Wednesday, June 10, 2009

கிச்சடி 13.06.2009

போன வாரம் ஒரு சொந்த வேலையா அடியேன் சென்னை விஜயம். வந்த அன்னிக்கே நண்பர் ஆதிக்கு போன் பண்ணி அட்டெண்டன்ஸ் போட்டுட்டேன். ஆச்சச்சச்சச்சரியமா சாயுங்காலம் அவரே வீட்டுக்கு வரேன்னு சொன்னார். ஆஹா... இதை விட என்ன வேணும்? தலைவர் வந்தார். வீட்டுக்குள்ள 10 நிமிஷமும் பார்க்கிங்ல 1 மணி நேரமும் பேசினோம். அவரோட ரசனைகள், எண்ண ஓட்டங்கள்... எல்லாமே ஒருவித ஆச்சரியமா இருந்தது. எல்லாத்துக்கும் மேல அவரிடம் ரொம்ப பிடிச்சது நெகடிவ் விமர்சனங்களை எந்த விதமான வெறுப்பும் இல்லாம சொல்றது. Being critical without prejudice is an art....யாரோ சொன்னது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிடிக்குள்ள ஒரு வேலையா சுத்திக்கிட்டுருந்தபோது அண்ணன் அப்துல்லாவையும் சந்திச்சு ஒரு சலாம் போட்டுட்டு வந்தேன். கவுண்டமணி மாதிரி "நாங்கள்லாம் பிசி.... பிசி மீன்ஸ் பிசி...."ன்னெல்லாம் அலப்பறை பண்ணாம வழக்கம் போல கலகலப்பான சந்திப்பு. கொஞ்சமே கொஞ்ச நேரம்னாலும் நிறைவா இருந்தது. அதுலயும் அவர் "ஆதி உங்க வீட்டுக்கே வந்தாரா? நீங்க பெரிய ஆளுதான்..."னு சொன்னபோது ஆதியை நெனைச்சு பெருமையா இருந்தது. If I only had a little humility, I'd be perfect - டெட் டர்னர் சொன்னது எவ்வளவு உண்மை !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொருளாதாரம் சறுக்குதா சுருங்குதான்னு அனலிஸ்டுக மண்டையை ஒடச்சுக்கிட்டுருக்காங்க. ஆனா ஜவுளிக்கடைலயும், நகைக்கடைலயும் மக்கள் அலைமோதறதைப் பாத்தா தலை சுத்துது. ரியல் எஸ்டேட்காரங்க "எங்க போயிடுவீங்க? எங்க கிட்டத்தானே வந்தாகணும்..."ன்னு பல்லைக் குத்திக்கிட்டு சாவகாசமா உக்காந்திருக்காங்க. ஸ்பென்சர்லயும், சென்னை சென்டர்லயும் பார்க்கிங் கிடைக்க 1 மணி நேரம் ஆகுது. சத்யம், ஐ-நாக்ஸ் வீக் எண்ட்லயெல்லாம் ஹவுஸ் ஃபுல்லாம். பிஸ்ஸா டெலிவரி சுறுசுறுப்பா நடந்துக்கிட்டுதான் இருக்கு. மொபைல் நெட் ஒர்க் ட்ராஃபிக் அதிகமாயிருக்காம். புதுசா இன்னும் சில மொபைல் ஆபரேட்டர்க வேற.

எங்க ஏரியால இருக்கற ஒரு சிறுவர் இல்லத்துக்குப் போனபோது கேட்ட செய்தி: அந்த இல்லத்துக்கு ஐ.டி.ல வேலை செய்யற பலர் - குறிப்பா பேச்சிலர்ஸ் - கிட்ட இருந்து வர நன்கொடைகள் அறவே நின்னு போச்சாம். போன பத்திக்கும் இந்த செய்திக்கும் தொடர்பு இருக்கா? When you need to trim the corners, try not to choose left or right. Choose the wrong one.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னை இன்டெர்நேஷனல் டெர்மினல். ராத்திரி 10 மணிக்கும் 2 மணிக்கும் நடுவுல கிட்டத்தட்ட ஒரு டஜன் டிபார்ச்சர்ஸ் ஏழெட்டு அரைவல்ஸ். பயணிகள் கூட்டம் அலை மோதுது. ரெண்டே ரெண்டு எக்ஸ்-ரே மெஷின்கதான். செக்-இன் க்யூ க்ளியர் ஆக 3 மணி நேரம் ஆகுது. "ஏர்போர்ட் மேனேஜர்" கிட்ட போய் புகார் பண்ணலாம்னு போனா அவர் மேஜை மேல காலைப் போட்டுக்கிட்டு கண்ணை மூடிக்கிட்டு இருக்காரு (யோசிக்கிறாராம் !!). இன்னும் ஏழெட்டு பேர் அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்காங்க. "போங்க சார்.... இவ்வளவு பேர் நிக்கிறாங்க இல்ல... எல்லாம் க்ளியர் ஆகும் போங்க.... ராத்திரி நேரம் ஸ்டாஃப் கம்மி. நீங்கதான் சீக்கிரம் வரணும்..."

