Sunday, May 9, 2010

கிச்சடி 11.05.2010

"சொறா" படத்தைப் பாக்காமயே நிறையப் பேர் நிறைய எழுதியாச்சு. நான் ஒருத்தந்தான் பாக்கின்னு நினைக்கிறேன். அது ஒரு குறையா இருக்கலாமா? நம்ம நண்பர்கள் வட்டத்துல பேசும்போது கேட்டவை:

"கமல் ஒரே படத்துல் பத்து ரோல்ல நடிச்சாரு ; விசய் பத்து படத்துல ஒரே ரோல்ல நடிக்கிறாரு (!!) "

"நல்ல வேளை.... ஒவ்வொரு படத்துலயும் வேற வேற ஹீரொயின்க... இல்லாட்டா என்ன படம் பாத்துக்கிட்டுருக்கோம்னே தெரியாது"

"இது ஒருதடவை பாக்கறதுக்கு வேட்டைக்காரன் 100 தடவை பாக்கலாம்"

"அம்பது படம் ஆயிடுச்சா? சீக்கிரம் அரசியலுக்கு இழுத்துக்கிட்டு போங்கப்பா.... அங்கயாவது வேற மாதிரி நடிக்கிறாரான்னு பாக்கலாம்"

*****************************



சிங்கப்பூரின் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட "மரினா பே சேண்ஸ்" உல்லாச/சூதாட்ட நகரம் (சிலருக்கு நரகம்) திறந்தாச்சு. (அதுலயும் அந்த டி.என்.ஏ ஏணி மாதிரி நடைபாலம்... க்ளாஸ்... அது ஒரு ஆர்கிடெக்சுரல் மார்வல்!!) சூதாடறதுக்கு க்யூவுல நின்னு என்னவோ தலைவர் படம் ரிலீஸ் முதல் ஷோ பாக்கற மாதிரி திடுதிடுன்னு ஓடறாங்க மக்கள். யார் அதிர்ஷ்டம் எப்பிடியோ? திறந்து 3 வாரம் ஆச்சு. தினமும் ஏதாவது பிரச்னைக இருந்துக்கிட்டே இருக்கு போல. "கரண்ட் இல்ல ; ஏசி நின்னு போச்சு ; லிஃப்ட்ல மாட்டிக்கிட்டாங்க ; சிங்கப்பூர் இமேஜ் டேமேஜ்"ன்னு தினம் ஒரு புலம்பல். இதெல்லாம் நமக்கு சாதாரணமப்பா.




*****************************

நண்பர் ஒருத்தர் சவுதில வேலை பாக்கறார். ஊருக்கு வந்துபோக 3 மாசம் முன்னாலயே லீவு வாங்கி, டிக்கட் எல்லாம் புக் பண்ணிட்டு, கிளம்பறதுக்கு 2 நாள் முன்னால போய் ஆபீஸ்ல பாஸ்போர்ட் கேட்டிருக்காரு. பகீர் !!! பாஸ்போர்ட்டைக் காணோமாம் !! மறுநாளும் அகப்படல. நொந்து போய், கிளம்பற அன்னிக்கு கார்த்தால போய் நானே தேடிப் பாக்கறேன்னு சொல்லி தேடியிருக்காரு. இன்னொரு பகீர் !! டேபிள் ஆடுதுன்னு டேபிள் காலுக்கு முட்டுக் குடுக்கறதுக்காக ரெண்டு பாஸ்போர்ட்டுகளை வெச்சுருக்காங்க. எப்பிடிடா இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்கன்னு மனசுக்குள்ள வசவு பாடிட்டு, அடிச்சு புடிச்சு ஊர் வந்து சேந்தாச்சு. ஆனா அவங்க ரொம்ப சாதாரணமா "அதான் கிடைச்சுடுச்சுல்ல... கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்"னு விரட்டிட்டாங்களாம். மூளை தலைக்குள்ளதான் இருக்கா இல்லை முட்டில இருக்கான்னு புலம்பித் தள்ளிட்டாரு. ராட்சசன் உசுரு ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு கிளி கிட்ட இருக்குங்கற மாதிரி, நம்ம உசுரு அந்த பாஸ்போர்ட். அதுவும் சவுதி மாதிரி நாட்டுல.... ம்ம்.... என்ன சொல்ல?

*****************************

ஓசில டிக்கட் கிடைச்சுதுன்னு "அயர்ன் மேன் 2" குடும்பத்தோட போனோம். காமிக் புக்கை விடவும் காமிக்கலா இருந்தது. படம் அமெரிக்காவுல ஹிட்டாம். என்னங்கடா உங்க ரசனை? டைட்டானிக், பொசைடான், ஐடி4, ஆர்மகெட்டான்ன்னு பிரமாண்ட படங்களை எடுத்த கை காயறதுக்குள்ள இது மாதிரி பேத்தல் படங்களும் எடுக்கறீங்க. அம்புட்டு பெருசா ஒரு வில்லனை டெவலப் பண்ணிட்டு பொசுக்குனு அவன் கதையை முடிச்சுட்டு, கதையை முடிக்க முடியாம.... போங்கப்பா. அடுத்த"அயர்ன் மேன்3" ஓசி டிக்கட் கிடைச்சா ....பாக்கலாம்......பாத்துட்டு இதே மாதிரி......

