ஒபாமா : உலகத்துல ஒரு இடம் பாக்கி விடாம அமைதியை நிலை நாட்டிட்டார்னு "நோபல்" பரிசு குடுத்தாச்சு. 10 மாசத்துல இவ்வளவு பெரிய சாதனை பண்ண முடியும்னா இன்னும் 5 வருஷத்துல என்னென்ன சாதிப்பாரோ? அதுக்கெல்லாம் பாராட்டி குடுக்கறதுக்கு இன்னும் பெரிய பரிசா எதாவது இப்பவே பண்ணி வெச்சுக்கணும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இங்கிருந்தெல்லாம் மக்கள் இனிமே சர்வ சாதாரணமா அமெரிக்கா போய் வரலாம். அதான்... அமைதிக் கொடி பட படன்னு பறக்குதே....
நண்பர்கள் கிட்ட இதைப் பத்தி சூடான விவாதம் நடக்கும்போது ஒருத்தர் சொன்னார் "அது ஒரு கமிட்டி. சில நியதிகள் வெச்சுருக்காங்க. அதுல ஒபாமா பொருந்தி வரார்னு அவங்க நினைக்கிறாங்க. குடுக்கறாங்க.... எப்பிடி குடுக்கப் போச்சு? ஏன்... எதுக்கு... இதெல்லாம் விவாதிக்க முடியாது"ன்னு சொன்னார். இருக்கலாம். ஆனா "நோபல்" பரிசு என்ன "அண்ணா" விருதா? அதுக்குன்னு ஒரு மரியாதை இல்லையா? இது வரைக்கும் அதை வாங்கினவங்களையும், அவங்களோட சாதனைகளையும் வெச்சுத்தானே அந்த விருதுக்கான தகுதியை நம்மளை மாதிரி சாதாரணமானவங்க ஒப்பீடு செய்ய முடியும்? கோஃபி அன்னான், ஆங் சென் சூ கி மாதிரி தலைவர்களும் ஒபாமாவும் ஒண்ணா? ஒத்துக்க முடியல. இந்த மாதிரி பரிசு குடுத்துட்டா அதுக்கேத்த மாதிரி நடந்துடுவார்னு சில வாதங்கள் இருக்கு. அப்பிடிப் பாத்தா பேசாம "ஒசாமா"வுக்கு குடுத்துருக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் : இவருக்கும் நோபல் பரிசு. ஆனா விஷயம் விருதைப் பத்தி இல்லை. அதுக்கப்பறம் அவர் குடுத்த பேட்டி பத்தி. "யார் யாரோ குப்பன் சுப்பன்லாம் எனக்கும் மெயில் அனுப்பறான். எரிச்சலா வருது"ன்னு சொல்லியிருக்கார். அய்யா, நீங்க ஒரு பெரிய விஞ்ஞானி. உங்களுக்கு இது போல விஷயமெல்லாம் தொந்தரவா இருக்கலாம். தகவல் தொடர்பு சல்லிசா இருக்கற இந்த நவீன உலகத்துல, இந்த மெயில் தொந்தரவுகளை தவிர்க்க எவ்வளவோ சுலபமான வழிகள் இருக்கு. அதுகளை பயன்படுத்தறதை விட்டுட்டு இந்த மாதிரி நிதானமில்லாம பேட்டி குடுக்கறது உங்களை மாதிரி பெரியவங்களுக்கு அழகா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரொமான் பொலான்ஸ்கி : சில விஷயங்கள் புரியவே மாட்டேங்குது. 1978ல இருந்து இந்த ஆள் மேல பாலியல் குற்றச்சாட்டுக்காக ஒரு சர்வதேச அரெஸ்ட் வாரெண்ட் இருக்கு. ஆனா பிடிக்க முடியலையாம். 3 வாரம் முந்தி ஸ்விஸ்ல ஸுரிக் ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல தலைவருக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கும் விழாவுக்கு வரும்போது கைது பண்ணிட்டாங்களாம். போன 30 வருஷமா ஃப்ரான்சுக்கும் போலந்துக்கும் போய் வந்துகிட்டு இருக்காரு. ஸ்விஸ்ல "ஸ்டாட்"ல 20 வருஷமா இவருக்கு ஒரு சொகுசு பங்களா இருக்காம். இத்தனை வருஷமா ஸ்விஸ் "ஷெங்கன்" அமைப்புல சேராம தனியா இருந்தபோது கூட இவரைப் பிடிக்க முடியலை. இப்ப தீடீர்னு முழிச்சுக்கிட்டு பிடிச்சுட்டாங்களாம். கேக்கறவன் கேனப்பயன்னா எருமை கூட ஏரொப்பிளேன் ஓட்டும்னு கிராமத்துல சொல்லுவாங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு விளம்பரம் : சைடு பார்ல நானும் ஒரு வேண்டுகோள் வெச்சு 3 மாசமாச்சு. ஒரு மெயில் கூட வரலை. விடறதாயில்லை. ரீடர்ல படிக்கறவங்களையும் அட்டாக் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். தேவையிருந்தா சொல்லுங்கப்பா.

"நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். மைசூரில் உள்ள என் வீடு தற்போது வாடகைக்கு விட உத்தேசம். உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்கள் / உறவினர்களுக்கு மைசூரில் வாடகைக்கு வீடு தேவையெனில் மேலதிக விவரங்களுக்கு என்னை மின்னஞ்சலிலோ (rmaheshk@gmail.com) தொலைபேசியிலோ (+65 81275347) தொடர்பு கொள்ளவும். நன்றி."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
!! அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் !!
25 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
//சைடு பார்ல நானும் ஒரு வேண்டுகோள் வெச்சு 3 மாசமாச்சு. ஒரு மெயில் கூட வரலை. விடறதாயில்லை. ரீடர்ல படிக்கறவங்களையும் அட்டாக் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். //
ஹா ஹா ஹா
அதுக்கு நீங்க அடிக்கடி பதிவு போட்டால் தானே வந்து பார்ப்பாங்க.. மாசத்துக்கு ஒண்ணு போட்டா எப்படி? :-)))
பதிவு போடுவது அதை விட கஷ்டம்னு சொல்லப்படாது! :-)))
ஒசாமாவுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்!
எனக்கும் அதான் சரின்னு படுது!
வாங்க கிரி.... அவ்வ்வ்... இப்பிடி வாரிட்டீங்களே .... :)
நன்றி வால்... ஆமங்க...
கிச்சடி - அருமை
kichadi nallaa irukku mahesh. write often.
நன்றி ராகவன்... நீங்க அருமைன்னு மட்டும் போட்டுட்டு போனா எதோ குறையுதுன்னு அர்த்தம்... :)
நன்றி மணிகண்டன்... அடிக்கடி எழுத ஆசைதான்... ரெண்டே ரெண்டுதான் குறையுது: நேரம், விஷயம் :)))))
கிச்சடி சுவை சூப்பர்.
தீபாவளி வாழ்த்துக்கள்..லேட்டா.
கிச்சடி செம காரம்.
//ஆனா "நோபல்" பரிசு என்ன "அண்ணா" விருதா? அதுக்குன்னு ஒரு மரியாதை இல்லையா?//
இதுக்கு மஞ்ச பெயிண்ட் அடிக்கனும்.
//ஒரு விளம்பரம் //
இன்னும் ரெண்டு மூணு கூட்டம் வர்ற நண்பர்களோட கடைகள்ல தட்டி வெச்சு பாக்கலாமே.(என் கடைக்கு பூரா கர்நாடகாலேருந்து ஒரே ஒரு வாசகர்தான்.:)))))
A more sensible argument to the Obama issue - than the one about whether he 'bought' it or not :-))
There is a very strong lobby that goes on saying that all the five Norwegians are 'left-wingers' and hence BO got it - too early... and history will consider the 2009 Peace Prize as a watered down version either way - if BO turns out to be a true messiah then the committee gets a 'fully meeting expectations' and if he screws it up, then the committee gets a 'consistently failed to meet expectations' - Sorry, PMO time!
Good show.
ஒபாமாவுக்கு நோபல் பரிசு....
அவ்வ்வ்வ்வ்........
பனிப்போரைத் தவிர்த்ததற்கு.... he couldn't get recognized for the efforts what he did in Europe region as he acted on the matter that is prior to the fact....
நன்றி நர்சிம்....
நன்றி அறிவிலி....
Thanks Mrs and Mr G... Bulls eye !!
நன்றி பழமைபேசி.... இருந்தாலும் இது ஒரு நல்ல முன்னுதாரணமான்னு தெரியல.... இதுக்கு முன்னாடி குடுத்தத வெச்சுத்தான் நான் பாக்கறேன்... மற்ற துறைகள்ல சாதிச்சு பல வருடங்களுக்குப் பிறகு நிரூபணம் ஆனபிறகுதான் குடுக்கப்படுது. ஒபாமா நல்லவரா இருக்கலாம்... ஆனா நோபல் மாதிரி வாங்கறதுக்கு இன்னும் நிறைய சாதிக்கணும்.
