Saturday, January 17, 2009

பொருள் - ஆதாரமா சேதாரமா ?

Magician Bernard Madoff makes funds disappear

இருக்கற பணமெல்லாம் மேடாஃப்ட்ட குடுத்து
சறுக்கற சந்தைல மிச்சத்தப் போட்டு - கிறுக்குன
காய்தமெல்லாம் பாண்டுன்னு வாங்கி வெச்சு
தேஞ்சுதே சேத்த சொத்து.

(போச்சுடா..இவனும் வெண்பா பாட ஆரம்பிச்சுட்டானான்னு சிரிக்க வேண்டாம். என்னவோ ஒரு சின்ன முயற்சி... ஹி ஹி ஹி)

பொருளாதார சரிவைப் பத்தி போன வருசம் பதிஞ்ச பழைய பதிவுகள் ...1 ...2

1995 பிப்ரவரி - நிக் லீசன், பேரிங்ஸ் பேங்க்
2008 பிப்ரவரி - ஜெரோம் கெர்வியெ, சொசைட்டி ஜெனரல்
2008 டிசம்பர் - பெர்னாட் மேடாஃப், பல பெரிய பெரிய பேங்குக

மேல உள்ள பட்டியலப் படிச்சதுமே புரிஞ்சுருக்குமே.... மூணு பேருமே பேங்கர் அல்லது டிரேடர். நிக் லீசன் ஒரு தெளிவான வியூகமோ திட்டமோ இல்லாம ஃப்யூச்சர்ஸ் டிரேடிங்ல ஒரு சுபதினத்துல பேரிங்ஸ் பேங்கை கவுத்து மஞ்சக் கடுதாசி குடுக்க வெச்சாரு. ஜெரோம் தன்னோட கம்ப்யூட்டர் அறிவை தவறான முறைல உபயோகிச்சு கம்பெனிக்குத் தெரியாமயே கன்னா பின்னான்னு டிரேடிங் பண்ணி ஒரு நா காலைல பாத்தா பல பில்லியன் டாலர் நட்டம். இவுங்க ரெண்டு பேரும் தான் வேலை செய்யற பேங்குக்கு லாபம் பண்றோம்; நமக்கும் கொழுத்த போனஸ் கிடைக்கும்கற மாதிரி ஒரு சுயநலத்துல டிரேடிங் பண்ணப் போய் பெருத்த நட்டமாகி பேங்குகளையே மூடவேண்டிய நிலைமை வந்துது.

ஆனா இந்த மேடாஃப் தாத்தா (70 வயசு) இருக்காரே, இவுரை அழிச்சா நாலு நிக் லீசன், ஆறு ஜெரோம் பண்ணி கொசுறா ரெண்டு ஹர்ஷத் மேத்தா பண்ணலாம். என்னா அழும்பு பண்ணியிருக்காரு? ஒரு 15 வருசம் முன்னால நம்மூர்ல ஒரு ஸ்கீம் ஓடீட்டு இருந்துது. கோல்டு மைன் திட்டம், செயின் திட்டம்னெல்லாம் பேரு வெச்சு. 100 ரூபா மணி ஆர்டர் அனுப்பணும், 3 பேரைப் புடிச்சு அவுங்களும் அனுப்பணும், அவுங்க மூணு பேரை புடிச்சு....... அப்பிடி போகும். நமக்குக் கீழ ஆளுக சேரச் சேர நமக்கும் கொஞ்சம் பணம் வருமாம். இதை நம்பி சம்பாதிச்சவன் கையளவு, நொந்து சேமியாவாகிப் போனவன் கடலளவு. இதை அமெரிக்காக்காரனுக "பொன்ஸி ஸ்கீம்"னு சொல்லுவானுக. சார்லஸ் பொன்ஸீங்கற ஒரு பேத்துமாத்து ஆளுதான் அங்க இதுக்கு தகப்பன். கிட்டத்தட்ட அதுமாதிரிதான் நம்ம மேடாஃபோட 'ஸ்கீமும்'.

