Thursday, August 27, 2009

வெட்டாப்பு

போன ஒரு மாசமா வேலைப் பளு அதிகமாயிடுச்சு. அது மட்டுமில்லாம ஜெனீவாலயே 1 மாசம் இருக்கும்படியா ஆகிப்போச்சு. அதனால பதிவு எழுதறதுல ஒரு தேக்கம். பழமைபேசியார் சொன்ன மாதிரி ஒரு வெட்டாப்பு விழுந்து போச்சு. எழுத முடியலைன்னாலும் அப்பப்ப ரீடர்ல நாம ஃபாலோ பண்றவங்களைப் படிச்சுக்கிட்டுதான் இருந்தேன்.

சரி... வேலைகளுக்கு நடுவுல போன மாசம் கிடைச்ச சில அனுபவங்களை பகிர்ந்துக்கிட்டு மறுபடியும் எழுத்துப்பணி(!!)யை ஆரம்பிச்சுடுவோம்னுதான் இந்த துரித இடுகை.

1. க்லேஸியர் 3000 (Glacier 3000) : இது ஸ்விஸ் ஆல்ப்ஸ்ல ஒரு முக்கியமான மலையுச்சி. 3000 அடி உசரத்துல இருக்கு. பக்கத்துலயே 'லே தியப்லரே' (Les Diablarets) னு ஒரு இடம். பல சிறந்த விளையாட்டு வீரர்கள், ஹாலிவுட்/பாலிவுட் நடிகர்கள்னு பல பிரபலங்கள் தங்களோட விடுமுறை வீடுகளை இங்க வெச்சுருக்காங்க.

ஜெனீவால இருந்து மோந்த்ரூ போய், அங்கிருந்து ரயில் மாறி ஸ்டாட் (GStaad) போய், அங்கிருந்து பஸ்ல 1/2 மணிநேரப் பயணத்துல தியப்லரே கேபில் பஸ் ஸ்டேஷன் போய்... அங்கிருந்து கேபில் பஸ்ல 1/2 மணி நேரம் போனா... அப்பாடா.... ஒரு வழியா மலை உச்சிக்கு போய் சேரலாம். ரெண்டு மலை உச்சிகளுக்கு நடுவுல எந்த சப்போர்ட்டும் இல்லாம கேபில் பஸ்ல போறது ஒரு த்ரில்லிங் பயணம்.

டூரிஸ்டுகளும், உள்ளூர் மக்களும் கோடைகாலத்துல மலைநடைக்காகவே (hiking) இந்த ஏரியாவுக்கு வராங்க. ஸ்விஸ் ஒப்பன் டென்னிஸ் போட்டி ஒவ்வொரு வருஷமும் 'ஸ்டாட்'லதான் நடக்குது. நான் போன அன்னிக்கு ஃபைனல்ஸ்.

படங்கள்

2. யுங்ஃப்ரோ (Jungfrau) : இது ஐரொப்பாவின் உச்சின்னு சொல்லப்படுது. ஐகெர், மோன்க் மற்றும் யுங்ஃப்ரோயோ (Eiger, Monch & Jungfraujoch) மலை உச்சிகள் மூணும் சேர்ந்தது. டூரிஸ்டுக மொய்க்கிற இடம். ஸ்விஸ் டூர் பட்டியல்ல முதல் இடம்.

ஜெனீவா-பெர்ன்- இன்டர்லாகன்-லாடர்ப்ருன்னன்-க்லெய்ன்-யுங்ப்ஃரோ அப்படின்னு ஒரு நெடும் பயணம். ரயில் மாறி மாறி போய் சேர 5 மணி நேரம் ஆயிடுது. (இதே தூரம் இந்தியாவுலன்னா கண்டிப்பா 12 மணி நேரம் ஆயிடும்.) யுங்ஃப்ரோவுக்கு போற ரயில் பாதை முக்கால்வாசியும் மலையைக் குடைஞ்சு உள்ளயேதான். அதுக்குள்ளயே ரெண்டு மூணு ஸ்டேஷன்க வேற. மேல போனதும் சுத்தி வ்யூ பாக்கும்போது போன அலுப்பெல்லாம் தீந்துடும். கண்கொள்ளாக் காட்சிகள். பரந்த க்லேசியர். அப்பிடியே பனி ஆவியாகி மேகம் கிளம்பறது பாத்துக்கிட்டே இருக்கலாம். ஆல்ப்ஸோட பல முக்கியமான மலை உச்சிகள் எல்லாம் இங்க இருந்தே பாத்துடலாம்.

ஐசை குடைஞ்சு உள்ள ஒரு பெரிய ஐஸ் பேலஸ். அங்கங்க ஐஸ் சிற்பங்கள். குளு குளுன்னு தரை லேசா வழுக்கிக்கிட்ட்டே நின்னு பாக்கறது தனி அனுபவம். அப்பிடியே அங்க 'பாலிவுட் ரெஸ்டாரண்ட்'ல உக்காந்து ஒரு பனோரமிக் வ்யூவோட அட்டகாசமான லஞ்ச். (சும்மா சொல்லக்கூடாது... ஜெனீவால இருக்கற இந்திய ரெஸ்டாரண்டுகளை விட கம்மி விலைல சூப்பர் டேஸ்ட்...)

