Saturday, July 11, 2009

கலைநகரம் "லூசெர்ன்"



லூசெர்ன். ஸ்விஸ்சோட முக்கிய நகரங்கள்ல ஒண்ணு. கலைகளுக்குன்னே நேந்து விட்ட ஊர். ஓவியத்துறையில் "க்யூபிஸ"த்தை அறிமுகப்படுத்திய 'பாப்லோ பிகாஸோ' வாழ்ந்த ஊர். போன ஞாயிற்றுக்கிழமை லூசெர்னுக்கும்,அதுக்குப் பக்கத்துல இருக்கற 'பிலாடுஸ்' மலைக்கும் நண்பர்களோட (பின்ன... கேமரா இல்லாமயா?) பயணம்.

ஜெனீவால இருந்து 3 மணி நேரம் லூசெர்ன். போய் சேரும்போதே 11 மணி. உடனேயே பிலாடுஸ்க்கு போக டிக்கட் வாங்கிட்டு இன்னொரு பிளாட்ஃபாரத்துல இன்னொரு குட்டி ரயில். பிலாடுஸ்க்கு போய் வரதே ஒரு தனி அனுபவம். லூசெர்ன்ல இருந்து 'அல்ப்னாச்ஸ்டெட்'க்கு ரயில்ல 20 நிமிஷம். அங்கிருந்து உலகின் மிகவும் சாய்வான பாதையில் (48% சாய்வு) போற பல்சக்கர வின்ச் ரயில் 40 நிமிஷம் பிலாடுஸ் மலை உச்சிக்கு. திரும்ப வரும்போது ஒரு கேபிள் பஸ்ல பாதி மலை இறங்கிட்டு (15 நிமிஷம்)அங்கிருந்து சின்னச் சின்ன கேபிள் கார்ல (25 நிமிஷம்) கீழ 'க்ரியன்ஸ்' வந்து பஸ் புடிச்சு (15 நிமிஷம்) லூசெர்ன். அட்டகாசமான பயணம். அதுவும் அந்த வின்ச் ரயில் கிட்டத்தட்ட செங்குத்தா போற மாதிரி இருக்கு. 3-4 ரயிலுக ஒண்ணு பின்னால ஒண்ணு வரிசையா ஏறறது அற்புத காட்சி. ஒத்தை ரயில் பாதைதான். அதனால நடுவுல ஒரு இடத்துல மேல போற ரயில் எல்லாம் ஒதுங்கி நிக்குது. நம்ம ரயிலுக்கு முன்னால பாத்தா பாதையே இல்லை. தண்டவாளம் முடிஞ்சு மொட்டையா இருக்கு. கொஞ்சம் முன்னால பாத்தா ஒரு சின்ன ப்ளாட்ஃபாரத்து மேல ரெண்டு தணடவாளத் துண்டுக இருக்கு. கீழ இறங்கற ரயிலுக இறங்கினதும், அந்த ப்ளாட்ஃபாரம் அப்பிடியே வலது பக்கம் நகர, நம்ம ரயில் பாதையும் முன்னால இருக்கற பாதையும் இணையுது. அப்பறம் மேல போற ரயிலுக எல்லாம் மெள்ள க்ராஸ் பண்ணி ஏறுது. என்னா டெக்னாலஜி.... நடுவுல மலைல குடைஞ்சு வெச்சுருக்கற குகைகள் வழியா போறது... சான்ஸே இல்ல...





ஒரு வழியா மேல போய் சேந்தா கொஞ்சம் ஏமாற்றந்தான். திடீர்னு க்ளைமேட் மாறி ஒரே மேக மூட்டம். கீழ பாத்தா ஒரே மேகமா இருக்கு. ஒண்ணும் தெரியல.லேசா தூரல் வேற. மழை பிச்சுக்கிட்டு ஊத்தப் போற மாதிரி ஆயிடுச்சு. ஓரமா நின்னு காஃபி குடிச்சுட்டு இருக்கும்போடு ந்ம்மளைச் சுத்தி கூட்டமா அல்பைன் காக்கா (alpine crow). கையில இருந்து புடுங்கியே தின்னுடும் போல. கொஞ்சம் பிச்சு தூக்கிப் போட்டா அந்தரத்துலயே கேட்ச் புடிச்சுக்கிட்டு பறக்குதுக. மூணு பேர் அங்க ஸ்விஸ்ஸோட தேசிய இசைக்கருவியான அல்ப்ஹார்ன் (alphorn)வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க.