மொதல்ல கொஞ்ச நாள் இவரோட அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனிய நல்ல புள்ளயாத்தான் நடத்திக்கிட்டு இருந்தாரு. பழைய பதிவுகள்ல படிச்சீங்கள்ல அது மாதிரி இவுரும் பல முதலீடுகள்ல பெரிய அளவுல நட்டம் பாத்தாரு. அவர் கிட்ட சொத்துகள, பணத்தை, இதர முதலீடுகளைக் குடுத்து "சவலையா இருக்கு, கொஞ்சம் பாத்து வளத்துக்குடு"ன்னு சொன்னவனுகளுக்கு என்ன பதில் சொல்றது? பாத்தாரு. புதுசா கொண்டு வந்து குடுக்கறவனோட பணத்தை தூக்கி பழைய ஆளுகளுக்கு குடுத்து நிலைமைய சமாளிக்க ஆரம்பிச்சாரு. Rob Peter to pay Paul. இப்பிடி எவ்வளவு நாளைக்கு வண்டி ஓடும்? பலநா திருடன் ஒருநா அகப்பட்ட கதைதான். சுமாரா 50 பில்லியன் டாலர் நட்டம். ஒரு நாள் காலைல எர்லி முகூர்த்தத்துல சாரோட பசங்களே (அவுங்களும் கம்பெனில டைரக்டருக) சொல்ல வேண்டியவங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பி அப்பாவ பத்திரமா கம்பி வெச்ச ரூமுக்குள்ள உக்கார வெச்சுட்டானுக. இந்தாள நம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்பி பணத்தக் குடுத்து இன்னிக்கு தலைல துண்டு, பெட்சீட், ஜமுக்காளம்னு எல்லாத்தயும் போட்டுக்கிட்ட HSBC, Fortis, BNP Paribas, RBS, Nomura, AXA மாதிரி பெரிய பெரிய பேங்க்குக, இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு பில்லியன் கணக்குல நட்டம்.

போன வருசம் ஆரம்பத்துல பங்குச் சந்தையும், அமெரிக்க ரியல் எஸ்டேட் சந்தையும் இருந்த இருப்பைப் பாத்துட்டு "ஆஹா !! இன்னும் 20 வருசத்துக்கு ஒரு கொறையும் இல்ல... அப்பிடியே பிக்கப் பண்ணி போயிட்டெ இருக்க வேண்டியதுதான்"னு மௌஸ் ஜோஸியம் சொல்லி, முதலீடு பண்ணுன / பண்ணச் சொன்ன சந்தை ஆய்வாளர்கள் எல்லாம் இப்ப தலைல கைய வெச்சுக்கிட்டு உக்காந்திருக்காங்க. ஒரு கட்டுப்பாடில்லாத பங்கு வர்த்தகம், பாதுகாப்போ உத்திரவாதமோ இல்லாத புதுசு புதுசா சந்தைக்கு வந்த டெரிவேடிவ் பத்திரங்கள், சந்தைல என்ன நடக்குது, எங்க கடிக்கும், எப்பிடி வெடிக்கும்னு எதைப் பத்தியுமே ஆராயாம, யோசிக்காம வேலை செய்யப் போக அணுஆயுத அழிவை விட பெரிய அழிவு. அணு உலைகள்ல சங்கிலித் தொடர் வினையைக் கட்டுப் படுத்த அடர் நீர் (heavy water) மாதிரியான மாடரேட்டர்களை உபயோகிப்பாங்க. ஆனா இந்த முதலீட்டு சங்கிலித் தொடர் வினையை பொருளாதாரத்துக்கு நல்லதுன்னு நெனச்சோ அல்லது காத்து இருக்கறபோதே தூத்திக்கணும்னு நெனச்சோ அல்லது பேராசையோ எதோ ஒண்ணு அதை கட்டுப்படுத்தத் தவறியதோட விளைவை இன்னிக்கு நாம கண்கூடாப் பாக்கறோம்.

இன்னும் இதுமாதிரி எத்தனை பாக்கி இருக்குதோ வெளிய வராம. அடுத்தது கடனட்டை கடன்கள் (Credit Card Debt Consolidations) அதுல குறைஞ்சது 1 டிரில்லியன் டாலர் அளவுல நட்டம் எதிர்பார்க்கலாம்ங்கறாங்க. எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல. இன்னும் ஆட்டோ லோன், ஆட்டு லோன், மாட்டு லோன் என்னென்ன இருக்கோ? கொஞ்ச நாள்ல சரியாயிடும்னாங்க. போற போக்கைப் பாத்த்தா எந்திரிச்சு நிக்கவே இன்னும் கொஞ்ச வருசங்கள் ஆகும் போல இருக்கு. அப்பறமா நடந்து, ஓடி.....

சரி. நமக்கு அரைகுறையா தெரிஞ்சதை வெச்சு உங்களையும் கொழப்பியாச்சு. இனிமே நிம்மதியா தூங்கலாம். "அது_சரி" அண்ணே, தப்பா சொல்லியிருந்தா பின்னூட்டத்துல சரி பண்ணிடுங்க.