ஒபாமா நல்லவராவே இருக்கலாம்.... அதுக்காக அவர் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் கண்ணை மூடிக்கிட்டு ஏத்துக்க முடியல... :(
//
ஆனா "நோபல்" பரிசு என்ன "அண்ணா" விருதா?
//
ச்சேச்சே...இல்லை...கலைமாமணி விருது :0))
//
அதுகளை பயன்படுத்தறதை விட்டுட்டு இந்த மாதிரி நிதானமில்லாம பேட்டி குடுக்கறது உங்களை மாதிரி பெரியவங்களுக்கு அழகா?
//
ஒரு நாளைக்கு ஐநூறு மெயில் வந்தா எத்தனை க்ளியர் பண்றது??
//
கேக்கறவன் கேனப்பயன்னா எருமை கூட ஏரொப்பிளேன் ஓட்டும்னு கிராமத்துல சொல்லுவாங்க.
//
நீங்க சொல்றதை பார்த்தா எருமைக்கு நெசமாவே ஏரோப்பிளேன் ஓட்டத் தெரியாது போல இருக்கே....அப்பிடியா?? :)))
நன்றி அதுசரி....
//ஒரு நாளைக்கு ஐநூறு மெயில் வந்தா எத்தனை க்ளியர் பண்றது??
//
வேற வழிகள் இல்லவே இல்லைன்னு சொல்றீங்களா??
//நீங்க சொல்றதை பார்த்தா எருமைக்கு நெசமாவே ஏரோப்பிளேன் ஓட்டத் தெரியாது போல இருக்கே....அப்பிடியா?? :)))
//
எனக்கு ஏரொப்பிளேன் ஓட்டத் தெரியாது :)))))))))))
ஒசாமா? சூப்பர் லாஜிக்.
வெங்கட்ராமன்? செம் ப்லட்.
போலன்ஸ்கி - ரைட்டு
விளம்பரம் - ஆல் தி பெஸ்டு.
அப்புறம் தீபாவளி வாழ்த்துக்கு - ஹி ஹி நன்றி
அனுஜன்யா
அனுஜன்யா... நன்றி... .நன்றி... நன்றி... :))))))))))))
நல்லாருக்கு கிச்சடி. அப்பப்ப கிண்டுங்க. ரொம்ப இடைவெளி வேண்டாம்.
நன்றி ஸ்ரீ....
அட ஒபாமவுக்கு அமைதிக்கு நோபல் குடுத்ததுக்கு நீங்க எல்லாம் வருத்தப்படகூடாது. விடுங்க, விட்டா ரசபக்சேவுக்கு குடுத்துருப்பாங்க.
அந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணண் இருக்காரே, அவர நாமதான் தமிழரு, இந்தியருன்னு தலைமேல தூக்கிட்டு அலையிறோம். பார்டி படு விவரம். இந்தியால வேலை வாய்ப்பு வந்துருக்காமே உங்களுக்குன்னு ஒரு கேள்வி கேட்டதுக்கு தெளிவா சொல்லிருக்காரு, அப்டி எதுவும் வரலை, வந்தாலும் போவ மாட்டேன்னு.
நன்றி ஜோசஃப்....
ராஜபக்சே??? அவ்வ்வ்வ்வ்வ்வ்....
என்ன இந்த கிச்சடி கொஞ்சம் காரமா இருக்கு? :))) ஆனா நல்லா இருக்கு..
//கேக்கறவன் கேனப்பயன்னா எருமை கூட ஏரொப்பிளேன் //
என்னையத்தான் சொல்லுறீங்கன்னு நினைச்சேன், அப்புறமா மைசூர்ல இருக்கிறது சின்ன வீடா பெரிய வீடா ???
அப்பிடிப் பாத்தா பேசாம "ஒசாமா"வுக்கு குடுத்துருக்கலாம்.//
இந்தப்பாயிண்ட் ரொம்ப நியாயமா படுது எனக்கு.! அப்புறம் அந்த கார்ட்டூன் மிகச்சிறப்பான ஒன்று.
அடுத்த மூன்று விஷயங்களுக்கும் என் கமென்ட் : நியாயம்தான்.!
Post a Comment