Thursday, November 26, 2009

நோ ஷாப்பிங் விரதம்


நவம்பர் 28. பல நாடுகள்ல (குறிப்பா யூ.கே) இன்னிக்கு "பை நத்திங் டே". அதாவது கடைக்குப் போய் எதையும் வாங்குவதை தவிர்க்க சொல்கிற நாள். இந்த அல்ட்ரா மாடர்ன் உலகத்துல தேவைக்கு வாங்கறதை விட பகட்டுக்கு வாங்கறது அதிகம்கறது ஒரு சிலரோட சித்தாந்தம். கூடவே பூமி சூடாகுதல், வானிலை மாற்றங்கள் (எல் நினோ மாதிரி), மறு சுழற்சியை ஊக்குவித்தல் மாதிரியான காரணங்களுக்காகவும் இந்த "எதையும் வாங்காதே" நாள்.

இதுலயே சில தீவிர சித்தாந்திகள், இந்த ஒருநாளை ரமலான் நோன்பு மாதிரி இருக்கணும்னு சொல்றாங்க. அதுவும் எப்பிடி? வீட்டுல லைட் எதுவும் போடாம, கேஸ் உபயோகிக்காம, கார் ஓட்டாம, கம்ப்யூட்டர், டி.வி., ரேடியோ, போன், மொபைல் எதையும் உபயோகிக்காம - சுருக்கமா இயற்கையை தொந்தரவு செய்யக்கூடிய எதையும் செய்யாம - இருக்கணும்னு பிரச்சாரம் பண்றாங்க. கூடவே பணத்தை பெட்டில போட்டு பூட்டி வைக்கறது, கடன் அட்டையை வெட்டிப் போடறதுன்னு சில நூதன முயற்சிகள் வேற. இது கொஞ்சம் அதிகமாத் தெரிஞ்சாலும் ஒருவிதத்துல பாக்கப்போனா இது கூட நல்லதுதான்னு தோணுது. நுகர்வோர் சந்தைங்கற பேர்ல பல பகட்டு / சொகுசுப் பொருட்கள்/சேவைகள் எல்லாம் இன்றியமையாததுங்கற அந்தஸ்துக்கு உயர்ந்துடுச்சு. ஒரு 10 வருஷம் முன்னாடி இதெல்லாம் இல்லாம எப்பிடி இருந்தோம்னு பிரமிப்பா இருக்கு. "கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ?"னு ஒரு சின்ன குற்ற உணர்வு இல்லாம இல்லை.

ஒருநாள் இப்பிடி விரதம் இருந்தா எல்லாம் சரியாயிடுமா?ஆகாதுதான். ஆனா, இப்பிடி ஒரு சிந்தனை நம்மள்ல ஒரு பகுதி மக்களுக்கு இருக்கு ; அடுத்த சந்ததியினரையும், இந்த பூமியைப் பத்தியும் கவலைப்படணும் ; அதுல நம்ம பங்கு என்ன? அப்பிடிங்கற ஒரு சின்ன விழிப்புணர்வு வந்தாலே இது வெற்றிதான் அப்பிடிங்கறாங்க. இது முழுக்க முழுக்க சுயபங்கேற்புதான். யாரும் யாரையும் கைய முறுக்கி வாங்கதடான்னு சொல்லப்போறதில்லை. "அய்யய்யோ... யாவரத்தை கெடுக்கறாங்களே"ன்னு சில சில்லறை சந்தை நிறுவனங்கள் (வால்மார்ட் மாதிரி) கூப்பாடு போட்டாலும், "அடப் போப்பா, வாங்கறவன் வாங்கத்தான் செய்வான்.... குதிரை கும்பி காஞ்சா தன்னால புல்லைத் திங்கும்"னு சில நிறுவனங்கள் இதை கொஞ்சம் கூட சட்டை செய்யலை. இது எவ்வளவு தூரம் வெற்றியாகும், எந்த அளவுக்கு மக்கள் பங்கேற்பு இருக்கும்கறதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

எது எப்பிடியோ, பாஷா பட டயலாக் மாதிரி "மேட்டர் நல்லாருக்கே !!"