40 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

சி தயாளன் said...

உங்கள் எழுத்துருக்களில் ஏதோ பிரச்சினை இருக்கு போல் தெரிகின்றதே..?

சின்னப் பையன் said...

அண்ணே... பதிவு சரியா தெரியலியே??? font மாத்திட்டீங்களா???

பழமைபேசி said...

I cud see the fonts in my phone, not clear with IE.

kajan said...

அண்ணா பதிவை திருப்பிபாருங்க

நசரேயன் said...

ஒண்ணுமே தெரியலை, ஹிந்தி படம் பாத்த மாதிரி இருக்கு

வெண்பூ said...

மஹேஷ்.. எனக்கும் ஃபான்ட் சரியாக தெரியவில்லை.. :(

நன்றி பழமைபேசி.. :))

Mahesh said...

எல்லாரும் மன்னிக்கணும்.... எப்பிடி அச்சுன்னு தெரியல... இப்ப மறுபடி போட்டிருக்கேன்...படிக்க முடியுதா பாருங்க....

சி தயாளன் said...

இப்ப சரி....

வெண்பூ said...

இப்பொழுது சரியாகத் தெரிகிறது மஹேஷ்...

புதுகை.அப்துல்லா said...

namba raffel place li pesuna mattera kooda eluthi erukkalaame??

வால்பையன் said...

அருமையான அலசல்!
ஆனா எல்லாமே அமெரிக்கா பத்தி இருக்குதே!
இந்தியா பத்தி எழுதுங்க தலைவா!

அது சரி(18185106603874041862) said...

சூப்பர் தல!

ரொம்ப நல்ல பதிவு...ஆனா என்ன அக்கிரமம் ஒரே ஒரு வோட்டு தான் விழுந்திருக்கு....

நான் வோட்டு போட்டுட்டேன்...

அது சரி(18185106603874041862) said...

நிக் லீசன் ரோக் ட்ரேடர்னா மேடாஃப் வால் ஸ்ட்ரீட்ல வர்ற கெக்கோ!

ரெண்டு படமும் பார்த்திட்டிங்களா?? பாக்காட்டி பார்த்துருங்க...உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்!

Mahesh said...

நன்றி டொன் லீ...

நன்றி வெண்பூ....

நன்றி அப்துல்லா அண்ணே... ஆமாங்க விடுபட்டுப் போச்சு... நீங்க எழுதிடுங்களேன்.... :))

Mahesh said...

நன்றி வால்பையன்... அமெரிக்க விஷயந்தான்... ஆனா அங்க தேள் கொட்டுனா உலகத்துல எல்லா நாடுகளுக்கும் நெறி கட்டுதே..... :(

Mahesh said...

நன்றி அதுசரி அண்ணே... ரோக் டிரேடர் பாத்தேன்... கெக்கோவ இனிமேதான் சந்திக்கணும்...

Mahesh said...

அதெல்லாஞ் சரி... விஷயந் தெரிஞ்சவங்க யாரும் நம்ம வெண்பா(?!) கன்னி முயற்சி பத்தி ஒண்ணும் கருத்து சொல்லலயே :(((((
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

தேனீ said...

naan enna nenaikirenna>>>>>> nalllaarukku! india paThi eluthuganne...

சின்னப் பையன் said...

நான் சொல்றேன்... வெண்பா நல்லா இருக்கு... கடைசி வரிய திரும்ப திரும்ப சொல்லி பாக்கறேன்... இது யார் தெச்ச சட்டை.. தாத்தா தெச்ச சட்டை.. மாதிரியே இருக்கு... ஹிஹி...

சின்னப் பையன் said...

இது வரைக்கும் ‘ நெறி கட்றதையே' பேசிட்டிருக்கோம். இந்தியாவில் ‘தேள் கொட்டின' கதையை இது வரைக்கும் அரசோ அல்லது வங்கிகளோ வெளிப்படையாக சொல்லவில்லை. இந்த வருடம் பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு.

Mahesh said...

வாங்க ப்பெரிய்யபையன்... வெண்பா நல்லாருக்குன்னு சொல்லிட்டிங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

இந்தியாவுலதான் ஸ்பெக்ட்ரம், சத்யம்ன்னு தேளுக கொட்டிக்கிட்டே இருக்கே... அமெரிக்காத் தேள் கொட்றதுதான் விசேஷம்...