கொஞ்சம் தூரல் நின்னதும் மேல ஏறினோம். மலை உச்சியை 360 டிகிரி சுத்திப் பாக்கறதுக்கு குகைகளும் நடைபாதையும் போட்டிருக்காங்க. அட்டா... மேல இருந்து காட்சிகளைப் பாக்கறதுக்கு ரெண்டு கண்ணு போதாது. அதுவும் குற்றாலம் மாதிரி மெல்லிய சாரலோட... அங்கியே எதாவது ஒரு குகைக்குள்ளயே உக்காந்துடலாமான்னு தோணுச்சு. அதுவும் கீழ ஒரு மலை உச்சில ஒரு சர்ச். என்ன ஒரு ரம்மியமான் சூழல் !! ம்ம்ம்.. ஸ்விஸ் மக்கள் குடுத்து வெச்ச்வங்க. ஒரு ரவுண்டு சுத்தி வந்து மேல உச்சிக்குப் போனா அங்க ஏதோ பீடம் மாதிரி இருக்கு. ஏதாவது வானிலை ஆராய்ச்சிக்குன்னு நினைக்கிறேன். அதுல பூரா வந்தவங்க அவங்கவங்க கைவண்னத்தைக் காமிச்சுருந்தாங்க. உலகத்துல எல்லாப் பகுதிகள்ல இருந்தும் மக்கள் வந்து பேரையோ இல்ல வழக்கம் போல "ஐ லவ் ..."னோ எழுதி வெச்சுருக்காங்க. நாங்களும் பூரா தேடிபார்த்தோம்... தமிழ்ல எதுவுமே இல்லை. அடடா... இது சாமி குத்தமாயிடுமேன்னு சின்னதா ஒரு வெண்பா எழுதலாம்னு பாத்தா அப்பன்னு கற்பனைக்குதிரை எங்கியோ மேயப்போயிடுச்சு. சும்மா எதையோ கிறுக்கிட்டு வந்தோம்.



கேபிள் பஸ்ல பாதி மலை இறங்கி கேபிள் காருக்கு மாறற இடத்துல ஒரு கயிறு விளையாட்டு பார்க் (Rope Park) இருக்கு. 25 ஃப்ரான்க் கட்டினா இடுப்பு பாதுகாப்பு பெல்ட், ஹெல்மெட், க்ளவுஸ் தறாங்க. எல்லாம் போட்டுக்கிட்ட பிறகு கம்பிகள்ல கொக்கியை எப்பிடி மாட்றது, எப்பிடி சின்ன உருளை உதவியோட தொங்கிக்கிட்டே போறதுன்னு ஒரு சின்ன ட்ரெய்னிங் செஷன். அப்பறம் நமக்கு நாமே திட்டம்தான். முதல் ரெண்டு விளையாட்டுக கொஞ்சம் பயமா இருந்தாலும் கழைக்கூத்தாடி மாதிரி கம்பி மேல நடந்து அந்தப்பக்கம் போனதும் பயம் போயிடுச்சு. அப்பறம் தொங்கிகிட்டே சர்ர்ர்ர்னு போனது ஜாலியா இருந்தது. அதுக்குப் பிறகு கொஞ்சம் தைரியம் ஜாஸ்தி ஆகி, 50 அடி உசர கம்பத்துல செங்குத்தா இருக்கற ஏணில ஏறி ஒரு கொக்கியைப் புடிச்சு தொங்கி கீழ இறங்கினோம். மேல ஏறி போறதுக்குள்ளயே நாக்கு தள்ளிடுச்சு. கீழ இருந்து ட்ரெய்னர் 'கொக்கியைப் புடிச்சுக்கிடு ஜம்ப் பண்ணு'ங்கறான். இதோ பண்றேன் இதோ பண்றேன்னு 2 நிமிஷம் யோசிச்சிட்டுத்தான் குதிச்சேன். முதல் 10 அடி தடக்குனு இறங்கி அப்பறம் கொஞ்சம் மெள்ள இறங்குது. ஆனா அதுக்குள்ள நமக்குதான் டப்பா டான்ஸ் ஆடிடுச்சு.






