Tuesday, September 22, 2009

தமிழ் சினிமாவில் மதவாதம், சாதீயம் !!


"உன்னைப் போல் ஒருவன்" படத்துல கமல் இந்துத்வாவை சப்போர்ட் பண்ணியிருக்காருன்னு விமர்சனங்கள் படிச்ச பிறகு அப்பிடியே உறைஞ்சு போயிட்டேன். மறுபடி பழைய நிலைக்கு உருகி வர 4 நாளாயிடுச்சு. அப்பறம் யோசிச்சுப் பாத்தபோதுதான் தெரிஞ்சுது தமிழ் படங்கள்ல மதவாதம் எப்பிடி தலை விரிச்சு தையா...தக்கா...ன்னு ஆடுதுன்னு. மறுபடி உறைஞ்சு போறதுக்குள்ள யோசிச்சதை பதிவாப் போட்டுடலாமேன்னு...

ராமராஜன் : அவர் படங்கள்ல பெரும்பாலும் ஆரஞ்சுக் கலர் சட்டை போட்டிருப்பார். சரி... கூட்டத்துல தொலைஞ்சுடாம இருக்கத்தான் போலன்னு அப்ப தோணுச்சு. இப்பத்தான் புரியுது அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு அப்பவே கன்னாபின்னான்னு ஆதரவு குடுத்துருக்காருன்னு. என்னா வில்லத்தனம்?

கவுண்டமணி : முறைமாமன் படத்துல பச்சை சட்டை போட்டு பாகிஸ்தானுக்கு விலை போயிட்டாரு. அய்யய்யோ... நம்ம இண்டெலிஜன்ஸ் பீரோ என்னதான் பண்ணிக்கிட்டுருந்தாங்க?

மாளவிகா : "கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு..." வெறும் பாட்டு இல்லய்யா.... பெரியாரோட கொள்கைகளை பரப்பி பார்ப்பன எதிர்ப்பை தூண்டியிருக்காங்க. இது கூட புரியாம நீங்க எல்லாம் 'பே...'ன்னு படம் பாத்துருக்கீங்க. உங்களையெல்லாம்.....

சத்தியராஜ் : 'தங்கம்' படத்துல விவேகானந்தர் மாதிரி கெட்டப்புல வந்தாரு. ஆஹா.. கமலுக்கப்பறம் இவனுக்குத்தாண்டா எந்த வேஷமும் கச்சிதமா பொருந்துதுன்னு சிலாகிச்சீங்க.... போங்கய்யா.... உண்மைல அது இந்துத்வாவுக்கு சப்போர்ட்டு. இது கூட புரியலைன்னா நீங்க எல்லாம் என்னதான் படம் பாத்து பாழாப் போனீங்களோ?

ரஜினிகாந்த் : எல்லாப் படத்துலயும் கழுத்துல ருத்திராட்சத்தோட வந்து 'ஆண்டவன்... ஆண்டவன்..."னு சொன்னதெல்லாம் என்னங்கறீங்க? அப்பட்டமான இந்துத்வா. பாஷா படத்துல கூட ஒரு முஸ்லீம் பேரை வெச்சிக்கிட்டு மும்பை தாதாவா இருப்பாரு. தமிழ்நாட்டுக்கு வந்ததும் 'மாணிக்கம்'னு இந்து பேர் வெச்சு நல்லவனாயிடுவாரு. நோட் பண்ணீங்களா? இன்னொரு வாட்டி டிவிடியோ, .... தொ(ல்)லைக்காட்சில 1000வது முறையாவோ பாருங்க. அப்பவாவது புரியுதான்னு பாக்கலாம்.

கமலஹாசன் : அய்யய்யோ... பேர்லயே எவ்வளவு சிக்கல் பாருங்க? "கமல்ஹாசன்"னு சமஸ்கிருதப் பேரா இல்ல 'கமால் ஹசன்'ன்னு முஸ்லீம் பேரான்னு குழப்பறாரே.... பேர்லயே இவ்வளவு பேஜார்னா... படமெல்லாம்.... நினக்கவே குலை நடுங்குது... இப்பிடி ஒரு மதவாதியா?