Anonymous said...

பட்டாம்பூச்சி விருது உங்களுக்கு, பெற்றுக்கொள்ள என் வலைப்பதிவுக்கு வரவும்.

தேவன் மாயம் said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

குடுகுடுப்பை said...

நான் போட்டதெல்லாம் அப்ப சங்குதானா?.

இதை நெனச்சாலே தூக்கம் போயிடுத்துப்பா...

Mahesh said...

குடுகுடுப்பை... நீங்கதான் மேடாஃப்க்கு சீஃப் ஏஜண்ட்ன்னு வதந்'தீ' உலாவுதே.. அப்பிடியா? உங்களுக்கெ ஆப்பு வெச்சிட்டாரா மகராசன்? :)))

Thamira said...

பொருளாதார பதிவு.. அதுவும் இம்மாம் பெரிசா.. தூங்கிருவேன்.. ஆமா..

Mahesh said...

@தாமிரா : அய்யய்ய... ஃபுல்ஸ்கேப் பேப்பர்ல நல்லா இடம் விட்டு டபிள் ஸ்பேசிங்க்ல எழுதியிருக்கேன்... சின்னதுதான் ஹி ஹி ஹி ஹி

நசரேயன் said...

இப்ப நல்லா தெரியுது, ஆனா ஒண்ணுமே புரியலை, ஆனா படிக்க நல்லா இருக்கு

குடந்தை அன்புமணி said...

பொருளாதாரத்தை பத்தி ஏதோ சொல்றீங்க... புரிஞ்சவங்களுக்கு புரிஞ்சா சரி.

Mahesh said...

வாங்க அன்புமணி... (அப்பா பேரு ராமதாசு இல்லயே :))) )

அப்பாடா... நாம எழுதுனது யாருக்கும் புரிஞ்சுடுமோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்... நீங்கதான் தைரியமா உண்மைஅயை சொல்லியிருக்கீங்க. நன்றி... அடிக்கடி வாங்க... :))))

குடந்தை அன்புமணி said...

ஜெ. அன்புமணி. (அதற்காக ஜெயலலிதா பிள்ளையான்னு கேட்காதீ்ங்க. அப்பா பெயர் ஜெயராஜ். தமிழ்மணம் கருவிப்பட்டையை இணைக்க முடியவில்லை. எளிய வழி....?

பழமைபேசி said...

"ஆனையை பூனை தின்னுச்சாம்... பூனையை தேனீ தின்னுச்சாம்" இதுக்கு என்ன அர்த்தம்?

Mahesh said...

விளக்கத்துக்கு நன்றி அன்புமணி.... :)

தமிழ்மணம் கருவிப்பட்டை இணைக்க முடியலைன்னா... புரியல... பதிவுல தெரியலயா? இல்ல எதாவது தவறு செய்தி வருதா?

Mahesh said...

வாங்க பழமைபேசி.... அந்த புதிரை யாருமே கண்டுக்கலை... :( நீங்களாவது கேட்டிங்க....

குறிப்பு தர்றேன்...

ஆனை = ஆ + நெய்
பூனை = பூ + நெய்

புரியுதா?

பழமைபேசி said...

//கை கூடறதுக்கு அறிவியல் காரணமும் இருக்கு.//

அண்ணாச்சி, மின்னல் வேகத்துல வந்து இருக்கீங்க...நன்றி...அப்படியே, அந்த அறிவியல் காரணத்தையும் வெளக்கிச் சொல்லிட்டுப் போங்க சித்த! இஃகிஃகி!!

கிரி said...

அப்புறமா வருகிறேன்

கிரி said...

இந்த கம்முனாட்டி மேடாஃப் எங்க நிறுவனத்துல ஒரு பில்லியன் ஆட்டைய போட்டுட்டான் :-(((

இந்த ஆளு எதிர்பார்க்கல எல்லாரிடமும் பணத்தை வாங்கி மாற்றி மாற்றி சுத்த விட்டுட்டு இருந்தான், பினான்ஷியல் கிரைசிஸ் வந்த போது எல்லோரும் ஒரே சமயத்தில் நெருக்கியவுடன் மாட்டிகிட்டான்..

இந்த ஆளால எத்தனை பிரச்சனை ஆகி விட்டது.... ஹர்ஷத் மேத்தாக்கு இவர் தாத்தா (வயதிலும் கொள்ளை அடிப்பதிலும்)

நல்லா விளக்கி இருக்கீங்க மகேஷ்

Mahesh said...

நன்றி கிரி...