Wednesday, June 10, 2009

2 பவர் 5


பெரும்பாலோருக்கு சலிப்பை ஏற்"படுத்தியுள்ள" இந்த சங்கிலித் தொடர் இடுகைக்கு அழைத்த ஆதிமூலகிருஷ்ணன் மற்றும் குசும்பனுக்கு ந(ர நர நர)ன்றி !!!


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

இந்தப் பேரு வந்ததில்லீங்க.... பெத்தவங்க வெச்சது :) ரொம்பப் பிடிக்கும் !!

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

மகள் பிறந்தபோது... ஆனந்தம் மிகுந்து அழுகைல முடிஞ்சுது !!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

இருங்க... அதைத்தான் ரொம்ப நேரமா முயற்சி பண்ணிட்டே இருக்கேன்... என்ன எழுதினேன்னே தெரியல... யாராவது மருந்துக்கடைக்காரங்க கிட்ட காமிச்சு தெரிஞ்சுக்கிட்டு வந்து சொல்றேன்...

4).பிடித்த மதிய உணவு என்ன?

மதியத்துக்கு உணவு கிடைச்சாலே போதும். பிடிச்சது பிடிக்காததெல்லாம் நீங்களாவது கேக்கறீங்களே.... அவ்வ்வ்வ்வ்வ்....

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நண்பர்களோடதானே.... கண்டிப்பா !!

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

உடுமலைக்கு பக்கத்துல இருக்கற திருமூர்த்தி அருவி கிட்ட கேட்டுப் பாருங்க... அதுவே "போதும்டா... போய்த் தொலைங்கடா..."ன்னு சொல்ற வரைக்கும் குளியலோ குளியல்தான்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள் !!

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

டாய்... யாரைப் பாத்து என்ன கேள்வி? எட்றா வண்டியை...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

கிட்ட வாங்க சொல்றேன்.... . . . . . . . . . அதான் !! யார் கிட்டயும் சொல்லிடாதீங்க. சரியா?

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

இதை எழுதக் கூப்ட்ட ஆதியும் குசும்பனும். இது ஒரு போர் தொடர்னு தெரிஞ்சும் கோத்து விட்டதுக்கு முதுகுல நாலு போட வேணாம்? :))))))))))))

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

எனக்கு கலர் ப்ளைன்ட்னஸ் !! இஃகி !! இஃகி !!

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

வீட்டுல "பாட்டு" கேக்கறதெல்லாம் சபைல வெச்சு சொல்லச் சொல்றீங்களே... நியாயமா?

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்குஆசை?

ரெஃபர் கொஸ்டீன் நம்பர் 11.

14.பிடித்த மணம்?

நண்பர்களின் திருமணம். நல்லா மூக்கு பிடிக்க மூணு வேளை சாப்பாடு கிடைச்சா விடுவமா?

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
அழைச்சதுக்கு அப்பறம் அவங்களுக்கு என்னைப் பிடிக்காம போயிட்டா என்ன செய்யறதுன்னு யோசனையா இருக்கு :(

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

அது ஒரு பெரிய குசும்புலம்பலுங்க !!

17. பிடித்த விளையாட்டு?

பல்லாங்குழி, பிள்ளையார் பந்து.

18.கண்ணாடி அணிபவரா?

மூக்குக் கண்ணாடின்னா - ஆமாம். முகம் பாக்கற கண்ணாடின்னா - இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

"எலிப்பத்தாயம்" பாத்துருக்கீங்களா? அது மாதிரி படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

நண்பர் வீட்டுல நேத்து பாத்த (அவரோட மனைவி வரைஞ்ச) மயில் படம்.

21.பிடித்த பருவ காலம் எது?

அந்த மாதிரி புத்தகமெல்லாம் படிச்சதில்லீங்க. என்ன கண்றாவி கேள்வி இது?
சே !!

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

இது கேள்வி. LKG படிக்கற மகளோட ABCD புத்தகம்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ப்ளூ ஸ்க்ரினை எப்படி மாத்தறது? புரியலயே...

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

நாம விடற குறட்டை ; மத்தவங்க விடற குறட்டை.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அடச்சே... இதுக்குதான் கிளம்பும்போது மீட்டர் ஸ்கேல் எடுத்துக்கிட்டு வரணும்கறது. இப்ப பாருங்க அவஸ்தைய....

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இன்னும் அது வேறயா?