இதெல்லாம் போக விக்ரம், ஆர்யா, ஷாம், நயன், அஸின்.... இவுங்களுக்கெல்லாம் அவங்க உண்மையான பேரைச் சொல்ல விடாம இந்து பேரா வெச்சு நம்மளையெல்லாம் முட்டாளா ஆக்கியிருக்காங்க.

அட... இதுதான் இப்பிடின்னா... பழைய படங்கள்ல வில்லனோட அல்லக்கைக பேரெல்லாம் பீட்டர், ஜான், ஸ்டெல்லா... .ஏங்க கிறிஸ்டியன் பேரா வெச்சாங்க? எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா? இப்பதான் சொல்லிட்டனே... இனிமேவாவது யோசிங்க.

அய்யய்யோ... தமிழ் படங்கள்ல எல்லாரும் எல்லாக் காலத்துலயும் மதவாதத்தையும் சாதீயத்தையும் சப்போர்ட் பண்ணி இருக்காங்களே... பதிவர்களாகிய நாம போட்டு கிழி கிழின்னு கிழிக்க வேண்டாம்? இன்னும் எவ்வளவோ சொல்லாங்க... அதுக்குள்ள நான் மறுபடியும் உறைஞ்................

39 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

Thamira said...

பின்னீட்டிங்க மகேஷ், ரொம்ம்ப உறைஞ்சுடாதீங்க.. அப்படியே கிட்டத்தட்ட இதே தொனியில் எழுதப்பட்ட 'இளா'வின் பதிவையும் பார்த்துடுங்க.. ரசிப்பீங்க..

அஹோரி said...

அருமை ... அருமை ... பிடியுங்கள் ஆயிரம் பொற்காசுகளை.

Anonymous said...

மகேஷ்,

எம்ஜியார், சிவாஜிய விட்டுட்டீங்களே?

இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.

பார்க்கப் போனா இதுகூட மாற்றுக் கருத்துத்தான்.

வால்பையன் said...

எப்படி இப்படியெல்லாம்!

வெண்பூ said...

தூள்....

குடுகுடுப்பை said...

நான் அதுக்குதான் படத்துல நடிக்கல, எதுனா முத்திரை குத்திருவாங்கன்னு.

ஆனா சூப்பர் அலசல்.

இராகவன் நைஜிரியா said...

ஹா...ஹா... சிரிச்சு சிரிச்சு வயறு வலி வந்துடுச்சுங்க...

Anonymous said...

:)

கிரி said...

:-))))

கமல் பிரச்சனையில் எந்திரன் வரும் முன்னாடியே தலைவர் தலையை உருள வைத்த மகேஷை கண்டித்து பதிவு எழுத வேண்டியது தான்.. ஹி ஹி

மாளவிகா க்கும் தனி!! இடம் கொடுத்ததற்கு உங்களை மன்னித்து விடுகிறேன் ;-)

Mahesh said...

நன்றி ஆதி, அஹோரி, அண்ணாச்சி, வால், வெண்பூ, கு.கு, ராகவன் சார், சின்னம்மிணி, கிரி.... நன்றி !!

Beski said...

ச்ச... செம காமெடிப்பா...

பரிசல்காரன் said...

பிரதிகளின் பேச்சுக்கிடையேயான மௌனத்தை புரிந்து கொள்ளாவிட்டாலும், புரிந்து கொள்ள முயற்சிக்கக்கூட மறுக்கிற உங்களைப் போன்ற பொதுப்புத்தி மனிதர்களால், கட்டமைக்கப்பட்ட நியதிகளை அறுத்தெறிந்து மாற்று சிந்தனைகளை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் பலரையும் கேலிசெய்ய மட்டும் முடிகிறதென எண்ணும்போது வலிக்கிறது.

இந்த வருத்தத்தை இங்கே பதிவு செய்துவிட்டேனென்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

மணிஜி said...

சூப்பரப்பு....தொடருங்கள்..உங்களுக்கு கரப்பான்பூச்சி விருது வழங்க சிபாரிசு செய்கிறேன்

Mahesh said...

நன்றி எவனோ ஒருவன்..