இமிக்ரேஷன்ல க்யூ. செக்யூரிடி செக் க்யூ பயமுறுத்துது. லவுஞ் அக்சஸ் இருக்கறவங்க கூட நேரமாயிடும்னு பயந்து போகாததால லவுஞ்செல்லாம் ஈயாடுது. "டிபார்ச்சர் அனௌன்ஸ் பண்ணிட்டாங்க.... என்னை முன்னாடி அனுப்புங்க"ன்னு அவனவன் கதறரான். "அட... போய் க்யூல நில்லுங்க... போர்டிங் பாஸ் வாங்கிட்டீங்க இல்ல... உங்களை விட்டுட்டு போயிட மாட்டாங்க...." எல்லா ஃப்ளைட்டும் குறைஞ்சது 1/2 மணி நேரமாவது டிலே. ப்ளானிங்குக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது போல. Failing to plan is planning to fail.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

29 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்டேய்ய் கிச்சடி சாப்பிட....! :))

மங்களூர் சிவா said...

/
இமிக்ரேஷன்ல க்யூ. செக்யூரிடி செக் க்யூ பயமுறுத்துது. லவுஞ் அக்சஸ் இருக்கறவங்க கூட நேரமாயிடும்னு பயந்து போகாததால லவுஞ்செல்லாம் ஈயாடுது. "டிபார்ச்சர் அனௌன்ஸ் பண்ணிட்டாங்க.... என்னை முன்னாடி அனுப்புங்க"ன்னு அவனவன் கதறரான். "அட... போய் க்யூல நில்லுங்க... போர்டிங் பாஸ் வாங்கிட்டீங்க இல்ல... உங்களை விட்டுட்டு போயிட மாட்டாங்க...." எல்லா ஃப்ளைட்டும் குறைஞ்சது 1/2 மணி நேரமாவது டிலே. ப்ளானிங்குக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது போல. Failing to plan is planning to fail.
/

:((((((((
very very sad

ஆயில்யன் said...

/ராத்திரி நேரம் ஸ்டாஃப் கம்மி. நீங்கதான் சீக்கிரம் வரணும்..."//

ஏர்ப்போர்ட்டு வந்த பிறகு ராத்திரி பகல் பார்த்தா முடியுமா? :(

ரொம்ப கஷ்டம்தான் பாஸ் அதுவும் அரைவல் ஸ்டாம்பிங்க் கீயுவுல நிக்கிறச்ச பாருங்க செம டென்ஷனாகும்! என்னமோ எக்ஸ்ட்ராவா வேலை பாக்குற மாதிரி அலுத்துக்குவாங்க! - பாக்குற வேலையே ஒரே ஒரு டீயுட்டி நைட் மட்டும்தானே?!

வெண்பூ said...

ஏர்போர்ட் விசயத்துக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்படி மஹேஷ்.. அலட்சியம்தான் சென்னைவாசிகளோட தேசிய குணம் (என் மேல பாயாதீங்க மக்களே) :))

ஸ்வாமி ஓம்கார் said...

கிச்சடி அருமை.

நீங்க மேஜர் சுந்தர்ராஜன் சொந்தகாரரா :))) ?

Mahesh said...

நன்றி ஆயில்யன்... ஆமாங்க அரைவல் ஒரு தனி இரிடெஷன்...

நன்றி மங்களூர் சிவா...

நன்றி வெண்பூ... ஆமா... அவர் மேல யாரும் பாயாதீங்க மக்களே...

நன்றி ஸ்வாமி ஓம்கார்... நானா? மேஜர் சுந்தரராஜனுக்கா? Absolutely not... கிடையவே கிடையாது :))

இராம்/Raam said...

கலக்கல்..... :))

இராம்/Raam said...

//நன்றி ஸ்வாமி ஓம்கார்... நானா? மேஜர் சுந்தரராஜனுக்கா? Absolutely not... கிடையவே கிடையாது //

LOL

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே கிச்சடி மிக அருமை.

