Sunday, September 6, 2009

Inglourious Basterds (2009) - சினிமா விமர்சனம்



க்வென்டின் டரென்டினோவோட இந்தப் படத்தை ஜெனீவால போன மாசம் ரிலீஸான அன்னிக்கே ராத்திரி ஷோவுக்கு போனோம். நாவல் படிக்கிற மாதிரி 5 அத்தியாயங்கள். கொஞ்சம் உண்மை;கொஞ்சம் கற்பனை கலந்த கதை.

இரண்டாம் உலகப் போர் காலத்துல நாசிக்களால் ஆக்கிரமிக்கப் பட்ட ஃப்ரான்ஸ் பகுதில இருக்கற மிச்ச மீதி யூதர்களை தேடிக் கண்டுபிடிச்சு 'மேல' அனுப்பற 'யூத வேட்டைக்காரன்' மேஜர் ஹனஸ் லாண்டா (க்ரிஸ்டஃப் வால்ட்ஸ்). படம் ஆரம்பமே டெரரா இருக்கு. யூதர்கள் ஒளிஞ்சுருக்கற வீட்டுக்குப் போய் பேசிப் பேசியே பயத்தை உண்டாக்கி ஒரு குடும்பத்தையே நாசமாக்கறான். ஒரே ஒரு பொண்ணு 'ஷோசானா' மட்டும் தப்பிச்சு போக விட்டுடறாங்க.

அமெரிக்கப் படையோட ஒரு சின்ன யூதர்கள் பிரிவு (பாஸ்டர்ட்ஸ்) நாசிக்களை வேட்டையாட நார்மண்டிக்கு ரகசியமா வராங்க. ஒரே நோக்கம்... கண்ல படற நாசிக்களையெல்லாம் கொன்னு தலையை (தலையவே இல்லை... ஸ்கால்ப் மட்டும்) சீவணும். குறைஞ்சது 100 பேரை சீவணும். படைத் தலைவன் ஆல்டோ (ப்ராட் பிட்).

முதல் ரீல்ல தப்பிச்சுப் போன பொண்ணு அவங்க அத்தையோட சினிமா தியேட்டரை நிர்வாகம் பண்றா. யதேச்சையா நாசி கொ.ப.செ ஜோசஃப் கோயபல்ஸ் (நம்ம கருணாநிதி சொல்வாரே... அதே ஆளுதான்) எடுத்த ஒரு படத்தோட பிரிவ்யூக்கு இந்த சினிமா ஹாலை தேர்ந்தெடுக்கறாங்க. எல்லா மேல்நிலை நாசித் தலைவர்களும் - ஹிட்லர் உள்பட - எல்லாரும் வருவாங்கன்னு தெரிஞ்சு மொத்தமா பழிவாங்க திட்டம் போடறா ஷோசானா.

இந்த சினிமா ப்ரிவ்யூ விஷயம் தெரிஞ்சு 'ஆபரேஷன் கினோ'ன்னு ஒண்ணு ப்ளான் பண்ணி நாசிக்களை தீத்துக்கட்ட சைடுல ஒரு கும்பல் திட்டம் போட்டு அதுல பாஸ்டர்ட்ஸ் படையும் கூட்டு. உதவிக்கு ஒரு நடிகை வேற.

இப்பிடி ரெண்டு ப்ளான்க கொஞ்சம் கொஞ்சமா நடந்தேறி வர, கடைசில என்னதான் ஆச்சு? ஹிட்லரைக் கொன்னாங்களா? ப்ளான் ஒர்க் அவுட் ஆச்சா? நான் சொல்லி ஸ்பாயில் பண்ண விரும்பல. படத்தையே பார்க்கறது பெட்டர்.

க்வெண்டின் டரென்டினோவோட பெஸ்ட் படம்னு சொல்லலாம். வழக்கம் போல அமர்த்தலான ஃப்ளோ. டயலாக் அதிகமா இருந்தாலும் அதுதான் படத்தோட ஹைலைட். அதுலயும் ப்ராட் பிட்டோட அலட்சியமான அமெரிக்கன் ஆக்ஸெண்ட் கலக்கல்னா, க்ரிஸ்டஃப் வால்ட்ஸோட பேச்சு, பாடி லேங்குவேஜும் கலக்கலோ கலக்கல். பெஸ்ட் ஆக்டர் அவார்ட் வேற. இவர் நடிப்பைப் பாக்கறதுக்காகவே இன்னொரு தடவை போலாம்.

