Saturday, December 20, 2008

கிச்சடி 20.12.2008


சே... ஒரு கிச்சடி பண்ண 3 வாரமாகுது... அப்ப நான் அவியல் பண்ண ஒரு வருஷமாகும் போல..... போடறதுதான் போடறோம் ஒரு thematic -ஆ போடலாம்னு ஒரு (விபரீத!!) யோசனை... இந்த கிச்சடியோட theme - "பயணம்".

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உடுமலைல இருக்கும்போது நானும் அண்ணனும் (சித்தப்பா மகன்) திடீர்னு பழனிக்கு நடை பயணம் கிளம்பிடுவோம். சாயங்காலம் 6 மணிக்கு குட்டைப்பிள்ளையாருக்கு ஒரு தேங்கா பிரிமியம் கட்டீட்டு நடக்க ஆரம்பிச்சா, விடியக்காலை 4 அல்லது 5 மணிக்கு பழனி போய் சேந்துரலாம். 36 கி.மீ.

ஒரு தடவை அப்பிடி போய்ட்டு வரும்போது பழனி பஸ்ஸ்டாண்டுல ஒரே கூட்டம். அண்ணன் மொட்டை வேற. உடுமலைக்குன்னு தனியா பஸ் கிடையாது. பொள்ளாச்சி அல்லது கோவை போற பஸ்ல ஏறணும். கண்டக்டர் "உடுமலை டிக்கட் எல்லாம் வெய்ட் பண்ணுங்க. பொள்ளாச்சி, கோவை எல்லாம் முதல்ல ஏறுங்க"ன்னாரு. நாங்க பொள்ளாச்சின்னு சொல்லிக்கிட்டே போய் ஏறி உக்காந்துட்டோம். பஸ்ல இருந்த கூட்டத்துக்கு, கண்டக்டர் டிக்கட்டுக்கு எங்க கிட்ட வரும்போது பஸ் பழனிலேருந்து ஆறேழு கி.மி. வெளிய வந்தாச்சு. அண்ணன் பந்தாவா "உடுமலை 2"ங்கவும், கண்டக்டருக்கு ஒரே கோவம். "ஏய் மொட்டை, நாந்தான் உடுமலையெல்லாம் ஏறாதேன்னு சொன்னேனில்ல... திமிர் புடிச்சவனுக... உம் மொட்டையும் கண்ணாடியும்..."னு திட்டிக்கிட்டே டிக்கட் குடுத்தாரு. அண்ணன் ஒண்ணும் பேசல. அப்பறம் உடுமலைல இறங்கும்போது அண்ணன் கண்டக்டர் கிட்டப் போய் "யோவ்... உன் வீட்டுக்கு நான் வந்து பொண்ணு கேட்டா மொட்டை, கண்ணாடி பத்தியெல்லாம் பேசு... இல்லாட்டி...$%^!@^#$%&!@&*....."எனக்கா ஒரே சிரிப்பு. கண்டக்டர் இதை எதிர்பார்க்கல. அதுவும் பத்து பேர் முன்னாடி சொல்லவும் ஒரு மாதிரி ஆயிடுச்சு. "சாரி தம்பி... எதோ கோவத்துல சொல்லிட்டேன்... அதுக்குன்னு இப்பிடியா..."ன்னு சமாதானம் பேசுனாரு. அதுக்கப்பறம் பழனிலேருந்து உடுமலைக்கு பஸ்ல வரும்போதெல்லாம் இந்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்து சிரிப்பு வரும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

லக்சம்பர்க்ல வேலை நிமித்தமா கொஞ்ச நாள் இருந்தபோது, ஒருமுறை ரயில்ல ப்ருஸல்ஸ் போனேன். 4 மணி நேரப் பயணம். போய்ட்டு அன்னிக்கு இரவே திரும்பிடலாம்னு ப்ளான். போகும்போதே அந்த ரூட்டுக்கான டைம்டேபிளையும் எடுத்துக்கிட்டேன். ப்ருஸ்லஸ் போயிட்டு ஊரெல்லாம் சுத்திட்டு சாயங்காலம் 6:35 ரயிலப் புடிச்சுடலாம்னு ப்ளான் போட்டேன். ஒருமணி நேரத்துக்கு ஒரு ரயில் இருக்கு. மறுநாள் விடிகாலை சென்னைக்கு வேற கிளம்பணும்.