சுவாமி ஓம்கார் பின்னூட்டமும், அதற்கு உங்க பதிலும் நெம்ப நெம்ப அருமை.

ஏனுங்ணா நீங்க, ஏர்போர்ட் மேனேஜர்கிட்டயெல்லாம் புகார் குடுக்க போனீங்களா? நேரத்துக்குப் புடிச்ச கேடு அதெல்லாம்.

சென்னை விமானநிலையத்துல பாதுகாப்புப் பணிகளுக்கு தேவையான நபர்கள் 1000, ஆனால் அங்கிருப்பது 600 பேர். விமானநிலைய விரிவாக்கப் பணிகள் நடப்பதால் 1200 பேர் வேண்டுமாம் மொத்தப் பாதுகாப்புக்கும். ஆனால் 50% ஊழியர்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர்களை ஓவர் லோட் செய்வதல் அவர்கள் சோர்வுக்குள்ளாகி, பயணிகளிடம் இனிமையாக நடந்துகொள்ளக் கூட இயலாத அளவுக்கு அயர்சியில் உள்ளார்கள் என்பது உண்மை.
மத்திய உள்துறை அமைச்சர் தான் ஏதாச்சும் பார்த்து செய்யனும்.

நீங்கள் சொல்லியது போல தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வருவது பெருமளவில் குறைந்து, பலவிதமான சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. உதவியளித்துக்கொண்டிருந்தவர்கள் பலரும் தற்போது சிரமத்தில் இருக்கின்றார்கள்.
நீங்க சொன்னமாதிரி செலவழிச்சுக்கிட்டும் இருக்கதுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் என்ன சம்பந்தம்னு நினைச்செல்லாம் குழம்பிடாதிங்க.

எம்.எம்.அப்துல்லா said...

//சென்னை விமானநிலையத்துல பாதுகாப்புப் பணிகளுக்கு தேவையான நபர்கள் 1000, ஆனால் அங்கிருப்பது 600 பேர். விமானநிலைய விரிவாக்கப் பணிகள் நடப்பதால் 1200 பேர் வேண்டுமாம் மொத்தப் பாதுகாப்புக்கும். ஆனால் 50% ஊழியர்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர்களை ஓவர் லோட் செய்வதல் அவர்கள் சோர்வுக்குள்ளாகி //

எனக்கு ஒரு சந்தேகம்???

நீங்க வெறும் ஜோசப் பால்ராஜா? இல்லை கேப்டன் ஜோசப் பால்ராஜா??

இஃகிஃகிஃகி

:)

anujanya said...

தாமிரா நேரில் பார்த்தால் பழக இனியவர். ஆனால், நம்ம பதிவுகளுக்கு பின்னூட்டங்களில் டெர்ரர் பார்ட்டி.

அப்துல் சொக்கத் தங்கம். இதே மாதிரி நான் சென்னை வந்தபோது, எனக்காகவே (நெசமா தான்) எங்கும் நிற்காமல், non-stop (ச்சே நானும் மேஜர் ஆகிவிட்டேன்) சேலம்-சென்னை காரில் வந்தார். அன்னைக்கு தான் நாம முதலில் போனில் (நர்சிம்மின்) பேசினோம் :)

அனுஜன்யா

Mahesh said...

நன்றி ஜோசஃப்... 1000 பேரு 1200 பேரு எல்லாம் வெறூம் கணக்குங்க... எந்த நேரமும் அஙக் ஒரு 100 பேராவது சும்மா உக்காந்து வெதலை போட்டுக்கிட்டு பேசிக்கிட்டு இருக்காங்க...

நன்றி அனுஜன்யா.... ஆமா ஆமா... நாமள்லாம் இன்னும் யூத்துதானே.... யாரு நம்மளை மேஜர்னு சொல்றது?

நன்றி அப்துல்....

சென்ஷி said...

கிச்சடி அருமை!

//நன்றி ஸ்வாமி ஓம்கார்... நானா? மேஜர் சுந்தரராஜனுக்கா? Absolutely not... கிடையவே கிடையாது //

கலக்கல் :))

சி தயாளன் said...

ஜோசப் அண்ணர் ஒரு மார்க்கமா தான் நிக்கிறார்...புள்ளி விபரம் எல்லாம் கண்ண கட்டுது...:-))

குடுகுடுப்பை said...

சிங்கப்பூர்ல இருக்கிறதனால அடிக்கடி ஊருக்கு போகமுடியுது, வயித்தெரிச்சலுடன் குடுகுடுப்பை

Unknown said...

//ஸ்வாமி ஓம்கார் said...
கிச்சடி அருமை.

