Thursday, May 14, 2009

ஒலிம்பிக்ஸ் தலைநகரம் "லூசான்"

பொதுவாவே நாம எங்கியோ தூரத்துல இருக்கற இடங்களுக்கு எல்லாம் லீவு போட்டு ப்ளான் பண்ணி போய் சுத்தினாலும், நம்ம ஊருக்குப் பக்கத்துல் இருக்கற இடங்களுக்கு போக மாட்டோம். "இங்கதானே இருக்கு... எப்ப வேணாப் போகலாம்.. எங்க போயிடப் போகுது..."ங்கற லேசான அலட்சியம்தான் காரணம். அது மாதிரிதான்.. பல முறை ஜெனீவாவுக்கு வந்தாலும் பக்கத்துல - ட்ரெயின்ல 1/2 மணி நேரத்துல - இருக்கற "லூசான்" (Lausanne) க்கு போக இப்பத்தான் அமைஞ்சுது.

இரவு வேலை முடிச்சுட்டு அபார்ட்மெண்டுக்கு வந்தா தூக்கம் வரலை. சட்டுனு யோசனை. "அட... இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டமே... இன்னிக்குப் போயிட்டு வந்துடலாம்"னு ஒரு 10 மணி சுமாருக்கு கிளம்பினேன். ஜெனீவா ஸ்விஸ்ஸோட தென்மேற்கு முனைல இருக்கறதால இங்கிருந்து போற 99% ட்ரெயின்க லூசான் போய்த்தான் போயாகணும். 11 மணிக்கெல்லாம் போய் சேர்ந்துட்டேன். போகறதுக்கு முன்னாலயே எங்கெங்க போகணும்னு முடிவு பண்ணி முதல்ல ஒலிம்பிக்ஸ் ம்யூசியம்னு லிஸ்ட்ல வெச்சேன். ஸ்டேஷன்ல இருந்து வெளில வந்து மெட்ரொ ட்ரெயின் புடிச்சு ஊஷி (Ouchy) போனேன். அங்க இருந்து ஒரு 1/2 கி.மீ. தூரத்துல ஏரிக்கரைச் சாலைலயே இருக்கு ம்யூசியம். ரம்மியமான சூழல். அதிகக் கூட்டம் இல்லாத அமைதியான ஊர்.

"லூசான்" ஸ்விட்சர்லாந்தோட முக்கியமான நகரம். ஒலிம்பிக்ஸின் தலைநகரம்னு சொல்லப்படுது. "சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி"யோட தலைமையகமும், அதைத் தோற்றுவிச்ச "பியர் தி கூபெர்தின்" (Pierre de Coubertin) நினைவா இங்கதான் "ஒலிம்பிக்ஸ் ம்யூசியம்" இருக்கு. 1894ல, உலக நாடுகளோட ஒற்றுமைக்காகவும், அமைதிக்காகவும் மக்களை ஒருங்கிணைக்க விளையாட்டு ஒரு சரியான கருவியா இருக்கும்னு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை மறுபடி ஆரம்பிக்கணும்னு தீர்மானம் போட்டாங்க. 2 வருஷம் கழிச்சு 1896ல ஏதென்ஸ்ல முதல் ஒலிம்பிக்ஸ் ஆரம்பிச்சு போன வருஷம் பீஜிங் வரைக்கும் 29 போட்டிகள் நடத்தியாச்சு.

ம்யூசியத்தோட அமைப்பே ஒரு ஆச்சரியம். ஒரு சின்ன குன்றுக்கு பின்பக்கமா இருக்கு. முன்பக்கத்துல இருந்து மேல ஏறிப் போகப் போக கட்டடம் கொஞ்ச கொஞ்சமா தெரியற மாதிரியான ஒரு அமைப்பு. ஏறிப் போற வழில எல்லாம் அங்கங்க கலைநயமான சிற்பங்கள். எல்லாமெ விளையாட்டு, உடல் வலிமை, அமைதி இதையெல்லாம் வலியுறுத்தற மாதிரி. வன்முறையே கூடாதுன்னு சொல்றமாதிரி ஒரு ரிவால்வரோட முனைய முடிச்சு போட்டு வெச்ச மாதிரியான் சிற்பம் உலகப்புகழ் பெற்றது. அதுவும் இங்கதான் இருக்கு.

ம்யூசியத்துக்கு வெளிய ஒரு ஒலிம்பிக் தீபம் ஒண்ணு வெச்சு அது தினமும் பகல் 12 மணிக்கு ஏத்தி ஒலிம்பிக் கீதம் பாடறாங்க. வாசல்ல 8 பெரிய தூண்கள். முதல் ரெண்டு தூண்கள்ல முதலாவது ஒலிம்பிக்ல இருந்து ஒவ்வொரு வருடமும் எங்க நடந்துதுனு பொறிச்சு வெச்சுருக்கு. ரெண்டாவது தூண்லயே இன்னும் நிறைய இடம் இருக்கு. இன்னும் ஒரு 10 நூற்றாண்டுக்கு எழுதலாம்).



