணன்னுதான் சொல்லணும்.
///universe.daylife.com - ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப வித்தியாசமான தளம் - ஒரு தடவ போய்த்தான் பாருங்களேன்..////
அருமையான தளம்..
அறிமுக படுத்தியதற்கு நன்றி
@ உருப்படாதது_அணிமா : வருகைக்கு நன்றி... (இது என்ன பேருன்னெ புரியல)
மகேசு, நாமளும் நம்ம பங்குக்கு ஒரு மூணு பேருக்கு கொக்கி போட்டுட்டம்ல? எனம் எனத்தோட! வெள்ளாடு தன்னோட!!
@ பழமைபேசி:
கூப்ட்ட ஒடனே ஒடியாந்து பதிவப் போட்டதுக்கு நன்றி. பல புதிய தளங்களை அறிமுகம் பண்ணி வெச்சதுக்கு மறுபடி நன்றி.
ஒவ்வொண்ணுக்கும் நச்சுன்னு ஒரு சொலவடை....சும்மா சொல்லக்கூடாது... தினமலர் வாரமலர்ல சினிமா செய்திகள் படிச்ச மாதிரி இருந்துது.
அய்யா....கொக்கி போட்டதுக்கு நன்றி....நெசமாவே பெட்டிய தூக்க சொல்லீட்டாங்க....இன்னும் நாலு நாள் கழிச்சுதான் ஒரு நிலையான வீட்ல தூங்குவேன்னு நெனைக்கிறேன்...அதனாலே என் லிஸ்டு கொஞ்சம் லேட் ஆகும் ...தப்பா நெனைக்காதீங்க...
ஒண்ணும் அவசரம் இல்லண்ணே... பொட்டியெல்லாம் எறக்கி வெச்சுட்டு, நிம்மதியா ஒரு தூக்கமும் போட்டுட்டு நிதானமா எழுதுங்க.... ஆமா ஜெர்மனிக்கு உள்ளயேவா இல்ல வேறெங்கியாச்சுமா?
Post a Comment