Monday, December 22, 2008

கன்ஸ் ஆஃப் நவரோன்



The Guns of Navarone (1961)

Gregory Peck, Anthony Quinn, David Nevin


இதுவும் மத்த உலகப் போர் படங்கள் மாதிரி Alistair Maclean எழுதிய நாவலை அடிப்படையாக் கொண்டு எடுத்த படம். உங்கள்ல பல பேர் இந்தப் படத்தைப் பார்த்திருக்கலாம். Star Moviesலயும் HBOலயும் பல முறை போட்டிருக்காங்க.

துருக்கிக்கு பக்கத்துல ஏஜியன் கடல்ல இருக்கற கெரோஸ் தீவுகள்ல ஒரு 2000 பேர் கொண்ட ப்ரிட்டிஷ் துருப்பு இருக்கு. அவங்கள வெளிய கொண்டு வரலாம்னா, பக்கத்துல இருக்கற நவரோன் தீவுல (கிரீஸ்) ஜெர்மனி ரெண்டு பெரிய கப்பலை தாக்கற பீரங்கிகள் வெச்சுருக்காங்க. அதுகளை மீறி கடலைக் கடக்கறது ரொம்ப கஷ்டம். வான் வழியா போற முயற்சிகளும் தோல்வி அடைஞ்சதுனால அவசரமா ஒரு 6 பேர் கொண்ட குழு அமைக்கிறாங்க. அவங்க வேலை எப்படியாவது நவரோன் தீவுக்கு போய் அந்த பீரங்கிகளை தகர்க்கணும். சரியா 6 நாள் தவணை. போறதுக்கு ஒரே வழி அவ்வளவா செக்யூரிடி இல்லாத செக்குத்தான நவரோன் cliff ல ஏறி போறதுதான்.


மேஜர் ஃப்ரான்க்லின், கேப்டன் மல்லாரி (க்ரெகொரி பெக்), கார்பொரல் மில்லர் (டேவிட் நெவின்), கர்னல் ஆண்ட்ரியா (ஆண்டனி க்வின்) இன்னும் ரெண்டு பேர் குழுவுல. மில்லர் ஒரு வெடிமருந்து நிபுணர். ஆண்ட்ரியா ஒரு கிரேக்க கர்னல். எல்லாருக்குமே ஓரளவுக்கு கிரெக்க மொழி பேசத் தெரியும். எல்லாம் மீனவர்கள் மாதிரி ஒரு காயலங்கடை படகுல போறாங்க. வழில ஜெர்மன் coast guards வந்து விசாரிக்கும்போது அவங்களை சுட்டுக் கொன்னுட்டு அவங்க பேட்ரோல் போட்டையும் அழிச்சுடறாங்க. கிட்டத்தட்ட மலை அடிவார-த்துக்குப் போய் சேரும்போது புயல்ல சிக்கி இருக்கற ஓட்டை போட்டும் உடைஞ்சு போய் மருந்து, உணவுப் பொருட்கள் எல்லாம் காலி.


முதல்ல மல்லாரி cliffல ஏறி கயிறு கட்டினதும் ஒவ்வொருத்தரா மேல வராங்க. கடைசியா மேஜர் ஃப்ரான்க்லின் ஏறும்போது மழை அதிகமாகி வழுக்கி விழுந்து கால்ல அடி. நடக்க முடியாது. அவரை தூக்கிக்கிட்டே மேல நடக்கறாங்க. அங்கியே விட்டுட்டுப் போனா கண்டிப்பா ஜெர்மன் வீரார்கள் கிட்ட சிக்கிடுவாரு. அப்பறம் அவங்க தர டார்ச்சர்ல இவங்க ப்ளானை சொன்னாலும் சொல்லிடுவாருன்னு, எப்பிடியாவது மண்ட்ராகோஸ் போயிட்டா அவருக்கு சிகிச்சை குடுத்துடலாம்னு திட்டம் போடறாங்க. இப்ப கூட இன்னும் ரெண்டு உள்ளூர் புரட்சிப் பெண்களும் வந்து குழுவுல சேரறாங்க. மண்ட்ராகோஸ் போய் ஒரு சர்சுல தங்கறாங்க. ஆண்ட்ரியா ஃப்ரான்லினை ஒரு டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போகும்போது விசஹயம் தெரிஞ்சு அங்க வர ஜெர்மன் வீரர்க கிட்ட மாட்டிக்கறாங்க. மத்த 4 பேரும் ஊருக்குள்ள நடக்கற ஒரு விழாக்கூட்டத்துல போய் மறைஞ்சாலும், அங்கியும் ஜெர்மன் வீரர்கள் வந்து எல்லாரையும் புடிச்சிடறாங்க. இப்ப 6 பேரும் விசாரணைல. திடீர்னு ஆண்ட்ரியா தான் ஒரு ஏழை மீனவன்னும், தன் படகை அபகரிச்சுட்டு அவனையும் ஒரு கைதி ஆக்கிட்டாங்கன்னு நாடகம் போட்டு எல்லாத்தையும் திசை திருப்பி ஒரு திடீர் தாக்குதல் நடத்தி எல்லாரும் ஜெர்மன் ராணுவ உடுப்புகளைப் போட்டுக்கிட்டு ராணுவ லாரில தப்பிச்சுடறாங்க. ஃப்ரான்க்லினை (அவருக்கு காயம் கெட்டுப் போய் gaangrene டெவலப் ஆயிடுது) அங்கியே விட்டுட்டு போயிடறாங்க.


