Saturday, February 28, 2009

(சு)வாசித்ததும்.... யோசித்ததும்...

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4 ...5 ...6

இந்த புத்தக அறிமுகத் தொடருக்கு "அவனோடே ராவுகள்"னு தலைப்பு வெச்சுருந்தேன். போன முறை அப்துல்லா அண்ணன் தலைப்பை மாத்த சொல்லி வேண்டுகோள் விடுத்தாரு. அவருடைய கருத்தை மதித்து தலைப்பை மாத்தியாச்சு. நன்றி அப்துல்லா.


The Five People You Meet in Heaven
Author : Mitch Albom

இது ஒரு நாவலா, கட்டுரையா, தத்துவ விளக்கப் புத்தகமான்னு ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். நாவல் வடிவிலான ஒரு உளவியல் புத்தகம்னும் சொல்லலாம். எதுவா இருந்தாலும் படிக்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. மனித உணர்வுகளை வலிக்கற அளவுக்கு தூண்டி விடுது. கதாநாயகனை நம்மளோட பிரதிநிதின்னு வெச்சு படிச்சா ஆசிரியர் சொல்ல வர செய்திகளோட நம்மள சுலபமா இணைச்சுக்க முடியுது.

படிக்க ஆரம்பிச்சதுமே வித்தியாசம். கதையோட முதல் வரியிலேயே கதாநாயகன் எட்டி (Eddie) இறந்து போகிறான். 86 வயசு. ஒரு அம்யூஸ்மென்ட் பார்க்ல இயந்திரங்களைப் பராமரிக்கிற மெக்கானிக். ஒரு ஜயன்ட் வீல் மாதிரியான ரைட்ல ஒரு பெட்டி கழண்டு விழ, அதுல இருக்கற ஒரு சிறுமிய காப்பாத்தற முயற்சியில் இறந்து போகிறான். இறப்புக்குப் பின்னால அவனுக்கு நிகழ்கிற அனுபவங்கள்தான் புத்தகம்.

எட்டி சொர்க்கத்துக்குப் போகிறான்(ர்?). அது "சொர்க்கம்"தான் அப்படிங்கறது அவனுடைய எண்ணம். தான் இறப்பதற்கு முன் அந்தச் சிறுமியைக் காப்பாற்றினானா இல்லயா என்பது அவனுக்கு தெரியவில்லை. அது ஒரு முள்ளாக குத்துகிறது. அங்கே அவனுக்காக 5 பேர் காத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவன் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் அவனோடு சம்பந்தப்பட்டவர்கள். சிலரை அவனுக்கே தெரியாது. ஒவ்வொருவரும் அவனை சந்திக்க வேண்டும், அவனுக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே காத்திருக்கிறார்கள். இதெல்லாம் சாத்தியமா, உண்மையா, சொர்க்கம் என்ற ஒன்று உண்டா, இறந்த பின் "சந்திப்புகள்" எப்படி, இது ஆத்திகத்தை ஊக்குவிக்கும் புத்தகமா என்றெல்லாம் பல சந்தேகங்கள் வரலாம். என்னைப் பொறுத்த வரையில் அந்த சந்தேகங்கள் எல்லாம் அநாவசியம். நம்மை நாமே ஒரு தளம் மேலேயிருந்து நமது நிறை குறைகளைப் பார்ப்பது போல இருக்கிறது. அந்த ஒரு அனுபவத்துக்காகவே இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.

