பெல்ஜியத் தலைநகர் ப்ருசெல்ஸ். தி க்ராண்ட் ப்ளேஸ். உலக்ப் புகழ் பெற்ற உச்சா போகும் சிறுவனின் சிலையைச் (Manneken Pis) சுற்றி டூரிஸ்டுகளின் கூட்டம். நானும் என்னோட ஓட்டை கேமராவில ஒண்ணு ரெண்டு படங்க எடுத்துக்கறேன். இந்த க்ராண்ட் ப்ளேஸ்லதான் ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை பிகோனியாப் பூக்களால மொத்த மைதானத்தையும் அடைச்சு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய "மலர் விரிப்பு" (Flower Carpet) போட்டு உலகத்தயே அசத்துவாங்க. அது ஒரு பெரிய டூரிஸ்ட் அட்ராக்சன்.
பெல்ஜியத்துல வீடுகள்ல செய்யற ஹோம்-மேட் சாக்லேட்டுக ரொம்ப ஃபேமஸ். அங்க போயிட்டு அத வாங்காம வந்தா சொந்தமெல்லாம் எதிரியாயிடும்னு பயந்து அதக் கொஞ்சம் வாங்கணும்னு கெளம்பினேன். எங்க நல்லாருக்கும்னு யாரைக் கேட்டாலும் என்னவோ பெனாத்தறாங்களே ஒழிய நமக்கு ஒண்ணும் புரியல. அப்பிடி ஒரு கடைப் பக்கம் போய் விசாரிச்சுட்டு இருக்கும்போது ஒரு குரல். "ஹான் ஜி... க்யா சாஹியே ஆப்கோ?" திரும்பிப் பாத்தா ஆஹா.... ஆஜானுபாகுவா ஒரு சர்தார்ஜி. 35 வயசுக்கு மேல இருக்கும். பக்கத்து கடை அவரோடதாம். மளிகைக்கடை மாதிரி இருக்கு. அய்யா... இன்னது வேணும்... எங்க நல்லதா கிடைக்கும்னு அவர் கிட்ட கேட்டேன். "அப்பிடியா? ஒரு நல்ல இடம் இருக்கு. கொஞ்சம் தூரம் கண்ட்ரி சைட் போகணும். ஒண்ணு பண்ணுங்க. சரியா 1 மணிக்கு கடைக்கு வாங்க. லன்ச் ப்ரேக்ல நானே கூட்டிக்கிட்டுப் போறேன்"னு சொன்னாரு.
சரின்னு நானும் அங்க இங்க கொஞ்ச சுத்திட்டு மறுபடியும் டாண்ணு 1 மணிக்கு அந்த கடைக்குப் போயிட்டேன். அவரும் கிளம்பிக்கிட்டுருந்தாரு. கடைய சாத்திட்டு பக்கத்து சந்துக்கு போய் கார் எடுத்துட்டு வந்து ஏறச் சொன்னாரு. சிடிய விட்டு வெளிய வந்து ரொம்ப தூரம் வந்துட்டோம். உள்ளூர எனக்கு பயம் "இவர(ன?) நம்பி வந்துட்டமே? நல்லவந்தானா? அடிச்சு போட்டு இருக்கறத புடுங்கிட்டான்னா? பாஸ்போர்ட் திருட்டு வேற இங்க ரொம்ப ஜாஸ்திங்கறாங்களே"ன்னு என்னென்னவோ நினைப்பு. தன்னப் பத்தி (புபிந்தர் சிங்) குடும்பத்தை பத்தியெல்லாம் சொல்லிக்கிட்டே வந்தாரு. 12 வருஷமா ப்ருசெல்ஸ்ல இருக்காரு. அப்பிடி பேசிக்கிட்டே ஒரு கிராமத்துக்குள்ள நுழைஞ்சு ஒரு வீட்டுக்கு முன்னால நிறுத்துனாரு. உள்ள கூட்டிக்கிட்டு போய் என்னவோ பேசி வித விதமா சாக்லேட்டுக வாங்கிக் குடுத்தாரு. விலையும் கொஞ்சம் சகாயமா இருந்துது. திரும்ப கார்ல ஏறி கடைக்கே கொண்டு வந்து விட்டாரு. அப்பறந்தான் நமக்கு நம்பிக்கையே வந்துது. அவர் சாப்பிடக் கூட இல்ல. மறுபடி கடையைத் திறந்து வியாபாரம். கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்பிட்டேன். அவர் எதுவும் காசு வாங்கிக்கல. சும்மா சொல்லக்கூடாது... சாக்லேட் அவ்வளவு டேஸ்ட்... இப்பிடியும் ஆளுக இருக்காங்களேன்னு மனசுக்குள்ள வாழ்த்திக்கிட்டே ஊருக்கு கிளம்பினேன்.