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நானெல்லாம் எப்பிடி பதிவு எழுத வந்தேன்?? எப்பிடி கவிதையெல்லாம் எழுதறேன்? அதுவும் ஆதிமூலகிருஷ்ணனே ஃபோன் போட்டு கூப்ட்டு பாராட்ற அளவுக்கு !!

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

இப்ப இந்த பதிவை எழுதிக்கிட்டுருக்கறது யாருங்கறீங்க? (அட... இப்ப வெளிய வந்து படிச்சுக்கிட்டுருக்கு பாருங்க !!)

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஆபீஸ் !!

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

எப்பிடி இருக்கக் கூடாதோ அப்பிடி இல்லாம இருக்கணும்னு ஆசை.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

நம்ம கற்பனைக்கு எல்லாம் ஒரு எல்லை உண்டுங்க.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வாழ்வு- இந்த பதிவு மாதிரி மொக்கையா இல்லாம ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜாலியா இருக்கணும் !!


டிஸ்கி : 2, 6, 7, 30, 32 க்கு மட்டும் எப்பிடியோ மொக்கையா பதில் வந்துடுச்சு. மத்த பதிலெல்லாம் நிஜம்மா சீரியஸ் !!

40 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

இஃகி இஃகி...

ILA (a) இளா said...

இன்னும் அது வேறயா?/


:))

சின்னப் பையன் said...

:-)))))))

நட்புடன் ஜமால் said...

இது குசும்ப(ர்)ன் வலைப்பூவா ???

நட்புடன் ஜமால் said...

14.பிடித்த மணம்?
நண்பர்களின் திருமணம்\\


நல்ல மண(ன)ம்

Mahesh said...

நன்றி மணியாரே... இந்த அக்கன்னா வந்து உங்க கண்ணைக் குத்தப் போகுது !!

நன்றி ILA...

நன்றி ஸ்மால்பாய்...

நன்றி ஜமால்பாய்... பாருங்க குசும்பன்... என்னால உங்களுக்கு எவ்வளவு கெட்ட பேரு :)))))))))

ஜோசப் பால்ராஜ் said...

முடிவுக்கு வருகிறதா 32 கேள்விகளின் சகாப்தம்?

அப்துல்லா அண்ணண், நீங்க எல்லாம் எழுதறத பார்த்தா இது இத்தோட முடியும்னு தோணுது.

சரி, அடுத்த விளையாட்ட ஆரம்பிச்சுட வேண்டியது தான்.

Mahesh said...

யூசுப் ஐயங்கார்... இன்னொண்ணா? அவ்வ்வ்வ்வ்... பூமி தாங்குமா??

வெண்பூ said...

கலக்கல் மஹேஷ்.. அதிலயும்

//
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
நாம விடற குறட்டை ; மத்தவங்க விடற குறட்டை.

18.கண்ணாடி அணிபவரா?
மூக்குக் கண்ணாடின்னா - ஆமாம். முகம் பாக்கற கண்ணாடின்னா - இல்லை.
//
சத்தமா சிரிச்சிட்டேன்..

Venkatesh Kumaravel said...

10, 12, 22, 18... Super! :LOL:

சி தயாளன் said...

:-))

வால்பையன் said...

//அது ஒரு பெரிய குசும்புலம்பலுங்க !!//

கவிஞரய்யா நீர்!

anujanya said...

வித்தியாசம், சுவாரஸ்யம் காட்டியே தீர வேண்டிய கட்டாயம் இதை எழுதும் எல்லோருக்கும்.

31, 21, தலைப்பு மற்றும் டிஸ்கி இது எல்லாம் - :)))))

அனுஜன்யா

Mahesh said...

நன்றி வெண்பூ...

நன்றி வெங்கிராஜா...

நன்றி வால்பையன்... ஏங்க நான் நல்லாயிருக்கறது புடிக்கலயா?

நன்றி டொன்லீ...

நன்றி அனுஜன்யா... ஹை!!

Unknown said...

நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html

நர்சிம் said...

கலக்கல்...

இராகவன் நைஜிரியா said...

இஃகி, இஃகி.


நீங்களும் மாட்டிகிட்டீங்களா...

இப்பத்தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-)))))

Mahesh said...

நன்றி நர்சிம்...

நன்றி ராகவன்... சந்தோஷமா?

நன்றி ஸ்ரீதர்...

Ramanna said...

சூப்பர் டைம் பாஸ்...

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா (30)
பழமைபேசி (30) //

அகரவரிசை கூட எனக்கு எதிர்வரிசை?!

Poornima Saravana kumar said...

இந்தப் பேரு வந்ததில்லீங்க.... பெத்தவங்க வெச்சது//

:))

Poornima Saravana kumar said...

