உடுமலை அரசினர் மேல் நிலைப்பள்ளியில படிக்கும்போது, தி.சு.செந்தில் ஆறுமுகம்னு ஒரு ஆசிரியர் இருந்தாரு. இவர் திரு. சுந்தர ஓதுவா மூர்த்தி சுவாமிகளோட மகன். வருஷத்துக்கு ஒருமுறை இலக்கிய மன்றம் சார்புல "முத்தமிழ் விழா"ன்னு 9 நாளைக்கு நடத்துவாரு. இயல், இசை, நாடகம் ஒண்ணொண்ணுக்கும் 3 நாள். கூடவே வாரியார் சுவாமிகள், புலவர் கீரன், திருக்குறளார் முனுசாமி இவுங்களோட சொற்பொழிவுகளும் தினமும் இருக்கும். முனுசாமி அய்யாவோட சொல்லாடலை விட அவருடைய குரல் வளமும், ஏற்ற இறக்கங்களோட பேசுறதும் கேக்க ரொம்ப சுகமா இருக்கும். வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுன்னா மொதல் பத்து வரிசை சின்னப் பசங்களுக்குதான். கதை சொல்லிக்கிட்டே வரும்போது திடீர்னு எதாவது கேள்வி கேட்டு டக்குனு பதில் சொல்ற பையனுக்கோ பொண்ணுக்கோ கந்தரனுபூதி, கந்தரலங்காரம்னு ஒரு சின்ன புத்தகத்தை பரிசாக் குடுப்பாரு. ரொம்ப சுலபமான கேள்விகள்தான். சின்னப் பசங்க கிட்ட ஒரு ஈடுபாடு உண்டாக்கணும்கற நோக்கத்துல 3 மணி நேர சொற்பொழிவுக்குள்ள ஒரு 40 பரிசுகளாவது பட்டுவாடா ஆயிரும். நடு நடுவுல துணுக்குகள் சொல்றதும், அதுக்கு அவுரே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கரதும் தனி அழகு. அவரோட "கைத்தல நிறைகனி....." உலகப் புகழ். தமிழ் மிமிக்ரி கலைஞர்கள் எல்லாம் முதல்ல கத்துகிற குரல் இவரோடதாத்தான் இருக்கும்.
அப்பறம் புலவர் கீரன். தன்னுடைய ஊனத்தைக் கூட பொருட்படுத்தாம 3 மணி நேரம் உக்காந்த இடத்துல கணீர்னு "உலகம் யாவையும்..." சொல்லி ராமாயணமோ, வில்லிபாரதமோ சொன்னார்னா, அந்தந்த பாத்திரங்களே நம்ம முன்னாடி நின்னு பேசர மாதிரி இருக்கும். திரும்ப திரும்ப படித்த, கேட்ட கதைகளை ஒவ்வொரு முறையும் வித்தியாசமான செய்திகளோடயும், சிந்தனைகளோடயும் கேக்கறவங்களை கட்டிப் போடற மாதிரி சொல்றது புலவர் கீரனுக்கு இணை அவர்தான். நடுவுல சொல்ற கிச்சு கிச்சு மூட்டற குட்டிக் கதைகளும் சுவாரசியமா இருக்கும்.
எல்லாத்துக்கும் மகுடம் வெச்சது மாதிரி இருப்பது R.S.மனோகரின் நாடகங்கள். எங்க பள்ளிக்குள்ள இருக்கற கலா மண்டபத்திலும், GVG கலையரங்கத்திலும் மனோகர் நாடகங்களை பார்ப்பதே ஒரு சுகானுபவம். "இலங்கேஸ்வரன்" நாடகத்தை முதல் முதல்ல "ட்ராமாஸ்கோப்" முறையில கலா மண்டபம் மாதிரியான சுமாரான இடத்துலயே அதை அட்டகாசமா நடத்தி, வழக்கத்துக்கு மாறா பள்ளியிலயே தொடர்ந்து 10 நாள் நடத்தி அசத்தியவர் அவர்.
இப்ப இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, 90களுக்குப் பிறகு இந்த மாதிரி நிகழ்ச்சிகள் ரொம்பவே குறைஞ்சுக்கிட்டே வந்து, இப்பல்லாம் நடக்கறதே இல்லன்னு கேள்விப்பட்டபோது ரொம்ப சங்கடமா இருந்தது. அதவிட சங்கடம் இதெல்லாம் நேரத்தை வீணாக்கற விஷயம்ங்கற மாதிரி பேசினது.
செந்தில் ஆறுமுகம் மாதிரியான ஆசிரியர்களும் இப்ப இல்ல. இதையெல்லாம் ரசிக்கறதுக்கு மக்களும் இல்ல. இப்ப மக்கள் பாத்து ரசிக்கற ஒரே மேடை 21 இன்ச் டி.வி பொட்டிதான். காலைல எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்கப் போகற வரைக்கும் மெகாத்தொடர்கள்ங்கற பேர்ல மக்களை மக்கிப் போக வெக்கற அரைவேக்காடு நிகழ்ச்சிகள்தான். எங்க பகல்ல பாக்காம விட்டுப் போச்சுன்ன என்ன பண்றதுன்னு ராத்திரி ஒரு ரௌண்ட் மொதல்லேருந்து திரும்பப் போட்டு வேற படுத்தறாங்க. இதயெல்லாம் பாக்க சகிக்காதுன்னுதான் மேல சொன்னவங்கள்லாம் மேலயே போய் சேந்துட்டாங்க. அங்க இருக்கறவங்க பாக்கியசாலிக.