3. பதிவர் 'டுபுக்கு'வுடன் ஒரு சந்திப்பு : குடும்பத்தோட 1 வாரம் ஸ்விஸ் சுற்றுப்பயணம் வரதா சொல்லியிருந்தார். யதேச்சையா என்னுடைய 2 வார வேலை 4 வாரம் இழுத்துடுச்சு. அவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைச்சுது. 4 நாள் ஊரெல்லாம் சுத்திட்டு ஜெனீவா வந்தார். முதல்நாள் சாயங்காலம் ஜெனீவா நீர்ப்பீய்ச்சி (fountain-க்கு தமிழ்!!) பக்கத்துல சந்திச்சோம். 'ஹலோ டுபுக்கு'ன்னு அவங்க ஃபேமிலி முன்னால கூப்பிட சங்கடமா இருக்குமேன்னு நினைச்சேன். நல்லவேளை... மெயில்ல உண்மையான பேர் இருந்ததால அந்த சங்கடம் தீர்ந்தது. நெடுநாளைய நண்பர்கள் மாதிரி டக்குனு ஒட்டிக்கிட்டோம். நாலு நாளும் ப்ரெட், ஜாம்னு கொஞ்சம் காஞ்சு போயிருந்த நாக்குக்கு ஒரு இந்திய ரெஸ்டாரண்டுக்கு போய் ஒரு கட்டு கட்டுனதும் மனுஷன் தெம்பாயிட்டார். மறுநாள் மாலையும் சந்திச்சு இன்னொரு ரெஸ்டாரண்ட்... இன்னொரு கட்டு... (பில்லும் அவரே கட்டிட்டாரு... ரொம்ப நல்லவரு) இரண்டு பொன்மாலைப் பொழுதுகள்.

பதிவர் 'டுபுக்கு', நான் (என் கையில் இருப்பது அவரின் இரண்டாவது பெண்)

21 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டூ :)))

ஆயில்யன் said...

//ரெண்டு மலை உச்சிகளுக்கு நடுவுல எந்த சப்போர்ட்டும் இல்லாம கேபில் பஸ்ல போறது ஒரு த்ரில்லிங் பயணம்.//

நினைச்சு பார்த்தாலே மனசுக்குள்ள திக் திக் ஆகுதே :)

குடுகுடுப்பை said...

வாங்க சார்.

இராகவன் நைஜிரியா said...

வெல்கம் பேக் துக்ளக் அண்ணே...

ஒரே ஒரு படம் போட்டு இருக்கிங்க மீதி படமெல்லாம் எங்க போச்சுங்க?

Mahesh said...

வாங்க ஆயில்யன்... நன்றி...

அடடே... நம்ம குகு... இடுகைகளாப் போட்டுத் தாக்கறீங்க போல.... :)

நன்றி ராகவன் சார்... இடுகைலயே படங்களுக்கு லின்க் குடுத்துருக்கேனே... பாக்கலயா நீங்க?

ஜோசப் பால்ராஜ் said...

அங்க போன இடத்துலயும் ஒரு பதிவர் சந்திப்ப நடத்தி நீங்க சிங்கை சிங்கம்னு நிருபிச்சுட்டிங்க போங்க.

Dubukku said...

அண்ணே உங்கள சந்திச்சதுல எனக்கும் மிக்க மகிழ்ச்சி. அதுவும் இந்தியன் ரெஸ்டாரண்டுக்கு வழிகாட்டிய தெய்வமாச்சே நீங்க...

// (பில்லும் அவரே கட்டிட்டாரு... ரொம்ப நல்லவரு)//

நாங்களும் சிங்கப்பூர் வருவோம்ல....அப்போ இருக்குல கச்சேரி :))))

பழமைபேசி said...

வருக வருக... நல்வரவு!

Several tips said...

மிகமிக அருமை

முரளிகண்ணன் said...

வெல்கம் பேக். சீக்கிரம் ஒரு கிச்சடி கிண்டுங்க

Mahesh said...

நன்றி ஜோசஃப், டுபுக்கு, பழமைபேசி, several tips, முரளி....

அறிவிலி said...

படங்கள் அனைத்தும் அருமை. அதுவும் அந்த பனிச் சிலைகள்....

வால்பையன் said...

அண்ணே மத்த போட்டோக்களையும் போடுங்க!
நேர்ல பார்த்த எஃபக்ட் கிடைக்குமுல்ல!

Mahesh said...

நன்றி ராஜேஷ்,...

நன்றி வால்... அடடா... படங்களுக்கு லின்க் இடுகைலயே நடுவுல ரெண்டு இடங்கள்ல குடுத்துருக்கேனே....பாருங்க தல...

வால்பையன் said...

முதல்லயே பார்த்தேன்!
கோடாக் கம்பேனியோட விளம்பரம் போலன்னு நினைச்சு போயிட்டேன் தல!

அறிவிலி said...

வெட்டாப்புக்கு ஒரு வெட்டாப்பு.
வெல்கம் பேக்.

மங்களூர் சிவா said...

/
நீர்ப்பீய்ச்சி (fountain-க்கு தமிழ்!!)
/

நல்லா கெளப்புறீங்கய்யா...........
:))))))))))

சி தயாளன் said...

நல்லாத்தான் எஞ்சாய் பண்ணியிருக்கீங்க...அடுத்த திக்விஜயத்தின் போது நான் சுவிஸ் பக்கமும் எட்டிப் பார்க்கனும்..:-)

Mahesh said...

நன்றி ராஜேஷ்...

நன்றி சிவா... (நல்லாத்தான் பீய்ச்சறோம் :)))

நன்றி டொன் லீ... வாங்க.. வாங்க...

Thamira said...

மீண்டும் ஒரு வயித்தெரிச்சல் பதிவு.. ஹிஹி..

Mahesh said...

நன்றி ஆதி (ஹி..ஹி.,)