இப்ப மில்லர் வந்து வெடிமருந்துகள், டெடொனேட்டர்கள் எல்லாம் சேதமடைஞ்சுருக்கறதா சொல்றாரு. "ப்ளான் எப்பிடியோ ஜெர்மனிக்கு லீக் ஆகுது, இல்லேன்னா அவங்க எப்பிடி மோப்பம் புடிச்சுருப்பாங்க, நம்ம கூட்டதுல ஒரு கருப்பு ஆடு இருக்கு. சம்பவங்களைக் கோர்த்துப் பாத்தா கடைசியா வந்து சேந்த பெண்கள்ல ஒருத்தியான 'ஏனா' தான் ஒற்று வேலை பாத்திருக்கா. உடனடியா அவளை தீர்த்துக் கட்டணும்". அவளும் ஜெர்மனியோட டார்ச்சர் தாங்காம அவங்களுக்காக ஏஜண்ட் வேலை பாத்ததா ஒப்புக்கறா. அங்கியே அவளை மரியா சுட்டுக் கொன்னுடறா. பிறகு மரியாவும், ஸ்பைரோசும் ஒரு ஸ்பீட் போட் ஏற்பாடு பண்ணணும்னும், ஆண்ட்ரியாவும் ப்ரௌனும் பீரங்கி இருக்கற இடத்துக்கு வெளிய ஒரு சின்ன கலவரம் உண்டாக்கி ஜெர்மனிய திசை திருப்பணும்னும் ப்ளான் பண்ணிட்டு, மல்லாரியும் மில்லரும் கிளம்பி நவரோன் பீரங்கி இருக்கற இடத்துக்கு போறாங்க. அங்க அடிபட்டு இருக்கற ஃப்ராங்லினுக்கு (மல்லாரி எதிர்பார்த்தமாதிரியே) மயக்க மருந்து குடுத்து உண்மையை வரவழைக்க முயற்சிக்க அவரோ வேணும்னே தப்பான தகவல் குடுத்து அவங்களை திருப்பி விட்டுடறாரு.


மல்லாரியும் மில்லரும் சில தில்லுமுல்லுகளுக்குப் பிறகு பீரங்கி அறைக்குள்ள நுழைஞ்சு கதவை உள்ள இருந்து சாத்திடறாங்க. கதவை சாத்தினதும் அபாய அலார்ம் அடிக்குது. வெளிய ஆண்ட்ரியாவும், ப்ரௌனும் ஒரு சின்ன சண்டையை ஆரம்பிக்க, சண்டைல ப்ரவுன் இறந்துடறான். ஸ்பீட் போட் திருடப் போன மரியாவும், ஸ்பைரோசும் ஒரு போட் கேப்டன் கூட சண்டை போடும்போது ஸ்பைரோசும் இறந்துடறான். மில்லர் தன் கிட்ட இருக்கற வெடி மருந்துகளை ரெண்டு பீரங்கிகள்லயும் வெச்சுடறாரு. கூடவே எக்ஸ்ட்ராவா லிஃப்டுக்கு கீழயும் வெச்சுட்டு, லிஃப்டோட சக்கரம் மேல ஏறும்போது வெடிக்கற மாதிரி செட் பண்ணிடறாரு.


இதுக்குள்ள ஜெர்மன் வீரர்கள் அந்த இரும்புக் கதவை வெல்டிங் பண்ணி கட் பண்ணி உள்ள வரதுக்குள்ள மல்லாரியும் மில்லரும் மலை மேல இருந்து கடலுக்குள்ள குதிச்சு திருடின ஸ்பீட் போட்ல ஏறி, ஆண்ட்ரியாவையும் காப்பாத்தி கூட்டிக்கிட்டு போயிடறாங்க. ஜெர்மன் வீரர்கள் எப்பிடியோ பீரங்கிகள்ல இருக்கற வெடி மருந்துகளை எடுத்துட்டாலும், அந்த லிஃப்ட்ல இறங்கும்போது மில்லர் செட் பண்ணின ட்ரிக்கர்னால லிஃப்டுக்கு கீழ வெச்ச வெடிமருந்துகள் வெடிச்சு அந்த பீரங்கிக் கோட்டையே சின்ன பின்னமாயிடுது. கரெக்டா ப்ரிட்டனோட கடல் படையும் கடலைக் கடந்து போய் கெரோஸ்ல மாட்டிக்கிடுருக்கற துருப்புகளை மீட்கப் போறாங்க.