நன்றி பரிசல்.... ஏன் இந்த கொலவெறி?? அவிங்களுக்குதான் எல்லாம் தெரிஞ்சுருக்கு... உங்களுக்குமா தெரிஞ்சுடுச்சு?? அவ்வ்.....

Thamira said...

கூட்டமே வராத கடையாக பார்த்து தன் கருத்தை பதிவு செய்து விட்டு ஓடிப்போயிருக்கும் பரிசலின் வீரத்தை மெச்சுகிறேன்.. ஹிஹி.!

(இந்தக்கமெண்டை எழுதும் போதுஎனக்கே சிரிப்பை அடக்கமுடியவில்லை. முதல் தடவையாக என் கமெண்டை நானே பாராட்டிக்கிறேன்.. ஹிஹி)

அறிவிலி said...

:))))

(நோ...ஈயத்தை பாத்து இளிச்சுதாம் பித்தளை அப்படின்னு நீங்க பதில் பின்னொட்டம் போடக் கூடாது)

குலசேகரன் said...

ஒருசாரார் கருத்து சொல்வர்; மற்றொரு சாரார் மாற்றுக்கருத்து சொல்வர். மூன்றாவது ஒரு சாரார், இதையும் செய்யாமல், அதையும் செய்யாமல், இருவருள் ஒருவரை பகடி செய்து இன்புறுவர்.

நீங்கள் அந்த மூன்றாம் சாராருள் ஒருவர் போலும், இங்கே உங்கள் பகடிக்கு ஆளானவர், ‘மாற்றுக்கருத்து’ சாரார்.

குலசேகரன் said...

எல்லாரும் எழுதட்டும். தத்தம் கருத்துக்களை தமக்குப்பட்டவாறு சொல்லட்டும். அவர்களின் கருத்துகளை பகடி செய்வது, ‘சொல்லாதே’ என்று மிரட்டுவதைத் திறமையாகச்செய்வதாகும்.

இப்பதிவர் அதைச்செய்து கைதட்டல் விழுமா எனப்பார்க்கிறார். அவர் எண்ணம் வீண்போகவில்லை. இருவரைத்தவிர, அனைவரும் கைதட்டிவிட்டார்கள். வேறென்னவேண்டும்.

நான் அப்படத்தைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால், எனக்குப் பிடிக்காத கருத்தையோ, அப்படத்தின் எனக்குத் தோன்றாத கருத்தையோ பிறர் முன்வைப்பின், அது ஒரு விமர்ச்கனின் பார்வையே என அதையும் படிப்பேன்.

இது கற்றோரின் செயல் என்பது என் துணிபு.

வெண்பூ said...

கள்ளபிரான்.. நாலாவது டைப் ஆளுங்களை விட்டுட்டீங்க.. மத்தவங்க எது பண்ணினாலும் திட்டுவாங்க அவங்க.. (இதை நீங்க காமெடியாத்தான் எடுத்துக்கணும்) :))))

குலசேகரன் said...

//கள்ளபிரான்.. நாலாவது டைப் ஆளுங்களை விட்டுட்டீங்க.. மத்தவங்க எது பண்ணினாலும் திட்டுவாங்க அவங்க.. (இதை நீங்க காமெடியாத்தான் எடுத்துக்கணும்) :))))//

எடுத்துக்கொள்ளலாம் காமெடியாக. அப்படியென்றால், இது ஒரு sick humor.

அன்றியும், பொதுவாக எடுக்கும்போது,

எனக்குப் தெரிவது:

‘அவர்களெல்லாரும் ஒரு கூட்டம். அது எப்போது எதையும் எதிர்க்கும்.
நாஙகளெல்லாரும் ஒரு கூட்டம். நாஙக்ள் எப்போதும் எதையும் ஆதரிப்போம்’ என்றல்லவா வருகிறது.

சரி, கிடக்கட்டும்

நாங்களெல்லாரும் ஒரு கூட்டம். நாங்கள் எப்போதும் எதையும் சிந்தித்து உணர்ச்சிகளுக்கிடைப்படாமல் தெளிந்தமுடிவெடுப்போம்’ அப்படியா?

அப்படியென்றால், நீஙகள் அறிவாளிகள். அவர்கள் முட்டாள்கள் என்றல்லவா வருகிறது?