இப்பிடி 1 மணி நேரத்துக்கு மேல விளையாடி முடிச்சுட்டு போதுண்டா சாமின்னு கேபிள் கார்ல உக்காந்து கீழ வந்தோம். பஸ்ஸைப் புடிச்சு ஸ்டேஷன் கிட்ட இறங்கினோம். பக்கத்துலயே 'ரோன்' நதி மேல ஒரு மரப்பாலம். அதுக்குப் பக்கத்துல 'நீர் கோபுரம்' (water tower). ஸ்விஸ்ல மிக அதிகமா போட்டோ எடுக்கப்படற இடம். அந்த பாலத்துக்கு உள்ள மேல இருக்கற முக்கோண ஃப்ரேம்கள்ல ஸ்விஸ் வரலாறு ஓவியங்கள். கிட்டத்தட்ட 400 ஓவியங்கள். பிறகு அங்கிருந்து அடுத்த புகழ் பெற்ற 'சாகும் சிங்கம்' (The Dying Lion) பூங்காவுக்குப் போனோம். ஃப்ரான்ஸ் - ஸ்விஸ் சண்டைல இறந்து போன ஸ்விஸ் வீரர்கள் நினைவுச் சின்னம். ஒரு பெரிய சிங்கம் (ஸ்விஸ் தேசிய சின்னம்) முதுகுல பாஞ்ச ஈட்டியோட சாகற தருவாய்ல இருக்கற மாதிரியான ஒரு புடைப்பு சிற்பம். அருமையான் சூழல் அற்புதமான சிற்பக் கலை. முன்னால இருக்கற சின்ன குளத்துல காசை எறியறாங்க. இந்த பழக்கம் எப்பிடி உலகம் முழுக்க பொதுவா இருக்குன்னு ஆச்சரியமா இருக்கு.


அதுக்குள்ள நல்ல பசி. போகும்போதே 'காஞ்சி' ன்னு ஒரு ஹோட்டலை பாத்தோம். போய் சாம்பார் ரசத்தோட சாப்பாடு. சுமாரா இருந்துது. அப்பறம் திரும்ப ஸ்டேஷனுக்கு வந்து 8 மணிக்கு ட்ரெய்னைப் புடிச்சு 11 மணிக்கு ஜெனீவா வந்து சேந்தோம். லூசெர்ன்ல மட்டுமே பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் நிறைய. சில வருஷங்களுக்கு முன்னால போனபோது பிகாசோ வீட்டுல மட்டும் 4 மணி நேரம் இருந்தேன். இன்னொரு முறை சாவகாசமா போய் மத்த இடங்களைப் பார்க்கணும். பாக்கலாம்...


மலை மேல இருந்து துண்டு துண்டா 3 படம் எடுத்து ஒரே பனோரமா ஷாட்டா 'ஸ்டிட்ச்' பண்ண படம் இது.... லைட்டிங் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்...

26 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

Nathanjagk said...

வாவ்.. புகைப்படங்கள் எல்லாம் அருமை! இசைக்கருவியை பாத்திருந்தாலும் அல்ப்ஹார்ன் அது ​பேருன்னு உங்கனாதான் ​தெரிஞ்சுக்கிட்டேன். பிகாஸோ ​பொறந்த மண்ணுக்கு ​போயும் நம்மூரு சாப்பாடா? ஏதாவது வித்யாசமா டிரை பண்ணியிருக்கலாம்.

பழமைபேசி said...

அருமையான பயணக் கட்டுரை... பட்ங்கள் குளிர்ச்சியாக இருக்கிறது.

அறிவிலி said...

//தமிழ்ல எதுவுமே இல்லை. அடடா... இது சாமி குத்தமாயிடுமேன்னு சின்னதா ஒரு வெண்பா எழுதலாம்னு பாத்தா அப்பன்னு கற்பனைக்குதிரை எங்கியோ மேயப்போயிடுச்சு. சும்மா எதையோ கிறுக்கிட்டு வந்தோம்.//

இங்க சிங்கப்பூர்ல மேய இடமே இல்லையா, அதான் நெறைய புல்லு (ஃபுல்லு இல்ல) தரைய பாத்ததும் ஒடிருக்கும்.

