Saturday, November 8, 2008

விளம்பர நாட்கள்

மெக்கானிகல் இஞ்சினீரிங் முடிச்சுட்டு "காக்காசுன்னாலும் கெவுர்மெண்ட்டு காசு"ன்னு வேலை தேடும்போது கெவுர்மெண்டு கம்பெனிகள்லாம் எங்கூட டூ விட்டுட்டாங்க. அப்பறம் டெல்லி போய் நமக்குத் கொஞ்சமே கொஞ்சம் தெரிஞ்ச "கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி"யான வேர்ட்ஸ்டார், டி-பேஸ் இதுகளை வெச்சு ஒரு உப்புமா கம்பெனில டைரெக்டரா .. சாரி.. டைரெக்டா ஜாயின் பண்ணினேன். ஒரு மாசத்துக்குள்ளயே ஒரு சின்ன விளம்பர ஏஜன்ஸியில தெரிஞ்சவர் மூலம வேலை கெடச்சுது. உப்புமா கம்பெனில மொத மாசம் சம்பளம் வாங்கின மறுநாள் சொல்லாமக் கொள்ளாம ஏஜன்ஸில ஜாயின் பன்ணிட்டேன்.

அப்பத்தான் அந்த ஏஜன்ஸிக்கு ரெண்டு வயசு. கம்ப்யூட்டர்லாம் வாங்கி நெட் ஒர்க் பண்ண ஆரம்பிச்சிருந்தாங்க. நாமதான் "கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி" எக்ஸ்பர்ட் ஆச்சே.. "அந்த நெட் ஒர்கிங் எல்லாம் கொஞ்சம் பாத்து செய்ங்க"ன்னு அங்க ஸிஸ்டம்ஸ் மேனேஜர் கிட்ட சேத்து விட்டாங்க. ராவோட ராவா நாவெல் நெட் ஒர்க் எல்லாம் படிச்சு எப்பிடியோ செட் பண்ணிணோம். சின்ன ஏஜன்ஸிங்கறதால எல்லா டிபார்ட்மென்ட்லயும் மூக்க நொழைக்கலாம். ஒரு 4 மாசம் போன பின்னாடி, "இது வரைக்கும் என்ன கிழிச்சங்கறத எழுதிக் குடு பாக்கலாம்"ன்னாங்க. சரின்னு நானும் ஒரு பக்கம் எழுதிக் குடுத்தேன். அதப் படிச்சுட்டு "அட இங்கிலீஷ்ல சுமாராவே எழுதரயே.... காபியெல்லாம் எழுத முடியுமா?"ன்னு கேட்டாங்க. எதோ ஒரு ஆர்வத்துல "ஓ... எழுதினாப் போச்சு"ன்னு சொல்லிட்டேன். ஆனா முழு நேரமா இல்ல. அப்பப்ப. அப்ப ஒரு பெரிய ஜப்பானிய ஆடியோ ப்ராண்டுக்கு ஒரு புது கேம்பெய்ன் ஆரம்பிக்க இருந்துது. அதுக்கு "ஒன் வேல்ட்... ஒன் சௌண்ட்.."ன்னு ஒரு பேஸ் லைன் எழுதினோம். அதுக்கு ரொம்ப பெரிய வரவேற்பு. கூடவே டி.டி.பி, அனிமேஷன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் செஞ்சு பாக்க ஆரம்பிச்சேன். ராகேஷ் பச்சன்னு ஒரு அனிமேட்டர் இருந்தாரு. ராத்திரியெல்லாம் ரொம்ப நேரம் உக்காந்து சொல்லித் தருவாரு. 3டி ஸ்டுடியோ, அனிமேட்டர் ப்ரோ ரெண்டும் உபயோகிச்சு சின்ன சின்ன அனிமேஷன்ஸ் பண்ணினோம். ஒரு பெரிய ஃப்ரிட்ஜ் விளம்பரத்துக்காக பெங்குயினை வெச்சு சில அனிமேஷன்ஸ் ரொம்ப திருப்தியா செஞ்சோம். ஆனா எல்லாமெ வெளி வரல.