சாயங்காலம் 6:25க்கு ஸ்டேஷன் வந்துட்டேன். "இப்பதாங்க ரயில் கெளம்பிப் போச்சு"ன்னாங்க. "என்னடாது... நம்மூர்ல லேட்டாத்தான் கெளம்புவாங்க, இவுங்க நேரத்துக்கு கெளம்புவாங்கன்னு பாத்தா முன்னாலயே கெளம்பறாங்களே... ஒரு வேளை நம்ம வாட்சுதான் ஸ்லோவான்னு பாத்தா ஸ்டேஷன் கடிகாரமும் வாட்சும் சரியாத்தானெ இருக்கு..." இப்பிடியெல்லாம் யோசிச்சுக்கிட்டே, அடுத்த ரயிலுக்கு ஒரு மணி நேரம் இருக்கேன்னு பக்கத்துல இருக்கற ஒரு ம்யூசியத்துல போய் சுத்திட்டு மறுபடி 7:20க்கெல்லாம் வந்தேன். நான் போக வேண்டிய ரயில் கதவைச் சாத்தி கெளம்பி போயிட்டுருக்கு. ஒண்ணுமே புரியல. என்னடா... இப்பிடி கோட்டை விடுறமேன்னு எரிச்சல். இனிமே எங்கயும் போகக் கூடாது. அடுத்த ரயிலையும் விட்டா மறுநா காலைல 4 மணிக்கு மேலதான். ஒரு பென்சுல உக்காந்துட்டேன். இங்க கூடவா நம்மள இப்பிடி சுத்த விடுறானுகன்னு அந்த டைம் டேபிளத் திருப்பித் திருப்பிப் பாத்துக்கிட்டுருந்தேன். அது ஒரு நோட்டிஸ் மாதிரி இருந்துது. ஒரு பக்கம் லக்ஸ்-ப்ருஸல்ஸ் ரயில் நேரங்கள், பின் பக்கம் ப்ருஸல்ஸ்-லக்ஸ் ரயில் நேரங்கள். நான் மாத்திப் பாத்துருக்கேன். வர ரயிலுக ஒவ்வொரு மணி 35 நிமிஷத்துக்கும் போற ரயிலுக ஒவ்வொரு மணி 20 நிமிஷத்துக்கும். மூஞ்சில மூணு லிட்டர் அசடு வழிய 1 மணி நேரம் உக்காந்து கடைசி ரயிலப் புடிச்சு 12:30 மணிக்கு லக்ஸ் வந்து சேந்தேன். ஹோட்டலுக்குப் போய் பேக் பண்ணி, 1 மணி நேரம் மட்டும் தூங்கி காலைல கெளம்பி சென்னை. ம்ம்ம்... மறக்கவே முடியாது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த வருஷம் ஆரம்பத்துல குடும்பத்தோட சென்னைல. சென்னைல இருந்து சிங்கப்பூருக்கு விடிகாலை 2 மணிக்கு ஒண்ணு, மதியம் 2 மணிக்கு ஒண்ணுன்னு ஏர் இண்டியா எக்ஸ்ப்ரஸ் விமானம் இருந்துது. (இப்ப டைம் மாத்திட்டாங்க). மனைவிக்கும், குழந்தைக்கும் ஏஜண்ட் கிட்ட ஞாயித்துக்கிழமை மதியம் ரெண்டு மணி விமானத்துக்கு புக் பண்ண சொன்னேன். அவங்களும் போன் பண்ணி "சார் ரெண்டு மணி ஃப்ளைட் புக் பண்ணியாச்சு. டிக்கட் வீட்டுக்கு அனுப்பிச்சுட்டோம்"னாங்க.

