Tuesday, December 30, 2008

"க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்"

நம்ம ஒவ்வொருத்தருக்கும் 'வேணும்'னு கேக்கறதுக்கு நிறைய இருக்கு. குடுக்கறது யாரு? அது யாரா வேணும்னாலும் இருக்கட்டும். அத வாங்கிக்கறதுக்கு நம்ம தயாரா இருக்கணுமே. வாங்கிக்கிட்டேவும் இருக்க முடியாது. நாமளும் எதாவது திருப்பி குடுக்கணுமே. இந்தப் புத்தாண்டுல நம்ம ஒவ்வொருத்தரோட கனவுகள் நனவாகவும், தேவைகள் பூர்த்தியாகவும், நம்மால் ஒரு சிலரின் தேவைகள் பூர்த்தி செய்விக்கப் படவும் நம்மை விட வலிமையுள்ள ஏதோ ஒரு சக்தியிடம் பிரார்த்திக்கிறேன்.

இந்த சந்தர்ப்பத்துல என் நெருங்கிய நண்பர் ஒருத்தரோட பாடல். எந்தக் காலத்திலும் யாருக்கும் பொருந்தும்.

நம் அனைவரின் கனவுகள் விரைவில் மெய்ப்பட.....



மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு ந‌ல்ல‌து வேண்டும்
நெருங்கின‌ பொருள் கைபட‌வேண்டும்

க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்
கைவ‌ச‌மாவ‌து விரைவில் வேண்டும்
த‌ன‌மும் இன்ப‌மும் வேண்டும்
த‌ர‌ணியிலே பெருமை வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய‌ க‌ட‌வுள் காக்க‌ வேண்டும்

க‌ண் திற‌ந்திட‌ வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
மண் ப‌ய‌னுற‌ வேண்டும்
வான‌க‌மிங்கு தென்ப‌ட‌ வேண்டும்
உண்மை நின்றிடல் வேண்டும்


- சுப்பிரமணிய பாரதி

18 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

நசரேயன் said...

நானும் பிராத்திக்கிறேன் கனவு மெய்ப்பட

சின்னப் பையன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

சி தயாளன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

புதுகை.அப்துல்லா said...

//இந்த சந்தர்ப்பத்துல என் நெருங்கிய நண்பர் ஒருத்தரோட பாடல். எந்தக் காலத்திலும் யாருக்கும் பொருந்தும்.


//


அடடே...அவரு உங்களுக்கும் பிரண்டா???

புத்தாண்டு வாழ்த்துகள் :))

பழமைபேசி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

விஜய் ஆனந்த் said...

:-)))...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!

குடுகுடுப்பை said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

குடுகுடுப்பை said...

advanced happy tamil new year and pongal

அது சரி(18185106603874041862) said...

பாரதியார் பாட்டுல எனக்கு பிடிச்ச பாட்டு


தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
நரைகூடி கிழப்பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கிரையென பின் மாயும்
வேடிக்கை மனிதர்கள் போல‌
வீழ்வேனென்று நினைத்தாயோ
சொல்லடி பராசக்தி....

====
அப்புறம் இன்னொரு பாட்டு


அக்கினி குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கொரு காட்டிடை பொந்தினில் வைத்தேன்...

வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

Mahesh said...

நன்றி நசரேயன்....

நன்றி ச்சின்னப்பையன்...

நன்றி டொன் லீ...

நன்றி அப்துல்லா அண்ணே...

நன்றி விஜய் ஆனந்த்...

நன்றி குடுகுடுப்பை..

நன்றி பழமைபேசி...

நன்றி அதுசரி...

உங்கள் அனைவருக்கும் எங்களது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!

வால்பையன் said...

விடா முயற்சி இருந்தால் கனவு மெய்ப்படும்

கூட்ஸ் வண்டி said...

ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.

அக்னி பார்வை said...

பாரதியாரையெல்லம் இன்னும் ஞபகம் வச்சிகிட்டிருக்கீங்க.

Thamira said...

வாழ்த்துகள் அண்ணே உங்களுக்கும், உங்க பிரெண்டுக்கும்.!

ஆளவந்தான் said...

//
இந்த சந்தர்ப்பத்துல என் நெருங்கிய நண்பர் ஒருத்தரோட பாடல். எந்தக் காலத்திலும் யாருக்கும் பொருந்தும்.
//

நெருக்கம் தெரியுது..

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.

Mahesh said...

நன்றி வால்பையன்....

நன்றி தாமிரா....

நன்றி அக்னிப்பார்வை...

நன்றி ஆளவந்தான்...

நன்றி கூட்ஸ்வண்டி....

RAMASUBRAMANIA SHARMA said...

a timely beautiful kavithai from "MAHAKAVI"...DEFINETELY WE WILL PRAY THE ALMIGHTY TO HAPPEN HIS DREAMS ATLEAST FROM THIS NEW YEAR 2009...."KANAVU MEIPADA VENDUM""....SURE...HAPPY NEW YEAR 2009 TO ALL...

Mahesh said...

நன்றி RAMASUBRAMANIA SHARMA..