தெருவில் குறுக்கே ஓடிய சிறுவன் எட்டியை தவிர்க்க காரைத் திருப்பி ஆக்ஸிடென்டில் இறந்த "ப்ளூ மேன்" அவனது அறியாமையைப் பற்றிப் பேசுகிறார். (இவரை இதற்கு முன் தன் வாழ்வில் எட்டி சந்தித்ததில்லை) பிலிப்பைன்ஸுக்கு போருக்குப் போன எட்டியின் கேப்டன் தனது தியாகத்தைப் பற்றி சொல்கிறார். (வீட்டின் பிரச்னனகளிலிருந்து தப்பிக்க சிறிது காலம் போருக்குச் சென்று கால் ஊனமாகிறான் ) எட்டி வேலை செய்த "ரூபி பியர்" பார்க்கின் நிறுவனரின் மனைவி எட்டியின் அப்பாவின் மறுபக்கத்தை விளக்கி அவரை மன்னித்து விடும்படி சொல்கிறாள். (எட்டியின் அப்பா ஒரு கடுகடு பேர்வழி. அவனுடன் ஒருபோதும் இணக்கமாக இருந்ததில்லை. சிறு வயது முதலே அவர் மீது கடும் வெறுப்புடன் இருக்கிறான் எட்டி. அவன் தாயார்தான் அவனுடைய நெருங்கிய தோழி.) நான்காவதாக அவனுடைய மனைவி மார்கரெட். அன்பைப் பற்றிய சாஸ்வதமான உண்மைகளை விளக்குகிறாள். (எட்டி தன் மனைவியை மிக மிக மிக நேசித்தவன். அவனுடைய 50வது வயதில், கேன்சரில் அவள் இறந்தவுடன் உலகமே இருண்டு போனது போல உணர்ந்தவன்.) கடைசியாக அவனை சந்தித்து ஒவ்வொருவர் வாழ்விற்கும் ஒரு காரணமும் அர்த்தமும் இருக்கிறது என்று எடுத்துச் சொல்வது ஒரு பிலிபினோ சிறுமி. எட்டி இறப்பதற்கு முன்பு அவன் ஜெயண்ட் வீலில் மாட்டிக்கொண்ட சிறுமியைக் காப்பாற்றி விட்டுத்தான் இறந்தான் என்ற உண்மையைச் சொல்லி அவன் மனதில் முள்ளாய்க் குத்திய கேள்விக்கு பதிலளிக்கிறாள். (பிலிப்பைன்ஸில் அவனும், நண்பர்களும், கேப்டனும் சிறையிலிருந்து தப்பி ஓடும்போது சிறைக்கு தீ வைக்கிறார்கள். கடைசி நிமிடத்தில் கட்டிடத்துக்குள் யாரோ இருப்பது போல உணர்ந்து அவரைக் காப்பாற்ற எட்டி முயற்சிப்பதற்குள் எல்லாம் காலி. அந்தச் சிறுமிதான் இவள்.)

வாழும்போது தன் வாழ்க்கை முழுவதும் தான் ஒரு அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்வதாகவும், எதற்கும் உபயோகமற்றதாகவும், தன் மீது அன்பு செலுத்தாத தந்தையினால் தான் அடைந்திருக்க வேண்டிய பலவற்றை இழந்து விட்டதாகவும், தன் அன்பு மனைவியை அவளை நேசித்த அளவுக்கு நல்ல நிலைமையில் வைத்திருக்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சியுடனுமே கழித்த எட்டி, இறந்த பின்பு இந்த 5 பேர் சொன்ன செய்திகளின் மூலம் அனைத்திற்கும் விடை காண்கிறான்.

புத்தகத்தை ஆழ்ந்து படிக்கும்போது எட்டி வேறு யாரும் அல்ல, அது நாம்தான் என்பது புரியும். நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் எப்படி பிணைந்திருக்கிறோம் என்பதும் புரியும். மனித வாழ்வை சிறந்த முறையில் கழிக்க தேவையான சக மனிதர்களை மதிப்பது/புரிவது (empathy) , தியாகம், மன்னிக்கும் குணம், அன்பு மற்றும் இரக்க குணங்கள் - இவற்றை அவனைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் வலியுறுத்துகிறார்கள்.

சொல்லியிருக்கிற செய்திகள் போலவே, ஒவ்வொரு அத்தியாயத்துக்கு நடுவிலும் எட்டியின் எதாவது ஒரு பிறந்த நாளில் நடந்த சம்பவத்தைச் சொல்வது என்று கதையின் வடிவமும் வித்தியாசமாக இருக்கிறது. சிறிய புத்தகம்தான். ஆனால் நம்முடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்ற வகையில் படித்து முடிக்க தாமதமாகலாம். இது போன்ற புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து விட்டு அடுத்த புத்தகத்தை எடுப்பது கடினம். மெதுவாக அனுபவித்து படித்தால் அதில் கிடைக்கும் கிளர்ச்சியே தனி. படித்துப் பாருங்கள்.

20 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

_/\_

இப்ப போய்ட்டு அப்புறம்...

எம்.எம்.அப்துல்லா said...

கடையில ஆளு சேக்கனுன்னு அந்த காலத்துல அப்பிடி ஒரு தலைப்பு வச்சது சரி...இப்ப என்னாத்துக்குங்குறதாலதான் மாத்தச் சொன்னேன்.

//அவருடைய கருத்தை மதித்து தலைப்பை மாத்தியாச்சு. நன்றி அப்துல்லா.
//

என் கருத்தை மாத்துனதுக்கு நானுல்ல நன்றி சொல்லணும்.

:)

Mahesh said...

சீக்கிரம் வந்து கருத்து சொல்லுங்க மணியாரே...

//எம்.எம்.அப்துல்லா said...
என் கருத்தை மாத்துனதுக்கு நானுல்ல நன்றி சொல்லணும்.//

அண்ணே உங்க கருத்த மாத்தலண்ணே :( தலைப்பத்தான் மாத்தினேன். அவ்வ்வ்வ்...........

பரிசல்காரன் said...

அருமையான புத்தகம் போல! படிக்கத் தூண்டும் வண்ணம் விமர்சனம் எழுதுவது ஒரு கலை! அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது!!!

Thamira said...

நமக்கும் இங்கிலீஷுக்கும் ஒண்ணேமுக்கால் கிலோமீட்டர் தூரங்க.. அதனால உங்களோட ‘அவனோட ராவுகள்’ தொடரை படிக்கவேண்டிய அவசியமில்லைதானுங்களே.. (எப்பிடி எஸ்கேப்பானேன் பாத்தீங்களா? நிஜமாகவே நாவல்கள் படிக்குமளவு ஆங்கில அறிவு கிடையாதுங்கண்ணே)

Thamira said...

ஆனாலும் விமர்சனக்கருத்துகளைப் படிப்பதில் தவறில்லைன்னு என்னை மடக்கலாம்னு மட்டும் நினைகாதீங்க.. (நிதானமா ஒரு நாள் சேத்துவச்சு படிச்சுக்கிடுதேன்)

வெண்பூ said...

புத்தக விமர்சனம் அருமை.. மாற்றியிருக்கும் தலைப்பு அருமையோ அருமை.. நல்ல கற்பனை..

ers said...

நானெல்லாம் இங்கிலீசு புத்தகங்கள் படிக்கிறதே இல்லை. ஏன்னா எங்களுக்கு அதைப்படிக்க தெரியாது. இப்படி ஒரு நிலைமையில் உங்கள மாதிரி படிச்சவங்க சொல்ற கருத்துக்களை தான் நாங்க அசை போட்டுக்க முடியும்.

நல்லாவே எழுதியிருக்கிறீர்கள் மகேஷ். வாழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

// மனித வாழ்வை சிறந்த முறையில் கழிக்க தேவையான சக மனிதர்களை மதிப்பது/புரிவது (empathy) , தியாகம், மன்னிக்கும் குணம், அன்பு மற்றும் இரக்க குணங்கள் - இவற்றை அவனைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் வலியுறுத்துகிறார்கள். //

சரியான கருத்து. இவை அனைத்தும் வாழ்க்கையை அழகாக்க உதவும். மனித நேயம் என்ற ஒன்று இன்று மறைந்து கொண்டே போகின்றது.

இராகவன் நைஜிரியா said...

விமர்சனங்கள் மிக அழகாக எழுதுகின்றீர்கள் மகேஷ்.

மிக்க நன்றி.

இராகவன் நைஜிரியா said...

// தாமிரா said...

நமக்கும் இங்கிலீஷுக்கும் ஒண்ணேமுக்கால் கிலோமீட்டர் தூரங்க.. அதனால உங்களோட ‘அவனோட ராவுகள்’ தொடரை படிக்கவேண்டிய அவசியமில்லைதானுங்களே.. (எப்பிடி எஸ்கேப்பானேன் பாத்தீங்களா? நிஜமாகவே நாவல்கள் படிக்குமளவு ஆங்கில அறிவு கிடையாதுங்கண்ணே)//

தாமிராவே இப்படி சொன்னா... நானெல்லாம் என்ன சொல்வது...

அவ்...அவ்....அவ்....

Mahesh said...

நன்றி பரிசல்.... என்னமோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க :)

நன்றி தாமிரா... பாத்தீங்களா... கிட்ட வந்துட்டீங்க!! கொஞ்ச நாள் முன்னாடி ரெண்டரை கிலோமீட்டர்னீங்க. இப்ப ஒண்ணேமுக்கால்தான் :)

நன்றி வெண்பூ... தலைப்பு நல்லால்லயோன்னு யோசிச்சேன். நீங்க நல்லாருக்குன்னு சொல்லீட்டீங்க.

நன்றி ராகவன்.... ஆஹா... பின்னூட்டப்புயல் ரொம்ப நாளைக்கப்பறம் நம்ம க(டை)ரையைக் கடந்துருக்கு.

குசும்பன் said...

மிகவும் அருமையாக எழுதி இருக்கீங்க படிக்க ஆவலை தூண்டினாலும், நான் படிக்க மாட்டேன்!:))

ஏன்னா ஆங்கிலபுத்தகம் எல்லாம் படிப்பது இல்லை என்று ஒரு கொள்கையோடு வாழ்ந்து வருகிறேன்:)))(படிக்கத்தெரியாதுன்னு சொல்வதுக்கு எம்புட்டு பில்டப்பு)

Mahesh said...

நன்றி குசும்பன்.... உங்க பில்டப்பு சூப்பரப்பு :) இப்பிடி கொள்கைப்பிடிப்போட இருக்கறவங்களை எனக்கு ரொம்ப புடிக்கும்.

பழமைபேசி said...

படிச்சாச்சு....நல்லா இருக்கு...

Mahesh said...

நன்றி பழமைபேசி... படிச்சாச்சுன்னா? பதிவை படிச்சாச்சா? இல்ல புத்தகத்தைப் படிச்சாச்சா? :)))

narsim said...

இறப்புக்குப் பின்னால அவனுக்கு நிகழ்கிற அனுபவங்கள்தான் புத்தகம்.
//

இது போதாதா ஆர்வத்த தூண்ட?? கலக்கல் தல

Mahesh said...

நன்றி நர்சிம்.....

வால்பையன் said...

நல்ல கதையா இருக்கு,
கண்டிப்பா திரைப்படமா வரும்.
பார்த்துக்கிறேன்.

ஆங்கில நாவல் படிக்கிற அளவுக்கு சரக்கு இல்லைங்க!

பழமைபேசி said...

ஒரு ஊர்ல ஒரு வணிகன் கடை வெச்சு இருந்தானாம். அவங்கிட்ட ஒருத்தன் வேலைக்கு சேரவே, முதல் நாள் கற்பூரம் எப்படி நிறை அறியறதுன்னு (எடைப் போடுறது) இப்படிச் சொல்லிக் கொடுத்தானாம். தராசுன்னு எதுவுமே இல்லையாமுங்க.... வணிகன் சொல்லிக் குடுத்த விதம்:

அஞ்சேழ் க‌ழ‌ஞ்சினெடை யாழாக்குக் க‌ற்பூர‌ம்
கொஞ்சுகிளி மொழியே கூறுங்கால் ‍ விஞ்சாது
ந‌ன்றான‌ த‌ண்ணீர்க்கு நாழிப‌ல‌ம் ப‌ன்னிர‌ண்டாம்
என்றாயு மேழிர‌ண்டா மென்.

இந்த‌ சூத்திர‌த்தை வெச்சே, அவ‌ன் வாழ்நாள் பூராவும் க‌ற்பூர‌ யாவார‌ம் செய்துட்டு இருந்தானாம். இஃகிஃகி! இதுக்குப் பொருள்? அமெரிக்க‌ தொழில‌திப‌ரை ம‌ண‌ந்த‌ ந‌டிகையின் கதை?? நாளைக்கி வ‌ர்ற‌ ப‌ள்ளைய‌ம் பாருங்க‌....