மகள் பிறந்தபோது... ஆனந்தம் மிகுந்து அழுகைல முடிஞ்சுது !!

//

அடடா!

Poornima Saravana kumar said...

இருங்க... அதைத்தான் ரொம்ப நேரமா முயற்சி பண்ணிட்டே இருக்கேன்... என்ன எழுதினேன்னே தெரியல... யாராவது மருந்துக்கடைக்காரங்க கிட்ட காமிச்சு தெரிஞ்சுக்கிட்டு வந்து சொல்றேன்...

//



அப்போ நீங்க கம்பவுண்டரா????

Poornima Saravana kumar said...

மதியத்துக்கு உணவு கிடைச்சாலே போதும். பிடிச்சது பிடிக்காததெல்லாம் நீங்களாவது கேக்கறீங்களே.... அவ்வ்வ்வ்வ்வ்....

//

வீட்டுக்காரம்மா இதை படிச்சாங்களா???

Poornima Saravana kumar said...

டாய்... யாரைப் பாத்து என்ன கேள்வி? எட்றா வண்டியை//

எதுங்ண்ணா அந்த நடராஜா சர்வீஸ் தானுங்க:)

Poornima Saravana kumar said...

கிட்ட வாங்க சொல்றேன்.... . . . . . . . . . அதான் !! யார் கிட்டயும் சொல்லிடாதீங்க. சரியா?
//

எங்க கிட்ட சொல்லிட்டீங்க இல்ல இனி நீங்க நிம்மதியா தூங்கலாம்..

Poornima Saravana kumar said...

ஒழுங்கா படிக்கற காலத்துல படிச்சிருந்தா இப்படி வயசான பிறகு படிக்க வேண்டியதாயிருக்காது பாருங்க..

//இது கேள்வி. LKG படிக்கற மகளோட ABCD புத்தகம்.
//

Poornima Saravana kumar said...

மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

நம்ம கற்பனைக்கு எல்லாம் ஒரு எல்லை உண்டுங்க.
//

எது காஷ்மீர் பார்டரா??

Mahesh said...

நன்றி ராமண்ணா...

நன்றி பூர்ணிமா... இன்னிக்கு நம்ம கடைல கும்மியா? நடத்துங்க நடத்துங்க.... கும்மிச் சத்தம் கேட்டு ரொம்ப நாளாச்சு :))) அடிக்கடி வாங்க !!

rajendran said...

superupa

குசும்பன் said...

//நம்ம கற்பனைக்கு எல்லாம் ஒரு எல்லை உண்டுங்க.//

ஹி ஹி ஹி:)

நசரேயன் said...

//
டிஸ்கி : 2, 6, 7, 30, 32 க்கு மட்டும் எப்பிடியோ மொக்கையா பதில் வந்துடுச்சு. மத்த பதிலெல்லாம் நிஜம்மா சீரியஸ் !!//
நம்பிட்டோம்

Mahesh said...

நன்றி ராஜேந்திரன்...

நன்றி குசும்பன்... கல்யாணம் ஆன பிறகு ஒரு தெளிவு வந்துடுச்சா?

நன்றி தளபதியாரே...

கிரி said...

//ப்ளூ ஸ்க்ரினை எப்படி மாத்தறது? புரியலயே...//

உங்க சிஸ்டம் எப்போதும் windows production error லையே இருக்குமா ஹி ஹி ..இது அலுவலகத்தில் இருந்து எழுதியது தானே! ;-)

சுவாராசியமா இருக்கு மகேஷ் நீங்க எழுதி இருப்பது

Mahesh said...

நன்றி கிரி... ஆபீஸ் டைத்துல பதிவு எழுதறதே கிடையாது. வீட்டுல உக்காந்து லேட் நைட்டுலதான். ஆபீஸ்ல அப்பப்ப சைக்கிள் கேப்புல பின்னூட்டங்களோட சரி.

குடுகுடுப்பை said...

ஆமா பயங்கர போர்தான் இந்த தொடர்

மங்களூர் சிவா said...

:)))
very nice.

முரளிகண்ணன் said...

\\நாம விடற குறட்டை ; மத்தவங்க விடற குறட்டை\\

:-))

Thamira said...

ஏற்கனவே படிச்சிட்டேன். பின்னூட்டம்தான் போடாம போயிட்டேன்னு நினைக்கிறேன். பல கேள்விகளில் ரசித்துச்சிரித்தேன். குறிப்பாக கண்ணாடி அணிபவரா?வில்..