ஒரிஜினல் நாவல்ல இருந்து நிறைய வேறுபட்டு இருந்தாலும் திரைகதைக்காக நல்லாவே செஞ்சுருக்காங்க. ஆண்டனி க்வின்னோட நடிப்பு டாப் க்ளாஸ். அதுவும் அந்த ஜெர்மன் ராணுவத்து கிட்ட மாட்டும்போது நடிச்சு தப்பிக்கும்போது... ஏ ஒன். டேவிட் நெவினோட டயலாக் டெலிவரி அவரோட 10 வருஷ தியேட்டர் அனுபவங்களோட ரிசல்ட். அற்புதம். அதே மாதிரி அந்த கடைசி 1/2 மணி நேரம் நம்மளை சீட் நுனிக்கே கொண்டு வந்துடும். இது மாதிரி படங்களைப் பாத்ததுக்கப்பறம் வேர்ல்ட் வார் படங்கள் எல்லாத்தையுமே பாத்துடணும்னு தோணுது.

15 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

Kumky said...

ஹை...நாந்தா பஸ் டூ.

RAMASUBRAMANIA SHARMA said...

RECENTA VIJAY TV' LATE NIGHT SATURDAY SHOW'LA INTHA PADAM PARTHA MATHIRI GNAPAGAM, BUT NOT SURE....LINK PLEASE...EXCELLENT ARTICLE... GRECORY PECK, ANTHONY QUINN....GREAT ACTORS...REMINDS ME ABOUT "MCCANNA'S GOLD"....

http://urupudaathathu.blogspot.com/ said...

அண்ணே..
DVD தேடி புடிச்சி பாக்குறீங்கலே அது எப்படி ??

http://urupudaathathu.blogspot.com/ said...

நானும் போறேன் DVD கடைக்கு..
வாங்குறேன்..
அப்புறம் பாக்குறேன்..

சின்னப் பையன் said...

நல்ல விமர்சனம். எப்போதோ பாத்த ஞாபகம் வருது. மறுபடி பாக்கணும். நன்றி...

Mahesh said...

வாங்க கும்க்கி... பஸ்டு நன்றிகள்...

நன்றி RAMASUBRAMANIA SHARMA... வருகைக்கு நன்றி... விஜய் டிவியில போட்டதாகத் தெரியலயே...

Mahesh said...

அணிமா அண்ணே... தேடுனா கிடைக்கும்ங்க DVD எல்லாம்... சென்னைல ஒரு சூப்பர் கடை இருக்கு.. இதுக்குன்னே...

பாருங்க... பாருங்க... எல்லாம் அட்டகாசமான படங்கள்..

Mahesh said...

தேங்ஸ்ங்... ச்சின்னப்பையன்.... நானும் பல படங்கள் முன்பே பார்த்ததுதான்... ஆனா இப்ப கொஞ்சம் நிதானமா ரசிச்சுப் பார்க்கும்போது ரொம்ப சுவையா இருக்கு...

புதுகை.அப்துல்லா said...

aaramichutaaruyaa hollywood muralikkannan :)

புதுகை.அப்துல்லா said...

//சென்னைல ஒரு சூப்பர் கடை இருக்கு.. இதுக்குன்னே...

//

yenga irukku, athu peru yenna?

narsim said...

//DVD எல்லாம்... சென்னைல ஒரு சூப்பர் கடை இருக்கு.. இதுக்குன்னே...

//

மொழிப் படம் கேட்டா.. மொலி மொலியா தெர்ர படம் தர்ராங்க தல அந்த கடைல.. பஜார் தான??

Mahesh said...

வாங்க அப்துல்லா...நர்சிம்... நன்றிகள் பல..

...பஜார் இல்லைங்க... இது நிஜமாவே நல்ல கடை....
.... நகர்ல இருக்கு :)))

ஓகே... சீரியஸ்... அடயார் லேட்டிஸ் ப்ரிட்ஜ் ரோட் ஜங்ஷன் பக்கத்துல ஒரு ஆர்கேட் இருக்கு (பேர் மறந்து போச்சு) அதுல பேஸ்மெண்ட்ல CD WORLDனு ஒரு கடை. அதுதான் நம்ம சுரங்கம்.

பழமைபேசி said...

மகளோட, வெள்ளக்காரனோட சொக்கட்டான் விளையாட்டு போய்ட்டு இருக்கு...இடையில அங்கங்க தலைகாமிச்சிட்டு இருக்கேன். இப்ப போய்ட்டு மறுபடியும்....

Anonymous said...

"Where Eagles Dare?"

பழமைபேசி said...

படிச்சிட்டேன்...நல்லா இருக்கு...