நீங்க மேஜர் சுந்தர்ராஜன் சொந்தகாரரா :))) ?//

//நன்றி ஸ்வாமி ஓம்கார்... நானா? மேஜர் சுந்தரராஜனுக்கா? Absolutely not... கிடையவே கிடையாது :))//

லைட்ஸ் ஆன் சுனில் ஆர் வினோத்?

ஜோசப் பால்ராஜ் said...

//’டொன்’ லீ said...
ஜோசப் அண்ணர் ஒரு மார்க்கமா தான் நிக்கிறார்...புள்ளி விபரம் எல்லாம் கண்ண கட்டுது...:-))
//

எல்லாம் ஒரு தேவையாத்தான். புள்ளிவிவரம் சரியா இருந்தாத் தானே, எத எத எப்டி சரி செய்யிறதுன்னு திட்டமிட முடியும்?

எல்லாம் 2014க்காக வோய்.

Mahesh said...

நன்றி டொன்லீ...

நன்றி கு.கு.. குஜமுக வேலைகளுக்கு நடுவுல நம்ம கடைப் பக்கமும் வந்து (நன்கொடை கேட்டு மிரட்டாம) போனதுக்கு நன்றி.,...

நன்றி ரவிஷங்கர்... ஹி ஹி ஹி...

அது என்னாது 2014 ஜோசப் அண்ணே?

நர்சிம் said...

/ஆனா ஜவுளிக்கடைலயும், நகைக்கடைலயும் மக்கள் அலைமோதறதைப் பாத்தா தலை சுத்துது. ரியல் எஸ்டேட்காரங்க "எங்க போயிடுவீங்க? எங்க கிட்டத்தானே வந்தாகணும்..."ன்னு பல்லைக் குத்திக்கிட்டு சாவகாசமா உக்காந்திருக்காங்க./

கலக்கல்

Anonymous said...

கிச்சடி நல்ல சுவை மகேஷ். ரியல் எஸ்டேட்காரர்கள் காத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.

ஆனால் மக்கள் கடன் வாஞ்கியாவது தங்கள் செலவுகளைச் செய்துகொண்டு தானிருக்கிறார்கள்

Mahesh said...

நன்றி நர்சிம்....

நன்றி அண்ணாச்சி.....

சின்னப் பையன் said...

வழக்கம் போல் கிச்சடி கலக்கல்.

ஒவ்வொரு பத்திக்கும் ஆங்கிலத்தில் ஒரு மேற்கோள் போட்டது -- மிக அருமை..

If you want to go out, Just open the door..

-- ஹிஹி.. இது நானே முயற்சி பண்ணி போட்டது... :-))))))

Mahesh said...

@ ச்சின்னப்பையன் : "If you want to go out, Just open the door.."... எப்பிடி...எப்பிடி இதெல்லாம்? அவ்வ்வ்வ்வ்வ்வ்....

கிரி said...

மகேஷ் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க...விமான நிலைய பிரச்சனை தவிர்க்க முடியாதது.

☼ வெயிலான் said...

பலராலும் பேசப்படுகிற பதிவு. விசயங்கள் ரொம்ப நல்லாருந்ததுங்ணா..

வால்பையன் said...

ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் வந்த விசயத்தை, வந்து பார்த்திருப்பேன்!

ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம், லேட்டான விசயத்தை மதுரை அண்ணன் போன் பண்ணி பார்த்திருப்பார்!

Mahesh said...

நன்றி வெயிலான்...

நன்றி கிரி...

நன்றி வால்பையன்... மதுரை அண்ணனா? வம்பே வேண்டாம் :(

Thamira said...

ஹி ஹி.. ஆனாலும் ரொம்பதான் புகழ்ந்திருக்கீங்க.! நன்றி.!

நான் உங்களின் பின்னூட்டங்களின் ரசிகன்.

Itsdifferent said...

Just returned from a visit to Chennai.

1. There are lots of difference between what we read (growth and prospects) about India, and what we really see (utter chaos)
- But India survives between these two
2. Airport procedures
- I had been 5 airports during my visit to India, every airport has its own procedure - just simple security check, boarding pass etc

3. High tech (mobile, broadband) infrastructure following the transport infrastructure - too many users compared to what was like two years back.

4. Utter irresponsibility toward self and others lives while on the road - and me first attitude
In the west driving permit is a privilege, and in our country I think its a right. God save us.

5. People have become numb to the fact that there is corruption, and every project gets less than 20% of the actual money allotted. And no media or anyone talks about people in power becoming richer by day, and seizing their assets or getting the swiss money back.

India 2020? a passing New year?