ம்யூசியம் சுத்திப்பாக்க நுழைவுக்கட்டணம் 15 ஃப்ரான்க். சில எக்ஸிபிஷன் ஹால்களுக்கு உள்ள ஃபோட்டோ எடுக்க அனுமதி கிடையாது. முதல் மாடில ஒலிம்பிக் வரலாறு, மெடல்கள், இதுவரை நடந்த எல்லா ஒலிம்பிக் விளையாட்டுகளோட ஜோதிகள் (சிட்னி, பீஜிங் ஜோதிகள் அவ்வளவு அழகு!!) எல்லாம் அழகா காட்சிக்கு வெச்சுருக்காங்க. ஒவ்வொரு விளையாட்டின்போதும் ஜோதியை எப்பிடி ஏத்தினாங்கங்கற க்ளிப்பிங்குக ஒரு பெரிய (பார்சிலோனால அம்பு விட்டு ஏத்தினது ஞாபகம் இருக்கா?) ஓடிக்கிட்டே இருக்கு. பக்கத்து ஹால்ல ஒலிம்பிக் விளையாட்டுக் கருவிகள், பயன்படுத்தற உடைகள் எல்லாம் பார்வைக்கு. இன்னொரு ஹால்ல ஒலிம்பிக் "ஹீரோஸ்". எல்லா சிறந்த விளையாட்டு வீரர்களைப் பத்திய படங்கள், குறிப்புகள், அவங்களோட உடைகள், உபயோகப் படுத்திய கருவிகள்....... அருமை !!

இரண்டாவது மாடில விண்டர் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிஸ், பாரலிம்பிக்ஸ் பற்றியது. அந்த விளையாட்டுகளுக்கான கருவிகள், உடைகள், மெடல்கள் எல்லாம் பார்வைக்கு. கூடவே "ஹீரோஸ்". பல விளையாட்டுகளை டிவில பாத்திருக்கோமே தவிர அதையெல்லாம் நேர்ல பாக்கும்போது பிரமிப்பா இருக்கு. சில கருவிகளையெல்லாம் பாத்தா இதை எப்பிடி பிடிப்பாங்க, இந்த உடைகளை எப்பிடிப் போட்டுக்கறாங்கன்னு சந்தேகம் வருது.


பேஸ்மெண்டுல பெரிய்ய்ய்ய்ய லைப்ரரியும் ஒலிம்பிக்ஸ் ஆராய்ச்சி மையமும். ஒலிம்பிக் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், டிவிடிக்கள்னு குமிஞ்சு கிடக்கு. நிறையப் பேர் காலேஜ் மாதிரி வந்து விளையாட்டுகளைப் பத்தி ஆராய்ச்சி பண்ணிக்கிடுருக்காங்க. உள்ளயே ஒரு 3D சினிமா ஹால் வேற. 1/2 மணி நேரத்து ஒரு படம். நான் ரெண்டு படம் பாத்தேன். ஸ்கீ ஜம்பிங் பண்றது நம்ம முகத்து மேலயே வந்து விழற மாதிரி இருந்தது.

லைப்ரரி & ஜெஸ்ஸீ ஒவன்ஸ் ஷூ

வெளிய வரும்போது சொவீனியர் ஷாப்புல பார்சிலோனா ஒலிம்பிக் கை விசிறி ஒண்ணும், மாஸ்கோ ஒலிம்பிக் டை ஒண்ணும் வாங்கிக்கிட்டு வந்தேன். விளையாட்டு வெறியர்கள் வந்தாங்கன்னா அப்பிடி 'ஆ'ன்னு வாயைத் திறந்துக்கிட்டு அங்கியே உக்காந்துடுவாங்க. அவ்வளவு விஷயங்கள் இருக்கு. அட்டகாசம் !!

மத்தபடி ஊர்ல பாக்கறதுக்கு பெரிசா ஒண்ணும் இல்லை. எல்லா ஐரொப்பிய நகரங்கள் மாதிரி நாலு கதீட்ரல்க, ஒரு சிடி ஹால், அங்கங்க ஃபவுண்டன்க. ஊரே ஒரு மலை மேலதான் இருக்கு. ஏரிக்கரையை விட சிடி சென்டர் 200 மீட்டர் உசரத்துல இருக்கு. ரோடெல்லாம் ஏற்றத்துல நடந்து கால் வலி கண்டுருச்சு. அப்பிடியே ஒரு ரவுண்டு வந்துட்டு நிறைய க்ளிக்கிட்டு திரும்ப ஸ்டேஷனுக்கு வந்து ட்ரெயினைப் புடிச்சு திரும்ப வந்தேன். "ஆஹா... நாம தூங்கி 30 மணி நேரத்துக்கு மேல ஆச்சே... அதான் கண்ணு இப்பிடி சொருகுது"ன்னு படுத்தா ஆபீஸ்ல அவங்களுக்கு மூக்குல வேர்த்துது போல. போன் பண்ணி "தூங்கறயா... தூங்கு தூங்கு... ஒண்ணும் அவசரமில்ல... இன்னும் 1 மணி நேரம் கழிச்சு வந்தாப் போதும்"னாங்க. அப்பறம் தூக்கமாவது வெங்காயமாவது :(


சிடி சென்டர் & சிடி ஹால் பகுதி

20 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

வால்பையன் said...

