Wednesday, April 29, 2009

சமாதானம் - சில அவதானங்கள்


உன் குடையின் கீழே இருக்கும் மக்கள் யாவரும் உன்னுடைய மக்கள் என்ற எண்ணம் இல்லாதவரை உன்னால் சமாதானத்தை நிலை நாட்ட முடியாது - புற நானூற்றுப் பாடல்

ஒரு கௌரவத்துடன் சமாதானத்தை நிலை நிறுத்த இயலாதானால், அது சமாதானமாக இருக்க முடியாது - ஜான் ரஸல்

உனக்குள்ளே அமைதி இருந்தால் மட்டுமே உன்னால் உலகத்துக்கு அமைதியை அளிக்க முடியும். குறைந்த பட்சம் உன் நாட்டு மக்களுக்கு. - தாமஸ் கெம்பிஸ்

அடக்குமுறையின் மூலம் சமாதானத்தை அடைய முடியாது.... புரிதலின் மூலம் மட்டுமே அது சாத்தியம் - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

போர் முடிவுக்கு வந்து சமாதானம் பிறக்கும் - மரித்த ஒவ்வொரு உயிரும் திரும்ப வருமானால்.... - ஸ்டான்லி பால்ட்வின்

உரிமையுள்ள ஒரு போரை விட ஒருதலைப் பட்சமான சமாதானத்தையே விரும்புகிறேன் - சிசிரோ

யாராலும் ஒரே சமயத்தில் போரை நடத்தவும் சமாதானத்தை நிலை நாட்டவும் முடியாது ; சமாதானம் என்று முழங்கும் கொடுங்கோலர்களைத் தவிர - யாரோ

இரு போர்களுக்கு இடையில் எல்லாருமே தேவதூதர்கள்தான் ; இரு உணவுகளுக்கு இடையில் உண்ணாமல் இருப்பதைப் போல... - கால்மன் மெக்கார்தி

போரில் தந்தைகள் மகன்களை புதைக்கின்றனர் ; சமாதானத்தில் மகன்கள் தந்தைகளைப் புதைக்கின்றனர் - க்ரூசஸ்

முந்தைய பதிவு போரைப் பற்றி சில பேர்

13 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

வால்பையன் said...

சமாதானம் உண்டாகட்டும்!

இராகவன் நைஜிரியா said...

அருமை நண்பரே...

சமாதனத்தைப் பற்றிய அவதானங்கள் ஒவ்வொன்றும் மிக அருமை.

புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால்......... என்னத்த சொலுவது?

எம்.எம்.அப்துல்லா said...

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதாதனமும் உண்டாகட்டும்.

narsim said...

//போரில் தந்தைகள் மகன்களை புதைக்கின்றனர் ; சமாதானத்தில் மகன்கள் தந்தைகளைப் புதைக்கின்றனர் - க்ரூசஸ்//

க்ரூசஸ்? தமிழ்நாட்டுக்காரரில்லைன்னு நம்புவோம்

பழமைபேசி said...

அவதானித்த அண்ணனுக்கு நன்றி!

//எம்.எம்.அப்துல்லா said...
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதாதனமும் உண்டாகட்டும்.
//

அண்ணே, அண்ணன் அமைதியாத்தான இருக்காரு? அவ்வ்வ்...

அப்புறம் அந்த சமாதா யாரு? அண்ணன் எதுக்கு சமாதாவை நெனைக்கணும்?

சி தயாளன் said...

இலங்கையின் நான் இருக்கும் போது பள்ளிக்கூடத்தில் கேட்ட ஒரு கவிதை

”தானங்களில் சிறந்த தானம் சமாதானம்
அது கேட்பதென்னவோ இரத்த தானம்...”

Thamira said...

அருமையான சிந்தனைகள்.!

உரிமையுள்ள ஒரு போரை விட ஒருதலைப் பட்சமான சமாதானத்தையே விரும்புகிறேன் - சிசிரோ// இந்தக்கருத்து உண்மையில் சிந்திக்க வைத்தது..

Mahesh said...

நன்றி வால்பையன்...

நன்றி ராகவன் சார்... புரியும் புரியும்... கொஞ்சம் லேட்டாப் புரியும் :(

நன்றி அப்துல்லாண்ணே... பெரிய பாடகர் ஆயிட்டீங்களாம்... சொல்லவேயில்ல?

நன்றி நர்சிம்.... அவ்வ்... நீங்க கூட அப்துல்லா பத்தி சொல்லவே இல்லயே :(

நன்றி பழமைபேசி... அதானே !!

நன்றி டொன்லீ.... கவித கனமா இருக்கு :(

நன்றி ஆதி....

Xavier said...

மிக மிக அருமை.

http://urupudaathathu.blogspot.com/ said...

அருமை....

http://urupudaathathu.blogspot.com/ said...

டெம்பிளேட் நல்லா இருக்குண்ணே

அறிவிலி said...

சமாதானம்.

மங்களூர் சிவா said...

அருமையான சிந்தனைகள்.!