என்னதான் சொல்லவருகிறீர்கள்? இவர் எழுதியதை காமெடி என்று எடுக்காத படசத்தில் என்ன வருகிறது?

நாளை, இப்படத்தை பார்க்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை எனக்கு இப்படத்தின் குறைகளைச் சொல்வார்களிடம் உடன்படலாம்போலிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நான் அதை வெளிக்காட்டி எழுதமுடியாது. ஏனெனில் மகேஷ் பகடி பாடுவார்; அவருக்கென்று ஒரு கூட்டம் கைதட்டும் என நான் பயபபடவேண்டும் அல்லவா? ஒருவர் இந்தப்பகடிக்கு ‘ஆயிரம் பொற்காசுகள் தருவேன்’ என்று மகேசுக்கு உசுப்பேத்தியல்லவா விட்டிருக்கிறார்!

எனவேதான், இப்படிப்பட்ட பதிவுகள், ஒருவகை மிரட்டல்களே!

Mahesh said...

நன்றி ஆதி.... இது ஜூப்பர்!!

நன்றி அறிவிலி... ஈயத்தைப் பாத்து இளிச்சுதாம் இஸம்... எப்பூடி?

மறுபடி நன்றி வெண்பூ...

நன்றி கள்ளபிரான்.... உங்க கருத்தை ஆமோதிக்கிறேன்.

Mahesh said...

எல்லாரும் பாத்துக்கோங்க.... என் பதிவுகளும் மிரட்டலாம்.. இனிமே நானும் ரவுடி.... யாராவது வாலாட்டினீங்க....ஆமாம்... தெரியும் சேதி...!!

Thamira said...

அண்ணன் பதிவுக்கும் மாற்றுக்கருத்து வந்திடுச்சேய்ய்ய்.. அண்ணனையும் திட்டிப்புட்டாங்கடோய்.. அண்ணனும் ரவுடியாயிட்டாரு.. ஹெஹே..

(கள்ளபிரான் மன்னிக்க, சும்மா விளையாட்டாக கொள்ளவும்)

அறிவிலி said...

@MAGESH

ஜீப்புல ஏறினதுக்கு வாழ்த்துகள்.

ஹ்ம்ம்ம்ம்... பொறாமையா இருக்கு

வெண்பூ said...

மஹேஷ், ஆதி,

அடங்கவே மாட்டிங்களா ரெண்டு பேரும்??? கண்ணுல தண்ணி வர் சிரிச்சிட்டு இருக்கேன்.. :)))

Mahesh said...

அண்ணன் தண்டோராவுக்கு நன்றி விட்டுப் போச்சு... கரப்பான் ஃபேமிலில என்னையும் சேத்துக்கிட்டதுக்கு ஸ்பெஷல் நன்றி !!!

Mahesh said...

//அறிவிலி said...
@MAGESH

ஜீப்புல ஏறினதுக்கு வாழ்த்துகள்.

ஹ்ம்ம்ம்ம்... பொறாமையா இருக்கு//

ஜீப்புல நானா ஏறலைய்யா... ஏத்தி விட்டுட்டாங்க... அவ்வ்வ்வ்வ்...

Mahesh said...

//கூட்டமே வராத கடையாக பார்த்து கூட்டமே வராத கடையாக பார்த்து //

சந்தடி சாக்குல ஆதி சொன்ன உண்மை கண்ணுல படலயே.... ஆதி.. உங்களோட நேர்மை புடிச்சுருக்கு !

Mahesh said...

மிஸ்டர் கள்ளபிரான்...உங்களுக்கு பொறுமையா ஒரு பதில் பின்னால சொல்லலாம்னு நினைச்சேன்...

நீங்க சொல்ற மாதிரி ஒருசாரார் ஒரு கருத்து, மறு சாரார் மறு கருத்துன்னு வெச்சுக்கிட்டாலும், நான் இங்க எழுதினதை மூணாவது அணி மாதிரி மூணாவது சாரார் மாற்றுக் கருத்துன்னு ஏன் எடுத்துக்கக்கூடாது? மத்தவங்களை பகிடி பண்றேன்னு ஏன் நினைக்கிறீங்க? அப்பிடிப் பாத்தா, இப்ப நீங்க சொல்றது நாலாவது வகை மாற்றுக் கருத்து.