இருந்தாலும் தமிழர் பெருமையை நிலை நாட்டிய உங்களுக்கு தமிழ் கூறும் ந்ல்லுலகம் சார்பாக நன்றி.

படங்களும் கட்டுரையும் அருமை.

ஸ்வாமி ஓம்கார் said...

/அதுக்குள்ள நல்ல பசி. போகும்போதே 'காஞ்சி' ன்னு ஒரு ஹோட்டலை பாத்தோம். போய் சாம்பார் ரசத்தோட சாப்பாடு.//

விண்வெளி பயணத்தில ஏன் தமிழனை சேர்க்க மாட்டிங்கறாங்னு ஒரு டவுட் இருந்துச்சு... இப்போ கிளியர்.

தமிழன் தமிழன் தான்..! :)

ஸ்வாமி ஓம்கார் said...

அருமையான இடங்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க.

பயண கட்டுரை உங்கள் பாணியில் இல்லையோ? ஏதுனா அவசரத்தில எழுதினதா?

Mahesh said...

நன்றி ஜெகநாதன்... 2 வாரமா கண்டதையும் சாப்டுட்டு நம்மூர் சாப்பாட்டைப் பாத்ததும்... ஹி ஹி...

நன்றி மணியாரே...

நன்றி அறிவிலி... உங்களுக்குத் தெரியுது.... குதிரைக்குத் தெரியல :(

நன்றி ஸ்வாமி... ஹி.. ஹி... விமானத்துல வரப்ப எழுதினது... ரொம்ப பெருசா போயிடுமோன்னு எடிட் பண்ணி ஒரு மாதிரி ஆயிடுச்சு..

மங்களூர் சிவா said...

நல்ல சுவாரசியமான பயணக்கட்டுரை.

/
ஸ்வாமி ஓம்கார் said...

/அதுக்குள்ள நல்ல பசி. போகும்போதே 'காஞ்சி' ன்னு ஒரு ஹோட்டலை பாத்தோம். போய் சாம்பார் ரசத்தோட சாப்பாடு.//

விண்வெளி பயணத்தில ஏன் தமிழனை சேர்க்க மாட்டிங்கறாங்னு ஒரு டவுட் இருந்துச்சு... இப்போ கிளியர்.

தமிழன் தமிழன் தான்..! :)
/

:))))))))))))))
ROTFL

எம்.எம்.அப்துல்லா said...

விண்வெளி பயணத்தில ஏன் தமிழனை சேர்க்க மாட்டிங்கறாங்னு ஒரு டவுட் இருந்துச்சு... இப்போ கிளியர்.

தமிழன் தமிழன் தான்..! :)

//

சாமி நம்பாளுங்களுக்கு வெவரம் பத்தல...அங்க போனா பார்வதியம்மா கையால சாம்பார் வைக்கச் சொல்லிட்டு நம்ப கந்தன் கையால சாப்புட்டு ஓடி வந்துரலாம்.

:))

ஸ்வாமி ஓம்கார் said...

//சாமி நம்பாளுங்களுக்கு வெவரம் பத்தல...அங்க போனா பார்வதியம்மா கையால சாம்பார் வைக்கச் சொல்லிட்டு நம்ப கந்தன் கையால சாப்புட்டு ஓடி வந்துரலாம்.//

எல்லாரும் ஓடிவாங்க... ஓடிவாங்க..

இந்த வாரம் பிரச்சனைக்கான மேட்டர் கடைச்சிடுச்சு... :))

பகீரங்க மன்னிப்பு கேட்கர வரை விடாதீங்க ;)

ஸ்வாமி ஓம்கார் said...

நாராயண....நாராயண...(போன பின்னூட்டதுல இது மிஸ்ஸிங்..)

Mahesh said...

நன்றி மங்களூர் சிவா...

நன்றி அப்துல்லா... நீங்க வேற... அவங்க வீட்டுச் சண்டைல அவங்களே தலப்பாகட்டு பிரியாணி ஆர்டர் பண்ணி சாப்படறாங்க..

