Wednesday, April 20, 2011

மீண்டும் ஜே.கே.பி. !!!


பட்ட கால்லயேதான் படும். மறுபடியும் எழுத வந்தாச்சு. மீண்டும் ஜே.கே.பி. !!! பயப்படாதீங்க. ஒரேடியா அடிக்க மாட்டேன். தெளிய வெச்சு தெளிய வெச்சுதான் அடிப்பேன்.

6 மாசமா எழுத முடியாம போனாக் கூட அப்பிடி இப்பிடின்னு 98 பேர் இன்னும் நம்மளை நம்பிக்கிட்டிருக்காங்க. 1 மாசம் முன்னால எதேச்சையா பார்த்தபோது 100 பேர் !!! அடடா.. .எழுதாததுக்கே 100ன்னா எழுதியிருந்தா 1000 ஆயிருக்குமோ... அலெக்ஸால அலேக்கா தூக்கி மொத 10ல உக்காத்தி வெச்சுருப்பாங்களோன்னு நினைச்சதும் உண்டு. இப்பதான் தெரியுது... வழி தவறி வந்து ரெண்டு நிமிஷம் திண்ணைல உக்காந்துட்டு... இந்த அக்கப்போருக்கு வெயில்லயே அலையலாம்னு ஓடிட்டாங்க. பாவம்... பொழச்சுப் போகட்டும்.

* * * * * * * * * * *

தேர்தல் முடிஞ்சு எல்லாரும் நகம், விரல், கை, கால், பக்கத்துல இருக்கறவங்க குரல்வளைன்னு எதையாவது கடிச்சுக்கிட்டே பதட்டமா இருக்கலாம். அல்லது "ஹ்ம்ம்ம்.... பச்சாப் பசங்க.... 1 மாசம்... 30 நாள்.... எவ்வளோ சவுகரியம்... என்னென்ன பண்ணலாம் தெரியுமா?"ன்னு குமரிமுத்து மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்கலாம். ஆனா பத்திரிக்கைகளுக்கு அல்வா டைம். "கிராமங்களில் கருத்து கணிப்பு", "மக்களின் மனத் துடிப்பு"ன்னு எதையாவது அடிச்சு விட்டு, குட்டையக் கொழப்பி கல்லா கட்டலாம். எஞ்சாய் பண்ணுங்க மக்களே !!

* * * * * * * * * * *

துக்ளக்ல (அட.. .ஒரிஜினல் துக்ளக்ல...) 'சோ' எழுதியிருந்ததைப் படிக்கும்போது சிப்பு சிப்பா வந்தது. இவங்களும் இலவசம், அவங்களும் இலவசம்னு சொல்லிட்டதால "இலவசம்"ங்கற ஃபேக்டர் அடிபட்டு போகுதாம். என்னா லாஜிக் !!! வடிவேலு, சிங்கமுத்துவை எல்லாம் இஞ்சித்தண்ணில கரைச்சு குடிச்சு ஏப்பம் விட்டுட்டார். சரி.... ஆதரிக்கறதுன்னு முடிவு செஞ்ச பிறகு லாஜிக்கெல்லாம் பாத்தா முடியுமா? ஆனா இப்பிடியே லாஜிக் பாத்தா எப்பிடி இருக்கும்னு யோசிச்சு பாத்தா.....

"ரெண்டு பேரும் இனிமே லட்சம் கோடிக்கு அதிகமா ஊழல் பண்றதில்லைனு சொல்லிட்டதால ஊழல் ஃபேக்டர் அடிபட்டு போகுது."

"ரெண்டு பேரும் எதிர்கட்சி பிரமுகர்களை குண்டு வெச்சு மட்டுமே கொல்வோம், அருவாளால வெட்டமாட்டோம்னு சொல்லிட்டதால வன்முறை ஃபேக்டர் அடிபட்டு போகுது."

"சொந்தப் பிரச்னைன்னா மட்டுமே டெல்லிக்கு போவோம் ; மத்த பிரச்னைக்கு எல்லாம் புறா கால்ல சீட்டு கட்டி அனுப்புவோம்னு ரெண்டு பேருமே சொல்லிட்டதால டெல்லிக்கு காவடி தூக்கற ஃபேக்டர் அடிபட்டு போகுது."

'சோ' மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிடுச்சு.

* * * * * * * * * * *

சிங்கைலயும் அடுத்த மாசம் 7ந் தேதி தேர்தல். முதல் முறையா இங்க நேரடியா பாக்கறேன். என் வரையில இங்க ரொம்ப வித்தியாசமா இருக்கு. தேர்தல் முறைகள்ல இல்ல ; அரசியல்வாதிகளும் மக்களும் தேர்தலை அணுகற முறைல. நேரடியான கேள்விகள் கேக்கறாங்க. பிரதமர்ல இருந்து எல்லாரும் அதை விட வெளிப்படையா பதில் சொல்றாங்க. நெகடிவ்வா பார்க்கறவங்களும் இருக்காங்க. நான் ரொம்ப ஆர்வமா பாத்துக்கிட்டுருக்கேன். அநேகமா அங்க ரிசல்ட் வரும்போது இங்கயும் வந்துடும்னு நினைக்கிறேன்.

* * * * * * * * * * *

வழக்கம்போல போரடிச்சாச்சு. அப்பறம் பாக்கலாம். _/\_

7 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

Welcome Back. :-))))))))

புதுகை.அப்துல்லா said...

வெல்கம் பேக்கு :)

பழமைபேசி said...

சிங்கப்பூர் தேர்தல்... ஏனுங்ணே பூச்சாண்டி காமிக்கிறீங்க... எதிர்த்து ஓட்டுப் போடுறவங்க பேர் எல்லாம் வெளில தெரியுமாமே?? அவ்வ்வ்......

Mahesh said...

நன்றி ஸ்ரீ...

நன்றி அப்துல்லா அண்ணே....

நன்றி மணியண்ணே... இந்த ஒரு விசயந்தான் உங்க கண்ணுக்கு பட்டுருக்கு... நம்ம ஊர்ல நடக்கற அசிங்கக் கூத்துகளோட ஒப்பிடும்போது இங்க கோடி பங்கு மேல் !!

தக்குடு said...

ஜேகேபி அண்ணாவோட கச்சேரி ஸ்டார்ட் மியூசிக் பண்ணியாச்சு போலருக்கே!!...:))

அறிவிலி said...

எலெக்‌ஷனுக்கு எலெக்‌ஷன் எழுதாம அடிக்கடி எழுதனும்.. சொல்லிப்புட்டேன்....

ஆயிரந்தான் இருந்தாலும் ஜனநாயகத்துல இருக்கற திருப்திக்கு ஈடாகாது...

ஒரு நகராட்சிக்கு கூட இணையாக சொல்ல முடியாத ஊர்ல நடக்கற தேர்தலோட கம்பேர் பண்றது அன் ஃபேர்

ஒரு வளர்ந்த நாட்ல இன்னமும் பேப்பர்லதான் ஓட்டு போடறாங்க... இதுவே நமக்கு பெருமை இல்லியா??

பி.கு. நம்ம ரெண்டு பேருக்கும் பொது எதிரிகள் இருக்காங்க.. எனக்கும் ரீஜெண்டா ரெண்டு ஃபாலோயர் திடீர்னு காணாம போயிட்டாங்க....

Ramanna said...

Meendum JKB na udana sindhu bhairavi part 2 o nu ninaichen! Anyway good to see you back writing.