மங்காத தமிழ்னு எட்டுத் திக்கும் கொட்டச் சொன்னான் ஒரு போக்கத்த கவி. நாம எந்தத் திக்குக்கும் போல. நம்ம வீட்டு சாக்கடையிலயே கொட்டீட்டு, பீட்சா தருவிச்சு சாப்டுட்டு, மினரல் வாட்டர் குடிச்சுட்டு குப்பறப் படுத்து குறட்டை விட்டாச்சு. அட போங்கப்பா.....
நேத்து உடுமலைல இருக்கற நண்பரோட பேசிக்கிடிருக்கும்போது இந்தப் பேச்சு மறுபடி வந்தது. ஞாபகங்கள் தீ மூட்டி மறுபடி ஞாபகங்கள் நீர் ஊத்தறதுக்குள்ள ஒரு மீள் பதிவு....
17 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
/
இப்ப மக்கள் பாத்து ரசிக்கற ஒரே மேடை 21 இன்ச் டி.வி பொட்டிதான். காலைல எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்கப் போகற வரைக்கும் மெகாத்தொடர்கள்ங்கற பேர்ல மக்களை மக்கிப் போக வெக்கற அரைவேக்காடு நிகழ்ச்சிகள்தான். எங்க பகல்ல பாக்காம விட்டுப் போச்சுன்ன என்ன பண்றதுன்னு ராத்திரி ஒரு ரௌண்ட் மொதல்லேருந்து திரும்பப் போட்டு வேற படுத்தறாங்க.
/
கொடுமைதான் :(
மீள்பதிவா? இப்பதான் முதல்முறையா படிக்கிறேன். சுவாரஸ்யமா சொல்லியிருக்கீங்க.
தமிழுக்கே மீள்பதிவு தேவைப்படுது பாருங்க!
மீள் பதிவா... ஆச்சர்யமா இருக்கு...
தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டு இருக்கின்றது என்பது உண்மைதாங்க.
ஹூம்.. கலா மண்டபம், கல்பனா கிரவுண்ட் ஹாக்கி மேட்ச், GVG ஆடிட்டோரியம், இதெல்லாம் நெனச்சாலே ரொம்ப சொகமா இருக்குதுங்க.. முன்ன மாதிரி நம்ம பள்ளிக்கூடத்துல இப்படி விழா எதுவும் நடக்கறதில்லன்னு கேள்விப்பட்டேன். நீங்க சொன்ன மாதிரி டிவி சீரியல் பாக்கவே நம்முளுக்கு டைம் இல்ல, அப்புறம் எங்க இதெல்லாம்..
பழைய சோறு நல்லத்தான் இருக்கு
ம்ம். இப்பல்லாம் வாரியார் பேச்சு கேட்ட அதுக்கு ஏதாவது பட்டம் குடுத்து ஒதுக்கி வைச்சுருவாங்க.
மிக சுவாரஸ்யமான நடை தல.
//தமிழ் மிமிக்ரி கலைஞர்கள் எல்லாம் முதல்ல கத்துகிற குரல் இவரோடதாத்தான் இருக்கும்//
அதா..வது..என்று ஆரம்பிப்பார்கள்.
அருமை.
உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சோ ? :)
வாரியார், கீரன், ஆர் எஸ் மனோகர் காலத்தை பத்தி பேசரீங்களே :)
இப்பொழுது பள்ளிகளில் எல்லாம் அசத்தப்போவது யாரு எனும் நிகழ்ச்சி நடக்கிறது. கல்லூரியில் நடிகர்கள் வருகிறார்கள்.
தொலைக்காட்சியில் பேசும் பெண்கள் தமிழை வளர்க்கிறார்களே?
பண்பலைவரிசையும் பண்பட்டுவருகிறது :)
வல்க டமில்...
//வல்க டமில்...
/
yah,yah..
:))
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....
தமிழ்செய்திகளை வாசிக்க
(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்
(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய
தமிழ்செய்திகளை இணைக்க
ஆங்கில செய்திகளை வாசிக்க
வலைப்பூ தரவரிசை
சினிமா புக்மார்க்குகள்
சினிமா புகைப்படங்கள்
நன்றி மங்களூர் சிவா....
நன்றி வால்....ஆமா... பாருங்க..
நன்றி நாகா.... அது ஒரு பொன் உடுமலை...
நன்றி நசரேயன்... ஊறுகாயோட சாப்பிடணும்...
நன்றி ராகவன் சார்...
நன்றி சின்னம்மிணி...
நன்றி தமிழினி....
நன்றி ஸ்வாமி... ஆமாம்... உங்களுக்கு 108 எனக்கு ஜஸ்ட் 18.. :)
நன்றி அப்துல்லா... yah..yahh
திருத்தவத்துறை (லால்குடி) ஆதீன புலவர் பற்றி எழுதியதற்கு நன்றி.
நல்ல பதிவு மகேஷ்.!
நன்றி ராஜேஷ்...
நன்றி ஆதி...
arputhamana pathivu.
Super appu....
mahesh arputhama irukku,nee ethirla ukkanthu pesara mathiri irukku.Thiru.Senthil Arumugam oorulathan irukkaru.
Post a Comment