Wednesday, March 13, 2013

சேமித்த கணங்கள்

பரந்து கிடக்கும்
பாலைவானத்தைப் போன்றது
உன் மௌனம்

விடாது ஆர்ப்பரிக்கும்
அலைகளைப் போன்றது
என் மௌனம்

மழைத் துளிக்குள் தெறிக்கும்
வானவில்லைப் போன்றது
உன் சிரிப்பு

குளத்து நீரில் பிரதி பலிக்கும்
நிலவின் களங்கம் போன்றது
என் சிரிப்பு

எனினும்
என்னிடம் என்ன இருக்கிறதென்று
என்னை வந்தடைந்தாய்?

என்னை 'அப்பா'வென அழைத்த
அந்த நொடியை
என் காலக் குடுவையில்
உறைய வைத்திருப்பதை
அறிவாயா?

2 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

Thamira said...

நாங்கல்லாம் இந்தப் பக்கமா வர்றதில்லனு நினைச்சிகிட்டு கவிதையெல்லாம் எழுதி ஒத்தேல உக்காந்துகிட்டு படிச்சிகிட்டிருக்கிற மாதிரி இருக்கு. ரொம்ப தைரியம்தான்.

ஒளிஞ்சி இருந்து பாத்துகிட்டுதான் இருக்கோம், என்ன பண்றீர்னு..

:-))))))))

Mahesh said...

ஏம்யா ஒளிஞ்சு பாக்குறீரு? நாந்தேன் பேஸ்புக்குல போடுறேனில்ல? :)))))