Monday, October 11, 2010

பா.கே.ப.இ

வேற என்ன? அதேதான். சிங்கைல ரெண்டாம் நாளே கொஞ்சம் காத்தாடினாலும், மூணாம் நாள் போய் பார்த்தோம். நிறைய எழுதணும்தான். டெக்னிகலா சுபீரியர் படம். ஆனா, க்ரிடிகலா எழுதினா வயித்தெரிச்சல் கோஷ்டிங்கறாங்க. சிலரெல்லாம் விமர்சனம் எழுதியிருக்கவே வேண்டாம்னு வேற. அந்தப் படத்தை சொன்னாங்களா... இந்தப் படத்தை மட்டும் சொல்றாங்களேன்னு கேள்விகள். நாளைக்கு கல்மாடி மேல விசாரணை வெச்சா, அவரும் 'ராசாவைக் கேட்டிங்களா? லாலுவைக் கேட்டிங்களா? என்னை மட்டும் கேக்கறீங்களே'ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம். என்னுடைய பார்வையில்:

1. இவ்வளவு கோடி பணத்தைப் போட்டு மீண்டும் ஒரு காதல் கதைன்னு எடுக்காம, இன்னும் தெம்பாவே பண்ணியிருக்கலாம்.
2. 'ஆர்டிஃபீசியல் இண்டெலிஜன்ஸ்' - கான்செப்ட் ரொம்பவே டைல்யூட் ஆயிடுச்சு.
3. ஒரு ப்ரோடோடைப், மாஸ் ப்ரொடக்சன்க்கு போகணும்னா ஒரு க்ரிடிகல் வால்யூம் வேணும். அது எதுவுமே இல்லாம செல் மாதிரி இரட்டிப்பாகி நூற்றுக்கணக்கா பல்கிப் பெருகறது.....ஹ்ம்ம்ம்...
4. இந்த மாதிரி ப்ராஜெக்ட் எல்லாம் ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஃபண்ட் பண்ணி நடக்கறது. ஆனா, என்னமோ தன் சொந்த சொத்து மாதிரி தனக்கு எதிரியா நினைக்கிற ரோபோவை வெட்டி(!!!) பெருங்குடி குப்பை மேட்டுல போடறது...ம்ஹூம்ம்ம்...

சுஜாதா இருந்திருந்தார்னா இன்னும் பெட்டராயிருந்திருக்குமோன்னு சில கருத்துகள். ஆனா அவர் இருந்தபோது, அவரைப் பக்கத்துல வெச்சுக்கிட்டே, அவரே எழுதின "விக்ரம்" கதையை நாறடிச்சாங்க. அந்தப் படத்துக்கு கமல் வேற. சரி.... போதும்.

"காதல் அணுக்கள்" பாடல். ஒரு சந்தேகம். "செந்தேனில் வஸாபி...." வஸாபி ஒரு ஜப்பானிய கிழங்கு. மொளகா மாதிரி காரம். அதைத் தேனில் ஊறப்போட்டா ரெண்டுமே சகிக்குமான்னு தெரியல. ஒரு வேளை "செந்தேன்ன வஸாபி..."யா இருக்குமோ? அம்மிணி கண்ணு அவ்வளவு ஷார்ப்பா?

நண்பர் ஃபேஸ்புக்ல எழுதியிருந்தார். "முதல் டெஸ்ட் மேட்ச் கடைசி ஓவர்கள்ல விவிஎஸ்ஸை கொஞ்சம் 'கன்னிங் லிப் ரீடிங்' பண்ணினேன். ஓஜாவை திட்ற மாதிரி இருந்தது"ன்னு. இப்பிடி ஒரு லிப் ரீடிங் தேவையான்னு கமெண்ட். அதுக்கு அவர் சொன்ன பதில் டாப். "அவனவன் இதழ்ல கதையே எழுதறான். படிக்கலைன்னா கோச்சுக்க மாட்டானா?". நன்றி ஸ்ரீஜி.