பயணக்கட்டுரை அருமை!

sakthi said...

alagana katturai

சி தயாளன் said...

படங்கள் அழகு...

எம்.எம்.அப்துல்லா said...

//ஒலிம்பிக்ஸ் தலைநகரம் "லூசான்"

//


ஓலிம்பிக் தலைநகரம் மட்டுமில்ல...நான்கூட சில நேரம் லூசான்தான் :))

Thamira said...

எம்.எம்.அப்துல்லா said...

ஓலிம்பிக் தலைநகரம் மட்டுமில்ல...நான்கூட சில நேரம் லூசான்தான் :))//

நாமும்னு சொல்லுங்க.. ஹிஹி..

Thamira said...

யோவ்.. லக்கி ஃபெல்லோ.. நீரு மட்டும்தான் பயணக்கட்டுரை போடுவீரா? நானும் போடப்போறேன்.. 'பெருங்குடியிலிருந்து அண்ணாநகர் வரை'.. எப்பிடி?

Mahesh said...

நன்றி வால்பையன்...

நன்றி shakthi...

நன்றி டொன்லீ...

அறிவிலி said...

அழகான படங்கள், அருமையான கட்டுரை.

Mahesh said...

நன்றி அப்துல்லா... இந்த தலைப்பு எழுதும்போதே நினைச்சேன்... இது மாதிரி யாராவது சிலேடைப் புலவர் வந்து சொல்லுவாங்கன்னு... நீங்களே சொல்லிட்டீங்களே.. .அவ்வ்வ்வ்வ்...

நன்றி ஆதி... ம்ம்ம்ம்...அண்ணனுக்கு ஒத்து ஊதறீங்களா? உங்களை.....
அது சரி... எதுக்காகத் தயங்கறீங்கனு புரியலயே? பெருங்குடி டு அண்ணாநகர் தாராளமா எழுதலாமே !! ஐரொப்பாவை விட சுவாரஸ்யமா இருக்கும்.

எம்.எம்.அப்துல்லா said...

//நாமும்னு சொல்லுங்க.. ஹிஹி.. //


ஐயாம் வெரி சாரி...நாமும்தான் இஃகஇ இஃகி இஃகி

Mahesh said...

நன்றி அறிவிலி....

கலையரசன் said...

கட்டுரை & படம் பக்கா! பக்கா!!

இது பயணகட்டுரை சீசனா?
இல்ல நாதான், இத போல தேடிபிடிச்சி படிக்கிறேனா?

சுதாகர் said...

//அட்லாண்டால அம்பு விட்டு ஏத்தினது ஞாபகம் இருக்கா?//

மன்னிக்கனும். இது நடந்தது பார்சிலோனாவுல.

http://en.wikipedia.org/wiki/Antonio_Rebollo

என்னய பொருத்தவரைக்கும், இது தான் பெஸ்ட்-னு சொல்லுவேன்.

Mahesh said...

நன்றி கலையரசன்...

நன்றி சுதாகர்... திருத்தத்திற்கு நன்றி... அவசரத்தில் மாறி விட்டது!!!

சின்னப் பையன் said...

கட்டுரை & படம் பக்கா! பக்கா!!

வடுவூர் குமார் said...

நன்றாக இருக்கு படங்கள்.

Mahesh said...

நன்றி ச்சின்னப்பையன்... வர வர ரிப்பீட்டு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு :))

நன்றி வடுவூர்குமார்...

Poornima Saravana kumar said...

எல்லா படமும் நல்லா இருக்கு:)

மங்களூர் சிவா said...

கட்டுரை மிக அருமை. படங்கள் இன்னும் அதிகம் போட்டிருக்கலாம்.

chitravini said...

மகேஷ், நீண்ட நாளைக்குப் பிறகு பின்னூட்டம் இடும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நிறைய பதிவுகளை இப்போதுதான் படித்தேன். 'டாக்டர் ஒபாமா' அருமை. மேலும் நிறைய பதிவர்கள் வரிசையில் சேர்ந்துள்ளார்கள் எனும் போது மகிழ்வாக உள்ளது. ஒவ்வொருவருடைய கருத்தும், கண்ணோட்டமும் வித்தியாசமாக உள்ளது. 'லூசான்' பயணக் கட்டுரை அருமை. நானும் 'லே' 'லடாக்' எல்லாம் சென்று வந்தேன். நிறைய இடங்கள் மனித தடங்கள் மிக சொற்பமே பதிந்த இடங்கள். மறக்க முடியாத் அனுபவம். நிலவின் மண்பரப்பு போன்ற தோற்றமுடைய நிலப்பரப்புகள். (Quasi Lunar Surface). படங்களை மகேஷிடம் கொடுத்து பதிவிட முயற்சிக்கிறேன். நண்பர்களுக்கு வணக்கம்.