முன்னாடி, அதுக்கும் முன்னாடின்னு ரெண்டு பதிவு போட்ட பிறகு இது மூணாவது. (இதே வேலையாப் போச்சு... இப்பிடியே ஓட்றா நீயி...)
இன்னிக்கு சனிக்கிழமை காலைல 8 மணி வாக்குல கெளம்பி தங்கியிருக்கற ஹோட்டலுக்கு நேர் எதிர்க்க இருக்கற ட்ரெய்ன் ஸ்டேஷனுக்குப் போனேன். ரோஷெ தி நே (Rochers de Naye) ங்கற ஒரு ஆல்ப்ஸ் உச்சிக்குப் போகலாம்னு திட்டம். ஜெனீவால இருந்து மோந்த்ரூ (Montreux) 1 மணி நேரம். அங்கிருந்து மலை ரயில். நம்ம ஊட்டி மாதிரி தண்டவாளங்களுக்கு நடுவுல பல் சக்கரத்துக்கு ரெண்டு வரிசை இருக்கு. ஏற்றம் சில இடங்கள்ல 220%இருக்கு. ரயில் சாவகாசமா மேல ஏறுது. கிட்டத்தட்ட 1 மணி நேரம். பாதி ஒசரம் போனதுமே எங்க பாத்தாலும் பனியா இருக்கு. மேகங்கள் எல்லாம் நமக்குக் கீழ. நடுவுல அங்கங்க மலை உச்சிகள் மட்டும் தெரியுது. கொள்ளை அழகு. "வானம் கீழே வந்தாலென்ன..." பாட்டு ஞாபகம் வந்தது.
இதுக்கு மேல ஒரு 200 மீட்டர் ஒசரத்துல வ்யூ பாயிண்ட் இருக்கு.200 மீட்டர்தான்னாலும் ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்கணும். நேரா ஏறினா அப்பறம் நேரா சறுக்கி எறங்க வேண்டியதுதான். குறுக்கு மறுக்கா (zig zag) நடக்கணும். கால வெச்ச பொசுக் பொசுக்னு 1 அடி உள்ள எறங்கி ஷூ சாக்ஸ்குள்ள எல்லாம் பனி போய் கிச்சு கிச்சு முட்டுது. அதுனால நமக்கு முன்னால போறவங்க கால வெச்ச குழிலயே நாமளும் மொள்ள கால எட்டு வெச்சு வெச்சு ஏறணும். அப்பிடியும் சில எடங்கள்ல கொஞ்சம் சறுக்கி எழுந்துதான் போனேன். மூச்சு முட்டிருச்சு. தஸ் புஸ்னு மாடு மாதிரி மூக்கு வாய் வழியா பொக பொகயா வருது. மேல போய் அப்பாடான்னு பாத்தா... அட அட அட...என்ன ஒரு panoramic வ்யூ !!! கீழ மேகம்... நடுவுல பனித் தொப்பி போட்ட மலை உச்சிகள்... மேல பிரகாசமா சூரியன்..... இயற்கை... இயற்கை (அபிராமி... அபிராமி...)
திரும்ப கீழ எறங்கரது சர்க்கஸ் மாதிரி ஆயிடுச்சு. எங்க எப்ப சறுக்கும்னே தெரியல. ஒரு வழியா கீழ எறங்கிப் பாத்தா பேண்ட் சூச்சா போன மாதிரி பூரா ஈரம். மறுபடி ட்ரெய்ன் ஏறி வழியில க்ளீயோ (Glion) ங்கற ஸ்டேஷன்லயே எறங்கீட்டேன். அங்கிருந்து மோந்த்ரூவுக்கு நடந்தே கீழ எறங்க யானைப்பாதை மாதிரி இருக்கு. 1 மணி நேர நடை. கீழ எறங்கினப்பறங் கூட கொஞ்ச நேரத்துக்கு கால் தானா மடங்குது. பெறகு ட்ரெய்ன் புடிச்சு ஜெனீவா திரும்பினேன். அதுக்குள்ள சாயங்காலம் மணி 4:30. ரூமுக்கு வந்து சூடா ஒரு காப்பி குடிச்சுட்டு, இதோ பதிவும் போட்டு முடிச்சாச்சு.
நாளைக்கு கிளம்பலாம்னா ஃப்ளைட் எல்லாம் ஃபுல். திங்கள் காலங்காத்தால ஃப்ளைட். சிங்கை போய் சேரும்போது செவ்வாய் அதிகாலை ஆயிடும். அப்பறம் இருக்கவே இருக்கு ஆபீஸ்...ஊடு...