நாங்க கூலா ஞாயித்துக்கிழமை காலைல சாப்டுட்டு 11 மணிக்கு கெளம்பும்போது யதேச்சையா டிக்கட்டப் பாத்தா, அது விடிகாலை ரெண்டு மணிக்கு புக் ஆகியிருக்கு. ஒருத்தர ஒருத்தர் மூஞ்சியப் பாத்துக்கிட்டோம். அப்பறம் என்ன... தூக்கிட்டு ஓடு ஏர் இண்டியா ஆபீஸுக்கு. அவங்க "பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க..."ங்கற மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு "சார்.. நோ-ஷோவுக்கு ரீஃபண்ட் டிக்கட் ஃபேர் மட்டுந்தான். அதுவும் 15 நாள் கழிச்சுதான். நீங்க வேற டிக்கத்தான் வாங்கணும்"னு நிர்தாட்சண்யமா சொல்லிட்டாங்க. வேற வழி?

இந்த பட்ஜெட் ஏர்லைன்ஸ்ல எல்லாம் டிக்கட் காசு கால் பங்குதான். மீதி முக்காவாசியும் ஏர்போர்ட் டேக்ஸ். அது திரும்ப கிடைக்காது. நம்ம முதல்வரே சொல்ற மாதிரி என் ஜாதகத்தை நொந்துக்கிட்டேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அதேமாதிரி நம்ம மாமா ஒருத்தர் முதல்லயே போக வர டிக்கட் புக் பண்ணிட்டு, அப்பறமா எதோ காரணத்துக்காக பயணத்தை ஒரு நாள் prepone பண்ணிட்டாரு. போற டிக்கட்ட மாத்தினவரு வர டிக்கட்ட மாத்த மறந்துட்டாரு. கோவைல வேலையை முடிச்சுட்டு திரும்ப சென்னைக்கு வர நீலகிரில ஏறி தூங்கிட்டாரு. திருப்பூர்ல ஒருத்தர் ஏறி "சார்.. இது என்னோட பெர்த்..."ங்க இவருக்கு தூக்கக் கலக்கத்துல ஒண்ணும் புரியல. டி.டி.ஆர் வந்து பாத்துட்டு சொன்னப்பறம்தான் தெரிஞ்சுது அது மறுநாளைக்கான டிக்கட். அப்பறம் ஜெனெரல் கம்பார்ட்மெண்ட்ல உக்காந்து காட்பாடிக்கப்பறம் பெர்த் கிடைச்சு....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இப்பல்லாம் டைம் டேபிள், டிக்கட் எல்லாம் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை பாத்துடறது. சந்தேகத்துக்கு பக்கத்துக இருக்கறவங்க கிட்ட சங்கிலி முருகன் மாதிரி 'ஏங்க... நான் கரெக்டாத்தானே படிக்கிறேன்னு" அவங்களையும் ஒரு தடவை பாக்க சொல்லி கேட்டுக்கறது. என்ன பண்றது? பட்டாத்தானே தெரியுது படிச்ச முட்டாளுக்கு.

15 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

Anonymous said...

அனுபவம் கொள்முதல்...

இது மாதிரி அனுவங்களே.. நம்மை அடுத்த தடவை அந்த தப்பை பண்ண மாட்டோம்.

இராம்/Raam said...

ஹாஹாஹா.... நிறைய பல்ப் வாங்கிருங்க போலே... :) நான் ரெண்டு தடவை லோக்கல் ஃபிளைட் மிஸ் பண்ணிருக்கேன்... அந்த ரெண்டுமே பட்ஜெட் ஃபிளைட்ஸ்தான்.. :( பணம் ஹோகய்யாதான்...