விளம்பர உலகத்துல அப்பிடித்தான். 10 செகண்ட் விளம்பரத்துக்கு 1 மாசம் ஷூட் பண்ணி, எடிட் பண்ணி 10 படம் எடுத்தா, 1 செலக்ட் ஆகலாம். லக் இருந்தா. அதே மாதிரி எட்டு லைன் பேராவுக்காக பத்து பக்கமாவது வேற வேற மாதிரி எழுதிப் பாத்தாத்தான் ஒண்ணாவது கரெக்டா வரும். மெயினா கம்ப்யூட்டர், நெட் ஒர்க், அக்கவுண்டிங் சாஃப்ட்வேர்னு இருந்தாலும், சைடுல அப்பிடியே ஒரு ஹோட்டல், ஒரு பெரிய டெக்ஸ்டைல் ப்ராண்ட், ஒரு கம்பூட்டர் கம்பெனின்னு பல ப்ராண்டுகளுக்கு பேஸ் லைன், காப்பின்னு நிறைய எழுதினேன். கம்ப்யூட்டர் வேலையை விட இது ரொம்ப வித்தியாசமா, சுதந்திரமா இருந்ததாலா ராத்திரி ரொம்ப நேரம் ஆனாலும் மத்த க்ரியேடிவ் டைரெக்டர்க, காப்பி ரைடர்க கூட விவாதங்கள் பண்ணின்னு சுவாரஸ்யமா இருக்கும். ரொம்ப மகிழ்ச்சியோட கழிச்ச நாட்கள் அவை. அங்க நம்ம கற்பனைக்கு எந்த எல்லையும் கிடையாது. எந்த ஒரு விஷயத்தையும் எந்த ஒரு கோணத்துலயும் அணுகலாம். பரிபூரண சுதந்திரம். மத்த ஏஜன்ஸிகளோட / க்ளையன்டுகளோட விளம்பரங்கள் அடங்கிய கார்ட் புக், ஷோ ரீல்கன்னு எது வேணும்னாலும் கிடைக்கும். அது ஒரு நிலாக் காலம்.




அப்பிடியே ஒரு 4 வருஷம், சோனி, ஜே.சி.டி., க்ளாரிட்ஜஸ் ரிசார்ட்ஸ், அமுல் சாக்லேட், லிம்கா, ஃபினோலெக்ஸ், பி.எஸ்.ஐ, ஷா வாலஸ், கெல்வினேட்டர், எலெக்ரோலக்ஸ், காம்பேக் கம்ப்யூட்டர்ஸ், வேல்டு ஃபோன்.... இப்பிடி பல ப்ராண்டுகளோட சம்பந்தப் பட்டு இருந்தேன். காப்பி எழுதறது, விஷுவலைஸ் பண்றது, அனிமேஷன் பண்றதுன்னு பல விதங்கள்ல. கூடவே சாப்ட்வேரும், நெட் ஒர்கிங்கும். மும்பைல, புனேல புது கிளைகள் ஆரம்பிச்சபோது அங்கெல்லாம் கொஞ்ச நாட்கள் இருந்து வேலை செஞ்சது வேற மாதிரியான் அனுபவங்கள்.

பிறகு க்ளையண்டோட தேவைகள் அறிஞ்சு க்ரியேடிவ் ரூட் முடிவு பண்றதும், மீடியா ப்ளானிங்லயும் நொழஞ்சு அந்த பேப்பர்ல/மேகஸின்ல எந்த அளவு விளம்பரம் போடறது, எந்த சேனல்ல எத்தனை செகண்ட் நேரம் வாங்கணும், சிட்டிக்குள்ள எந்த இடங்கள்ல ஹோர்டிங் வெக்கறதுன்னு அந்த வேலைகளையும் கத்துக்கிட்டேன். ஒவ்வொரு நாளும் சேலஞ்சிங்கா இருக்கும். அது மாதிரி சுவாரசியமான நாட்கள் திரும்ப வருமாங்கறது சந்தேகந்தான்.

இப்ப இருக்கறது முழுசா ஐ.டி. யில. பல வங்கிகள், பல நாடுகள்னு சுத்தினாலும், இதுல வேறு விதமான அனுபவங்கள் இருந்தாலும், விளம்பர உலகத்துல இருந்த மாதிரியான கற்பனை சுதந்திரம் கிடையாது. கம்ப்யூட்டரோ, சாஃப்ட்வேரோ அதோட எல்லைக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதுதான் முடியும். சில சமயம் தோணுது திரும்ப விளம்பரனாகப் போயிடலாமான்னு. ஆனா அந்தத் துறையோட முகம் இந்த இடைப்பட்ட காலத்துல ரொம்பவே மாறிப் போச்சு. அதுல நம்மளை நிறுத்திக்க முடியாதோன்னு தோணுது.

வால் : ஒரு ஷூ ப்ராண்ட் லாஞ்ச் பண்ணுபோது, 3 டீசர் விளம்பரங்கள் போட்டோம்.

Day 1 : "69% of the Italian girls want you to slip into them"

Day 2 : "69% of the French girls want you to tie them up"

Day 3 : "69% of the Spanish girls want your toes inside"

அவ்ளோதான்... டெல்லி மாதர் சங்கங்கள், விமென்ஸ் லிப் எல்லாம் ஏஜன்ஸி முன்னாலா தர்ணா பண்ணி, Times of India-ல மொதப் பக்கம் செய்தி வந்து அப்பறம் மன்னிப்பு கோரல், விளம்பரம் வாபஸ்னு ஆகிப் போச்சு. பின்ன... இது கொஞ்சம் ஓவராத்தான் எழுதிட்டோம் :)))

18 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

விளம்பர உலகத்தப் பத்தி தெரியாத எனக்கு நொம்ப பிரயோசனமா இருக்கு!!!

Mahesh said...

உண்மையச் சொல்லுங்க... சும்மாத்தானே சொன்னீங்க.. :))))

பழமைபேசி said...

//
Mahesh said...
உண்மையச் சொல்லுங்க... சும்மாத்தானே சொன்னீங்க.. :))))
//

அட ச்சே, சத்தியமா சொல்லுறேன்.... இப்பத்தான் ஒன்னு ரெண்டு சொல்லுகளுக்கு அர்த்தம் பாத்து தெரிஞ்சிட்டு வர்றேன்.... ஏங்க, கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.... எதோ இந்தக் கழுதைக்கு அந்த பாக்கியம் கெடச்சத சொன்னா....நீங்க நம்ப மாட்டேங்குறீங்களே?

Mahesh said...

//கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை//

நல்லா சொன்னீங்க... இந்த கழுதை கல்பூர மூட்டைக்கு பக்கத்துலயே இருந்து, வாசனை நல்லா இருக்குன்னு தெரிஞ்சும் வெலகி வந்துதுங்க....

முரளிகண்ணன் said...

nice post. interesting

Unknown said...

ஹலோ மகேஷ்...நீங்கள் விளம்பர துறையில் இருந்தீர்கள் என்பது மகிழ்ச்சி...நானயும் இப்போது விளம்பர துறையில் தான் உள்ளேன் ஆனால் Online Advertising....உங்களுக்கு இன்னும் ஏஜென்சி தொடர்புகள் இருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும்....நன்றி

துளசி கோபால் said...

விளம்பரங்கள் பலதும் ரொம்ப 'சுருக்'னு சுவையாத்தான் இருக்கு.

நல்ல பதிவு மஹேஷ்.

Mahesh said...

@ முரளிகண்ணன், துளசிகோபால் :

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ kamal:

வாங்க... உங்க வலைப்பூ பாத்தேன்... online advtg பத்தி இன்னுங்கூட விளக்கமா எழுதுங்க. ஏஜன்ஸி தொடர்புகள் பத்தி தனி மெய்ல் அனுப்புறேன்.

http://urupudaathathu.blogspot.com/ said...

வருகையை மட்டும் பதிவு செய்கிறேன்...

( இன்னும் நாள் அழைத்த தொடர் பதிவை போட வில்லை.. அதனால் கோபம்..
உன் பேச்சு கா ))

Mahesh said...

@ அணிமா:

அவ்வ்வ்வ்... கோச்சுக்காதீங்க... சீக்கிரமே போட்டுடறேன் :))))

Anonymous said...

மகேஷ்,

விளம்பரத்துறை நம்ம கறபனைக்குத் தீனி போடுவதோடு சவாலாகவும் இருக்கும்.

நம்ம விளம்பரம் பாப்புலராகும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனி.

Anonymous said...

மகேஷ் அண்ணே,

விளம்பரத்துறை 'மலரும் நினைவுகள்' நல்லா இருக்கு. ஷூ விளம்பரத்துக்கான வாசகங்கள், கொஞ்சமில்ல, ரொம்ம்ம்ம்ம்ம்ம்பவே ஓவர். ஆனாலும் படிச்சவுடனே சிரிப்பை அடக்க முடியலை.
பதிவை படிக்கும்போது, 'how art made the world' என்கிற ஆவணப் படம் நினைவுக்கு வந்தது. நீங்க பாத்திருக்கிங்களா?
இது வரை பார்த்ததிலேயே, அதிர்ச்சியான விளம்பரம் ஒன்னு - புகை பிடிக்கறாதல வர உடல் நலக் கேடுகள் பத்தினது. அதிர்ச்சியா இருந்தாலும், சொல்ல வந்ததை அதை விட effctive ஆ சொல்லவே முடியாது.

சித்ரா மனோ

நசரேயன் said...

உங்க விளம்பர படம் நல்லா இருக்கு

Mahesh said...

நன்றி வடகரைவேலன்....

@ நசரேயன் :

அப்பறம்... நாமளே விளம்பரப்படம் ஓட்டலேன்னா வேற யாரு ஓட்டறது? :)))))))

@ சித்ரா மனோ :

ஆமாங்க.. அது ரொம்ப ஓவர்தான்... ஆனா அது இத்தாலிய க்ளையண்ட். அங்க இந்த ரீதிலதான் விளம்பரங்க (இன்னுங்கூட ஓவரா) போயிட்டுருந்துது... இந்த மாதிரி surrogateaஆ வேணும்னு கேட்டாங்க.. எதிர்ப்பு ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான்... ஏஜன்ஸிக்கும் ஒரு மாதிரி நெகடிவ் பப்ளிஸிடி :(

பரிசல்காரன் said...

கலக்கலோ கலக்கல்.

பதிவும், போடப்பட்டிருக்கும் கார்ட்டூன்களும்.


எல்லாம் தெரிஞ்ச உங்கள மாதிரி, எல்லாருமே ரொம்ப அடக்கமா இருக்கீங்கன்னு தெரியுது.

மங்களூர் சிவா said...

அருமையா எழுதியிருக்கீங்க!. விளம்பர ஏஜன்சிகளில் பல நண்பர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது அனுபவங்களை கூற கேள்விப்பட்டதுண்டு!

Mahesh said...

வாங்க மங்களூர் சிவா... தலை தீபாவளி எல்லாம் முடிச்சு வந்துட்டிங்க போல... வாழ்த்துக்கள் !

விளம்பர உலகமும் சினிமா உலகம் மாதிரி ஒரு தனித்துவம் வாய்ந்தது !!

ச.பிரேம்குமார் said...

//இது கொஞ்சம் ஓவராத்தான் எழுதிட்டோம் :)))//

அது அப்போ... இப்போ இந்தியாவில், தமிழ்நாட்டில் கூட வில்லங்கமான விளம்பரங்கள் காட்டப்படுதே....