2009 மார்ச் 6 :
ஜெனீவா. காலை மணி 10. ட்ரெயின் ஸ்டேஷன் முன்னால ட்ராமுக்காக காத்துக்கிட்டு இருக்கேன். ஒரே பனிப் பொழிவு. மூக்கெல்லாம் மறத்துப் போச்சு. மூக்கு மூஞ்சில இருக்கான்னு அப்பப்ப தடவி தடவி பாத்துக்கிட்டு நிக்கறேன். பின்னால யாரோ ஒரு ஃபேமிலி இந்தில பேசிக்கிட்டு இருக்காங்க. பாத்தா ஒரு சர்தார், சர்தார்ணி, 10-12 வயசுல ஒரு பொண்ணும் பையனும். அவர் கொஞ்சம் சத்தமா பேசிக்கிட்டுருந்தாரு. எங்கேயோ கேட்ட குரலா இருக்கேன்னு திரும்பி நின்னு கவனிச்சுப் பாத்தா..... அட... இவர் அந்த புபிந்தர் சிங்கா? இங்க எப்பிடி? போய் பேசலாமா? நமக்கு வேணா ஞாபகம் இருக்கு... அவருக்கு இருக்குமா? இப்பிடி பல யோசனைகளோட இன்னும் கொஞ்சம் கவனிச்சு பாத்துட்டு, அவராத்தான் இருக்கணும்னு கிட்டப் போய்,
"எக்ஸ்க்யூஸ் மி... நீங்க.... நீங்க புபிந்தர் சிங்கா?". நாலு பேரும் என்னயே உத்துப் பாக்கறாங்க.
"ஆமாம்... நீங்க யாரு? உங்களுக்கு என்னைத் தெரியுமா? எப்பிடி?". நான் ப்ருசெல்ஸில் நடந்ததை ஞாபகப்படுத்துகிறேன்.
"வாவ்... ஏழு வருஷம் முன்னால நடந்தது. எனக்கு சுத்தமா நினைவில்ல. நீங்க இப்ப சொன்ன பிறகு லேசா ஞாபகம் வருது."
"உங்க கடைக்கு ஆயிரம் பேர் வராங்க... போறாங்க... உங்களுக்கு நினைவு வெச்சுக்க அவசியமில்ல... ஆனா என்னை யாருன்னே தெரியாதபோது எனக்கு நீங்க செஞ்ச உதவியை நான் மறக்க முடியாதே"
ஆனா தன்னை ஒருத்தன் அடையாளம் கண்டுக்கிட்டு வந்து பேசறதைப் பாத்து அவரும் குடும்பமும் குஷி ஆயிட்டாங்க. அவங்க ப்ருசெல்ஸை விட்டுட்டு இப்ப இங்க வந்து 3 வருஷம் ஆயிடுச்சாம். இங்க ஒரு கடைல பார்ட்னரா இருக்காராம். இந்த மே மாசம் எல்லாம் செட் ஆனா லண்டன் போயிடுவாங்களாம்.
"வீடு பக்கத்துலதான். வாங்களேன்.... அப்பிடி சாய் சாப்டுக்கிட்டே பேசுவோம்" சரின்னு ட்ராம் ஏறி அவர் கூடவே அவங்க வீட்டுக்கு போய் டீ குடிச்சு, பூரியும் ஹல்வாவும் சாப்டுட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு ரூமுக்கு வந்துட்டேன். போட்டோவெல்லாம் வேண்டாம்னு அன்பா கண்டிப்பா மறுத்துட்டாரு. நானும் ஏன்னு கேக்கலை.
முதல் சந்திப்புலயும் சரி, இன்னிக்கும் சரி அவரோட பேச்சுல இருந்த கனிவும், உண்மையும், நேர்மையும் ரொம்ப ஆச்சரியப்பட வைக்குது. முதல் சந்திப்பின்போது எனக்கு உள்ளூர ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தாலும், அதை அவர் கண்டுக்காம இயல்பா இருந்து அந்த சந்தேகத்தை தானா போக்கடிச்சாரு. இன்னிக்கு அந்த சம்பவத்தை ஞாபகப்படுத்தின உடனேயே ரொம்ப நாள் பழகின மாதிரி இயல்பா பேசி டக்குனு வீட்டுக்கும் கூட்டிக்கிட்டுப் போய் உபசரிச்சதும், அந்த குடும்பமும் அதே மாதிரி வித்தியாசமா எடுத்துக்காம நல்லா பழகினதும்.... இன்னும் ஆச்சரியம் தீரல.
இப்பிடியும் அன்பான அனுசரணையான மனுஷங்க இருக்காங்களா? இவுங்க மாதிரி ஆளுகளாலதான் இன்னிக்கும் ரெண்டு சொட்டு மழையாவது பெய்யுதா? ஒரு தனி மனுஷனோட இயல்பு அவன் குடும்பத்தையே இன்ஃப்ளூயன்ஸ் பண்ணுது? பல கேள்விகளோடயும் விலகாத ஆச்சரியத்தோடயும் ஹோட்டலுக்கு திரும்பினேன்.
22 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
இன்னைக்கு யாரும் துண்டை போட முடியாது
வாழ்க சிங்கம், ரெம்ப நல்ல மனுஷன், ஒரு வேளை அவரு உங்களைப் பார்த்து பயந்து கிட்டே கார் ஓட்டினாரோ?
இவுங்க மாதிரி ஆளுகளாலதான் இன்னிக்கும் ரெண்டு சொட்டு மழையாவது பெய்யுதா?
//
கடவுள் கம்பேனி கோச்சுக்கப்போவுது
குகு
உண்மையிலேயே மிகச்சிறந்த அனுபவம்.
வாங்க நசரேயன்.... இன்னிக்கு திண்ணை காலியாத்தான் இருக்கும். நல்லா பாய் விரிச்சு படுத்துக்கலாம் :))
அட...இருக்கலாமோ? அவரு எனக்கு பயந்துக்கிட்டே கார் ஓட்டியிருப்பாரோ?
இருங்க முதல்வர் வந்துருக்காரு... எழுந்து நின்னு ஒரு சல்யூட் வெச்சுக்கறேன்... நன்றி குகு..
உண்மையிலேயே மிகச்சிறந்த அனுபவம்.
இப்பத்தான் எழுந்தேன்... Gymnastics வகுப்புக்கு போய்ட்டு வந்து, வெச்சிகிடலாம் கச்சேரிய! நீங்களும் அந்த யானைக் கணக்குக்கு?! இஃகிஃகி!!
வாங்க மணியாரே... நம்மளை இங்க ஆந்தையாக்கி ராத்திரி பூரா உக்காரச் சொல்லிட்டாங்க... பகல்லயே பசுமாடு தெரியாது... இருட்ல எருமை மாட்டை மேய்க்கணும். ம்ம்ம்... நீங்க gymnastics போங்க... ballet dance போங்க... யானையெல்லாம் அப்பறந்தான் எண்ணணும் :)))
ம்...நல்ல சொக்லட்டான அனுபவம் தான்...:-))
நன்றி டொன் லீ....
மனிதர்களில் யாரும் கெட்டவர்களல்ல!
சில சூழ்நிலைகள் அவர்களை அம்மாதிரி நடந்து கொள்ள வைக்கிறது.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்
\\ஒரு தனி மனுஷனோட இயல்பு அவன் குடும்பத்தையே இன்ஃப்ளூயன்ஸ் பண்ணுது\\
நிறைய ...
உங்கள் பதிவு இனிப்பாய் ...
நன்றி வால்பையன்... 100% உண்மை..
நன்றி ஜமால்பாய் !!!
அருமையான பதிவு மகேஷ். சொல்லப்போனால் ‘பதிவு' என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் இந்தப் பதிவு!'
கடைசியில் கேட்ட கேள்விகளுக்கு பதிவாலே பதில் சொல்ல ஆசை! ம்ம்ம்..பார்க்கலாம்!
நன்றி Sindhu.... பதில் பதிவு போட்டா சொல்லுங்க :)
அண்ணன் அடிக்கடி வெளியூர் போறதுல, நமக்கு நல்ல நல்ல அனுபவம்! இஃகிஃகி!!
நன்றி மணியாரே...
மிகச் சிறந்த அனுபவம்.
நெகிழ வைத்த பதிவு. அங்க இங்க ஒன்னு ரெண்டு பேரு இப்டியெல்லாம் நல்லவங்கள இருக்காங்க.
ஏழு வருசத்துக்கப்புறமும் அவர மறக்காம இருந்தது உங்க நல்ல மனச காட்டுது.
தைவானில் ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்து இருந்தேன். நா ஏதோ கேட்க அவன் ஏதோ கொண்டு வந்து தர...
அந்த வாசமே குடலைப் பிரட்டுகிறது. எதிர்புரம் உள்ள ஒரு மேசையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டு இருக்கும் மனிதர் என் மூஞ்சி போகும் போக்கைக் கவனித்து என் மேசைக்கு வருகின்றார்.
”இப்பதான் தைவான் முதல்முறையா வர்றீங்களா?
“ஆமாம் சார்”.
என் கூட வர்றீங்களா?உங்களுக்கு நம்ப இந்தியா ரெஸ்டாரண்ட் காட்டுறேன்”.
என்னை அழைத்துக் கொண்டு அவர் காரில் 10 நிமிடப் பயணத்திற்குப் பின் மகராஜா இந்தியன் ரெஸ்டாரெண்டில் விட்டு விட்டு ஸ்நேகமோடு சிரித்து விடைபெற்றார் நாகேஸ்வர ரெட்டி என்ற அந்த மனிதர்.
மழை மட்டும் இல்லைண்ணே...இந்த மாதிரி ஆத்மாக்களால்தான் ஒரளவு உலகம் அமைதியாவும் இருக்கு.
அழகான அனுபவங்கள்.. ஏற்கனவே படிச்சுட்டேன்.. பின்னூட்டந்தான் லேட்டு.!
Post a Comment