Wednesday, April 8, 2009

!! Zytglogge !!

போன இடுகைல ஸ்விஸ் தலைநகரம் பெர்ன்ல இருக்கற Zytglogge அப்பிடிங்கற கடிகார கோபுரத்தைப் பத்தி எழுதியிருந்தேன். சில வாசகர்கள் அந்த கடிகாரத்தை படிப்பது எப்படின்னு மெயில்லயும் ஃபோன்லயும் கேட்டாங்க. ஒரு தனி இடுகையாவே போட்டுடலாம்னு தோணுச்சு. பின்ன? இடுகைக்கு விஷயம் கிடைக்கிறதே பெருசு... கிடைச்ச சான்ஸை விடலாமா?

இந்தப் படத்தில் அது காட்டும் நேரம் : மார்ச் 29, ஞாயிறு, 11:30. படத்தை க்ளிக்கி பெரிதாக்கிப் பாருங்க. ஆனா நான் எடுத்தது மார்ச் 29, ஞாயிறு, 12:30. இந்த பிழை எதனால்? ஐரொப்பால ஒவ்வொரு மார்ச் கடைசி ஞாயிற்றுக் கிழமையும் காலை 2 மணிக்கு பகல் நேரததை மிச்சம் பண்றதுக்காக (Day Light Saving) 1 மணி நேரம் கூட்டி வெச்சுடுவாங்க. (மறுபடி இதை செப்டெம்பர் கடைசி ஞாயிறு காலைல 1 மணி நேரம் குறைச்சு வெச்சுடுவாங்க. தானிகி தீனி சரிக போத்துந்தி காதா? இதுவாவது பரவால்ல.... அமெரிக்கால 5 கால பிரிவுக. அவங்க குழப்பம் எப்பிடியோ?) இந்த 1 மணி நேர மாற்றத்தை ஏப்ரல் முதல் ஞாயிற்றுக்கிழமைதான் Zytglogge-ஐ சரி பண்ணிக் காமிப்பாங்களாம். அதுவெ ஒரு பெரிய விவரமான வேலை போல. மாத்தறபோது ஏற்படற நேரப்பிழையை சரிபண்றது அது ஒரு தனி வேலையாம்.


எதோ நமக்கு இருக்கற கொஞ்சமே கொஞ்சம் ஜெர்மன் மொழி ஞான(?!!)த்தை வெச்சு அங்க இருந்த போர்டைப் படிச்சு புரிஞ்சு (!!) எழுதியிருக்கேன். அதுலயும் இந்த ராசி விவகாரமெல்லாம் சரியா தப்பான்னு தெரியல. வானவியல் தெரிஞ்ச நம்ம ஸ்வாமி ஓம்கார் மாதிரி யாரவது உறுதிப்படுத்தலாம்.


ஸ்வாமி ஓம்காரின் விளக்கம் :

அஸ்ட்ரானமிக்கல் விஷயம் மற்றும் சின்ன மாற்றம் தேவை.

நீங்கள் பூமி என குறிப்பிட்டது தான் சந்திரன்.

நிங்கள் சந்திரன் என கூறியது லக்னம் (Ascendant).
சூரியன் - மேஷத்தில்
சந்திரன் - ரிஷபத்தில்
லக்னம் - துலா ராசியில்.
மேற்கண்ட தகவல் வெஸ்டென் ஜோதிடத்தின் அடிப்படையில் இருக்கிறது. நமக்கு ஒரு ராசி முன்பு வரும். இருந்தாலும் இதை கைகடிகாரமாக்கினால் ஜோதிடர்களுக்கு நன்கு பயன்படும்.

மிக்க நன்றி ஸ்வாமி ஓம்கார்.


9 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

Xavier said...

மீ த பஸ்ட்

Thamira said...

உண்டான டைட்டன்லயே சமயங்கள்ல மணி தலைகீழா தெரியுது. இந்த லட்சணத்துல இவ்வளவு சிம்பிளான கடிகாரத்துல அதுவும் ஒரு மணி நேரம் கூட்டியோ குறச்சோவா..? வெளங்கிரும்..

ஸ்வாமி ஓம்கார் said...

கஷ்டமான கடிகாரத்தை சாதாரணமா விளக்கியதற்கு நன்றி.

அஸ்ட்ரானமிக்கல் விஷயம் மற்றும் சின்ன மாற்றம் தேவை.

நீங்கள் பூமி என குறிப்பிட்டது தான் சந்திரன்.

நிங்கள் சந்திரன் என கூறியது லக்னம் (Ascendant).
சூரியன் - மேஷத்தில்
சந்திரன் - ரிஷபத்தில்
லக்னம் - துலா ராசியில்.
மேற்கண்ட தகவல் வெஸ்டென் ஜோதிடத்தின் அடிப்படையில் இருக்கிறது. நமக்கு ஒரு ராசி முன்பு வரும். இருந்தாலும் இதை கைகடிகாரமாக்கினால் ஜோதிடர்களுக்கு நன்கு பயன்படும்.

அருமையான கடிகாரம். பார்வைக்கு தந்தமைக்கு நன்றி.

Mahesh said...

அட... வாங்க Xavier... நன்றி...

நன்றி ஆதி... அதென்னவோ வாஸ்தவந்தான்.. அதுலயும் டாஸ்மாக் போயிட்டு வந்து பாத்தா, போன வருசத்து மணி இல்ல தெரியுது?

திருத்திய விளக்கத்துக்கு மிக்க நன்றி ஸ்வாமி ஓம்கார்.

பழமைபேசி said...

நவில்தலும் மொழிதலும் நடக்கட்டு, நடக்கட்டு...

சி தயாளன் said...

அடடா...இன்னும் சுவிஸில் தான் நிக்கிறீங்களா..? enjoy...

அறிவிலி said...

நமக்கு கேசியோ டிஜிடல் வாட்ச்லயே லைட்டு போட்டு பாக்கணும். ஒவ்வொரு தடவயும் சாமிய கூப்ட முடியுமா.அப்றம் அவுரு டைம் கெட்டு போயிரும்.

Mahesh said...

நன்றி மணியாரே....

நன்றி டொன் லீ... ஆமாங்க இன்னும் இங்கியேதான்....

நன்றி அறிவிலி... நல்லாச் சொன்னீங்க போங்க... நானும் அதையேதான் நினைச்சென்... அந்த ஊர்க்காரங்களுக்கு கடிகாரம் படிக்கறதுக்குள்ள கழுத்து வலி வந்துருமோ?

நசரேயன் said...

இதுக்கு தான் நான் வாட்ச் கட்டுறதே இல்லை