காமெடி கலந்த ஆக்சன் படம்னாலும் (ஹிட்லரைக்கூட காமெடி பீஸ் ஆக்கிட்டாங்க) படத்துல கொஞ்சம் வன்முறை அதிகம். அதுவும் பேஸ்பால் பேட்டால அடிச்சே கொல்றது, நெத்தில கத்தியால அழுத்தமா ஸ்வஸ்திக் போடறது, தொடைக்கு நடுவுல பிஸ்டலை வெச்சு டுமீல், டுமீல்.... இதெல்லாம் சிலரை கொஞ்சம் நெளிய வெக்கலாம். டயலாக் ஃப்ரென்ச், ஜெர்மன், இங்கிலீஷ்னு மாறி மாறி இருக்கு. சப்டைட்டிலோட பாக்கறது பெட்டர்.

மொத்தத்துல கலக்கலான காமெடி கலந்த cold post-WW2 adventure film.

12 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

சாயுங்காலம் வந்து படிக்கிறனுங்...

சி தயாளன் said...

பார்க்கவேண்டிய படம்...இன்னும் சிங்கைக்கு படம் வரவில்லை என்று நினைக்கிறேன் :-)

வால்பையன் said...

பாத்துருவோம்!

ramalingam said...

பேட்டால் அடித்துக் கொல்பவர்தான் eli roth. ஹாஸ்டல் பட டைர
க்டர்.

அறிவிலி said...

//வால்பையன் said...
பாத்துருவோம்!//

ரிப்பீட்டு.

Thamira said...

அப்பிடி ஒண்ணும் ஆர்வத்தை தூண்டுற மாதிரி இல்லையோ.. ஒருவேளை எனக்குதான் இப்படியோ?

Mahesh said...

நன்றி மணியாரே... உங்க வருகையே பெரிய விஷயம்... :)

நன்றி டொன்லீ... இந்த வாரம் சிங்கைல வெளியீடுன்னு நினைக்கிறேன்..

பாருங்க வால், அறிவிலி... உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்...

நன்றி ராமலிங்கம்... செய்திக்கு நன்றி,,

நன்றி ஆதி... ஏங்க கந்தசாமி என்ன ஆர்வத்தைங்க தூண்டுச்சு? இப்பல்லாம் யாரும் கதைக்கு பாக்கறதில்லைன்னு நான் நினைக்கிறேன்... எக்சிக்யூஷன் எப்பிடி? அதுதான் பிரதானமாயிடுச்சு.

நர்சிம் said...

பார்க்கணும்.

எம்.எம்.அப்துல்லா said...

தமிழ்ல டப் செய்து கலைஞர் டி.வில போடுவாங்க..அப்ப பார்த்திடுறேன் (அப்பதான் நமக்கு புரியும்)

:)

கிரி said...

//என்னதான் ஆச்சு? ஹிட்லரைக் கொன்னாங்களா? ப்ளான் ஒர்க் அவுட் ஆச்சா? நான் சொல்லி ஸ்பாயில் பண்ண விரும்பல. படத்தையே பார்க்கறது பெட்டர்.//

எங்களுக்கு தான் தெரியுமே! ஹிட்லர் தற்கொலை பண்ணிக்கிட்டாருன்னு..அதனாலே இங்கே இருந்து எஸ்கேப் ஆகி இருப்பாரு ஹி ஹி

ஜோசப் பால்ராஜ் said...

இப்படத்தை காண என்னை உடனடியாக ஜெனீவா அழைத்து செல்லுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அறிவிலி said...

ஏன் இப்படி ஸ்பெல்லிங்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். கூகிள் இப்பிடி சொல்லுது.
//Urban Dictionary:Basterd Basterd. A clever misspelling of the word BASTARD used to ensure your movie title stands out when Googled. Quentin Tarantio's movie "Inglorious Basterds" ...
www.urbandictionary.com/define.php?term=Basterd... - Cached - Similar -//
இப்பிடியெல்லாம் கூடவா யோசிப்பாய்ங்க?