16 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

மங்களூர் சிவா said...

/
பல பகட்டு / சொகுசுப் பொருட்கள்/சேவைகள் எல்லாம் இன்றியமையாததுங்கற அந்தஸ்துக்கு உயர்ந்துடுச்சு. ஒரு 10 வருஷம் முன்னாடி இதெல்லாம் இல்லாம எப்பிடி இருந்தோம்னு பிரமிப்பா இருக்கு.
/

"கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ?"

எம்.எம்.அப்துல்லா said...

இதேமாதிரி பின்னூட்டம் நத்திங் டே ஒன்னு அவசியம் கொண்டுவரணும்ணே.

வால்பையன் said...

//குதிரை கும்பி காஞ்சா தன்னால புல்லைத் திங்கும்"//


பழமொழி தப்பு!
ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு!

கிரி said...

சுவாராசியமா இருக்கு..

ஆனா சேர்த்து வைத்து அடுத்த நாள் வாங்கிடுவாங்க

அறிவிலி said...

காத்தாலயே போடப்பிடாதா?இப்பத்தான் அம்மாவும் புள்ளயுமா போயி நூறு டாலருக்கு வேட்டு வெச்சிட்டு வந்தாங்க.

மணிஜி said...

/இதேமாதிரி பின்னூட்டம் நத்திங் டே ஒன்னு அவசியம் கொண்டுவரணும்ணே//

இன்று இடுகை இல்லா தினம்

Mahesh said...

நன்றி சிவா.... பின்ன?

நன்றி அப்துல்லாண்ணே... இப்பவே நம்ம இடுகைகள் எல்லாம் அப்பிடித்தான் இருக்கு... இதுல தனியா டே வேறயா?

Mahesh said...

நன்றி கிரி...

நன்றி அறிவிலி... .ஆஹா... வெச்சாங்களா ஆப்பு??

நன்றி மணீஜி... ஐ... நம்ம பக்கம் வந்துட்டாருடோய்...:")))

Mahesh said...

நன்றி வால்... .இல்லைங்க இதுதான் சரி... .நீங்க சொல்றதுதான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்....

Thamira said...

"கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ?"னு ஒரு சின்ன குற்ற உணர்வு இல்லாம இல்லை// ஆமால்ல..

அப்புறம் அப்படியொரு டே இங்கேயும் இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஒரு நாளைக்கு நாலு வாட்டி கடைக்கு போக முடியலை.! அன்னிக்கு கடைக்குப் போனால் போலீஸ் புடிச்சுக்கும்னு சட்டம் போட்டாலும், ரமா பரவாயில்லைன்னு என்னை கடைக்கு அனுப்பிச்சாலும் அனுப்புவாங்க.. அவ்வ்..

பழமைபேசி said...

அண்ணே, விளையாடுறீங்களா? இங்க இன்னைக்குதான் Thanks Giving Holiday Sale. நான் ஊருக்கு போக சிலது வாங்கலாம்னு இருக்கேன்!

Mahesh said...

நன்றி ஆதி.... அவ்வளவு டெரரா? :)

நன்றி மணியாரே... போங்கண்ணே... உங்க ஊர்ல தும்முறது இருமறதுக்குக் கூட ஒரு நாள் வெச்சு கொண்டாடுவாங்க... பர்சைக் காலி பண்ணுவாங்க....

நசரேயன் said...

வீட்டிலே சொல்லிட்டீங்களா இந்த விஷயத்தை

Mahesh said...

நன்றி நசரேயன்... ஹி ஹி ஹி..

ஜோசப் பால்ராஜ் said...

மாசத்துக்கு ஒருநாள் கொண்டாடுனாக் கூட தப்பில்ல.

*இயற்கை ராஜி* said...

மேட்டர் நல்லாருக்கே :-))