Wednesday, March 11, 2009

பரிசல் போல பதிவிடுவதில் உள்ள 11 சங்கடங்கள் !!

1) நிச்சயமாக எதிர்ப்பதிவு போட மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கையுடனோ, அடுத்த 10வது நிமிடத்தில் எதிர் பதிவு வரலாம் என்ற நம்பிக்கையுடனோதான் பதிவிட நேரும். இரண்டுமே பதிவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.

2) பதிவு போட்ட அரை மணி நேரத்தில் "உனக்கு இது தேவையா?" என்று நம்மையே கேட்டுக் கொள்ள நேர்கிறது.

3) ‘இனிமேல் எதிர்பதிவு போட மாட்டேன்’ – இது பொதுவாக பதிவர்கள் சொல்லும் வாசகம். ஆனால் படக் படக்கென்று அதே நாளில் பத்து எதிர்பதிவுகள் வந்து விடுகின்றன.

4) எதிர் பதிவிடுபவர் பெயர் மிஸ்டர்.எக்ஸ் என்று வைத்துக் கொண்டால், பதிவுலகத்தில் வந்த ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர் மிஸ்டர்.எக்ஸ் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘என்னோட அந்த நல்ல பதிவுக்கு எதிர்பதிவு போட்டவர்’ என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘எதிர் பதிவு போட்டே கும்முபவர்’ என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.

5) நாம் போட்ட பதிவை ‘நம்மளே அந்தப் பதிவுக்கு எதிர் பதிவாத்தானே இதப் போட்டோம் ; அதுக்கு இவர் மறு எதிர் பதிவு போடறாரே" என்று மறு / மறு மறு எதிர் பதிவு போட்ட பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.

6) ஒரிஜினல் பதிவிலிருந்து வாக்கியங்களை அப்படியே உபயோகிப்பது, அதே நடையை பின்பற்றுவது போன்றவற்றை செய்யும் சுதந்திரங்களை வாரி வழங்கி விடுகிறோம். அல்லது அப்படி அவர் அப்படி உபயோகிக்காமல் சொந்த நடையில் எழுதினால் ‘இதப் போய் எதிர்ப்பதிவுன்னு நினைச்சோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.

7) உண்மையாகவே அந்த எதிர்பதிவைப் போட்டவர் தெரியாமலே போட்டு விட்டதாக சொன்னால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேர்கிறது. எதிர்பதிவு என்று தெரிந்தே போட்டும் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)

8) எதிர்பதிவு வந்த கடுப்பில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் அவரும் எதிர்பதிவு போட்டுக்கொள்ள அனுமதி கேட்க, நாம் சூடு கண்ட பூனையாய் அவரைக் கடுப்படிக்க, அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.

9) நண்பனுக்குப் பணம் கொடுத்தால் பணம், நட்பு இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, எதிர்பதிவு போட அனுமதி கொடுத்தால் நமது ஒரிஜினல் பதிவின் வீரியம், தாக்கம், ஒரிஜினாலிட்டி மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது.

10) எதிர்பதிவை முதலில் படிப்பவர்களுக்கு ஒரிஜினல் பதிவை உடனே படிக்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே, எதற்காக இந்த எதிர்பதிவு என்று நிஜமாகவே யோசிப்பவர்கள் ஒரிஜினல் பதிவின் மதிப்புணர்ந்து நிச்சயமாகப் படிப்பார்கள்... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11) நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் பதிவிடுகிறோம். அதற்கு எதிர்பதிவு வருவதால் அந்த ஒரிஜினல் பதிவை எழுதிய பதிவருக்கு கிடைக்கும் பாராட்டுக்கு நாம் சிறிது தடையாக இருக்கிறோம்.
பரிசலின் ஒரிஜினல் பதிவு (பிராயச்சித்தம் தேடிக்கிறேன் இஃகி இஃகி இஃகி)
டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் எதுவும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடுவதல்ல என இதன் மூலம் உறுதியளிக்கிறேன் !!

28 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

நட்புடன் ஜமால் said...

இந்த வாரம் எல்லாம் 11

SK said...

கலக்குங்க எசமான் :) :) :)

பரிசல்காரன் said...

அட! கலக்கலான கான்செப்ட் மகேஷ்..

பார்க்கலாம்.. இன்னும் எத்தனைன்னு!!

கார்க்கிபவா said...

ஆரம்பிச்சாச்சா????????

வால்பையன் said...

எதிர்பதிவில் உங்களிக்கு தான் பர்ஸ்ட் மார்க், என் பதிவை விட உங்களுடயது நல்லாயிருக்கு!

Mahesh said...

நன்றி ஜமால்பாய்...

நன்றி SK...

நன்றி பரிசல்... குறஞ்சது ஒரு 10 பதிவாவது வந்துடும்னு நினைக்கிறேன் :)

நன்றி கார்க்கி... அது ஆரம்பிச்சு 2 மணிநேரம் ஆச்சு ..

நன்றி வால்பையன்... என்ன இருந்தாலும் உங்க சரக்குல கிக்கு அதிகம் :)

Thamira said...

நான் : யோவ் ஏன்யா இப்பிடிக்கிளம்பிட்டீங்க? அவர சும்மாவே உடமாட்டீங்களா?

மகேஷ் : நீங்க போட்டா எதிர்பதிவு.. அதே நாங்க போட்டா கிடையாதா? எந்த ஊர் நாயம் இது? நாட்டாம தீர்ப்ப மாத்திச்சொல்லு..

நான் : அதுக்கு ஏன் இவ்ளோ கோவப்படுதிய? சரி சரி கேட்டுக்கிடுவோம்..

Mahesh said...

நன்னி தாமிரா... நல்லாருங்கப்பூ நல்லாருங்க !!

நன்றி ச்சின்னப்பையன்...

இன்னிக்கு தமிழ்மணம் கவுத்துருச்சு போல இருக்கே... :((((

Kumky said...

ஹை..இப்படியும் எதிர்ப்பதிவு...
நல்லாருக்கு மஹேஷ்.

சி தயாளன் said...

இன்னிக்கு 11ம் தேதி என்பதற்காக 11 ஆ...

ஏதோ வலையுலகம் கலகலப்பாக இருந்தா சரி :-))

cheena (சீனா) said...

அட - மகேசு - இதுவும் நல்லாத்தான் இருக்கு - ஓஒ எந்தப் பதிவெயும் எதிர்ப் பதிவா மாத்திடலாம் போல - நன்று நன்று

Mahesh said...

நன்றி கும்க்கி.....

நன்றி டொன்லீ... எங்க கலகலப்பு? தமிழ்மணம்தான் இன்னிக்கு படுத்துடுச்சே :((

நன்றி சீனா அய்யா... ஐ... வலைச்சரம் மொதலாளி நம்மூட்டுக்கு வந்துட்டாருடோய்....

நசரேயன் said...

இது சங்கட வாரமா?

குடுகுடுப்பை said...

இதுக்கு எதிர்பதிவு போடலாம், ஆனா நசரேயன் நிலைமை மாதிரி ஆயிட்டா என்ன பண்றது.

முரளிகண்ணன் said...

அருமை. கலக்கல்

Mahesh said...

நன்றி நசரேயன், முரளிகண்ணன், சரவணகுமரன்...

நன்றி குகு.... அது என்னாது நசரேயன் நிலைம?

எம்.எம்.அப்துல்லா said...

அடப்பாவி அண்னே...இது நான் யோசிச்ச கான்சப்ட்ய்யா.. கொஞ்சம் லேட்டானதும் முந்திட்டீங்களே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அது சரி(18185106603874041862) said...

இந்த பதிவுக்கு யாரும் எதிர்ப்பதிவு போடமுடியாது :0))

Mahesh said...

வாங்க அப்துல்லாண்ணே... அடாடா நீங்க போட்ருந்தா இன்னும் களை கட்டியிருக்குமே :)

நன்றி அதுசரி... அது சரி !!

வெட்டிப்பயல் said...

Kalakal Post :)

கோவி.கண்ணன் said...

ம் பரிசல் பதிவு போட்டால் தான் (எல்லோரும்) எழுதுவேன்னு இருக்கிங்க
:)

Unknown said...

Super :):)

Mahesh said...

நன்றி வெட்டிபயல்...

நன்றி கோவி கண்ணன்... அப்பிடியெல்லாம் இல்லீங்க.. எதிர்பதிவு போட்டு ரொம்ப நாளச்சேன்னுதான் ஹி ஹி ஹி...

நன்றி ஸ்ரீமதி...

www.narsim.in said...

4 கலக்கல் மகேஷ்.. இதுதாங்க உண்மையிலேயே உய் உய்னு விசிலடிக்க வேண்டிய மேட்டர்

www.narsim.in said...

//வால்பையன் said...
எதிர்பதிவில் உங்களிக்கு தான் பர்ஸ்ட் மார்க், என் பதிவை விட உங்களுடயது நல்லாயிருக்கு!
//
அங்க வேறயா.. வர்றேன்..

Mahesh said...

வாங்க நர்சிம்... என்னண்ணே லேட்டு?

நையாண்டி நைனா said...

சூப்பரப்பு....
அடி பின்னுறாங்களே... எல்லாரும்....

அப்ப நான் எழுதியதுதான் இருக்குரதுலே மொக்கையா?

(நான் எப்பவும் மொக்கைதான் எழுதுவேன் என்கிறது வேறு விஷயம்)

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்கு நண்பா.. இன்னொரு எதிர்ப்பதிவு வாரமா.. சரி சரி..