காமன்வெல்த் விளையாட்டு. அந்த ஊழல் சந்தி சிரிச்சாச்சு. 70000 கோடியாம். எத்தனை சைபர்னு எண்ணும்போதே கொட்டாவி வருது. அட... வீட்டுக்கு கட்டிக்கிட்டு போங்கப்பா. அதையெல்லாம் நாங்க ஒண்ணுமே சொல்ல முடியாது; வெறுமனே வேடிக்கை பாத்துட்டு, பஸ்லயும், ஃபேஸ்புக்லயும், ட்விட்டர்லயும் பேசி பொழுது போக்கிப்போம். போட்ட பட்ஜெட்ல உள்ளூர் விளையாட்டு வீரர்களையும் கொஞ்சம் கவனிச்சு நல்ல பயிற்சி குடுத்திருக்கலாமே. குமுதம்களும், விகடன்களும் வசதியில்லாத எத்தனையோ விளையாட்டு வீரர்களைப் பத்தி எழுதியிருக்காங்க. அந்த அபாக்கியவான்களும் கண்ல தண்ணி வர கெஞ்சியிருக்காங்க. அவங்கள்லாம் கண்லயே படலயா? இவ்வளவு ஊழல் பண்ணியாச்சு. பயிற்சின்னு தனியா ஒரு பட்ஜெட் போட்டு அதுலயும் கொஞ்சம் ஏப்பம் விட்டிருந்தாலும் மிச்சமாவது அந்த பாவப்பட்ட ஜீவன்களுக்கு போயிருக்கும். என்ன செய்ய? மேரா பாரத் மஹான் !!

கொசுறு : ஃபேஸ்புக்கை "முகநூல்"னு தமிழ்ப்'படு'த்தறாங்க. அப்பிடிப் பாத்தா ட்விட்டரை "கீச்சான்"ன்னு மொழிபெயர்க்கலாமே. ட்விட்டை "கீச்"சுன்னும் ட்விட்டுகிறேன்கறதை "கீச்சுகிறேன்"ன்னும் சொல்லலாமே. சில அடிப்படை விதிகளின்படி பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது. அப்படியேதான் பாவிக்கணும்னு சொல்றாங்க. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகில் இதெல்லாம் ப்ராண்ட் பெயர்கள். அப்படியே இருக்கட்டுமே. (சிங்கையில் நமது பதிவர்கள் ப்ராண்டுக்கு "பொரிம்பு" என்ற அழகான பதத்தை உபயோகிக்கிறார்கள்)

12 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

ILA (a) இளா said...

Twitterக்கு நுண்ணிடுகைன்னு பேர் இருக்குங்களே.

Thamira said...

செந்தேனில் வஸாபி.. இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன். அப்புறம் முகநூலெல்லாம் சும்மா ஜாலிக்கு சொல்றது பிரதர். அதப்போயி சீரியஸா எடுத்துகினு..

அப்புறம் இளா சொல்ற நுண்ணிடுகை நல்லாயிருக்கே.. இப்போதான் கேள்விப்படுறேன்.

நர்சிம் said...

twitter குக்கூ.

செம பதிவு. வஸாபி மேட்டர் கலக்கல்.

பரிசல்காரன் said...

வஸாபிக்கு இதுதான் அர்த்தமா? இப்பதாங்க தெரிஞ்சது...

நெம்ப நன்னிங்க...

கிரி said...

//சிங்கைல ரெண்டாம் நாளே கொஞ்சம் காத்தாடினாலும், மூணாம் நாள் போய் பார்த்தோம்//

மகேஷ் இது உங்களுக்கே ஓவரா தெரியல.. சாதாரணமாக தமிழ் படத்தை நான்கு திரையரங்கில் வெளியிடுவதை எந்திரனில் 13 திரையரங்கில் வெளியிட்டார்கள்.. அவதார் கூட இந்த அளவிற்கு அதிக திரையரங்கில் வரவில்லை (அதற்காக அதோடு ஒப்பிடுகிறேன் என்று நினைக்கவேண்டாம்). உங்களுக்கே தெரியும் தமிழ் படத்திற்கு இது அதிகம் என்று அப்படி இருக்கும் போது சிங்கை போன்ற சிறிய நாட்டில் 100% கூட்டம் இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்.