நன்றி ஸ்வாமி நாரதர்.. சாரி... ஓம்கார்.... :))))))))))))

வால்பையன் said...

முதல் படமே ஆயிரம் கதை சொல்லுதே!

Cioara Andrei said...

Foarte interesat subiectul postat de tine, m-am uitat pe blogul tau si imi place ce am vazu am sa mai revin cu siguranta.
O zi buna!

Mahesh said...

நன்றி வால்... ஆமாங்க.. அந்த சிங்க சிற்பத்துக்கு பின்னால ஸ்விஸ் வரலாறே இருக்கு..

Mr. Cioara Andrei... multumesc mult!!

நட்புடன் ஜமால் said...

பயண கட்டுறைகளா - ம்ம்ம்


நல்ல புகை(ப்)படங்கள் ...

பரிசல்காரன் said...

//நாங்களும் பூரா தேடிபார்த்தோம்... தமிழ்ல எதுவுமே இல்லை. அடடா... இது சாமி குத்தமாயிடுமேன்னு சின்னதா ஒரு வெண்பா எழுதலாம்னு பாத்தா அப்பன்னு கற்பனைக்குதிரை எங்கியோ மேயப்போயிடுச்சு. சும்மா எதையோ கிறுக்கிட்டு வந்தோம்.//

அனுஜன்யாவின் ஒரு கவிதை கூடவா ஞாபகம் வரவில்லை உங்களுக்கு? ச்சே!

பரிசல்காரன் said...

சொல்ல விட்டுப் போச்சு...

வர வர ’பதிவுலக மணியன்’ ஆகீட்டு வர்றீங்க.. பயணக் கட்டுரையின் விவரங்கள் அருமை!

Mahesh said...

நன்றி ஜமால்பாய்...

நன்றி பரிசல்... அட என்னது அத்திப் பூத்த மாதிரி..??

Xavier said...

மற்றுமோர் அற்புத பதிவு. கலக்கல் மகேஷ்.

பழமைபேசி said...

//நாம எளுதற(!)தையும் படிக்கறவங்க....//

எழுதறது...இஃகி!

Xavier said...

அப்படியே ஸூரிச் போனால் முனியாண்டி விலாஸில் மறக்காமல் சாப்பிடவும்.

Thamira said...

வயிற்றெரிச்சலை கிளப்பும் பதிவுகளின் வரிசையில் இன்னொன்று.!

Mahesh said...

நன்றி மணியாரே... 'எளுதறது...' அது வேணும்னே போட்டது... :)

நன்றி சேவியர்... அடுத்த முறை அங்கதான்.. இந்த முறை டைம் கிடைக்கல...

நன்றி ஆதி... இன்னொரு வயித்தெரிச்சல் பதிவு ஆன் தி வே... :))))))))))))

Dubukku said...

அட சூப்பர்...நாங்க அடுத்த மாசம் அங்க போறோம். ரொம்ப உதவியா இருக்கும் இந்த பதிவு. படங்களும் விபரங்களும் மிக அருமை. மிக்க நன்றி

Mahesh said...

அண்ணே டுபுக்கண்ணே... வாங்க வாங்க.... நானும் அடுத்த மாசம் ஜெனீவாலதான் இருப்பேன்... முடிஞ்சா மீட் பண்னலாம்....

கிரி said...

//நண்பர்களோட (பின்ன... கேமரா இல்லாமயா?) பயணம்//

எத்தனை கேமரா :-)

//கேட்ச் புடிச்சுக்கிட்டு //

:-)


//ஸ்விஸ்ஸோட தேசிய இசைக்கருவியான அல்ப்ஹார்ன் (alphorn)வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க//

சூப்பரா இருக்கு

மகேஷ் ஒரு சின்ன வேண்டுகோள்..பெரிய பெரிய பத்தியா எழுதறீங்க.. சோ படிக்க சிரமமா இருக்கு ..கொஞ்சம் பத்தி பிரித்து எழுதினால் படிக்க அனைவருக்கும் எளிதாக இருக்கும்

நீங்க எடுத்த படங்கள் அனைத்தும் அருமை (கடைசி போட்டோ இரண்டு கலர் ல இருக்கே எதுவும் காரணம்???)