வரலாறு, புவியியல் ஆர்வலர்களுக்காக ஸ்விட்சர்லாந்தைப் பத்தி ஒரு சிறு குறிப்பு: மேற்கு ஐரோப்பிய நாடு. சுத்திலும் ஃப்ரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லொவீனியா நாடுகள். தனி விசா.ஷெங்கன் விசா முறைல ஜனவரி 2009 ல இருந்து சேரலாம்னு எதிர்பார்க்கறாங்க. சேந்தா வசதி. பெரும்பாலான ஐரொப்பிய நாடுகளுக்கு ஒரே விசாவுலா போய் வரலாம். இன்னும் யூரோ நாணயத்துக்கு மாறல. ஆனா யூரோ செல்லுபடியாகும். (கடைகள்ல யூரோ வாங்கிகிட்டு ஃப்ரான்க்ல பாக்கி குடுப்பாங்க யூரோ : ப்ரான்க் கிட்டத்தட்ட 1.3) பெரிய நகரங்கள் ஜெனீவா, ஸ்யூரிக், பெர்ன், லூசெர்ன், லூசேன், லுகானோ, பேசல்.....இதெல்லாம். மிகப் பெரிய நன்னீர் ஏரி 'லெமான் ஏரி' ஒரு பிறை வடிவத்துல இருக்கு. ஜெனீவாவுல ஆரம்பிச்சு வோட் வரைக்கும் கிட்டத்தட்ட 80 கி.மி நீளம், 15 கி.மி அகலம். 600 சதுர கி.மி பரப்பு. பெரும்பாலும் ஜெர்மன் மொழி. தெற்கு, மேற்குல (ஜெனீவா உள்பட) ப்ரென்ச். போதுங்க....
17 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
இப்ப போய்ட்டு, மறுக்கா வருவேன்.
பனிச் சறுக்கல் எல்லாம் முயற்ச்சி செய்யலையா?
பனிச்சறுக்கலா? போன தடவை முயற்சி பண்ணி கவட்டைல அடி வாங்குனது இன்னம் மறக்கல :)))))))
//மேகங்கள் எல்லாம் நமக்குக் கீழ. நடுவுல அங்கங்க மலை உச்சிகள் மட்டும் தெரியுது. கொள்ளை அழகு//
உண்மையிலேயே ரொம்ப அழகாக தான் இருக்கும்..
////மேகங்கள் எல்லாம் நமக்குக் கீழ. நடுவுல அங்கங்க மலை உச்சிகள் மட்டும் தெரியுது. கொள்ளை அழகு//
//
இது சூப்பர். நான் இதை நம்ம பத்ரி நாத் -லேயே அனுபவிச்சிருக்கேன்...
வாங்க கிரி.... எல்லாத்தையும் இன்னிக்குப் படிச்சு பின்னூட்டம் போட்டுருக்கீங்க.... அது என்னவே தெரியல... உங்க சைட் ஓபன் ஆக ரொம்ப நேரமாகுது... வேற ஒருத்தர் கூட இது மாதிரி சொல்லிருந்தாங்க... கொஞ்சம் என்னானு பாருங்க..
ச்சின்னப்பையன்... கரெக்டுங்க... நம்ம ஊர்ல் இல்லாததா இதெல்லாம்...
///ஒரு வழியா கீழ எறங்கிப் பாத்தா பேண்ட் சூச்சா போன மாதிரி பூரா ஈரம்.///
சூச்சா போன மாதிரியா? இல்ல உண்மையாலுமே அது சூச்சா தானா??
விளக்கம் தேவை
போன பின்னூட்டம் நான் இட்டது கிடையாது ..
யாரோ விளையாடி இருக்கிறார்கள் ..
தன்னிலை விளக்கம்
நாங்கெல்லாம் அந்த பக்கம் போகலாமா?
//சுத்திலும் எங்க பாத்தாலும் பனி ஒரு அடி உசரத்துக்கு விழுந்துருக்கு. செடி கொடியெல்லாம் கருகிப் போய் நுனியில பனிய சொமந்துக்கிட்டு நிக்குதுக. மேல ஒரு பெரிய ரெஸ்டாரண்ட் இருக்கு. வெளியில மலை மேல அஞ்சாறு குடில்கள் இருக்கு. எல்லாம் எஸ்கிமோ மாதிரி இக்ளூ வீடுகள். //
ஏன் தலைவா...இந்த சரக்கையா அப்படி சொன்னீங்க..??
காட்சிகள் கண்முன் நிற்கிறது தல..
கொஞ்சம் லேட். அதனால முதல்ல அட்டன்டன்ஸ் போட்டுக்கிறேன். படிச்சிட்டு வந்து பின்னூட்டம் போடுறேன்..
அருமையான பயணக்கட்டுரை மஹேஷ்.. நல்ல வர்ணனைகள்.. படங்கள் அருமை.. அதிலும் அந்த பனி நிறைந்த டேபிள்கள் சூப்பர்..
தனியா எல்லாம் போகாதீங்க,எங்கள மாதிரி ஒரு ஆள கூட கூட்டிகிட்டு போனா நல்ல இருக்கும் இல்ல(உங்க செலவுலதான்)
//
உருப்புடாதது_அணிமா said...
///ஒரு வழியா கீழ எறங்கிப் பாத்தா பேண்ட் சூச்சா போன மாதிரி பூரா ஈரம்.///
சூச்சா போன மாதிரியா? இல்ல உண்மையாலுமே அது சூச்சா தானா??
விளக்கம் தேவை
//
ROTFL
:)))))))))
பயண கட்டுரை மிக அருமை.
@ அணிமா : இப்பிடி எல்லாம் விளக்கம் கேடாதாலதான் உங்களை புடிச்சு வெக்கச் சொல்லி கூலிப்படை அனுப்பிச்சோம்... :))))
நன்றி வெண்பூ....
நன்றி நர்சிம்.... வசிஷ்டர் வாய்ல பிரம்மரிஷி :)))
நன்றி சிவா .... நல்ல உருண்டு சிரிங்க....
பாபு... எப்ப கெளம்பலாம்?
குடுகுடுப்பை... நானே போகும்போது நீங்கள்லாம் போக முடியாதா?
Post a Comment