Anonymous said...

தமிலிழில் கீழே குடுத்த லிங்க் சரியாக வேலை செய்யவில்ல. தயவு செய்து சரி செய்யவும்..
(thuklak.blogspot.com/2008/12/20122008.html)

Anonymous said...

சரியான லிங்க்...
http://thuklak.blogspot.com/2008/12/20122008.html

http:// என்று கொடுக்காத்தால் சரியாக ஒப்பன் ஆகவில்லை.

Anonymous said...

ஹய்யா...

நான் தான் முதல் பின்னூட்டம், முதல் ஓட்டு எல்லாம்..

குடுகுடுப்பை said...

மறதி மகேசா இல்ல மாத்தி யோசிக்கிற மகேசா.

ஆயில்யன் said...

கிச்சடியில நீங்க எதையாவது கிண்டி விடுவீங்கன்னு வந்தா வண்டியில வந்தது போனதை பத்தியே சொல்லி முடிச்சீட்டீங்களே!

கிச்சடி இனிப்பு :))

சின்னப் பையன் said...

ஹை... ஜாலி... நிறைய வண்டிகள மிஸ் பண்ணியிருக்கீங்க போல... (ஒரு அருமையான பதிவுக்கு ஐடியா கொடுத்ததற்கு நன்றி...!!!)

Mahesh said...

நன்றி ராகவன்.... அனுபவங்கள்தான் ஆசிரியர்கள்... சரியாச் சொன்னீங்க...

விஸ்தாவுல எதோ ப்ரச்னையாம்... டமிலிஷ்ல http இல்லாம் லின்க் குடுங்க...நாங்க பாத்துக்கறோம்னு மெயில் அணுப்புனாங்க... அவங்க சரி பண்ணிடுவாங்கன்னு நினைக்கிறேன்.

Mahesh said...

குடுகுடுப்பை - மறதி மகேசும் இல்லை மாத்தி யோசிக்கிற மகேசும் இல்லை...

சோம்பேறி மகேசுன்னு வேணா சொல்லலாம் :))

Mahesh said...

நன்றி ராம்.... நீங்க நம்ம ஆளு... :)

நன்றீ ஆயில்யன்... இந்த தடவை சிண்டு முடியற மாதிரி கிண்ட வரலை.. அடுத்த தடவை பார்க்கலாம்..

Mahesh said...

வாங்க ச்சின்னப்பையன்... ஆமாங்க... இப்பல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துகிடறது...

Thamira said...

சந்தேகத்துக்கு பக்கத்துக இருக்கறவங்க கிட்ட சங்கிலி முருகன் மாதிரி 'ஏங்க... நான் கரெக்டாத்தானே படிக்கிறேன்னு" அவங்களையும் ஒரு தடவை பாக்க சொல்லி கேட்டுக்கறது./// ROTFL..

ரசித்தேன். ஒரு முறை தீபாவளி கூட்டத்தில் மாலை 7.30 அனந்தபுரிக்கு (ஒருவர் என்றாலும் பரவாயில்லை ஏழு பேர் கொண்ட குழு) நெல்லை செல்ல ஏறியபோதுதான் தெரிகிறது எங்களிடமிருந்தது காலை குருவாயூருக்காக டிக்கெட்டுகள் என்பது. நொந்து நூலாகி ஓப்பனில் சென்றோம். அன்றைக்குப் பார்த்து எனக்கு வயிறு வேற சரியில்லையா...

Mahesh said...

நன்றி தாமிரா....

அய்யய்யோ, ரயில்ல.. லாங் ஜர்னில... ஜெனெரல் கம்பார்ட்மெண்ட்ல... வயிறும் சரியில்லன்னா... அது நரக வேதனையாச்சே :(((

பழமைபேசி said...

அந்த நடத்துனர் கதை....இஃகிஃகி