*****************************

13 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

Thamira said...

எல்லாம் ஓகே தல.. அந்த டிஎன்ஏ பாலம் படத்தைப் போட்டிருக்கலாம்ல..

Mahesh said...

ஆதி அண்ணே.... போட்டாச்சு...போட்டாச்சு !!

ஸ்வாமி ஓம்கார் said...

அமெரிக்கா சொறா பத்தியும், நம்ம ஊரு அயர்ன் மேன் பத்தியும் எழுதியது நல்ல இருக்கு...

அடுத்தவாட்டி சிங்கை வந்த மரினா கூட்டிட்டு போவிங்களா? எனக்கு ஜோதிட அறிவு இருக்கானு கொஞ்சம் செக் பண்ணனும் :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சார்.. மற்க்காம படத்தை பார்த்துடுங்க..
( நாங்க மட்டும் பட்டா போதுமா?.. ஹா..ஹா..)

பழமைபேசி said...

அண்ணே, நல்லா இருக்கீயளா??

வடுவூர் குமார் said...

அடுத்த‌வ‌ர் க‌ட‌வுச்சீட்டை வைத்திருப்ப‌து குற்ற‌ம் என‌ யாராவ‌து அவுங்க‌ளுக்கு சொல்ல‌மாட்டாங்க‌ளா? சொன்னாலும் புரியாதா??
ஒமானிலும் சில‌ நிறுவ‌ன‌ங்க‌ள் இப்ப‌டித்தான் பிடித்து வைத்துக்கொள்கிறார்க‌ள்.

anujanya said...

ரொம்ப பிசியா? எழுதி ரொம்ப நாட்கள் ஆயிடுச்சே!

கிச்சடி நல்லா இருக்கு. பாஸ்போர்ட் - எ.கொ.ச.?

அனுஜன்யா

Anonymous said...

//2 நாள் முன்னால போய் ஆபீஸ்ல பாஸ்போர்ட் கேட்டிருக்காரு//
அது என்ன கதைங்க. இப்படி மத்தவங்க பாஸ்போர்ட் வைச்சிருந்தா குற்றமாச்சே

அறிவிலி said...

எதையும் ஒருமுறைன்னு நம்ம தலைவர் சொன்னது மாதிரி அந்த நரகத்துக்கு ஒரு தடவ போயிட்டு வருவமா?

எப்ப ஃப்ரீன்னு சொல்லுங்க?

Mahesh said...

நன்றி ஸ்வாமி ஓம்கார்... போவோமா? உங்க கூட போனாலாவது நமக்கு அதிர்ஷ்டம் இருக்கான்னு பாக்கணும் :)

நன்றி பட்டாபட்டி... அய்யோ...ஏங்க?

நன்றி மணியாரே...

நன்றி அனுஜன்யா.... நீங்க மட்டும்???

நன்றி வடுவூர்குமார்....

நன்றி சின்னஅம்மிணி... சவுதில பல கம்பெனிகள்ல பாஸ்போர்ட்டை வாங்கி வெச்சுகிட்டு ஒர்க்பர்மிட் மட்டும் தராங்க. ஊருக்கு வரும்போது மட்டும் திருப்பி தருவாங்க.

நன்றி அறிவிலி.... ம்கூம்... நான் ஸ்வாமி ஓம்கார் கூடதான் போவேன் !

நசரேயன் said...

தலை உங்க இடுகையை நேத்தே படிச்சிட்டேன், பின்னூட்டம் போடும் முன்னே கூகுளே ஆண்டவர் சதி பண்ணிட்டாரு.

JAy said...

சுறா படம் பார்த்திங்கன்னா அந்த DNA பாலத்தில் இருந்து தற்கொலை தான் செய்ய வேண்டியது இருக்கும்.

ஜோசப் பால்ராஜ் said...

// ஸ்வாமி ஓம்கார் said...
அமெரிக்கா சொறா பத்தியும், நம்ம ஊரு அயர்ன் மேன் பத்தியும் எழுதியது நல்ல இருக்கு...

அடுத்தவாட்டி சிங்கை வந்த மரினா கூட்டிட்டு போவிங்களா? எனக்கு ஜோதிட அறிவு இருக்கானு கொஞ்சம் செக் பண்ணனும் :)

May 10, 2010 11:23 //

சுவாமி, நீங்க ஜாலியா உள்ள போகலாம், ஆனா நாங்க உள்ள வர 100 டாலர் கட்டணம் கட்டணும். நீங்க எங்களுக்கும் கட்டி கூட்டிட்டுப் போயி அங்க நீங்க சம்பாதிக்கிறதுல 50% குடுக்க சம்மதிச்சா வர்றோம்.