அதுவும் இரண்டாவது நாளே காத்தாடுது என்று நக்கலாக சொல்வதெல்லாம்... மீண்டும் ஒரு முறை உங்க இடுகையில் ஐந்தாவது வரியை படிங்க :-)

நான் யார் இடுகையிலும் சென்று இதை எல்லாம் விளக்குவதில்லை அது அவசியமில்லை பயனில்லை என்று தெரியும்.. இதில் ஏன் சொல்கிறேன் என்றால் .. மகேஷ் என் நண்பேன்டா!

Mahesh said...

@ ILA : நுண்ணிடுகை - நல்லாயிருக்கே.... ஆனா அது ஒரு வகைப்படுத்துதல்ங்கற வரை சரி. முகநூல் மாதிரி நேரிடையா வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கறதுதான் அவசியமில்லைங்கறது என் கருத்து.

@ஆதி : ஜாலியா இருக்கிற வரைக்கும் சரி...

@ பரிசல் : நன்றிங்க...

@ கிரி : எந்தப்படம் எவ்வளவு நாள் ஓடினாலும் அதுல எனக்கு ஒரு பைசா லாபமில்லை. நான் எழுதினது நக்கலா இருக்குன்னு நினைச்சா நான் எதுவும் சொல்ல முடியாது. படம் அட்டகாசமா ஒடுதுங்கறதை நான் தனியா சொல்லணும்னு அவசியமே இல்லை. எல்லாருக்கும் தெரியும்.

எம்.எம்.அப்துல்லா said...

இன்னைக்கி ஒரே மழை.

அறிவிலி said...

தமிழனோட தார்மீக கடமையை இப்பத்தான் ஜஸ்ட் முடிச்சுட்டு வந்தேன்.

அப்பறம்... நீங்களும் கீச்ச ஆரம்பிச்சுட்டீங்களா?????

Mr(s) G :-)) said...

நாம எழுதினத பார்த்து சந்தி சிரிக்காமல் இருந்தா சரி...
நன்றிகள் உரித்தாகுக...

Mr(s) G :-)) said...

வஸாபியும் தேனும் - ஒரு அற்புதமான காம்பினேஷன்! சில பல தாய் மற்றும் ஜப்பானிய உணவகங்களில் சாலடுக்குமேல் தெளிக்கும் ஒரு கலவையாக உண்டிருக்கிறேன். (அப்பா! டிரெஸ்ஸிங்னு சொல்ல முடியாம என்ன பெரிய பந்தாவோ?) எந்திரன் திரைப்படத்தில் செல்வி சனா அவர்கள், முனைவர் வசீகரனிடம் மிகவும் காட்டமாக காதல் ரத்து செய்து விடுவதாகக் கூறி பயமுறுத்தியதால் அவர் வஸாபியாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறார். பின் அவரே 2^9 அதாவது 512 முத்தங்களை எழுச்சியுடன் தரச் சம்மதித்ததால் செந்தேனுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறார் என்பது காண்க!

Mahesh said...

@ அப்துல்லா : இப்பிட்யாவது சென்னைல மழை பெய்யட்டும்...

@ அறிவிலி : இன்னும் கீச்ச ஆரம்பிக்கலை... கூச்சமா இருக்கு !!

@ Mr(s) G :-)) : நன்றிக்கு நன்றிக்கு நன்றி !! உங்கள் விளக்கத்தினால் சேர மன்னனின் (நாங்க கோயம்புத்தூருங்கோவ்) ஐயப்பாடு அடியோடு தீர்ந்தது. ஆயிரம் பொற்காசுகளும் உமக்கே !!!

பழமைபேசி said...

அண்ணே, வணக்கம்; நலமா?