எந்த ஒரு விஷயத்துக்கும் கருத்து, அதுக்கு நேர் எதிரான மாற்றுக்கருத்து... இந்த ஃபார்மட்லதான் இருக்கணும்... வேறுமாதிரி யோசிக்கக் கூடாதுன்னு சொல்றீங்களா? இதே நான், இரண்டாவது சாராருக்கு சார்பா முதல் சாராரை எதிர்த்து பகிடி (உங்க பாஷைல) பண்ணியிருந்தா பாராட்டி இருப்பீங்களா?

இரண்டாவது சாரார் எழுதின பதிவுகள்ல ஆதரிச்சௌ பின்னூட்டம் போட்டவங்கள்லாம் செஞ்சது சரி, மற்ற இடங்கள்ல பின்னூட்டல போடறவங்க உங்க கருத்தை சொல்றதை தடுக்க முயற்சிக்கறாங்கன்னு நினைக்கறீங்களா? அப்பிடி நீங்க யோசிக்க ஆரம்பிச்சா நீங்க எங்கியுமே எந்த கருத்தையுமே சொல்ல முடியாமப் போயிடும்.

உங்களுக்கு பிடிச்சதை நீங்க சொல்லுங்க. அப்பிடி சொல்றவங்களை ஆதரியுங்க. அடுத்தவங்க சொல்றதையோ, அவங்களோட சிரிக்கறவங்களையோ பாத்து நீங்க உங்களை மாத்திக்கவே வேணாமே.யாராவது அப்பிடி சொன்னா அதை இக்னோர் பண்ணிட்டு போயிட்டே இருங்க.

இவன் சொல்றதுக்கு 3 பேர் கை தட்றான், ஒருத்தான் பரிசு குடுக்கறான்னெல்லாம் நீங்க சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

எம்.எம்.அப்துல்லா said...

//இவன் சொல்றதுக்கு 3 பேர் கை தட்றான்,

//

அண்ணன் கள்ளபிரான் இப்படி சொன்னது முற்றிலும் தவறு.காரணம் நாலாவதா நானும் இருக்கேன் ஹி..ஹி..ஹி..

எம்.எம்.அப்துல்லா said...

புகுந்து விளையாடி இருக்கலாம்...லேட்டா வந்து கோட்டைவிட்டியே அப்துல்லா :(

Mahesh said...

நீங்க கோட்டை விடலை அப்துல்லா... கோட்டையை புடிச்சுட்டு வரீங்க... "சொல்ல சொல்ல இனிக்கும்" பாடகர் ஆனதை சொல்றேன்...

நசரேயன் said...

ஒகே ரைட்

செந்தில் நாதன் Senthil Nathan said...

ஹ்ம்ம்.. நல்லா தான் இருக்கு..

குசும்பன் said...

அய்யோ அய்யோ! இதுக்குதான் பாழாப்போன சினிமா பிலிம் சுருளை எல்லாம் கொளுத்தனும் என்பது!

இப்படியே விட்டா நாடு ரொம்ப கெட்டுபோய்விடும் அண்ணே வாங்க காப்பாற்றுவோம்:))))

குசும்பன் said...

ஆதிமூலகிருஷ்ணன் said...

கூட்டமே வராத கடையாக பார்த்து தன் கருத்தை பதிவு செய்து விட்டு ஓடிப்போயிருக்கும் பரிசலின் வீரத்தை மெச்சுகிறேன்.. ஹிஹி.! //

ஆதி கலக்கல்! இன்னும் சிரித்துக்கொண்டு இருக்கிறேன்!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

படம் இன்னும் பாக்கல.சீக்கிரம் பாத்துடணும்,ஆளாளுக்கு கிழிக்கிறாங்க.அப்படி என்னதான் இருக்குன்னு பாக்கணும்.

அஹோரி said...

இது வரை சுமார் 5 அ 6 முறை படித்து இருப்பேன் இந்த பதிவை. செம காமெடி. கலக்கல் போங்க.

venkatesh.s said...

உங்கள் blog மிகவும் நன்றாக உள்ளது . உங்கள் தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் சேவையை மேம்மேலும் தொடர வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி